Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, June 29, 2018

Herbal Incense Powder......


பணக்கஷ்டம், கடன், வறுமை, நோய், குடும்ப பிரச்னை,
கணவன், மனைவி பிரச்னை, திருமணத் தடை, குழந்தை தடை தீர்த்து
நன்மை தரும் நட்சத்திர மூலிகை சாம்பிராணி

இயற்கை பல அதிசயங்களை உள்ளடக்கியது. அதில் நமது முன்னோர்கள் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துள்ளனர். அந்த கண்டுபிடிப்புகளின் பயனை அனுபவித்துவிட்டு அடுத்த தலைமுறைக்கும் விட்டுச் சென்றுள்ளனர். அதில் ஒன்றுதான் தெய்வீக மூலிகைகளான மூலிகை பொடியாகும் இதை நட்சத்திர மூலிகை சாம்பிராணி தூபம் என்றும் கூறலாம்.

மனிதனுக்கு இயற்கையிலேயே பல கஷ்டங்கள், துன்பங்கள் வரும் என்று தெரிந்த நமது முன்னோர்கள் அதிலிருந்து விடுபட பல வழிமுறைகளை கையாண்டுள்ளனர். அதில் ஒன்றுதான் இந்த தெய்வீக மூலிகைத்தூள்.

பணக்கஷ்டம், கடன், வறுமை, நோய், குடும்ப உறவுகளில் விரிசல், கணவன், மனைவி பிரச்னை, திருமணத் தடை, குழந்தை இல்லாமை, நிரந்தர வேலை இல்லாமை, சேமிப்பு இல்லாதது போன்ற பல பிரச்னைகளில் மனிதன் தனக்கு தெரியாமலேயே சிக்கிக் கொள்கிறான். இதுபோல பிரச்னைகளில் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்வு வாழ தினம்...தினம்... போராட்டம்தான். இதற்கான வழிமுறைகள் தெரியாமல் தவிப்பவர்கள் ஏராளம் பேர். கண்ணில் படும் கோயில்களுக்கும் சென்று வருகிறார்கள். இறைவனை வணங்கி பிரச்னைகளிலிருந்து வெளியேற பிரார்த்தனை செய்கின்றனர்.

இருந்தாலும் பிரச்னைகள் தீர்ந்ததபாடில்லை. இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து முழுமையாக வெளியேற நம் முன்னோர்கள் காட்டிய வழியில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 27 நக்ஷத்திரங்கள்க்குரிய விருக்ஷங்களையும், 9 நவக்கிரகங்கள்க்குரிய விருக்ஷங்களையும் காலசக்கரமாக அமைத்து விசேஷ பூஜைகள் செய்து, அவ்வப்பொழுது அவ்விருக்ஷங்களுக்கு ரக்ஷாபந்தனம் செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்விருக்ஷங்களுடன் இதர மூலிகைகளை கொண்டு  தெய்வீக நட்சத்திர மூலிகையுடன் சாம்பிராணி, குங்குலியம், சேர்த்து மூலிகை சாம்பிராணி செய்து வாஸ்து பகவான் சன்னதியில் வைத்து பஞ்சபூதங்களையும், அஷ்ட்திக் பாலகர்களையும், தன்வந்திரி பகவானையும் பிரார்த்தனை செய்து தேவைப்படும் நபர்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதை வாங்கி வீட்டில் பயன்படுத்தி வந்தால் உங்கள் பிரச்னைகள் உங்களை விட்டு முழுமையாக அகலும். கடன், வறுமை, நோய், உறவுகளில் விரிசல் போன்ற அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு ஏற்படும். தேவைக்கு வொண்டுவோர் கீழ்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளவும்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


Gho Pooja - Kamdhenu Yagam......


தன்வந்திரி பீடத்தில்
வருகிற 20.07.2018 ஆடி முதல் வெள்ளியில்
கொடிய சாபங்கள் விலக கோபூஜையுடன் காமதேனு ஹோமம்

மங்களகர்மான ஆடி மாதத்தில் கோ-பூஜை செய்து வழிபடுவது நல்லது. வாழ்க்கையில் பெரும் புண்ணியத்தைத் தருவது கோபூஜை. கோமாதாவின் உடலில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், இதர தெய்வங்களும், ரிஷிகளும், அஷ்டவசுக்கள் அடக்கம் என்கிறது வேத நூல்கள்.

