Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, March 12, 2020

SPECIAL HOMAM FOR CORONA VIRUS


கொரோனா வைரஸ் நோய் வராமல் தடுக்க
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், கொரோனா வைரஸ் நோய் வராமல் தடுக்கவும் தாக்கத்தின் அச்சம் குறையவும் மற்றும் பாதிக்கபட்ட நபர்கள் விரைவில் குணமடையவும் இன்று 12.03.2020 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை சிறப்பு தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது.

இதில் நெய், தேன், மூலிகைகள், புஷ்பங்கள், பழங்கள், வஸ்திரங்கள், நிவேதனப் பொருட்கள் சமர்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் நோயின் அச்சம் குறையவும், பாதிப்புகள் குறையவும், பயம் விலகவும் விழிப்புணர்வு ஏற்படவும் கூட்டு பிராத்தனைகள் செய்தனர்.  மேலும் பங்கேற்றவர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்களை வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





Wednesday, March 11, 2020

Special homams conducting for CORONA VIRUS


கொரோனா வைரஸ் நோய் வராமல் தடுக்க
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்சிறப்பு ஹோம பூஜைகள் நாளை நடைபெறுகிறது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், கொரோனா வைரஸ் நோய் வராமல் தடுக்கவும் தாக்கத்தின் அச்சம் குறையவும் மற்றும் பாதிக்கபட்ட நபர்கள் விரைவில் குணமடையவும் நாளை 12.03.2020 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை சிறப்பு தன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிற கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி, அந்த நாட்டை ஆட்டிப் படைத்து நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி தற்போது இந்தியாவுக்கு மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து வருகிறது. இந்திய அரசும் தமிழக அரசும் மற்ற மாநிலங்கலும் நோய் தடுப்புக்கான பல்வேறு தீவிர நடவடிக்கைகளும் விழிப்புனர்வுகளும் எடுத்து வருகிறது.

மனிதர்களுக்கு பரவக் கூடிய இந்த கொரோனா வைரஸ் தொற்றானது சில சமயங்களில் கடுமையான சுவாச கோளாறுகள், தொண்டையில் கடுமையான வலி, மார்பு பகுதியில் வலி, நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதித்து உடல் பலவீனமாக்கி பல்வேறு நோய்களை ஏற்படுத்துகிறது. இத்தகைய கடுமையான  கொரோனா வைரஸ் நோயின் அச்சம் குறையவும், பாதிப்புகள் குறையவும், பயம் விலகவும் விழிப்புணர்வு ஏற்படவும் தன்வந்திரி பீடத்தில் மேற்கண்ட தேதியில் தன்வந்திரி ஹோமமும் கூட்டுப்பிராத்தனையும் நடைபெறுகிறது. இந்த சிறப்பு யாக பூஜைகளில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பிராத்தனை செய்ய அன்புடன் அழைக்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


Monday, March 9, 2020

Vinayagar Danvantri Alaya Punar Prathishta - Pournami Pooja


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்ஸ்ரீ விநாயகர் தன்வந்திரி ஆலய புனர் பிரதிஷ்டையும்பௌர்ணமி பூஜைகளும் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் 09.03.2020 திங்கள்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை ஸ்ரீ விநாயகர் தன்வந்திரி ஆலய புனர் பிரதிஷ்டை நடைபெற்றது. மேலும் பௌர்ணமியை முன்னிட்டு ஆண்கள் திருமணத்தடை நீக்கும் கந்தர்வ ராஜ ஹோமமும், பெண்கள் திருமணத்தடை நீக்கும் சுயம்வர கலாபார்வதி யாகமும், தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகமும் நடைபெற்றது.

இதில் மங்கள இசை, கோ பூஜை, யாகசாலை பூஜை, கலச பூஜை போன்ற பூஜைகள் நடைபெற்று ஸ்ரீ விநாயாகர் தன்வந்திரிக்கு விசேஷ ஹோமங்களும் மஹா பூர்ணாஹுதியும் நடைபெற்று கலசாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விசேஷ ஆராதனையும் மங்களார்த்தியும் நடைபெற்றது. தொடர்ந்து திருமணத்தடை நீக்கும் ஹோமங்கள் நடைபெற்று பங்கேற்ற ஆண் பெண்களுக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது. மேலும் சந்தான கோபால யாகம் நடைபெற்று ஸ்ரீ நவனீத கிருஷ்ணருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தம்பதிகளுக்கு ஸ்ரீ நவனீத கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்த வெண்ணெயும் உளர் பழங்களும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இத்தகைய வைபவங்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.















Mangala Maha Chandi Yagam


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்மங்கள மஹா சண்டியாகம் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் 08.03.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை மங்கள மஹா சண்டி யாகமும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு அபிஷேகமும் விசேஷ ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த சண்டி யாகமானது சென்ற 06.03.2020 வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வந்தது.

