கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Thursday, August 16, 2018
Wednesday, August 15, 2018
72nd Independence Day, Garuda Homam, Bharatha Mata Homam, Hayagreever Homam...
தன்வந்திரி
பீடத்தில் 72 வது சுதந்திர தினவிழா - பாரதமாதா ஹோமம் – கருட ஹோமத்துடன் கல்வி ஹோமங்கள் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம்
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் இன்று 15.08.2018 புதன்கிழமை
காலை 6.00 மணிக்கு நாதஸ்வர மங்கள இசையில்
துவங்கி, கோ பூஜை, யாகசாலை பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீதன்வந்த்ரி
ஹோமம், ஸ்ரீ ம்ருத்யஞ்ஜ ஹோமம், ஸ்ரீ
லஷ்மிநரசிம்மர் ஹோமம், ஸ்ரீ மேதா
தட்சிணாமூர்த்தி ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர்,
ஸ்ரீ வித்யா கணபதி ஹோமங்கள், பாரத மாதா ஹோமம், கருட ஹோமம், நடைபெற்றது.
72 வது சுதந்திர தினவிழா முன்னிட்டு “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சுதந்திர தினக் கொடியேற்றினார். மேலும் பாரத மாதாவிற்கு சிறப்பு ஹோமமும், அபிஷேகமும் நடைபெற்றது.
அரும்பாடுபட்டு
நம் முன்னோர்கள் நமக்காக பெற்று தந்த சுதந்திரத்தை பேணிக் காப்பது ஒவ்வொருவருடைய கடமையாகும். அந்த வகையில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
பாரதத் தேசத்தின் மீது அளவில்லாத பற்றுதலின் காரணமாகவும், பாரத மாதாவின் மீதுள்ள அளவுகடந்த பக்தியின் காரணமாகவும், இதுவரை எங்கும் பார்த்திராத
வகையில் பீடத்தின் நுழைவு பகுதியிலேயே நம்மையெல்லாம் பாரமாக நினையாமல் பெற்ற
குழந்தைகளாக பாதுகாத்திடும் பூமித்தாய் என்கிற அன்னை பாரதமாதாவையும் பிரதிஷ்டை
செய்துள்ளார். இங்கே தேச நலமே தேக நலம், தேக நலமே தேச நலம் என்ற தாரக மந்திரத்துடன் தினசரி பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது.
கர்மவினை தீர்க்கும் கருட ஹோமம்
மற்றவர்களுக்கு தீங்கிழைப்பவர்கள், தாங்கள் செய்த தீமையின் பலனை இறந்த பின்பு அனுபவிப்பார்கள். எந்தத்
தவறுக்கு என்ன தண்டனை என்பதை கருடனுக்கு இறைவன் போதித்ததே 'கருட புராணம்' ஆகும்.
தன்வந்திரி பீடத்தில் அஷ்டநாக கருடன் :
பெரிய திருவடி
என்று போற்றபடுவர் ஸ்ரீகருடாழ்வர். ஸ்ரீதன்வந்திரி பகவானை தரிசித்தபடி, 4 அடி உயரத்தில் நின்ற கோலத்தில், தம் உடலில் அஷ்ட
நாகங்களை தரித்து அவருக்கே உரிய அழகுடன் சிறப்பாக காட்சி தருகிறார். இவர் விஷ ஜந்துக்களால் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்க்கும் வகையிலும், பஞ்சபக்ஷி
தோஷங்கள், சர்ப்ப தோஷங்கள் போன்றவைகளால் ஏற்படும் தடைகளை விலக்கும் விதமாக ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அஷ்ட நாக கருட பகவானுக்கு கருட
ஹோமத்துடன், கருட பகவானுக்கு தேன் அபிஷேகம் மாலை 5.00 மணிக்கு நாக சதுர்த்தி, ஸ்ரீ கருட ஜயந்தி, கருட பஞ்சமியை முன்னிட்டு நடைபெற்றது. இந்த யாகத்தில் நவக்கிரக சமித்துக்கள், சீந்தில் கொடி, மிளகு, மருதாணிவிதை,
அருகம்புல், ஓமம்,
வலம்புரி, வசம்பு, கருடகொடி, நல்லெண்ணெய், தேன், நெய், வெண்பட்டு, மோதகம்,
சேர்க்கப்பட்டது.
மாணவ, மாணவியர்களின் கல்வித் தரம் உயர
மாபெரும் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ஹோமத்துடன்
ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ வித்யா கணபதி யாகங்களும் இன்று நடைபெற்றது.