பசுவை பெற்ற தாய்க்கு இணையாக கருதிதான் நாம் கோமாதாஎன்று அழைக்கிறோம். கோமாதா பூஜை செய்யும் போது பசுவை முன்புறமாக தரிசிப்பதை விட, பின்புறமாக தரிசிப்பது மிகவும் நன்மை தரும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் பசுவின் பின்புறத்தில்தான் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். பசுவை வழி படும்போது, முன் நெற்றி, வால் பகுதிகளில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை அணிவிக்க வேண்டும். பசுவின் சாணமும் லட்சுமி அம்சம். எனவேதான் வீட்டு வாசலில் சாணம் கரைத்து தெளிக்கிறார்கள். பசுவுக்கு பூஜை செய்வது என்பது, அகிலத்தைக் காக்கும் அன்னை பராசக்திக்கு பூஜை செய்வதற்கு ஒப்பானதாகும். பசுவின் பால், நெய் கொண்டே யாகங்கள் செய்விக்கப்படுகின்றன. இவ்வாறு யாகங்கள் செய்வதால் மழை பொழியும் என்பது ஐதீகம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 20.07.2018 ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை கொடிய சாபங்கள் விளக ஸ்ரீ காமதேனு ஹோமத்துடன் மாபெரும் கோபூஜை என்கிற கோமாதா பூஜை நடைபெற உள்ளது. இப்பூஜையில் பசுவுடன் கன்றையும் சேர்த்து வஸ்திரம் சார்த்தி அரிசி, வெல்லம், அகத்திக்கீரை, சர்க்கரைப்பொங்கல், வாழைப் பழவகைகள் போன்றவற்றை ஆகாரமாக அளித்து, பலவகையான புஷ்பங்களை கொண்டு கோமாதாவின் 108 போற்றியை பக்தியுடன் சொல்லி வழிபட்டு நெய்தீபத்தால் ஆராதனை நடைபெற உள்ளது. தொடர்ந்து வலம் வந்து வழிபாடு நடைபெற உள்ளது.

இப்பூஜை பித்ரு சாபங்கள், பித்ரு தோஷங்கள், பலவகையான சாபங்கள் விலகவும், செல்வச் செழிப்பு உண்டாகவும், குழந்தை இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு, புத்திரப்பேறு வாய்க்கவும், தீய சக்திகள் விலகவும்ம், கல்வி, செல்வத்துக்குரிய தேவதைகள் பசுவில் இருப்பதால், அவர்களுக்கு செய்யும் பூஜை மூலம் நல்ல கல்வியும், செல்வச் செழிப்பும் வந்து சேரவும். முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கவும், மன சஞ்சலங்கள் நீங்கி மகிழ்ச்சி குடிகொள்ளவும், பல யாகங்கள் செய்த பலனை பெறவும், பல புராதன கோவில்களுக்கு சென்று தெய்வத்தை வணங்கிய பலன் கிடைக்கவும், தீவினைகள், தீய சக்திகள் விலகவும், சௌபாக்கியங்கள் பெறவும் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பதினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Thursday, June 28, 2018

Thiruvona Homam - Thailabhishekam....


தீரா நோய் தீர்க்கும்
திருவோண ஹோமமும் தைலாபிஷேகமும்


ஒரே கல்லால் செய்யப்பட்ட வினை தீர்க்கும் விநாயகரும்,
பிணி தீர்க்கும் தன்வந்திரி பகவானும் :

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அன்ந்தலைமதுரா கீழ்புதுபேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் முகப்பை நோக்கி நடந்து வந்தால் , பீடத்தின் முன் நமக்கு காட்சி தருவது ஒரே கல்லால் செய்யப்பட்ட வினை தீர்க்கும் விநாயகரும், பிணி தீர்க்கும் தன்வந்திரி பகவானும். இவர்கள் இருவரும் ஏக தரிசனத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுக்கின்றனர். வினை தீர்க்கும் விநாயகர் சங்கு சக்கரத்துடன் தும்பிக்கையில் அம்ருத கலசத்துடன் வைஷ்ணவ சம்பிரதாயப்படி திருமண் காப்பு தரித்து சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கின்றார்.

தைலக்காப்பு திருமஞ்சனம் :

வினைகளுக்கு ராஜாவான விநாயகரும் பிணிகளுக்கு ராஜாவான தன்வந்திரி பகவானும் ராஜா அம்சமாக சிம்மாசனத்தில் வீற்றிருந்து அண்டி வருவோரின் உள்ளத்துப் பிணி, உடல் பிணி மற்றும் தீவினைகளையும் தீர்த்து அருள்பாலிக்கின்றனர். இந்தச் சந்நிதியில் “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிர்வாதத்துடன் மாதாந்திர திருவோண நக்ஷத்திரத்தில் கர்ம வினைகள் நீங்க பக்தர்கள் தங்கள் கைகளாலேயே தைலக்காப்பு திருமஞ்சனம் செய்து சிறப்பாகும்.

