Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, June 20, 2017

KURMA JAYANTHI 2017

சனி தோஷத்தை போக்கும் கூர்ம ஜெயந்தி  வழிபாடு

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை  தன்வந்திரி பீடத்தில் வருகிற 21.06.2017  புதன் கிழமை காலை 10.00 மணியளவில்  ஆனி கிருஷ்ண பட்ச த்வாதசி  திதி கூர்மஜெயந்தியை முன்னிட்டும். மகா விஷ்ணுவை வழிபட உகந்த தினத்தன்று மாபெரும் ஸ்ரீ கூர்ம ஹோமமும் கூர்ம பெருமாளுக்கும் ஸ்ரீ லஷ்மி நரசிம்மருக்கும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது.

கூர்ம அவதார ஜெயந்தி பலன்.

ஆனி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் த்வாதசி திதியில் பகவான் மந்தர மலையை பின்னே வைத்து ஆமை உருவத்தில் பிறந்தார்.சனி தோஷத்தை போக்கும் கூர்ம ஜெயந்தி வழிபாடு மகாவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரமாகப் போற்றப்படுவது கூர்ம (ஆமை) அவதாரம்.. ஆமையானது நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது. இது உயிர் வாழ்க்கையானது நீரில் இருந்து நிலத்திற்கு பரவியமையைக் காட்டுகிறது.
அவதாரத்திருநாள் மற்ற அவதாரங்கள் எல்லாம் தீயவர்களை அழிக்க எடுக்கப்பட்ட அவதாரங்களாகும். ஆனால் கூர்ம அவதாரம் யாரையும் அழிக்காமல் பல அரிய பொருட்களை தேவர்களுக்கும் மக்களுக்கும் வழங்கத் துணை நின்ற அவதாரமாகும்.

ஓம் தராதராய வித்மஹே             ஓம் லோகாத்யக்ஷõ வித்மஹே
தாராத்யக்ஷõ தீமஹி               பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ கூர்மஹ் ப்ரசோதயாத்       தன்னோ கூர்மஹ் ப்ரசோதயாத்

ஆந்திரா- ஶ்ரீ கூர்மம் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ கூர்மநாதப் பெருமாள்
கூர்மவதார பெருமாளுக்கு ஆந்திரா- ஶ்ரீ கூர்மம் தவிர உலகில் வேறெங்கும் கோவில் இல்லை என்ற நிலை மாறி உள்ளது. வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் கூர்ம பெருமாளுடன் ஸ்ரீ லஷ்மி நரசிம்மருக்கு தனி சன்னதி அமைத்துள்ளார்..

கூர்ம அவதாரத்தின் ஒரு வகையானத் தத்துவம்


நற்குணங்கள் ஒரு புரமும் துற்குணங்கள் ஒருபுரமும் இழுக்க, ஓரு பக்தன் சாதனை (பக்தி, யோகம், தவம்) செய்ய விருப்பம் கொண்டால் அதை இறைவனே பொருப்பேற்று, தொடங்கி, தாங்கி, உறுதுணையாக, தேவைப்படும்போது தானே ஏற்றி நடத்தி, விஷம் போன்றத் தீயவைகளை விலக்கி, பல நன்மைகளைத் தந்து, நல்லவர்களுக்கு அமிர்தமான பேரானந்த பேற்றை அளிப்பான்.என்பதாகும்.   கூர்ம அவதாரத்துடன்-தன்வந்திரி-மோகினி அவதாரங்கள் ஒருசேர நிகழ்ந்து-ராகு-கேது கோள்கள் உருவான நிகழ்வு-திருப்பார்கடல் கடைந்தது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Sunday, June 18, 2017

Gandharvaraja Homam

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
கந்தர்வ ராஜ ஹோமம்


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 18.06.2017 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு தன்வந்திரி ஹோமம், கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற்றது. இதில்திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும் ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் நீங்கி ஆரோக்யதுடன் வாழ கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது இதில் பங்கேற்ற திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு கலசாபிஷேகம் செய்து அன்னதானமும் வழங்கப்பட்டது.