இதில் மங்கள இசை, கோ பூஜை, விநாயகர் பூஜை, நாங்காம் கால யாக பூஜை, பாராயணங்கள் நடைபெற்றது. தொடர்ந்து நெய், தேன், மூலிகைகள், பூசணிக்காய், புஷ்பங்கள், பழங்கள், மஞ்சள், குங்குமம், சௌபாக்ய பொருட்கள், பட்டு வஸ்திரங்கள், பலகாரங்கள், இனிப்பு வகைகள் மேலும் பல்வேறு திரவியங்கள் சமர்ப்பிக்கபட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவியப்பொடி, பன்னீர் போன்ற பல்வேறு திரவியங்களால் மஹா அபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரு. நந்த்கோபால் I.A.S. அவர்கள், திருமதி. நர்மதா I.A.S. அவர்கள் குடும்பத்தினர்கள், மாநில தகவல் ஆணையர் திரு. பிரதாப் குமார் அவர்கள், முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் திரு. வேலு அவர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேலும் மாணவ மாணவிகள் ஆண்டு தேர்வில் அதிக மதிபெண்கள் பெற ஸ்ரீ வித்யா கணபதி ஹோமம், ஸ்ரீ வித்யா லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஹோமம் என்ற ஆறு ஹோமங்களும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு ஹோமத்தில் வைத்து பூஜிக்கபட்ட எழுது பொருட்களை பிரசாதமாக வழங்கினார்.

இவ்வைபவங்களில் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





















Saturday, March 7, 2020

Mangala Maha Chandi Yagam - Sani Santhi Homam - Thailabhishekam


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்சனி சாந்தி ஹோமம், தைலாபிஷேகம் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 07.03.2020 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சனி சாந்தி ஹோமத்துடன் ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரருக்கு சிறப்பு புஷ்பாஞ்சலியும், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வர்ருக்கு தைலாபிஷேகமும் நடைபெற்றது. மேலும் ஸ்ரீ விநாயகர் தன்வந்திரிக்கு சிறப்பு ஹோமத்துடன் பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்ற திரவியங்களால் அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து மஹா சண்டியாகத்தின் இரண்டாம் கால யாக பூஜைகளும் மஹா தீபாராதனையும் நடைபெற்றது.

இதில் சென்னை திருமதி. ஜலஜா கோபாலகிருஷ்ணன் குழுவினர்களின் தேவி மாஹாத்மியம், விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் பாராயணங்கள் நடைபெற்றது. இவ்வைபவங்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். மேலும் நாளை 08.03.2020 ஞாயிற்றுக்கிழமை மங்கள மஹா சண்டி யாகம் மஹா பூர்ணாஹுதியும், மாணவ மாணவிகள் ஆண்டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற ஸ்ரீ வித்யா கணபதி ஹோமம், ஸ்ரீ வித்யா லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஹோமம் போன்ற 6 ஹோமங்களும்,  விசேஷ ஆராதனைகளும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.












Friday, March 6, 2020

Maha Chandi Yagam Poorvanga Pooja - 27 Dravya Abhishekam


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடதில்ஸ்ரீ மஹிஷாசுர மர்த்துனிக்கு 27 திரவிய திருமஞ்சனமும்
மஹா சண்டி யாகம் பூர்வாங்க பூஜைகளும் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 06.03.2020 காலை 10.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை சுயம்வர கலாபார்வதி யாகம், நவக்கிரக ஹோமம், தன்வந்திரி ஹோமம், துர்கா ஹோமத்துடன் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு 27 வகை திரவியங்களை கொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்றது. மேலும் வருகிற 08.03.2020 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் மஹா சண்டி யாகத்தின் பூர்வாங்க பூஜைகளும் நடைபெற்றது.

இதில் மங்கள இசை, கோ பூஜை, புன்யாஹவாசனம், விநாயகர் பூஜை, யாகசாலை பூஜை, பாராயணங்கள் நடைபெற்றது. மேலும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் நெல்லிப்பொடி, சந்தனம், மஞ்சள், திரவியப்பொடி, பன்னீர், குங்குமம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிருதம், கரும்புசாறு, தேன், மாதுளம் பழம் சாறு, எலுமிச்சம் பழம் சாறு, பஞ்சகவ்யம், புஷ்ப தீர்த்தம், சொர்ண தீர்த்தம், அன்னம், குங்குமப்பூ, வேப்பிலை பொடி, நவதானியம், சீக்காய்ப்பொடி, மூலிகைகள், நெய், நல்லெண்ணெய், இஞ்சி, வெற்றிவேரு போன்ற 27 விதமான திரவியங்கள் சேர்க்கப்பட்டது. இதில் ஏராளமானவர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.