Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, July 22, 2017

Gholakshmi with Rishabharaja Thirurkalyanam / Cow and Bull Marriage

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் தமிழகத்தில் முதல் 

முறையாக 300 நாதஸ்வர கலைஞர்கள் பங்குபெற்ற நாத 

சங்கம நிகழ்சியுடன் கோலஷ்மி மற்றும் ரிஷப ராஜா 

திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.


தமிழகத்தில் முதல் முறையாக வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலக அமைதி வேண்டியும் உலக நலனுக்காகவும் மழை வேண்டியும் இயற்கை வளம் பெறவும் சகல விதமான ஜீவராசிகளின் நலனுக்காகவும் விவசாய பெருமக்களின் நலனுக்காகவும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இன்று ஆடி மாதம் 5ம் தேதி 21.07.2017 வெள்ளிக் கிழமை  காலை கோபூஜை கணபதி பூஜை, புண்ணியாவாசனம், மஹாமண்டப பூஜை, இரட்சாபந்தனம், யக்ஞோபவீதம், பாதபூஜை, வஸ்திரதானம், மஹாசங்கல்பம், கன்னிகாதானம், தம்பதிபூஜை, பஞ்சதானம், தசதானம், போன்ற பூஜைகள் நடைபெற்று காலை 10.00 மணிக்கு திருமாங்கல்யம் 300 நாதஸ்வர கலைஞர்கள் இசைக்க வலமாக வந்து தட்சிணாமூர்த்தி சன்னதியிலும் ஸ்வாமிகளின் பெற்றோர்களின் சன்னதியிலும், வீரப்ரம்மங்காரு சன்னதியிலும் வைத்து சிறப்பு பூஜை செய்து 20 க்கும் மேற்பட்ட வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் 20 க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் புடை சூழ 300க்கும் மேற்பட்ட சீர்வரிசையுடன் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடன் கோமாதாவிற்கும் ரிஷபராஜாவிற்கும் திருமணம் நடைபெற்றது.

மேற்கண்ட திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு நேற்று 20.07.2017 வியாழக் கிழமை காலை 10.00 கணபதி ஹோமம் மாலை 6.00 மணிக்கு சிவ பார்வதி யாகத்துடன் ஸ்ரீ லட்சுமி நாராயண ஹோமமும் நடைபெற்று   மாலை 6.30 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பும் 7.00 சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சியுடன் அறுசுவை விருந்தும் நடைபெற்றது. இதினை முன்னிட்டு வேலூர், ஆர்க்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், திருத்தணி  பக்தர்களுக்கு அரசு புறநகர மற்றும் மாநகர  பேருந்து வசதி செய்யப்பட்டது.இரண்டு நாட்களும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது .இதில் கோயம்பத்தூர் ஆர்.வி.எஸ்.குருப் சேர்மன் திரு.கே.வி.குப்புசாமி அவர்கள் தவத்திரு.மோகனானந்தா ஸ்வாமிகள் கோயம்பத்தூர் காமாட்சிபுரி ஆதினம் விஜயவாடா சைவஷேத்திர பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சிவசாமிகள், பனக்கால பள்ளி மடாதிபதி மேலும் ஆந்திராவிலிருந்து 20க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் பங்கேற்றனர். குற்றாலம் டாக்டர் ஸ்ரீநிவாசன்,  வேலூர் துர்காபவன் உரிமையாளர் திரு. உதயசங்கர், காஞ்சிபுரம் வி.ஜி.என்.டால்மில் உரிமையாளர் திரு.சரவணன், சென்னை டாக்டர் மாயா, திருமதி.கங்காபாய், திருமதி ரேவதி அமுதன், திரு பிரகாஷ், திருமதி ரமா வெங்கட்ராமன், திருப்பத்தூர் சாரதி ஜெயராமன் பங்கேற்று சிறப்பித்தனர்.  மேலும் வியாபாரிகள், பொதுமக்கள், பக்தர்கள், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.விழா மேடையில் கோமாதாவிற்கும் ரிஷபராஜாவிற்கும் சிறப்பு அலங்காரமும் வண்ண விளக்குகளும் செய்யப்பட்டு இருந்ததை கண்டு பக்தர்கள் அனைவரும் பார்த்து மகிழ்ச்சி அடைந்து சென்றனர்.