Saturday, June 17, 2017

YAGNAMELA

தன்வந்திரி பீடத்தில் யக்ஞமேளா.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் மன அமைதி வேண்டியும் உலக நலன் வேண்டியும் இன்று 17.06.2017 சனிக் கிழமை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்  ஆக்ஞைப்படி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு

தடைபடும் திருமணங்கள் நிறைவேறவும், தொழில் வியாபாரம்,வளர்ச்சி பெறவும் உத்தியோகம் கிடைக்கவும் நவகிரக தோஷம் அகலவும், கணவன் மனைவி கருத்து வேறுபாடு அகலவும், பிரிந்தவர்கள் ஒன்று சேரவும், நிலவளம், நீர்வளம் விவசாயம் பெறுகவும், வாரிசு உண்டாகவும், பகை அகலவும், கல்வி கேள்விகளில் மேன்மையடையவும், மாணவ மாணவியருக்கு நல்ல பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கவும், நோய் அகலவும்,  பல வகையான தோஷங்கள் சாபங்கள் அகலவும் ,துஷ்ட சக்திகள்  அணுகாமல் இருக்க போன்ற பல்வேறு காரணங்களுக்காக காலை 10.00 மணியளவில் நவகிரஹ தோஷங்கள் அகல நவகிரஹ ஹோமம், சந்தான கோபால யாகம் ,ஸ்ரீ கால பைரவர் யாகம், சொர்ண ஆகர்ஷண பைரவர் யாகம், மஹா ம்ருத்ஞ்சய யாகம், சூலினி துர்கா ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமம், ஆயுள்ஹோமம், நடைபெற்று ஸ்ரீ காலபைரவர், சொர்ண பைரவர், மஹா பிரத்தியங்கிரா தேவி, மஹிஷாசுர மர்த்தினி, ஆஞ்சநேயர் மற்றும் நவநீத கிருஷ்ணருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று அன்னதானமும் வழங்கபட்டது. இதனை தொடர்ந்து நாளை 18.06.2017 ஞாயிற்று கிழமை  காலை ஆண்கள் திருமணத் தடை நீங்க  கந்தர்வ ராஜ ஹேமம் உடல் நோய், மன நோய் நீங்க மஹா தன்வந்திரி ஹோமமும் ஐஸ்வர்யம் பெற ஸ்ரீ மகாலட்சுமி யாகம் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.









Friday, June 16, 2017

Sri Danvantri Peedam Sahasra Chandi Yagam.

On the Occasion of Aadi Pooram, Aadi Friday, Raahu-Kethu Peyarchi, Sri Danvantri Arogya Peedam Founder, Kayilai Gnanaguru Dr. Sri Muralidhara Swamigal conducting "SAHASRA CHANDI YAGAM" ( 1000 Chandi Yagam ) Performed by 54 Srividhya Upasakar for Viswasanthi. Starting from 26.07.2017 to 30.07.2017 at Sri Danvantri Arogya Peedam,Walajapet.

For Sankalpam Rs.5000/- per Family.

More Details,Contact,

Ph: 04172-230033/230274/09443330203
E-Mail: danvantripeedam@gmail.com 
Web: www.danvantritemple.org 

Yaga Thiruvizha at Sri Danvantri Arogya Peedam

தன்வந்திரி பீடத்தில் இரண்டு நாட்கள்

யாகத் திருவிழா

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் மன அமைதி வேண்டியும் உலக நலன் வேண்டியும் நாளை 17.06.2017 சனிக் கிழமை மற்றும் 18.06.2017 ஞாயிற்றுக் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் யாகத் திருவிழா கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்  ஆக்ஞைப்படி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நடைபெறுகிறது.


