Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, December 1, 2013

தன்வந்திரி பீடத்தில் லட்சுமி ஹயக்ரீவருக்கு ஹயக்ரீவர் ஹோமம்..

கலைமகளாம் ஸ்ரீசரஸ்வதிதேவியின் குரு, வேதம் மீட்டுத் தந்த பகவான் என்றெல்லாம் போற்றப்படுபவர் ஸ்ரீஹயக்ரீவர். தமிழகத்தில், வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைத்து அங்கு வெளிர் நிற பச்சைக் கல்லால் ஆன லட்சுமி ஹயக்ரீவருடன் வேதாந்த தேசிகருக்கும் சேர்த்து சந்நிதி அமைத்திருக்கிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
மடியில் ஸ்ரீலட்சுமியைத் தாங்கியிருப்பதால், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் எனும் பெயருடன் அருள்புரிந்து வருகிறார் இவர். ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால், கல்வி ஞானம் கிடைக்கும் என்பதால், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பீடத்திற்கு வருகை தந்து ஹயக்ரீவரை வழிபட்டு செல்கின்றனர்.

பள்ளி மற்றும் அனைத்து கல்லூரிகள் துவங்கும் காலங்களிலும், தேர்வுகள் சமயங்களிலும் விசேஷ ஹயக்ரீவர் ஹோமங்களும், ப்ரார்த்தனைகளும் ஸ்வாமிகளால் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் தற்போது வருகின்ற அரையாண்டு தேர்வில் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் நல்ல நினைவாற்றல் ஏற்பட்டு சிறப்பாக தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் 22.12.2013 அன்று காலை 10.00 மணியளவில் நிற பச்சைக் கல்லால் ஆன ஹயக்ரீவருக்கு ஹயக்ரீவர் ஹோமம் நடைபெற உள்ளது.

இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு, ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை மனதாரப் பிரார்த்தித்து, பிறகு தினமும் அவரது மூலமந்திரத்தை ஜபித்து விட்டுப் படிக்கத் துவங்கினால், அதிக மதிப்பெண்கள் எடுக்கலாம் மாணவர்கள்.  ஆகவே பக்தர்கள் அனைவரும் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேணுமாய் ப்ரார்த்திக்கின்றோம்.

மேலும் தேர்வுக் காலங்களில் ஸ்ரீஹயக்ரீவர் திருப்பாதத்தில் பேனா- பென்சில்கள், நோட்டுபுத்தகங்கள்  வைத்து வழிபட்டு ஹோமத்தில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்களுக்கு ப்ரசாதமாக வழங்கப்படுகிறது.

ஹயக்ரீவர் மந்த்ரம்
``ஞானானந்தமயம் தேவம்
நிர்மலஸ்படிகாக்ருதம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே''

``இந்த பாடலுக்கு ஞானமும் ஆனந்தமயமானவரும், தூய்மையான ஸ்படிகம் போன்ற தேகத்தை உடையவரும், சகல கல்விக் கலைகளுக்கு ஆதாரமுமானவரான ஸ்ரீஹயக்ரீ வரை நான் உபாசிக்கிறேன்'' என்று அர்த்தமாகும். ``வெள்ளைப் பரிமுகன்'' என்று ஸ்ரீதேசிகனால் பிரார்த்திக்கப்பட்டவர் ஸ்ரீஹயக்ரீவர்.

ஹயக்ரீவர் வரலாறு
வேதங்களின் கரைகண்டவன் நான் என்ற செருக்கு கொண்ட பிரம்மாவின் கர்வத்தை அடக்குவதற்காக மது கைடபர்களைத் தோற்றுவித்த மஹாவிஷ்ணு அவர்கள் மூலம் வேதங்களைப் பிரம்மாவிடமிருந்து கவர்ந்து மறைத்து வைத்தார்.

பிறகு நான்முகனின் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து மீனாக அவதரித்து மதுகைடபர்களைக் கொன்று வேதங்களை மீட்டு, பின்னர் வெள்ளைப் பரிமுகனாகத் தோன்றி அவ்வேதங்களைத் தூய்மைப்படுத்தி நான்முகனுக்கு உபதேசித்தார். ஸ்ரீ தேசிகனுக்கு பரத்யட்சமாகக் காட்சி தந்தது போலவே மதகுருவான ஸ்ரீவாதிராஜருக்கும் காட்சி தந்தருளியவர் ஸ்ரீஹயக்ரூவர்.

ஸ்ரீவாதிராஜர் கி.பி. 1480 வாக்கில் வாழ்ந்த மகான். ஹயக்ரீவருக்கு மிகவும் உகந்த பிரசாதமாகிய நன்றாக வேக வைத்த கடலைப் பருப்பு, துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்து, நெய்விட்டுக் கிளறிய ``ஹயக்ரீவபண்டி'' என்ற பெயர் கொண்ட பதார்த்தத்தை தினந்தோறும் ஒரு தட்டில் வைத்து தலை மீது வைத்துக் கொண்டிருப்பார்.

ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமான் ஒரு வெள்ளைக் குதிரை வடிவில் இவருக்குப் பின்னால் வந்து நின்று இரு முன்னங்கால்களை இவர் தோள்களின் மீது வைத்து அதைப் புசிப்பது வழக்கமாம்.

கேட்டவற்றை உடனே அளிக்கக்கூடியவர் ஸ்ரீ ஹயக்ரீவர். குதிரை முகத்தையுடையவராக மகாலட்சுமியை இடது பக்கம் மடிமேல் இருத்திக் கொண்டுள்ள, தூய்மையான ஸ்படிகம் போன்ற உடலையுடைய, தாமரை மலர் மேல் அமர்ந்துள்ள ஸ்ரீஹயக்ரீவரை மனத்தில் தியானித்து, ஹயக்ரீவ பஞ்ஜர ஸ்தோத்திரத்தைக் கூறுபவர்களுக்கு எல்லாக் கஷ்டங்களும் நீங்கி விரும்பியது யாவும் கிடைக்கும்.

குழந்தைகளைப் படிப்பில் மேன்மை அடையச் செய்யும். இதைக் கூறுவதற்கு நியமநிஷ்டைகள் கிடையாது. உச்சரிப்பில் தவறு நேர்ந்தாலும் மன்னிப்பார். இதை எல்லோரும் நாள்தோறும் ஒருதடவையாவது கூறி எல்லா வளமும் பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா, வாலாஜாபேட்டை-632513
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172-230033 / 9443330203


No comments:

Post a Comment