Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, July 30, 2018

Aadi Kuzhvarthal - Suktha Homams..


வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் குடும்ப க்ஷேம ஹோமத்துடன் 13 வது ஆண்டு கூழ்வார்த்தல் விழா.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலக அமைதி வேண்டியும் உலக நலனுக்காகவும் பெண்களின் மாங்கல்ய பலம் கூடவும், திருமணம், குழந்தை பாக்யம் வேண்டியும், தொழில் வியாபாரம் சிறக்கவும், குந்தைகள் கல்வியில் மேன்மை அடையவும், தம்பதிகள் ஒற்றுமைக்காகவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், மழை வேண்டியும், இயற்கை வளம் பெறவும், சகல விதமான ஜீவராசிகளின் நலனுக்காகவும், விவசாய பெருமக்களின் நலனுக்காகவும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஆடி மாதம் 18ம் தேதி 03.08.2018 மூன்றாவது வெள்ளிக் கிழமையை முன்னிட்டு குடும்ப க்ஷேமத்திற்காக காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கும் நவ கன்னிகைகளுக்கும் 13ஆம் ஆண்டு கூழ் வார்க்கும் திருவிழாவும், ஆடி பெருக்கு முன்னிட்டு சூக்த ஹோமங்களும், நவ கன்னிகைகளுக்கும், முனீஸ்வரனுக்கும் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடும் தன்வந்திரி குடும்பத்தினர்களால் நடைபெற உள்ளது.

ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவது ஏன் ???

தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார்ஜுரின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம்  தாங்கமுடியாமல் ஐமத்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரைவிட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார். அப்போது இந்திரன் மழையாக மாறி தீயை அணைத்தார். தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க  அருகில் இருந்த வேப்பமர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார்.

ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதால் அருகில் உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார். அப்போது மக்கள் அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை  உணவாக கொடுத்தனர். இதைக்கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து உணவருந்தினார்.

அப்போது சிவபெருமான், தோன்றி ரேணுகா தேவியிடம், உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த  உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று வரம் அளித்தார். இச்சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ்  வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோவில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள்.

மேற்படி நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மனின் அருளை பெற்று நவகன்னியரின் அருளுக்கு பாத்திரமாகும்படி கேட்டுகொள்கிறோம். மேலும் ஆடி பெருக்கு முன்னிட்டு ஆரோக்ய லட்சுமி தாயார், மரகதாம்பிகை, அன்னபூரணிதேவி, குபேர லக்ஷ்மி மற்றும் இதர தெய்வங்களை தரிசித்து மாங்கல்ய தோஷங்கள் நீங்கி வீடு மனை மக்களுடன் வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

.


Koti Japa Maha Danvantri Homam 12th Day...

Koti Japa Maha Danvantri Homam 12th Day...
"Canada Uthayan" News Paper

 Editor in Chief visit... 

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்நடைபெறும் ஸ்ரீ தன்வந்திரி கோடி ஜப ஹோமத்தில்கனடா நாட்டு உதயன் பத்திரிகையின் ஆசிரியர் பங்கேற்பு.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை என்றாலே ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் என்றுதான் அனைவரின் நம் அனைவரின் கவனத்தை ஈர்க்கிறது எனலாம். ஆரோக்ய பீடத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானான நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கும், ஆரோக்ய லக்ஷ்மி தாயாருக்கும், இதர 75 பரிவார மூர்த்திகளுக்கும் பக்தர்களின் தேவைகளுக்காக  நிவர்த்திக்காக யாகங்கள், ஜபங்கள் வைபவகமாக அனுதினமும் நடந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு கோடி ஜப யக்ஞமும், அர்ச்சனையும், மஹாபிஷேகமும் உலக நன்மை கருதியும், மக்கள் வாழ்வாங்கு வாழவும் தன்வந்திரி குடும்பத்தினர்கள் பங்கேற்று நட்த்தும் விதமாகமிகச் சிறப்பாக மாபெரும் கோடி ஜப ஹோமம் சென்ற 19.07.2018 முதல் 28.10.2018 வரை வைபவமாக வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்  நடைபெற்று வருகிறது.