திருவோண நட்சத்திரத்தில் மாதந்தோறும்
மேற்கொள்ளப்படும் விரதம், பூஜைகள், ஹோமங்களின் பலன் :

மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம், பூஜைகள், ஹோமங்கள் மிகவும் சிறந்த பலன் தரக்கூடியதாகும். திருவோண நட்சத்திரம் பெருமாளுக்குரியது. வாமன அவதாரம் எடுத்தபோது, திருமால் திருவோண நட்சத்திரத்தில்தான் அவதரித்தார். மேலும், மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக அவதரித்த பூமிப்பிராட்டியை ஒப்பிலியப்பர் பெண் கேட்டு வந்தது, பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தன்றுதான். பிராட்டியை ஒப்பிலியப்பன்   மணந்துகொண்டதும், ஐப்பசி மாத திருவோண நட்சத்திர தினத்தில்தான்.

இத்தகைய நாளில் நோய் தீர்க்கும் மருத்துவராகவும், கர்ம பிணி தீர்க்கும் மருத்துவராகவும் திகழும் விநாயக தன்வந்திரிக்கு வருகிற 01.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை திருவோண நக்ஷத்திரத்தை முன்னிட்டு, திருவோண நக்ஷத்திர ஹோமமும், நல்லெண்ணையை கொண்டு தைல திருமஞ்சனமும் நடைபெறுகிறது.

ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு அபிஷேகம் செய்த
தைல பிரசாதத்தை உபயோகப்படுத்தி வந்தால் :

திருவோண நக்ஷத்திரத்தில் ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு அபிஷேகம் செய்த தைல பிரசாதத்தை உபயோகப்படுத்தி வந்தால் உடலில் ஏற்படும் வலிப்பு நோய், சொறி, சிரங்கு ஆகிய தோல் வியாதி, சர்க்கரை நோய், புற்று நோய், குறை பிரசவம் போன்ற கொடிய ஆட்கொல்லி நோய்கள், இதர வியாதிகளும் நீங்கும் என்கிறார் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

திருவோண ஹோமம் :

திருவோண தினத்தில் நடைபெறும் ஹோமத்தில் கலந்துகொண்டு வழிபட்டால் எல்லா வளங்களும் பெற்று, பிறப்பிலா பேறுடன் வைகுந்தப் பதவியை அடைவார்கள் என்று ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. முக்கியமாக, குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறுவார்கள். சந்திர தோஷம் இருந்தால் விலகிவிடும். சந்திரனின் அருள்பெற்று அவரால் உண்டாகும் தோஷங்கள் விலகி, இனிமையான வாழ்வு கிட்டும், வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும். நீங்காத செல்வம் நிலைத்து நிற்கும்.

மேலும் இங்கு வாஞ்சா கல்பலதா கணபதி ஹோமம், மகா கணபதி ஹோமம், உச்சிஷ்ட கணபதி ஹோமம்,  தன்வந்திரி கணபதி போன்ற ஹோமங்கள் அடிக்கடி தன்வந்திரி பீடத்தில் நடைபெறுவதால், யாக பலன்களும் வருகை புரியும் பக்தர்களுக்கு கிடைத்து தன்வந்திரி விநாயகர் அருளுடன் வாழ்வில் ஏற்படும் கர்ம வினைகள், பிணிகள் அகலும் என்கிறார் ஸ்வாமிகள். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203




Uchishta Ganapathi Yagam....


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
வருகிற 01.07.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை
உள்ளம் அமைதி பெற, உச்சிஷ்ட கணபதி யாகம்.

விநாயகப் பெருமானின் 32 வடிவங்களில் எட்டாவதாக விளங்குவது உச்சிஷ்ட கணபதி ரூபமாகும். உச்சிஷ்ட கணபதி பிரம்மச்சாரி என்று ஒரு தகவல் உள்ளது. இருந்தாலும் ஒரு பெண்ணை ஆலிங்கனம் செய்தபடி உள்ள அபூர்வமான கோலமே உச்சிஷ்ட கணபதி வடிவமாகும்.

படைத்தல், காத்தல், அருளல், மறைத்தல், அழித்தல் போன்ற ஐந்து கரண நிலையும் ஒரு பெண்ணின் உடலில் தான் உள்ளது என்பதை உணர்த்துபவர் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதியாகும். உச்சிஷ்ட கணபதி நீல சரஸ்வதி சமேதராக எழுந்தருளியிருப்பார்.

