Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, December 30, 2013

தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ரமண ஜெயந்தி சிறப்பாக நடைபெற்றது…

பக்தர்கள் அனைவருக்கும் தன்வந்திரி பீடத்தின் ஆங்கிலப் புத்தாண்டு 2014 நல் வாழ்த்துக்கள். 30.12.2013 இன்று பகவான் ஸ்ரீ ரமணரின் 134வது பிறந்த தினம். இந்த நன்னாளில் அவரை நினைவு கூர்வோம்.

பகவான் ரமணர், மதுரையை அடுத்த திருச்சுழியில் அவதரித்தவர். ‘நான் யார்என்னும் விசாரணை மூலம் ஒரே கணத்தில்ஆத்மானுபவம் எய்தியவர். அதன்பின் அருணாசல அண்ணலை நாடி அண்ணாமலை வந்தார். பல இடங்களிலும் தங்கி தவம் செய்தார். சில போக்கிரிகளால் இவரது தவத்திற்கு இடையூறு ஏற்படவே, இடிந்து, சிதலமடைந்திருந்த, யார் கண்ணிலும் படாத பாதாள லிங்கேச்வரர் சன்னதியில் தவம் செய்தார். அப்போதும் சில போக்கிரிச் சிறுவர்கள் கல்லெறிந்து அவரைத் தொந்தரவு செய்தனர். சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் இவரை உலகுக்கு அடையாளம் காட்டினார்.

அதுமுதல் வெளியுலகிற்குத் தெரிய ஆரம்பித்தார். பேசாமல் தியானத்திலேயே எப்போதும் இருந்ததால்மௌன குருஎன்றும், ‘பிராம்மண சுவாமிஎன்றும் அன்பர்களால் அழைக்கப்பட்டார். மாமரத்துக் குகை, பவழக் குன்று, விரூபாக்ஷிக் குகை போன்றவற்றில் சிலகாலம் தவம் செய்த இவர் பின்னர் ஸ்கந்தாச்ரமம் சென்று வசிக்கத் தொடங்கினார்.

தம்மை நாடி வந்தவர்களுக்கு மௌன குருவாய், தக்ஷிணாமூர்த்தியாய், நயன தீக்ஷை வழங்கி, அவர்களது ஆன்ம ஒளியை ஊக்குவித்தார். பின்னர் மலையை ஒட்டிய பகுதியில் கீழே வந்து வசிக்கத் தொடங்கினார். அதுவே பிற்காலத்தில்ரமணாச்ரமம்ஆகிற்று.

பக்தர்களுடன் பகவான்
அருணாசல அக்ஷரமணமாலை, அருணாசல பஞ்சரத்னம், அருணாசலத் துதி உட்பட பல்வேறு பாமாலைகளை இவர் அருணாசலர் மீது இயற்றியுள்ளார். வெளிநாட்டு அன்பர்கள் பலர் இவரை நாடி வந்து, இந்தியாவின் ஆன்மீகச் செல்வத்தை உணர்ந்து கொண்டனர். பலர் இவருக்கே அடியவராகி, இந்தியாவிலேயே இறுதி வரை காலம் கழித்தனர். அருணாசலத்தின் பெருமையும், இந்தியாவின் ஆன்ம வளமையும் உலகெங்கும் உள்ள அன்பர்கள் அறிந்து கொள்ள பகவான் ரமணர்  மிக முக்கிய காரணமாய் அமைந்தார். இவர்தம் இறுதிக் காலத்தில், உயிர் பிரியும் தருவாயில், இவர் தம் ஆசிரமத்திலிருந்து மிகப் பெரிய பேரொளி ஒன்று புறப்பட்டு, அருணாசல மலையில் சென்று கலந்தது ஒரு அதிசயமான நிகழ்வு.

ரமண பகவானின் உபதேசங்கள்:
  • மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்தப் பயனும் இல்லை.
  • கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட  கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.
  •  தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.]
  • குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.
  • ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், எல்லாம்ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ள அதுவே மிகவும் முக்கியம்.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ ரமண மகரிஷியை தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பிரதிஷ்டை செய்து கூட்டுப்ரார்த்தனை செய்து வருகிறார்.

30.12.2013 திங்கட்கிழமை ரமண மகரிஷியின் 134வது ஜெயந்தியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் சிறப்பு கூட்டு பிரார்த்தனையும், யாகங்கள் மற்றும் சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் 29.12.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

No comments:

Post a Comment