Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, October 27, 2019

Prarthana For Sujith


திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டியில் சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிருடன் போராடிகொண்டு இருக்கிறான். அவர் விரைவில் உயிருடன் மீண்டு வரவேண்டும் என பல்வேறு தெய்வங்களை வேண்டி ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நேற்று 26.10.2019 காலை முதல் சிறப்பு ஹோமங்களும் பிரார்த்தனைகளும் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி நடைபெற்று கொண்டிருக்கிறது.


Deepavali 2019 - Homams - Pooja


 ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தீபாவளியை முன்னிட்டு பல்வேறு பூஜைகளும் யாகங்களும் நடைபெற்றது.



அனைத்தும் பெற தங்க அன்னபூரணிக்கு சிறப்பு வழிபாடும், சகல விதமான தோஷங்கள் நீங்கி ஐஸ்வர்யம் பெற ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு திருஷ்டி துர்கா ஹோமமும், உடல் பிணி, மனப்பிணி நீங்க மஹா தன்வந்திரி ஹோமம், அஷ்ட ஐஸ்வர்யமும் கிடைக்க வேண்டி அஷ்ட பைரவர், சொர்ண பைரவர், லக்ஷ்மி வராகர், லக்ஷ்மி நரசிம்மர், ஆரோக்ய லக்ஷ்மி, பூஜையுடன் லக்ஷம் தாமரை விதைகளை கொண்டு லக்ஷ்மி குபேர யாகமும் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி தீபாவளி மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று 27.10.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை உலக நலன் கருதி மேற்கண்ட ஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் பல்வேறு யாகங்கள், பூஜைகள் நடைபெற்று, ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி, ஸ்ரீ தன்வந்திரி பெருமாள், ஸ்ரீ லக்ஷ்மி குபேரர், ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர், அஷ்ட பைரவர், ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி தாயார் போன்ற தெய்வங்களுக்கு விசேஷ திருமஞ்சனமும், பல்வேறு புஷ்பங்களால் சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றது.

இந்த யாக பூஜைகளில் நெய், தேன், பால், தாமரை புஷ்பங்கள், பல வர்ண புஷ்பங்கள், மிளகாய் வற்றல், நவதானியங்கள், மூலிகைகள், நவசமித்துகள், பழங்கள், நிவேதன பொருட்கள் போன்றவை சமர்ப்பிக்கபட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் பூஜை பிரசாதங்களுடன் உடல் நோய் தீர்க்கும் ஔஷதமாகும் தீபாவளி மருந்து வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் ஸ்வாமிகளிடம் ஆசிகளை பெற்று சென்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.







Saturday, October 26, 2019

Deepavali 2019 - Lakshmi Kubera Yagam - Danvantri Homam - Drishti Durga Homam


தன்வந்திரி பீடத்தில் தீபாவளித்திருநாளில்உலக நலன் கருதிஸ்ரீ லக்ஷ்மி குபேர யாகம், மஹா தன்வந்திரி ஹோமம்திருஷ்டி துர்கா ஹோமம் நடைபெறுகிறது.


தீபாவளி சிறப்பு:

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் என்பது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடுகிறது. ஒவ்வொருத்தர் மனதிலும் உள்ள தோஷங்களை நீக்கி தீப ஒளி போல் பிரகாசமான வாழ்க்கை தரக்கூடிய நாளே தீபாவளி ஆகும். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தீபாவளியை முன்னிட்டு நாளை 27.10.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி லக்ஷ தாமரை விதைகளால் ஸ்ரீ லக்ஷ்மி குபேர யாகம், மஹா தன்வந்திரி ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமங்களுடன் பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கும், ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கும், ஸ்ரீ தன்வந்திரி உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அர்ச்சனை நடைபெற உள்ளது.

லக்ஷ்மி குபேர ஹோமம் மற்றும் அர்ச்சனை சிறப்பு :

லக்ஷ்மி குபேர பூஜை என்பது ஸ்ரீ லக்ஷ்மி தேவியையும், ஸ்ரீ குபேரரையும் வேண்டி நடைபெறும் வழிபாடாகும். லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம், நம் இல்லத்தில் செல்வம் பெருகும், மேலும்நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது ஐதீகம்.

மஹா தன்வந்திரி ஹோமம் :

இந்த ஹோமம் நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை வேண்டி நடைபெறும் ஹோமம் ஆகும். இந்த மஹா தன்வந்திரி ஹோமம் செய்வதின் மூலம் உடல் நோய் மற்றும் மந நோய்கள் அகலும், நீண்ட ஆயுள் கிடைக்கும், மேலும் ஆரோக்யமான வழ்கையை அருளும்.

திருஷ்டி துர்கா ஹோமம் :

திருஷ்டி துர்கா என்றால் திருஷ்டியால் ஏற்படக்கூடிய தோஷங்களை நிவர்த்தி செய்பவள் என்று பொருள். திருஷ்டி தோஷம் ஒருவரின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை தடுக்கிறது. கண் திருஷ்டியால் ஏற்ப்படும் தோஷங்கள் அகல நடைபெறும் ஹோமமே திருஷ்டி துர்கா ஹோமம் ஆகும்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த தீபாவளியன்று நடைபெறும் சிறப்பு ஹோமமங்களிலும் பூஜைகளிலும் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற்று ஆனந்தம், ஆரோக்யம், ஐஸ்வர்ய்த்துடன் நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Friday, October 25, 2019

Dhanteras 2019


தன்வந்திரி பீடத்தில்1008 கலச தீர்த்த திருமஞ்சனத்துடன்தன்வந்திரி ஜெயந்தி விழா நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் தன்வந்திரி ஜெயந்தி மற்றும் தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு இன்று 25.10.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு 300 க்கும் மேற்பட்ட மூலிகைகளை கொண்டு மஹா தன்வந்திரி ஹோமமும் 1008 கலசங்களில் மூலிகை தீர்த்தம் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மேலும் கிராம தேவதைகளின் ஆசிர்வாதங்கள் கிடைக்க வேண்டி ஸ்ரீ பால் முனீஸ்வரருக்கும், நவகன்னிகளுக்கும் பொங்கல் வைத்து விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 4.00 மணியளவில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் ஆ, மிளகு, சுக்கு, திப்பலி, வெள்ளம் போன்ற பொருட்களை கொண்டு ஸ்ரீ தன்வந்திரி மூலவர் சன்னதி அருகே, பக்தர்கள் தன்வந்திரி மஹா மந்திரங்களை ஜெபம் செய்து கொண்டே தீபாவளி லேகியம் தயாரித்து ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நிவேதனம் செய்யபட்டது. இந்த மாமருந்து சர்வ ரோக நிவாரணம் வேண்டி தீபாவளியன்று பீடத்திற்கு வருகை புரியும் பக்தர்களை யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிர்வதித்து திருக்கரங்களால் இலவசமாக ஔஷத பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.