இந் நிகழ்ச்சி ஏற்பாட்டினை தன்வந்திரி பக்தர்களும் தன்வந்திரி குடும்பத்தினரும் செய்திருந்தனர்.  வருகை புரிந்த பக்தர்களுக்கு ஸ்வாமிகள் ஆசீர்வதித்து தாம்பூல பிரசாதத்தை வழங்கினார். நிறைவாக ஸ்வாமிகள் அருளாசியில் தமிழகத்தில் முதல் முறையாக இத்திருமணம் நடைபெற்றது என்ற தகவலை தெரிவித்தார்.






















Wednesday, July 19, 2017

Gholakshmi with Rishabharaja Thirukalyanam on 21.07.2017 at Sri Danvantri Arogya Peedam, Walajapet..

வருகிற 21.07.2017 ல் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்

150 நாதஸ்வர கலைஞர்கள் நிகழ்த்தும் நாத சங்கமத்துடன்

கோலஷ்மி மற்றும் ரிஷப ராஜா திருமணம்

அரசு பேருந்துகள் நின்று செல்ல ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலக அமைதி வேண்டியும் உலக நலனுக்காகவும் மழை வேண்டியும் இயற்கை வளம் பெறவும் சகல விதமான ஜீவராசிகளின் நலனுக்காகவும் விவசாய பெருமக்களின் நலனுக்காகவும் கயிலை ஞானகுரு டாக்டர்ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வருகிற ஆடி மாதம் 5ம் தேதி 21.07.2017 வெள்ளிக் கிழமை காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் கடக லக்னத்தில் வீட்டிற்கு பயன்தரும் கோமாதா என்ற பசுவிற்கும் நாட்டிற்கு பயன் தரும் ரிஷபராஜா என்ற காளைக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

பசு மனிதர்களுக்கு தாயும் தந்தையும் போன்றது. பசுவை வணங்கி போற்றுபவன் பிரம்மதேவனையும் தனது பெற்றோர்களையும் வணங்குபவனாகிறான். சிவபெருமானின் வாகனமான நந்தியின் வாரிசுகள் தான் காளைகள். நந்தி நன்மைகளின் சொரூபம், வம்ச விருத்தியின் அடையாளம்  மற்றும் விவசாயிகளின் உற்ற நண்பர் எனலாம். இத்தகைய பெருமைகளுடன் நம்முடன் வாழும் பசுவிற்கும் காளைக்கும்   டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிளின் ஆக்ஞைப்படி தன்வந்திரி பீடத்தில் மேற்கண்ட திருமண மகோத்சவம் நடைபெற உள்ளது. இவ் வைபவத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகள் அஷ்ட வசுக்கள், மற்றும் நவக்கிரகங்களின் ஆசி பெற அன்புடன் அழைக்கின்றோம்.

மக்களின் நன்மைக்கு ஆதிநாளிலிருந்தே ஆதாரமாக விளங்கி வருவது பசு முறைப்படி பசுவை வணங்குவதை கோபூஜை என்பர் கோ என்றால் சத்தியம், வாக்கு, நீர், சுவர்க்கம், ஒளி, சந்திரன், அக்கினி, அரசன் மற்றும் உலகம்  என்று பொருள் சொல்லப்படுகிறது  ஸ்ரீ.ராமபிரான், ஸ்ரீ மஹா விஷ்ணு பூமியில் அவதரிக்க மூல காரணமே கோபூஜை தான் என்கிறது புராணங்கள்.


மேற்கண்ட திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு வருகிற 20.07.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணிக்கு சிவ பார்வதி யாகத்துடன் ஸ்ரீ லட்சுமி நாராயண ஹோமமும் நடைபெற்று   மாலை 6.30 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பும் 7.00 சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சியுடன் அறுசுவை விருந்தும் நடைபெற உள்ளது. 21.07.2017 வெள்ளிக் கிழமை காலை 8.30 மணிக்கு தம்பதி பூஜையும் 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் மாங்கல்ய தாரணமும் நடைபெற உள்ளது. இதினை தொடர்ந்து காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை 150 நாதஸ்வர வித்வான்கள் பங்கேற்று நடத்தும் நாத சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும். இதினை முன்னிட்டு வேலூர், ஆர்க்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், திருத்தணி மார்கமாக செல்லும் அனைத்து அரசு புறநகர மற்றும் மாநகர பேருந்துகளும் கீழ்புதுபேட்டை உள்ள தன்வந்திரி பீடம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் தினமும் நின்று செல்ல அனுமதி பெறபட்டுள்ளது (தடம் எண் : 400, 162, 160, 161, 408, 444, 324, 222, 111). இந்த வாய்ப்பினை பக்தகோடிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Sunday, July 16, 2017