இந்த யாகங்கள் தடைபடும் திருமணங்கள் நிறைவேறவும், தொழில் வியாபாரம்,வளர்ச்சி பெறவும் உத்தியோகம் கிடைக்கவும் நவகிரக தோஷம் அகலவும், கணவன் மனைவி கருத்து வேறுபாடு அகலவும், பிரிந்தவர்கள் ஒன்று சேரவும், நிலவளம், நீர்வளம் விவசாயம் பெறுகவும், வாரிசு உண்டாகவும், பகை அகலவும், கல்வி கேள்விகளில் மேன்மையடையவும், மாணவ மாணவியருக்கு நல்ல பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கவும், நோய் அகலவும்,  பல வகையான தோஷங்கள் சாபங்கள் அகலவும் ,துஷ்ட சக்திகள்  அணுகாமல் இருக்க போன்ற பல்வேறு காரணங்களுக்காக  நாளை காலை 10.00 மணியளவில் நவகிரஹ தோஷங்கள் அகல நவகிரஹ ஹோமம், சந்தான கோபால யாகம் ,ஸ்ரீ கால பைரவர் யாகம், சொர்ண ஆகர்ஷண பைரவர் யாகம், மஹா ம்ருத்யஞ்ச யாகம், சூலினி துர்கா ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமம், ஆயுள்ஹோமம், நடைபெற உள்ளது.இதனை தொடர்ந்து 18.06.2017 ஞாயிற்று கிழமை  காலை ஆண்கள் திருமணத் தடை நீங்க  கந்தர்வ ராஜ ஹேமம் உடல் நோய், மன நோய் நீங்க மஹா தன்வந்திரி ஹோமமும் ஐஸ்வர்யம் பெற ஸ்ரீ மகாலட்சுமி யாகம் நடைபெறுகிறது. மேலும் தன்வந்திரி பகவான் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர், ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரத்தியங்கிரா தேவி, ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி, சிறப்பு திருமஞ்சனமும் கந்தர்வ ராஜ ஹோமத்தில் பங்கேற்கும் ஆண்களுக்கு கலசாபிஷேகமும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tuesday, June 13, 2017

Sahasra Chandi Yagna.

Sahasra Chandi Yagna at Sri Danvantri Peedam.

We are planning to conduct a grand Sahasra Chandi Yagna in Sri Danvantri Arogya Peedam,  Walajapet, Vellore Dt. from July 26th to July 30th 2017 with the blessings of our Guru and God, Sri Danvantri. This is being performed to celebrate the Adi Friday and Adi Pooram with Ragu Kethu Peyarchi 2017-2019. Founder Sri Muralidhara Swamigal  Organizing and conducting several type of Homams all over the world and the Peedam dedicates this Sahasra Chandi Yagna to his lotus feet.

The Sahasra Chandi Yagna entails a cumulative chanting of 1000 times of Sri Devi Mahatmyam and the performance of 100 Chandi Homams. We will be performing 100 Chandi Homams from July 26rd to 30th at Sri Danvantri Peedam. We will be truly honoured if you can join us for the Chandi Parayanam online/in person and participate in the Homams.

It is said that even to witness a Chandi homam, one needs to have done great deeds in the present and past births. Tantras say “Kalau Chandi Vinayakau,” meaning that Goddess Chandi (Maa Durga) in Kaliyuga provides immediate benefit to mankind.  Devi herself explains in the 4th and 12th chapters of Devi Mahatmyam all the benefits obtained by performing the  Chandi parayanam and homam. Sri Muralidhara Swamigal always used to say that when Devi Mahatmyam is chanted with devotion and proper pronunciation or listened with bhakthi, Goddess Durga bestows all Her blessings to us to gain both material comforts and spiritual progress.
Sri Muralidhara Swamigal has performed more than 400 Chandi Homams and five Sahasra Chandi Homams. Along with him will be his Veda Pandits  who are both considered as great authorities on Sri Vidya and Tantra Shastra.

We seek your participation in this event by your presence as a devotee, as a volunteer and/or as a Ritwik participating in the Parayanam and the Chandi Homam.

With pranams at the lotus feet of our Guru,

Sri Muralidhara Swamigal.

Sahasra Chandi Yagam.

வாலாஜா பேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
சகஸ்ரசண்டி மகாயாகம்.

 இராகுகேது பெயர்ச்சி, ஆடிவெள்ளி மற்றும் ஆடிப்பூரம் 
முன்னிட்டு 26.07.2017 முதல்  30.07.2017 வரை ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் சகஸ்ர சண்டி மகாயாகம்

வேலூர் மாவட்டம் ,வாலாஜாபேட்டை அருகே ஔஷதகிரி என்றும் குபேர பட்டிணம் என்றும் ஆரோக்ய பீடம் என்றும் அழைக்கப்படும் தன்வந்திரி பீடம் அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் 46 லட்சம் பக்தர்கள்  கைப்பட எழுதிய  54 கோடி  தன்வந்திரி லிகித ஜப  மந்திரங்களை  கொண்டு 9 அடி மூலவர்  தன்வந்திரி பெருமாள், ஆரோக்ய லட்சுமி  தாயார், ஐஸ்வர்ய ப்ரத்தியங்கிரா தேவி, 18 கைகளுடன்  ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி, போன்ற 73 தெய்வங்களுடன்  மகான்களும்  468 சித்தர்கள் சிவலிங்க ரூபமாக கொண்டு மிகவும் இரம்மியமாக  இயற்கை சூழலுடன்  மூலிகை வாசத் ஸ்தலமாக அமைந்து  உள்ளது.