பயிலும் மாணவ மாணவிகளுக்கு பலவிதமான இடையூறுகள்,
தேவையற்ற பழக்க வழக்கங்கள் ஏற்பட்டு கல்வியில்
நாட்டம் குறைதல், ஞாபக மறதி போன்றவைகளால் கல்வியில் பாதிப்புகள்
ஏற்படுகிறது. இந்த நோயை போக்கும் விதமாக ஸ்ரீ
மேதா தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ
லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ வித்யா கணபதி போன்ற ஹோமங்கள் நடைபெற்றது.
இதில் ஞானம், கல்வி, வித்தை, குரு கடாட்சம், சுபயோகம், ரோகமின்றி நல்ல
உடல் ஆரோக்கியம், கிரக தோஷமின்றி
வாழவும், மேலும், பல நல்ல
பலன்களை பெற உதவும் வகையிலும் மாணவ, மாணவியர்கள் கல்வியில் தேர்ச்சி
பெறவும், உலக அமைதிக்காகவும், நன்மைக்காகவும் பிரார்த்தனைகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் யாகத்தில் வைத்து
பூஜித்த இனிப்புகள், நோட்டு புத்தகங்கள், பழங்கள், பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில்
ஏராளமானவர் பங்கேற்று சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி
குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tuesday, August 14, 2018
Adharvana Bhadrakali Prathyangira Yagam - Lord Danvantri Rice Abhishekam..
தன்வந்திரி பீடத்தில்
சகல சௌபாக்யங்கள் தரும்
ஆடி பூரத்தில் அன்னதோஷம் நீங்க
தங்க அன்னபூரணிக்கு அன்னபடையல்
நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில்
அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் நேற்று
13.08.2018 திங்கள்கிழமை நண்பகல் 12.30 மணி அளவில் உலக மக்களுக்கு உணவு பஞ்சம் வராமலிருக்கவும் உணவினால்
ஏற்படும் தோஷங்கள் அகலவும் பசி பிணியை போக்கவும் விவசாயிகள் வியாபாரிகள் வளர்ச்சி
பெறவும் மழை வேண்டியும் இயற்கை வேளாண்மை செழிக்கவும் கயிலை ஞானகுரு டாக்டர்: ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகளால் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்து
தினசரி அனுகிரகம் செய்துவரும் அன்னம் அளிக்கும் ஸ்ரீ தங்க
அன்னபூரணிக்கு மகா அபிஷேகம் செய்து அலங்கார சமையலான சாதம் பருப்பு சாம்பார் ரசம்
கூட்டு பொரியல் வடை அப்பளம் பாயாசம் போன்ற பலவகையான சமையல் வகைகளை அன்ன படையலிட்டு
வழிபாடு செய்து வருகை புரிந்த
பக்தர்களுக்கு அன்னதோஷம்
அகலவும் சகல சௌபாக்யங்கள் கிடைக்கவும் அன்னபூரணியின் அன்னம் பிரசாதமாக வழங்கபட்டது.
அன்னபூரணி நமக்கு அன்னமூட்டும் தாயாக விளங்குபவள். இவளது கையில் பால்
அன்னம் நிறைந்த பாத்திரமும், கரண்டியும் இருக்கும். தம்மை
நாடிவருவோருக்கு வயிற்று பசியை மட்டுமல்லாமல் ஆன்மபசியையும் போக்கி அருள்கிறாள்.
அன்பையும், அறிவையும் நமக்குத் தருபவள் அன்னபூரணி
என்று ஆதிசங்கரர் காசி அன்னபூரணி மீது பாடிய ஸ்தோத்திரத்தில் கூறியுள்ளார்.
அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே!
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷõம் தேஹி ச பார்வதி!!
என்று அன்னத்தை மட்டுமல்லாமல், தேவியிடம் ஞானத்தையும் பிச்சையிடும்படி வேண்டுகிறார். எனக்குப் பார்வதியே அம்மா! பரமேஸ்வரனே அப்பா! பக்தர்கள் அனைவரும் சொந்த பந்தங்கள்!
மூவுலகமும் என் வீடு! அன்னபூரணியாகிய அம்பிகை அருளும் யாசகத்தை மூவுலகமும்
(உயிர்கள் அனைத்தும்) பெறவேண்டும், என்று உயிர்கள் மீது கொண்ட கருணையால்
வேண்டுகிறார்.