Panthakkal Muhurtham Special Pooja For Gho Lakshmi Tirukkalyanam on 21st July 2017

Panthakkal Muhurtha with Kuladevatha Grama Devatha Pooja

ஸ்ரீ தன்வந்திரிபீடத்தில்

குலதேவதா கிராமதேவதா பூஜையுடன்

பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலக அமைதி வேண்டியும் உலக நலனுக்காகவும் மழை வேண்டியும் இயற்கை வளம் பெறவும் சகல விதமான ஜீவராசிகளும் உஜ்விக்கவும் விவசாய பெருமக்களின் நலனுக்காகவும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வருகிற ஆடி மாதம் 5ம் தேதி 21.07.2017 வெள்ளிக் கிழமை  காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் கடக லக்னத்தில் வீட்டிற்கு பயன்தரும் கோமாதா என்ற பசுவிற்கும் நாட்டிற்கு பயன் தரும் ரிஷபராஜா என்ற காளைக்கும்நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு எவ்வாறு திருமணம் நாம் செய்து வைப்போமோ அவ்வகையில் பசு என்றழைக்கும் கோ லஷ்மிக்கும் காளை என்று அழைக்கும் ரிஷபராஜாவிற்கும் திருமணத்தை தன்வந்திரி குடும்பத்தினர் முறையாகவும் வைபவமாகவும் நிகழ்த்த உள்ளார்.
மேற்கண்ட வைபவத்திற்காக  இன்று 16.07.2017 ஞாயிற்று கிழமை காலை 7.00 மணிக்கு பந்தக்கால் முகூர்த்மும் 8.00 மணிக்கு ஸ்ரீ முனீஸ்வரருக்கும், நவகனியருக்கும்,விஷேச அபிஷேகத்துடன் பொங்கல்வைத்து குல தெய்வ கிராம தெய்வ வழிபாடும் 9.30 மணியளவில் சுமங்கலி பூஜையும் 10.00 மணிக்கு கந்தர்வராஜ பூஜையும் நடைபெற்றது.  11.00 மணியளவில் பட்டுப் புடவை, பட்டு வேட்டி, திருமாங்கல்யம் மற்றும் சௌபாக்ய பொருட்கள்  மணிக்கு தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் கோடி தீபம், கோடி அர்ச்சனையில் சௌபாக்ய பொருட்களுடன் மாங்கல்யம் வைத்து மாங்கல்ய பூஜையும் நடைபெற்றது.


இதனை தொடர்ந்து வருகிற 20.07.2017 மாலை 6.30 மணிக்கு  சிறப்பு நிகழ்ச்சிகளுடன்  108 வகையான பொருட்களுடன் 7.30 மணிக்கு சீர்வரிசையுடன் மாப்பிள்ளை அழைப்பும் இரவு 8.00 மணிக்கு சிறப்பு விருந்தும் நடைபெற்று மாங்கல்யதாரணம் மறுநாள் 21.07.2017 ஆடி முதல் வெள்ளிக் கிழமை சிறப்பு ஹோமங்களுடன் காலை 9.15 முதல் 10.15 மணிக்குள் கோ லஷ்மிக்கும் ரிஷபராஜா என்கிற நந்திகேசனுக்கும் நடைபெற்று 10.30 மணிமுதல் 12.00 மணிவரை 150 மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்கும் நாத சங்கமம் நிகழ்ச்சியும் சிறப்பு திருமண பிரசாதமும் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. .இந்த வைபவத்தில் ஏராளமான மடாதிபதிகளும், ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு முப்பத்து முக்கோடி தேவர்கள் 48 ஆயிரம் ரிஷிகள் அஷ்டவசுக்கள், மற்றும் நவகிரகங்களின் ஆசிகளுடன் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் எழுந்தருளியுள்ள தெய்வங்களின் ஆசிகளையும் பெற உள்ளனர்.இந்த வைபவத்தில் அனைவரும் பங்கேற்று ஆசிபெற ஆரோக்ய பீடம் அன்புடன் அழைக்கிறது.















Saturday, July 15, 2017

Vasthu Homam and Rahu Ketu Peyarchi Yagam on 27.07.2017

இந்தியாவில் வாஸ்துபகவானுக்கென்று தனிகோயில்
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
ஜூலை 27ல் வாஸ்துநாளை முன்னிட்டு
வாஸ்துதோஷ நிவர்த்தி ஹோமம்.