இவ்வைபவத்தின் 12 வது நாளான இன்று நடைபெற்ற கோடி ஜப தன்வந்திரி வேள்வியில் கனடா நாட்டின் பிரபல பத்திரிகையான கனடா உதயன் பத்திரிகையின் ஆசிரியர் திரு. லோகன். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இக்கோடி ஜப தன்வந்திரி யாகத்தின் மூலம் நற்குழந்தைப் பேறு, பாலாரிஷ்ட தோஷ நிவர்த்தி (குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் நீங்குதல்), குழந்தைகளின் கல்வி மேம்பாடு,நல்ல ஞாபக சக்தி, தேர்வுகளின் நன்மதிப்பெண்கள் பெறுவது, கற்ற கல்விக்கேற்ற உத்யோகம்,உத்யோக உயர்வு, வியாபாரத்தில் பெருலாபம், சுப திருமண யோகம், நல்ல இல்லற வாழ்க்கை, நோயற்ற நீடித்த நல்வாழ்வு, வம்ச அபிவிருத்தி, ஸகல ஸெளபாக்கியங்கள், பித்ரு தோஷ நிவர்த்தி, முன்னோர்கள் பூரண ஆசீர்வாதம், நவக்ரஹ ஜாதக தோஷ நிவர்த்தி மற்றும் வேண்டும் வரங்களை மிக விரைவில் வழங்கிடும்.

மேலும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வலம் வந்து ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளையும் இதர 75 பரிவார மூர்த்திகளையும் தரிசித்து ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று சென்றார். அவருக்கு பீடத்தின் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது.








Shashti Homam...


Shashti Homam

At Walajapet, Sri Danvantri Arogya Peedam


With the blessings of our guruji, “Kayilai Gnanaguru” Dr. Sri Muralidhara Swamigal, Sri Danvantri Arogya Peedam is going to perform Karthikai Kumaran Homam on the most auspicious day of Shashti, the sixth day of the waxing moon, a thithi famous for invoking the Lord. This day falls on 2nd August, 2018 morning 10.00 AM at Walajapet, Sri Danvantri Arogya Peedam.

To appease the Lord Karthigai Kumaran, the homam will be performed with flowers of six colours, six varieties of fruits, and six types of prasadams (religious offering).

The homam is so powerful that it destroys negative forces, recharges everyone with positivity, It helps to avoid miscarriages and to overcome fertility problems or complications during pregnancy, cures ailments, and removes malefic effects of planet Mars, Guards against enemies and other evil forces, Cures diseases and empowers, All debt related issues are solved, Positivity galore for all, Acquire new properties, real estate dealings are successful, Blessings of the Lord Muruga, Renewed vigor and vivacity etc….

We are conducting the above Shashti Homam on every Shashti Thithi in our Peedam.

More details Please Contact ;
Sri Danvantri Arogya Peedam
Ananthalai Madura, Kilpudupet, Walajapet - 632513.
Vellore District, Tamil Nadu, India.
Tele : 04172-230033, 230274 | Cell : 9443330203


Shashti Homam...


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்பிரதி மாதம் ஷஷ்டி திதியில்

சத்ரு பயம் நீக்கி சந்தான பாக்யம் தரும் ஷஷ்டி ஹோமம் நடைபெறுகிறது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 02.08.2018 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஷஷ்டி திதியை முன்னிட்டு ஷஷ்டி ஹோமம்  நடைபெறுகிறது.

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது தமிழில் பரவலாகக் கூறப்படும் பழமொழிகளில் ஒன்று. சஷ்டி (சட்டி) விரதம் இருந்தால் அகப்பையில் (கருப்பையில் குழந்தை) வரும் என்று பொருள் கூறுகின்றனர்.

இங்கு அகப்பை என்பதை கருப்பை என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. மனசுக்கும் அகம் என்று பொருள் உண்டு என்பதால், மனதளவில் உள்ள குழப்பங்களுக்கும் சஷ்டி விரதம் பலனளிக்கும். இறைவனின் அருள் கிடைப்பதன் மூலமாக பொருள் கிடைக்கலாம். ஐம்புலனை அடக்கி மன அமைதி கிடைப்பதை சஷ்டி விரதம் உணர்த்தும் உண்மை. தியானத்துடன் நில்லாது மனம் வேறெங்கும் செல்லாமல் இறையருளை நாடி வேறு சிந்தனையின்றி களிப்புற வேண்டும். விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனு பூதி, கந்தர் கலி வெண்பா போன்ற நூல்களை படிப்பதின் மூலம் பல்வேறு நன்மைகள் பெறலம்.

விரதங்கள் மக்களின் மனவலிமை அதிகமாகவும், நம்பிக்கைகளின் அடிப்படையில், அவர்களது வாழ்வில் வளமும், நலமும், மிகுவதற்கு பயன்படுகின்றன. சஷ்டி விரதானுஷ்டானத்தை ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் கடைப்பிடிக்கலாம். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழக்கைத் துணையாக அடைய வேண்டியும், குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம். மிகக் கடுமையான நோய்களைக்கூட உண்ணாநோன்பின் மூலம் நீக்கிவிட முடியும்.