வள்ளலார் சொல்வதைக் கேளுங்க
அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டில் அன்னதானத்திற்கு மிகுந்த முக்கியத்துவம்
உண்டு. ஜீவ காருண்யத்துடன் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் உள்ளம் வாடிய அருளாளர்
வள்ளலார். இவர் தொடங்கிய சத்திய தருமசாலை ஆல்போல் தழைத்து அருகு போல எங்கும்
வியாபித்திருக்கிறது. இவர் ஏற்றிய அணையா அடுப்பு இன்றும் பலருடைய பசியை போக்கி
வருகிறது. அன்னதானத்தின் பெருமைகளை குறிப்பிடும்போது,சக மனிதனின் பசியைப் போக்குபவன் கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும்
தகுதி பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின் மீது பாய்ந்து கொல்லும் தருணத்தில்,
உணவிட்டுக் காப்பதே ஜீவகாருண்யமாகும்.அன்னதானம்
இடுபவரை வெயில் வருத்தாது. வறுமை தீண்டாது.இறையருள் எப்போதும் துணை
நிற்கும்.மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும். என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்னாபிஷேகம் செய்வது ஏன்?
தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. உணவுக்கும்
உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உண்ணும் உணவே நம் உணர்வாக வெளிப்படுகிறது.
சிலர் சாப்பிடும் போது, இது எங்க அம்மா சமைத்த மாதிரியே
இருக்கு என்று சொல்லி பெருமைப்படுவதுண்டு. அன்னையோடு அறுசுவை உண்டிபோம் என்று
அறுசுவை உணவுக்கும் அம்மாவுக்கும் உள்ள தொடர்பை பட்டினத்தார் குறிப்பிட்டுள்ளார்.
எனவேதான், அம்மையப்பராக இருந்து உலகைக்
காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம். ஐப்பசி
பவுர்ணமியன்று, உச்சிக்கால பூஜையின் போது இந்த
அபிஷேகத்தை நடத்துவது மரபாக உள்ளது. அன்னத்தை தெய்வம் என்பார்கள். சிதம்பரம் தில்லைச் சிற்றம்பலத்தில்
ஸ்படிகலிங்கத்துக்குத் தினமும் அன்ன அபிஷேகம் நடை பெறுகிறது. இதனாலேயே சிதம்பரத்திற்கு அன்ன க்ஷத்திரம் என்ற
பெயரும் உண்டு. இதே போல் அனைத்து சிவ ஆலயங்களிலும் தினமும் அன்ன அபிஷேகம் செய்து
நம் ஊர்களை எல்லாம் வளமுள்ளதாக்குவோம்.
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. தீயில் நீரும்,
நீரில் நிலமும் பிறக்கின்றன. நிலத்தில் விளைந்த
அரிசி, நீரில் மூழ்கி, தீயால் வெந்து அன்னமாகிறது. எனவே, அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை. அன்னம், அபிஷேகத்தின் போது ஆண்டவனை முழுவதும் அனைத்துத் தழுவிக்கொள்கிறது.
அவனிடமே அடைக்கலமாகிறது. இதன் மூலம் ஐம்பெரும் பூதங்களும் ஆண்டவனிடம் அடைக்கலம்
என்பதும், அவற்றின் உள்ளிருந்து இயங்கும் ஆண்டவனே
பரம்பொருள் என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றன.வழிபாட்டு முறைகள் எத்தனையோ
இருந்தாலும், இறையருளைப் பெற எளியவழியாக இருப்பது
அன்னதானம் மட்டும் தான். தானத்தில் சிறந்தது அன்னதானம் சோத்துக்குள்ளே இருக்கார்
சொக்கநாத சுவாமி உப்பிட்டவரை உள்ளளவும் நினை அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்
போகாது போன்ற சுலவடைகள் இதன் பெருமையை எடுத்துக்காட்டுவதாகும். பொன்,பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை. இன்னும்
கொடுக்கக் கூடாதா என்று எதிர்பார்ப்புடனே இருக்கும். ஆனால்,ஒருவன் வேண்டும் என்று கேட்ட அதே வாயால் போதும் என்று சொல்லி
மனநிறைவோடு எழுவது சாப்பிடும் போது மட்டுமே. சோறு கண்ட இடம் சொர்க்கம்.
இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது
ஐதீகம். இதனால் தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றார்கள். பிற்காலத்தில், இந்த சுலவடையை, நீண்டநாள் தங்கும் விருந்தாளிகளைக்
கேலி செய்வதற்கு பயன்படுத்தி விட்டார்கள்.