வளமான வாழ்க்கைக்கு வாஸ்து ஹோமம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் பீடாதிபதி யக்ஞ புருஷர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 27.07.2017 வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து தோஷநிவர்த்தி ஹோமம் நடைபெறவுள்ளது.
மக்கள் பல லட்சங்கள் செலவு செய்து பெரிய பெரிய கட்டிடங்களும், அலுவலகங்களும், வீடுகளும், தொழிற்சாலைகளும் கட்டி குடியேறுகின்றனர். அங்கு குடியேறியபின் குடும்பத்தில் குழப்பம், தொழிலில் நஷ்டம், திருமணத்தடை, குழந்தையின்மை, விபத்து, பொருளாதாரத்தடை போன்ற எண்ணற்ற பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதன் அடிப்படைக் காரணம் என்னவென்று பார்த்தால் முறையாக வாஸ்து பார்த்து கட்டிடம் கட்டியிருக்க மாட்டார்கள். கட்டிய பின்னர் வாஸ்து பார்த்து திருத்தியமைக்க விரும்பினால், தேவையற்ற பொருளாதாரச் செலவுகள் ஏற்படுகின்றன.இதுபோன்ற வீண்விரயங்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேலே புராணத்தில் சொல்லியுள்ள படி, உலகில் வேறெங்கும் இல்லாதவாறு வாலாஜாப்பேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்,தனி சன்னதியாக வாஸ்து பகவான் தலை பாகம் வடகிழக்கு ஈசானிய பகுதியிலும் இருபாதம் தென்மேற்கு பகுதியிலும் உள்ளபடியே அமைத்திருக்கிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்களை ஒன்றும் செய்ய இயலாமல் தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.இதனால் கடும் கோபம் கொண்ட சிவபெருமானின் உடலிலிருந்து வாஸ்து பகவான் வெளிப்பட்டு அசுரர்களை அழித்துவிடுகிறார்.அசுரர்களை அழித்துவிட்டு மீண்டும் சிவனிடம் வந்துதாங்கள் இட்ட வேலை முடிந்து விட்டது, மீண்டும் உத்தரவிடுங்கள்என்றார். சிவபெருமானும்தற்போது உனக்கு வேலையில்லை நீ வருடத்தில் 8 நாட்கள் மட்டும் விழித்திருந்து மீதி நாட்கள் படுத்துறங்கி, விழித்திருக்கும் எட்டு நாட்கள் மட்டும் என்னை பூஜை செய்என்றார். ஆகவேதான் வாஸ்துபகவான் தலை பாகம் வடகிழக்கு ஈசானிய பகுதியிலும் இருபாதம் தென்மேற்கு பகுதியிலும் அமைந்திருக்கும்.வாஸ்து விழிக்கும் நாளில் மக்கள் அவரை வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைப்பது மட்டுமல்லாமல் மனிதர்கள் குடியிருக்கும் இடங்களைச் சுற்றி தோஷங்கள் அண்ட விடாமல் பாதுகாப்பது வாஸ்து பகவானின் வேலையாகும்.
முறையான வாஸ்துவின் நன்மைகள்: வாஸ்து முறையான கட்டிடத்தில் குடியிருப்பதால் முதலில் மனநிம்மதி, உடல் ஆரோக்கியம், நல்வழி, நல்லவர்கள் தொடர்பு, ஏமாறாமல் இருப்பது, ஏமாற்றாமல் இருப்பது, குடும்ப ஒற்றுமை, உறவினர்கள் உறவு, எதிரிகள் தாக்குதலில் நிவர்த்தி போன்ற சகல நன்மைகள் உருவாகும். மேலும் புதிய வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் கட்ட இருப்பவர்களுக்கு, வாஸ்து பகவானிடம் வைத்து பூஜிக்கப்பட்ட செங்கல், மண், வாஸ்து யந்திரம் போன்றவைகள் மக்கள் நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வழங்கி வருகிறோம்வாஸ்து நாளான 27.07.2017 வியாழக்க்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து பகவானுக்கு பூஜையும், வாஸ்து ஹோமமும் நடைபெற உள்ளது மேலும் அன்றைதினம் காலை 10.00 மணியளவில் ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெறவுள்ளது. அந்த யாகத்திலும் பாலஜோதிடம் வாசகர்கள், ஜோதிடர்கள் மற்றும் சந்தாதாரர்கள் பங்கேற்று பயன்பெற கேட்டுகொள்கிறோம். என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

தொடர்புக்கு,

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033 / 230274
செல் – 9443330203
E-Mail: danvantripeedam@gmail.comWeb: www.danvantritemple.org