சஷ்டி விரதம் என்பது மிகப் பெரிய வர பிரசாதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வர்யத்தைக் தரக்கூடியது. 6 ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார். திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன்தான். எனவே, சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப் பேறு முக்கியமாக கருதப்படுகிறது. குழந்தைப்பேறுடன் மீதமுள்ள அனைத்து பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு. சஷ்டி விரத நாட்களில் மிகவும் நம்பிக்கையுடனும், பய பக்தியுடனும் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள் அனைத்து சிறப்பையும் பெற முடியும் என்பதை உறுதியுடன் சொல்லலாம். தீராத வழக்குகள், பல ஆண்டுகளாக தீராத நோய்களுக்கு மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஷஷ்டியில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்யம் வேண்டியும், குழந்தை பாக்யம் வேண்டியும், பல்வேறு குழப்பங்களுக்கு தீர்வு வேண்டியும், எதிரிகள், சத்ருக்கள் தொல்லைகள் நீங்கவும், தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள கார்த்திகை குமரனை வேண்டி சஷ்டி ஹோமம் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Sangada Hara Ganapathi Yagam....


Sangada Hara Ganapathi Yagam

On Sankashtahara Chathurthi 31.07.2018At Walajapet, Sri Danvantri Arogya Peedam.


With the blessings of our guruji “Kayilai Gnanaguru” Dr. Sri Muralidhara Swamigal,  we are conducting Sankada hara Ganapathi Homam on Maha Sangada Hara Chathurthi Day, Tuesday 31.07.2018 evening 5.00 PM at our Sri Danvantri Arogya Peedam, Walajapet.

Sankashti Chaturthi also known as Sankata Hara Chaturthi is an auspicious day dedicated to Lord Ganesha. Lord Ganapathi worshipped in this form relieves us from all fears. He was worshiped by kuja/Chevvai (Mars) and he relieves from Kuja Dosha/Chevvai (Manglik Dosha) present in our horoscope. Sankashtahara Ganapathi was worshiped by Lord Yama and he also destroys the effect of sins in one's life.

Krishna Chaturthi (Bahula Chavithi) is important for worship of Sankashtahara Ganapathi. Krishna Chaturthi along with Tuesday is more significant. This is called Angaraka Chaturthi, Maha Chathurthi or Bhauma Chaturthi these days occur just twice or thrice in a year. But these days which happen to be in Magha masa are very very rare.

BENEFITS OF SANKATAHARA CHATURTHI GANAPATHI HOMAM:
Ganesha is the god of wisdom and prosperity and is invoked before the beginning of any auspicious work. It is believed that for the fulfillment of one's desires, his blessing is absolutely necessary. The benefits and uses of Sankatahara Ganapathi Vrata are clearly depicted in Ganesha Purana as stories. Among them:

Being blessed with children, getting rid of the sin of Brahmahatya, getting rid of handicap, getting rid of Kuja Dosha (Chevvai Dosha), to be become a king, cure of leprosy, to be free from slavery, control of anger, to escape from unexpected sudden ďeath, to get cured of TB, to be blessed with true knowledge, to get back lost articles, being blessed with one's desires, victory in war, blessings of Guru, to get rid of the obstacles for marriages, to be blessed with children, to meet lost relatives and to get relieved of all bad effects in their horoscope, vitality etc....

More details Please Contact ;
Sri Danvantri Arogya Peedam
Ananthalai Madura, Kilpudupet, Walajapet - 632513.
Vellore District, Tamil Nadu, India.
Tele : 04172-230033, 230274 | Cell : 9443330203

Sankata Hara Ganapathi Yagam........


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்"மகா சங்கடஹர சதுர்த்தி" முன்னிட்டு

சௌபாக்கியம் தரும் சங்கடஹர கணபதி யாகம்.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 31.07.2018 செவ்வாய்கிழமை மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள வினை தீர்க்கும் விநாயகர் பிணி தீர்க்கும் தன்வந்திரி அருள் வேண்டி சங்கடஹர கணபதி ஹோமமும் மஹா அபிஷேகமும் நடைபெற உள்ளது.

சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் (வளர்பிறை) சதுர்த்தியை "வர சதுர்த்தி" என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் பிறை) சதுர்த்தியை "சங்கடஹர சதுர்த்தி" என்றும் கூறுவார்கள். நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதமாகும்.

மேலும் செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும். யாகங்களில் கலந்து கொண்டு வழிபாடு செய்தால் பல்வேறு சங்கடங்கள் தீரும் எனலாம்.

ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. சங்கடம் என்றால் இக்கட்டான சூழ்நிலைகள், தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது என்று பொருள். அதுவும் செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.

மேற்கண்ட மஹா சங்கடஹர சதுர்த்தி நாளில் நடைபெறும் சங்கடஹர கணபதி யாகத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு. செல்வம், செல்வாக்கு கிடைக்கும். மேலும் பலவிதமான நன்மைகளை அடைய அருள் பெறலாம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203