தர்மம் தலைகாக்கும்
பாடுபட்டு தேடிய செல்வத்தை சேமிக்க ஆயிரமாயிரம் வழி முறைகளை இன்று
நாம் பின்பற்றுகிறோம். ஆனால், தெய்வப்புலவர் திருவள்ளுவர் செல்வத்தை
சேமிக்க காட்டும் வழியைத் தெரிந்து கொள்ளுங்கள்.
திருக்குறள் ஈகை அதிகாரத்தில், அற்றார் அழிபசி
தீர்த்தல் அஃதொருவன் பெற்றார் பொருள் வைப்புழி என்கிறார். ஏழைகள் பசியால்
வாடும்போது, அன்னமிட்டு அப்பசியைப் போக்குபவன்
இறையருளைப்பெறுவது உறுதி. இந்த புண்ணியபலன், சரியான சந்தர்ப்பத்தில் நம் உயிரையும் காக்கும், என்பது அவரது கருத்து. இதையே
செய்த தர்மம் தலைகாக்கும் என்று குறிப்பிட்டனர். இறையருள் என்னும்
வட்டியைப் பெற, இதை விட பாதுகாப்பான முதலீடு
வேறொன்றும் கிடையாது. இத்தகைய
சிறப்புகளுடைய வழிபாட்டினை நேற்று ஆடி பூரத்தில் பக்தர்கள் நலன் வேண்டி மாதா அன்னபூரணிக்கு
மஹா அபிஷேகம் நடைபெற்று அன்னப்படயலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிறைவாக அன்ன
பிரசாதத்துடன் அன்னதானம் வழங்கப்படட்து. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Friday, August 10, 2018
Aishwarya Mahalakshmi Yagam....
21.09.2018 வெள்ளிக்கிழமை
காலை 6.00 மணி முதல் 2.00 மணி வரை சுக்ரஹோரையில்
ஆரோக்ய பீடத்தில்
- ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி யாகம்.
வேலூர் மாவட்டம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற
21.09.2018 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் நன்பகல்
2.00 மணி வரை சுக்கிர
ஹோரையில், 16 விதமான செல்வங்களை பெற ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி யாகம் நடைபெறுகிறது.
ஐஸ்வர்யம் என்ற
பெயருடன் உலகிலுள்ள அனைத்து செல்வங்களிலும் குடி கொண்டிருப்பவள் மகாலட்சுமி ஆவாள்.
அவள் தனம், தான்யம், சந்தானம், சௌபாக்யம், வைராக்யம், தைர்யம், வெற்றி, மன அமைதி. என அனைத்தையும் அனைவருக்கும் வழங்கி வருபவள். அவளே
தனலட்சுமி, தான்யலட்சுமி, தைர்யலட்சுமி, வீர லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, கஜ லட்சுமி என இந்த எட்டு நிலைகளிலும் அருள் புரிந்து வருகிறாள். அவளை வழிபடுவதால் அஷ்ட ஐஸ்வர்யம் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் அருள் புரிந்து
வருகிறாள். இத்தகைய சிறப்புகளுடைய தெய்வத்தின் அருள் பெற மேற்கண்ட ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி யாகம் தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி நடைபெற உள்ளது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில், ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தன்னுடைய பெற்றோருக்காக ஆலயம்
அமைத்து அன்றாடம் பல்வேறு விதமான ஹோமங்கள் பக்தர்களின் நலனை கருதி செய்து வருகிறார்.
இப்பீடத்தில் கடந்த 14 ஆண்டுகளாக அணையா
யாக குண்டத்தில் பக்தர்கள் திருக்கரங்களால் அவரவர்கள் பிரார்த்தனைகள் நடைபெற ஸ்வாமிகளின்
ஆசி பெற்று மூலிகை பொருட்களை யாகத்தில் சேர்த்து பிரார்த்தனை செய்து பலன் அடைந்து வருகின்றனர்.
இத்தகைய சிறப்புகள்
வாய்ந்த தன்வந்திரி பீடத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி உலக நலனுக்காக
நடைபெறும் ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி யாகத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு இங்கு பிரதிஷ்டை செய்துள்ள
ஆரோக்ய லக்ஷ்மியையும், குபேர லக்ஷ்மியையும் வழிபடுவதால் தேக ஆரோக்கியம்
கிடைத்தல், திருமணத்தடை
நீங்குதல், குழந்தை பாக்கியம் பெறுதல், கணவன், மனைவி இடையே
கருத்து வேறுபாடு நீங்கப்பெறுதல், செல்வவளம், ஞானவளம், அரசியலில் உயர்
பதவி கிடைக்கப்பெறலாம். இது இங்கு வருகை புரிந்து யாகத்தில் பங்கேற்கும்
பக்தர்களின் நம்பிக்கையாகும்.
