Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, November 24, 2019

Vastu Day - Vastu Homam


தன்வன்திரி பீடத்தில்வாஸ்து நாளை முன்னிட்டுவாஸ்து ஹோமம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வாஸ்து நாளை முன்னிட்டு இன்று 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை வாஸ்து சாந்தி ஹோமமும் ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.

இந்த ஹோமத்தில் நவ தானியங்கள், வெல்லம், நெல்பொரி, சர்க்கரை பொங்கல், பூசணிக்காய், சிகப்பு வஸ்திரம், நெய், தேன், நவ சமித்துக்கள் சேர்க்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்ற பஞ்ச திரவியங்களால் ஸ்ரீ வாஸ்து பகவானுக்கும், அஷ்டதிக் பாலகர்களுக்கும் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அர்ச்சனையும் ஆராதனைகளும் நடைபெற்றது. தொடர்ந்து வாஸ்து பிரசாதமாக பூஜிக்கபட்ட வாஸ்து யந்திரம், மத்ச யந்திரம், வில்வக்காய், திருஷ்டிக்காய், செங்கல், பூமி மண்ணு, மூலிகை சாம்பிராணி பக்தர்கள் வாங்கி சென்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.







Wednesday, November 20, 2019

Bhairavashtami 2019


தன்வந்திரி  பீடத்தில்பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு64 பைரவர் யாகத்துடன் 64 திரவிய அபிஷேகமும்சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது.

இராணிபேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு 19.11.2019 செவ்வாய்கிழமை 64 பைரவர்களுக்கு 64 தீபங்கள் ஏற்றி, 64 யாக்குண்டங்களில் 64 நபர்களால் 64 யோகினி பூஜையுடன்  64 பைரவர் யாகம் நடைபெற்று 64 திரவியங்களால் அஷ்ட பைரவர் சகித மஹா கால பைரவருக்கும், பஞ்ச திரவியத்தினால் சொர்ணாகர்ஷண பைரவருக்கும் சிறப்பு  அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அர்ச்சனையும், ஆராதனைகளும் 64 தீபம் ஏற்றி வழிபாடும் நடைபெற்றது.

இந்த யாகத்தில் நெய், தேன், சமித்துகள், 64 வகை பழங்கள், 64 வகை புஷ்பங்கள், பட்சணங்கள், 64 நிவேதனங்கள், மூலிகைகள், பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து கலச புறப்பாடும் மஹா அபிஷேகமும் நடைபெற்றது. இதில் தொழிலதிபர்கள், விவசாய பெருமக்கள், சுற்றுபுற நகர கிராம மக்கள், ஆந்திரா, கர்நாடகா மாநில மக்கள் மற்றும் ஏராளமானவர் பங்கேற்றனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்களை வழங்கினார். மேலும் மஹா அனாதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
























Monday, November 18, 2019

64 பைரவர் யாகத்தின் ஒரு பகுதி ........

64 பைரவர் யாகத்தின் ஒரு பகுதி



64 Bhairavar Yagam Poorvanga Pooja


தன்வந்திரி பீடத்தில் நாளை 19.11.2019
(கார்த்திகை தேய்பிறை அஷ்டமிபைரவர் ஜெயந்தியை முன்னிட்டு64 யாக குண்டத்தில் 64 பைரவர் யாகத்தின்பூர்வாங்க பூஜைகள் கோ பூஜையுடன் துவங்கியது.

இராணிபேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகளான மஹா கணபதி ஹோமம், கணபதி பூஜை, யாகசாலை பூஜை, கலச பூஜை, 64 பலி பூஜைகள், கூஷ்மாண்ட ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை காலபைரவருக்கும், சொர்ண பைரவருக்கும் விசேஷ அபிஷேகங்களும், ஆராதனைகளும், 64 ஹோமகுண்டங்களுக்கான 64 பைரவர் பூஜையும், சொர்ண பைரவர், மஹா பைரவர் மற்றும் அஷ்ட பைரவர்களை வேண்டி நடைபெற உள்ளது. நாளை 64 குண்டங்களில், 64 நபர்கள் பங்கேற்று நடைபெறும் மாபெரும் சதுர்ஷஷ்டி பைரவர் யாகம் நடைபெற உள்ளது.











64 Bhairavar Yagam Purvaanga Poojai.

Thanks to Maalai Malar 18/11/2019




Saturday, November 16, 2019

Maha Danvantri Homam For The Welfare Of Purohits


தன்வந்திரி பீடத்தில்அகில உலக புரோகிதர்கள் நலன் கருதி10 ஆம் ஆண்டு சிறப்பு தன்வந்திரி ஹோமமும்விசேஷ பூஜைகளும் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி அகில உலக புரோகிதர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் நலன் கருதி இன்று 16.11.2019 சனிக்கிழமை காலை 6.00 மணி முதல் மதியம் 2.30 மணி வரை 10 ஆம் ஆண்டு சிறப்பு தன்வந்திரி ஹோமமும் விசேஷ பூஜைகளும் நடைபெற்றது.

ஸ்ரீ வேத வியாசரின் திருவருளாலும் மற்றும் மகான்களின் ஆனுக்ரஹத்தாலும் மக்களுக்கு சிறப்பாக பணியாற்றும் புரோகிதர்களுடைய க்ஷேமம், அவர்களின் குடும்ப க்ஷேமம், அவர்களைச் சார்ந்தவர்களின் க்ஷேமத்திற்காக ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் விசேஷமான முறையில் பூர்வாங்க பூஜையுடன் மங்கள வாத்தியம், கோ பூஜை, சூரிய நமஸ்காரம், விக்னேஸ்வரபூஜை, கணபதியக்ஞம், நவக்ரஹ யக்ஞம், சுதர்சன யக்ஞம், மஹா தன்வந்திரி யக்ஞம், ஸ்ரீ லக்ஷ்மி யக்ஞம், ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம் புரோகிதர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் தனித்தனியாக ஹோம குண்டங்களில் அமர்ந்து அவரவரே செய்யும் ஹோமமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு சிறப்பு பூஜைகளும், காலசக்கிர பூஜையும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் புரோகித சங்க தலைவர் வேலூர் திரு. சீதாராமன் அவர்கள், பொருளாளர் திரு. கோபாலன் மற்றும் ஏராளமானவர் பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக திருவண்ணாமலை காகபுஜண்டர் ஆசிரம பீடாதிபதி திரு. தர்மலிங்க ஸ்வாமிகள் மற்றும் வாலாஜாபேட்டை தொழிலதிபர் திரு. மஹேந்திரவர்மன் அவர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து மஹா அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.