ஷண்மத  பீடமாக திகழ்கின்ற தன்வந்திரி பீடத்தில் தினசரி யாகத்துடன் அன்னதானம்மருத்துவ சேவை கோ பராமரிப்பு  நடைபெற்று வருகிறது. ஆண்டு தோறும்  பல்வேறு வகையான  பிரம்மாண்ட  யாகங்கள் நடைபெற்று  வருகிறது.  குறிப்பாக 365 நாட்கள் 365 விதமான  யாகங்கள், சதசண்டீ யாகம், 365  நாட்கள் சண்டியாகம், 6000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு மஹா  ப்ரத்தியங்கிரா யாகம், லட்சம் நெல்லிக் கனிகளில் கனகதாரா யாகம், 10 லட்சம் ஏலக்காய்களை கொண்டு லட்சுமி ஐயக்ரீவர் யாகம்லட்சத்து முப்பத்திரண்டாயிரம் லட்டுகளை கொண்டு குபேர லட்சுமி யாகம், ஒரு லட்சம் மோதகங்களை கொண்டு வாஞ்சா கல்ப கணபதி யாகம், ஒரு லட்சம் தாமரை பூக்களை கொண்டு மஹா லட்சுமி யாகம், முப்பது லட்சம் தாமரை விதைகளைக் கொண்டு அஷ்ட லட்சுமி யாகம் 74 பைரவர் யாகம், 64 பைரவர் யாகம்,108 கணபதி யாகம், 468 சித்தர்கள் யாகம் 21 ஆயிரம் ஜாங்கிரியை கொண்டும் 11 ஆயிரம் வாழைப்பழத்தை கொண்டும் ஸ்ரீ ஆஞ்சநேயர் யாகம், 21 ஆயிரம் மாதுளை பழத்தை கொண்டு ஸ்ரீ மஹா காளி யாகம், 21 ஆயிரம் வில்வ காய்களுடன் ஸ்ரீ மஹா லட்சுமி யாகம் , ஒரு லட்ச ஜபத்துடன் ஸ்ரீ மஹா சுதர்சன யாகம், 24 மணி நேரமும் 27 யாகங்கள், லட்ச த்தி எட்டாயிரம் ஜபங்களுடன் நவகிரக ஹோமம்,நவ துர்கா ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமம், 2014 பூசணிக்காயை கொண்டு கூஷ்மாண்ட யாகம், அதி ருத்ரம், மஹா ருத்ரம், ஏகாதச ருத்ரம்,55 நாட்கள் 135 யாகங்கள் போன்ற பல்வேறு விதமான  மஹாயாகங்கள் உலக நலன் கருதி நடைபெற்றுள்ளது. ஸ்ரீ தன்வந்திரி, சுதர்சன ஹோமம், ஸ்ரீ கார்தவீர்யார்ஜீனா ஹோமம், மஹா மிருத்யஞ்ச ஹோமம், கந்தர்வராஜ ஹோமம், சுயம்வர கலா பார்வதி யாகம், சந்தான கோபால யாகம்,  சத்ரு சம்ஹார ஹோமம்,  சூலினி துர்கா ஹோமம், தேய்பிறை அஷ்டமி யாகம், அமாவாசை யாகம், பௌர்ணமி யாகம், போன்ற கார்ய சித்தி  ஹோமங்களும் மாதம் தோறும்  கயிலை ஞானகுரு  டாக்டர்  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி நடைபெற்று  வருகிறது.

இத்தகைய  சிறப்புகளுடன் யக்ஞபூமியாக திகழும்  ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மனநோய்உடல் நோய் ,தீர்க்கும் வகையில்  அம்மனுக்குரிய  ஆடி மாதத்தை  முன்னிட்டும் இராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டும்  உலக மக்கள் அனைவரும்  ஆனந்தமாக  வாழ வேண்டியும், இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும்  நல்ல மழை பெய்து  விவசாயம் செழிக்க வேண்டியும்  என்ற  வகையில் ஆயிரம் சண்டி மகா யாகம்  என அழைக்கப்படும்  சகஸ்ர சண்டி ஹோமம் நடைபெறுகிறது.

