Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, June 28, 2019

Ekadasi Homam - Amla Powder Abhishekam


தன்வந்திரி பீடத்தில்ஏகாதசி ஹோமமும் நெல்லிப்பொடி திருமஞ்சனமும்நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் இன்று 28.06.2019 வெள்ளிக்கிழமை ஏகாதசியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நீரிழிவு நோய், கண் நோய்கள், இதய நோய்கள், போன்ற சகல விதமான நோயகளும் நீங்கி ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யம் பெற்று மகிழ்சியான வாழ்வு கிடைக்க மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு ஏகாதசி ஹோமத்துடன் சிறப்பு நெல்லிப்பொடி திருமஞ்சனம் நடைபெற்றது.

ஏகாதசியில் பெருமாளை வழிபட்டால் நமக்கு கிடைக்கும் பலன்கள் அளவிட முடியாது. ஏகாதசி திதியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நடைபெற்ற ஏகாதசி ஹோமத்திலும், நெல்லிப்பொடி திருமஞ்சனத்திலும் பகையை வெல்லவும், புத்திரபாக்யம் கிடைக்கவும், வம்சாவளி பெருகவும், ஒளிமயமான வாழ்க்கை அமையவும், இல்லறம் இனிக்கவும், மன உளைச்சல் அகலவும், வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கவும், பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கவும், கடல் கடந்து சென்று வெற்றி பெறவும், வெளிநாட்டில் உள்ள சொந்தங்கள் சிறப்படையவும், கணவனை பிரிந்துவாடும் நங்கைகள் கணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிக்கவும், விருப்பத்தை பூர்த்தி செய்யும் மேன்மை உண்டாகவும், திருமண யோகம் உண்டாகவும், "பாபமோசனிகா"" எனப்படும் பாபத்தை போக்கவும், நல்ல பேற்றினை ஏற்படுத்தவும், துரோகிகள் விலகவும், உடல் சோர்வு நீங்கவும், பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தவும், ரத்த சோகை அகலவும், வளர்ச்சிக்காக காணும் கனவுகள் (சிந்தனைகள்) வெற்றிபெறவும், உடல் ஆரோக்கியம் பெறவும், சௌபாக்யம் எனும் அனைத்தும் கிடைக்கவும், வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிடைக்கவும், முன்னோர்களின் ஆசியை பெறவும், கனவிலும் நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையவும், குழந்தைகள் கல்வியில் சிறக்கவும், விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ - மாணவிகளாக திகழவும், மன பயம் அகலவும், மரண பயம் அகலவும், கொடிய துன்பம் விலகவும், நமது வீட்டு கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கவும், ஊருக்கும் தண்ணீர் பஞ்சம் வராமல் இருக்கவும், குடும்பத்துடன் ஆனந்தமாக வாழவும், வறுமை ஒழியவும், நோய் அகலவும், பசிப்பினி நீங்கவும், நிம்மதி நிலைக்கவும், தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கவும், மங்கள வாழ்வு மலரவும், பூலோக சொர்க்க வாழ்வு கிடைக்கவும், நிலையான செல்வம் நிரந்தரமாக நம்வீட்டில் இருந்து வரவும், போன்ற பல்வேறு நன்மைகள் ஏற்பட கூட்டு பிராத்தனை நடைபெற்றது.

மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசி வழங்கி இறை பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தனவந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





Thursday, June 27, 2019

Sani Preethi Homam


தன்வந்திரி பீடத்தில்சனி ப்ரீதீ ஹோமம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்கள் நலன் கருதியும், இயற்கை வளத்திற்காகவும் வருகிற 29.06.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரருக்கும், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரருக்கும் சனி ப்ரீதி ஹோமத்துடன் விசேஷ அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற உள்ளது.