குறிப்பாக இந்த
யாகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து பங்கேற்பதற்கு
ஏற்ற ஒரு யாகம் ஆகும். தங்கம், வெள்ளி நகைகள்
செய்பவர்களுக்கு தோஷங்கள் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த தோஷங்களை
அகற்றுவதற்கு இந்த யாகத்தில் சங்கல்பம் நடைபெறுகிறது. மேலும் காமத்திற்கு அதிபதியான சுக்ரன் ஜாதகத்தில் சரியாக இல்லையனில் எவ்வளவு
பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் காரியத்தடையும், மனக்குழப்பமும், பொருளாதார வீழ்ச்சியையும், திருமணத்
தடையும், குழந்தையின்மையும், வியாபார
வீழ்ச்சியையும் ஏற்படுத்துவார். எனவே, சுக்கிரதோஷம்
நீங்கிட சுக்கிரனுக்கு அதிபதியான மஹாலக்ஷிமியை சுக்ர ஹோரையில் நடைபெறும் இந்த ஐஸ்வர்ய
மஹாலக்ஷ்மி யாகத்தில் பங்கேற்று, ஆரோக்ய ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கும்,
குபேர லக்ஷ்மிக்கும் நடைபெறும் அபிஷேகத்தில் பங்கேற்று பலன் பெறலாம்.
மற்றும் திருமணம் நல்லபடியாக நடப்பதற்கும், குழந்தை
பாக்கியத்திற்கும், தம்பதியர் ஒற்றுமை மேலோங்கவும், மாங்கல்ய பலம் ஏற்படவும், திருமணத் தடை நீங்கவும், ஐஸ்வர்ய யோகம் கிடைக்கவும், பிரிந்த
தம்பதியர் ஒன்று சேர்வதற்கு இந்த யாகத்தில் சங்கல்பமும், கூட்டு பிரார்த்தனையும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற உள்ளது.
கலிகாலத்தில் கலிதோஷங்கள்
நீங்க தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுடன் ஸ்ரீ
அன்னபூரணி,
ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி, ஸ்ரீ மஹிஷாசுர
மர்த்தினி, ஸ்ரீ மரகதாம்பிகை, ஸ்ரீ வாசவி
கன்னிகா பரமேஸ்வரி, ஸ்ரீ சரஸ்வதி தேவி, ஸ்ரீ ஐஸ்வர்ய குபேர லக்ஷ்மி, ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி என
75 பரிவார மூர்த்திகளுடன், சிவலிங்க
ரூபமாக உள்ள 468 சித்தர்களுடன் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆன்ந்தம் அருளும் அற்புத நிவாரண ஸ்தலமாக
விளங்கி வருகிறது வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்.
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம் மேற்கு வாசல், கிழக்கு வாசல், வடக்கு வாசல் என்ற மூன்று நுழைவாயில்களுடன் 6 ஏக்கர் நில பரப்பில் மூலிகை வனங்களுடன் கோ சாலை, வைத்திய
சாலை, யாக சாலை, பாக சாலையுடன் தட்சிணாமூர்த்தி, வாஸ்து பகவான், அஷ்ட பைரவர், கால பைரவர்,
சொர்ணாகர்ஷண பைரவர், பாரத மாதா, மஹா அவதார பாபா, சஞ்சீவீ ஆஞ்சநேயர், கார்த்தவீர்யார்ஜுனர், தத்தாத்ரேயர், என 75 சன்னதிகளுடன் வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுபேட்டையில் அமைந்துள்ளது.
மேலும் இப்பீடத்தில், எங்கும் காணாத வகையில் 9 நவக்கிரகம் 27 நக்ஷத்திரங்களுக்குரிய விருட்சங்களை கொண்டு காலசக்கர வடிவில் அமைத்து அவப்பொழுது 27 நக்ஷத்திரங்களுக்குரிய யாகங்களும் இங்கு நடைபெற்று வருவது ஒரு தனி சிறப்பாகும்.
இதில் பங்கேற்க விரும்பவர்கள் மஞ்சள், குங்குமம், விசேஷ திரவியங்கள், பூசணிக்காய், சௌபாக்ய பொருட்கள், எலுமிச்சம் பழம், மிளகாய் வற்றல், வேப்ப எண்ணெய், , மூலிகைகள், அபிஷேக
திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை,
பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள்
கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள்
பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
Subscribe to:
Posts (Atom)



