26.07-2017 தேதி ஆடி மாதம் 10ம் தேதி புதன் கிழமை, ஆடி பூரம், திருவோண நட்சத்திரம் சதுர்த்தி கூடிய சுபதினத்தில்  மாலை  4.30  மணிமுதல்  கோ பூஜை  விக்னேஸ்வர பூஜை, சண்டி தேவி கலச பூஜையுடன்  தீப சண்டி பாராயணத்துடன்  துவங்க உள்ளது

27.07.2017 தேதி  ஆடி மாதம் 11ம் தேதி வியாழன் காலை  6.30 மணிமுதல் எல்லா காரியங்களும் தங்கு தடையின்றி வெற்றி பெறவும் நோய் நொடிகளின்றி நீண்ட ஆயுளை பெறவும் இராகு கேது பெயர்ச்சி யாகம், நவக்கிரக ஹோமம், மகா தன்வந்திரி ஹோமம்,மஹா சுதர்சனம், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி, மிருத்ஞ்ஜய ஹோமம் தொடங்குகிறது. இரவு 7 மணிக்கு சண்டி ஆவரண பூஜை, அர்ச்சனை தீபாராதனை நடைபெறுகிறது.

28.07.2017 தேதி ஆடி மாதம் 12ம்   வெள்ளிக் கிழமை காலை 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை நினைத்த காரியங்கள் நடைபெறவும், 26 வகையான செல்வங்கள் கிடைக்கவும், குழந்தை இல்லாத தம்பதியர்கள் மட்டும் கலந்து கொள்ளும் புத்திரகாமேஷ்டி ஹோமம், தங்கு தடையின்றி பெண்களுக்கு திரு மணம் நடைபெற வேண்டி ஸ்வயம்வரா பார்வதி ஹோமம், ஆண்களுக்கு கந்தர்வ ராஜ ஹோமம், ஸ்ரீ மஹா லட்சுமி யாகம், காலபைரவர் ஹோமம் அதை தொடர்ந்து சதுர் சஷ்டி பைரவ பலி  பூஜை  நடைபெறுகிறது.

29.07.2017 தேதி ஆடி மாதம் 13ம் தேதி சனிக் கிழமை காலை  7.30  மணி முதல்  இரவு 8 மணி வரை  ஹோரம்ப  கணபதி ஹோமம்,  அதை தொடர்ந்து ஆயிரம் சண்டி மகா ஹோமம்  தொடங்குகிறது. இரவு 7 மணிக்கு அம்பாளின்  சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 30.07.2017-ந்தேதி ஆடி மாதம் 14 ந் தேதி ஞாயிற்று கிழமைகாலை 7 மணி முதல்
இரவு 8 மணி வரை  சகல சௌபாக்கியங்கள் வேண்டி வாஞ்ஜா கல்பலதா கணபதி ஹோமம், தசமஹா வித்யா ஹோமம் . ஸ்ரீசாக்த உபாசகர்களைக் கொண்டுநடைபெறுகிறது.

தன்வந்திரி பீடம்  ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி தன்வந்திரி  பக்தர்கள், தன்வந்திரி குடும்பத்தினர் மற்றும் நிர்வாகிகள் இந்த யாகத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். யாகம் நடைபெறும் 5 நாட்களிலும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் நடைபெறுகிறது.

இதுபற்றி ஸ்தாபகர் டாக்டர்  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  கூறுகையில், ஆயிரம் சண்டி யாகம் என அழைக்கப்படும் சகஸ்ர சண்டி யாகம் மன்னர்களும், அரசர்களும், நாட்டின் நன்மைக்காக செய்து வந்தனர். இதன் பெருமை மக்களுக்கு தெரியப்படுத்த மவுரிய பேரரசு காலத்திலும் அதன்பின் மைசூர் அரசன் காலத்தில் காஞ்சிபுரம், மதுரை, புதுக்கோட்டை ஆகிய நகரங்களிலும் 1963-ம் ஆண்டு நடந்துள்ளது. அதை தொடர்ந்து அன்புடன் உலக மக்கள் ஆரோக்யத்துடன்  சகலஐஸ்வரியம்  பெற்று  இறையருளுடன் ஆனந்தமாய் வாழ வேண்டி வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் 5 நாட்கள் ஸ்ரீ சகஸ்ர சண்டி ஹோமம் நடைபெறுகிறது  என்றார்.