கிரகங்களில் வலிமையானவர், தர்மாதிகாரி, எம தர்மராஜனின் சகோதரர் இப்படி எல்லாச் சிறப்புகளையும் பெற்றவர் சனைஸ்வரர். நீதிமானாகும் ஸ்ரீ சனீஸ்வரருக்கு அவருக்கு பயப்படாதவர்கள் கிடையாது. இவரை மந்தன் என்று ஜோதிட சாஸ்திரம் அழைக்கிறது. மந்த கதியில் சென்றாலும், மெதுவாக நகர்ந்தாலும், இந்தப் புவியில் உள்ள மனிதர்களின் வாழ்வில் பலன்களை தமக்கே உரிய பாணியில் தந்தே தீருவார். எனவே தான் அவரை மகிழ்விக்க, அவருக்குப் பிடித்த விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று பெரியோர்கள் விதித்திருக்கிறார்கள்.

சகல செல்வங்களையும், நோய் நொடியில்லாத, நீண்ட ஆரோக்கியத்தையும் வாரி வழங்குபவர் ஸ்ரீ சனி பகவான். ஒருவரின் ஜாதகத்தில் மங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி, அந்திமச் சனி, அஷ்டம சனி அர்தாஷ்டம சனி, ஏழரைசனி, ஜன்ம சனி போன்ற பல்வேறு நிலைகள் உள்ளது. சனி பகவானை வழிபடுவதின் மூலம் செல்வ வளம் பெறலாம், வீட்டில் சகல சௌபாக்கியங்களும், ஐஸ்வரியங்களும் வந்து சேரும், குபேர சம்பத்துக்களையும், யோகத்தையும் பெறலாம், ஜென்மம் முழுக்கவே சீரும் சிறப்புமாக, சகல செல்வங்களும் பெற்று, பெருவாழ்வு வாழலாம், எதிரிகள் தொல்லை முதலான அனைத்துப் பிரச்னைகளையும் தீர்த்து, மன தைரியத்துடன் வாழலாம், வாழ்வில், நிம்மதியும் சந்தோஷமும், பொங்கிப் பெருகும்.

மேலும் இவ்வைபவங்களில் பங்கேற்ப்பவர்களுக்கு ஏழரைசனி, ஜென்ம சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி, சனி திச, சனி புக்தி போன்றவையால் ஏற்ப்படும் கஷ்டங்கள் குறையவும், தொழில் விவசாயம் சிறந்து விளங்கவும், திருமண தடைகள் நிவர்த்தியாகவும், கல்வியில் சிறந்து விளங்கவும், ஆனந்தம், ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெற்று நல்வாழ்வு வாழவும் பிரார்த்தனை நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் இவ்வைபங்களில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Wednesday, June 26, 2019

Maha Bhairavar Yagam - Nikumbala Yagam


தன்வந்திரி பீடத்தில்தேய்பிறை அஷ்டமியில்மஹாபைரவர் யாகம் - நிகும்பிலா யாகம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று 25.06.2019 செவ்வாய்கிழமை மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை நிகும்பிலா யாகம், மஹா காலபைரவர் யாகத்துடன் நவ பைரவர் யாகம் நடைபெற்றது.

இந்த யாகங்களை தொடர்ந்து மஹா காலபைரவருக்கும், ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவருக்கும், ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கும் நவ கலச திருமஞ்சனமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.

இந்த யாகங்களிலும், அபிஷேகம், ஆராதனைகளிலும் சித்தர்களின் அருளாசி கிடைக்கவும், இடி, மின்னல், எரிமலை, பூகம்பம், நிலநடுக்கம், புயல், கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை பேரழிவுகளில் இருந்து நம்மை பாதுகாக்கவும், காட்டு மிருகங்கள், விஷ ஜந்துக்களால் ஏற்படும் பயம் நீங்கவும், மாந்ரீக தோஷம், துர்தேவதைகளின் சேஷ்டைகள் அணுகாமல் இருக்கவும், சகல நோய்களும் குணமாகவும், எண்ணிய காரியங்களில் வெற்றி பெறவும், சகல சம்பத்தும் திருமகள் திருவருளால் கிடைக்கவும், சர்வ ஜன வசியம் கிடைக்கவும், வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் பெறவும், சத்துருக்கள் சரணடையவும் கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் வேலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு. பிரவேச் குமார் I.P.S.  அவர்கள் குடும்பத்தினர் பங்கேற்று சிறப்பித்தினர். மேலும் இவ்வைபவங்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.