உச்சிஷ்ட என்றால் எச்சம் என்பது பொருள். நாம் எதை உண்டாலும் வாயில் மீதம் உள்ளது எச்சம் தான். இவ்வுலகில் எது இருந்தாலும் இல்லையானாலும் மிஞ்சி இருப்பதும் எப்போதும் இருப்பதும் பிரம்மம்தான். அந்த மிஞ்சி இருக்கும் பிரம்ம சக்திக்கே உச்சிஷ்ட என்று பொருள். அதோடு உச்சிஷ்ட என்றால் இருப்பதிலேயே உயர்வானது என்று மற்றொரு பொருளும் உண்டு. மாயையான இந்த உலகை நீக்கிப் பார்த்தால் மீதியிருப்பது இந்த உச்சிஷ்ட கணபதி எனும் பிரம்மம்தான். சுத்தம் அசுத்தம் என்ற இருவேறு நிலைகளை கடந்தவரே உச்சிஷ்ட கணபதி என்கிறது புராணங்கள்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 01.07.2018 ஞாயிற்றுக்கிழமை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, மாலை 04.20 மணிக்கு உலக நலன் கருதி உச்சிஷ்ட கணபதி யாகம் நடைபெற உள்ளது.

உச்சிஷ்ட கணபதி யாகத்தின் மூலம் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும், குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும், குபேர லக்ஷ்மியின் பரிபூரண அருள் கிடைக்கும், தீர்வு இல்லா கடன் பிரச்சனைகள் தீரும், எதிரிகள் ஓடி ஒளிவர், வியாபாரம் செழிக்கும், தொழில் சிறக்கும், விவசாயம் பெருகும், உத்யோகத்தில் முன்னேற்றம் பெறலாம், தடைபெற்ற காரியங்கள் விரைவில் நடைபெறும், செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் கைகூடும் இழுபறியாக உள்ள வழக்குகள் விரைவில் முடியும் போன்ற பல்வேறுவிதமான நற்செயல்களில்ந்த ஜப ஹோமத்தின் மூலம் நன்மை பெறலாம்.

இந்த யாகத்தில் பட்டு வஸ்திரம், நெய், தேன், கொப்பரை, நெல்ப்பொரி, அவல், கரும்பு, வெல்லம், வறுகடலை, அப்பம், அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்கள், வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய், கருங்காலி, நாயுருவி போன்ற பல்வேறு விசேஷ திரவியங்கள் சேர்க்கப்பட உள்ளன. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடுமபத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


Wednesday, June 27, 2018

Ekadasa Rudra Yagam - Swayamvara Kalaparvathi Yagam - Gandharvaraja Homam - Santhana Gopala Yagam...


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
ஏகாதச ருத்ர யாகத்துடன்
 சுயம்வர பார்வதி, கந்தர்வ ராஜ, சந்தான கோபால
ஹோமங்கள் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி பௌர்ணமியை முன்னிட்டு இன்று ஆனி 13ஆம் தேதி, 27.06.2018 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு உலக நலன் கருதி பௌர்ணமியை முன்னிட்டு சிதம்பரம் தீக்ஷிதர்களை கொண்டு ஏகாதச ருத்ர யாகம் மற்றும் சுயம்வர பார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம், சந்தான கோபால யாகம் ஆகிய நான்கு ஹோமங்கள் நடைபெற்றது.

இயற்கை வளம், நாடு நலம், மழை வளம் வேண்டியும், கொடிய நோய்களிலிருந்து விடுபடவும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள், உத்யோகம், தொழில், வியாபார அபிவிருத்தி, கணவன் மணைவி ஒற்றுமை போன்ற பல்வேறு நன்மைகள் பெறவும், ஸகல பாவங்களையும் போக்கும் ஸ்ரீ ருத்ர ஜபம், ஹோமம், அபிஷேகம்  நடைபெற்றது. ஸ்ரீருத்ர ஹோமம் செய்வதின் மூலம் பஞ்சமாபாதகங்களில் இருந்தும் விடுபட்டு அஞ்ஞானம் ஒழிந்து ஆத்மஞானம் பெறுகின்றான் என்பது புராணங்கள்.

ஆண் – பெண் திருமணத்தடைகள் நீங்க சுயம்வர கலாபார்வதி யாகம், கந்தர்வராஜ ஹோமம் மற்றும் தம்பதிகள் குழந்தைபாக்யம் பெற சந்தான கோபால யாகமும் ஆனி பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரருக்கு மஹா அபிஷேகமும், அர்ச்சனையும் நடைபெற்றது. மேலும் யாகங்களிலும் பூஜைகளிலும் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருட்பிரசாதம் வழங்கி சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. இந்த யாகத்தில் வாலாஜாபேட்டை, ராமு நர்சிங் ஹோம் நிர்வாகி திரு. டாக்டர் குழைந்தைவேல் மற்றும் குடும்பத்தினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.