Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, March 24, 2017

தன்வந்திரி பீடத்தில் நாளை சனி பிரதோஷம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாளை 25.03.2017 சனிக் கிழமை சனிபிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5.00 மணிக்கு  ஸ்ரீ மரகதாம்பிகை சமேத  மரகதேஸ்வரருக்கு 108 சங்குகளை கொண்டு சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.மேலும் பால், தயிர்,பழம்சந்தனம், பன்னீர் கொண்டு மஹா அபிஷேகமும் வில்வஇலைகளாலும், வன்னி இலைகளாலும் அர்ச்சனையும் நடைபெற உள்ளது.சனி பிரதோஷத்தில் நடைபெறும் சங்காபிஷேகத்தில் பங்கேற்பவர்களுக்கு  இறைவன் அருளால் பக்த கிடைத்து மன அமைதி பெற்று பக்தி கிடைக்கும்.ஐஸ்வர்யங்கள் கிடைக்கும். சகல விதமான நோய்கள் அகலும்.கங்கா தேவி ஆசி கிடைக்கும்.நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் குறையும்.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.

ஓம் பாஞ்சஜந்யாய வித்மஹே
பவமாநாய தீமஹி தந்ந சங்க ப்ரேசோதயாத்







வாலாஜா தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு ஹோமங்கள் -- அபிஷேகம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை,கீழ்புதுப்பேட்டை அனந்தலை கிராமத்தில் தன்வந்திரி பீடத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கும் உடல் நோய் மனநோய் தீர்க்கும் வைத்திய கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கும் ஸ்ரீ ஆரோக்யலட்சுமி தாயாருக்கும்ஸ்ரீ கார்த்தவீர்யாஜீனருக்கும், உலக நலன் கருதி பிரதி ஏகாதசிதிதிதிருவோணம் நட்சத்திரம் மற்றும் அனைத்து ஞாயிற்று கிழமைகளில் காலை 10.00 மணிமுதல் 1.00 மணி வரை மஹா தன்வந்திரி ஹோமம் , தன்வந்திரி மூலவர் திருமஞ்சனம்  மற்றும் சிறப்பு ஆராதனைகள்பலவகையான திரவியங்களை கொண்டு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி  நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்று கீழ்கண்ட நன்மைகளை பெற்று தன்வந்திரி அருள்பெறவேண்டுகிறோம்.


1.   பகையை வெல்ல உதவும்.
2.   புத்திரபாக்யம் தரும்.
3. வம்சாவளி பெருக்கம் தரும்,
4.  நல்வாழ்க்கை அமையும்.
5. இல்லறம் இனிக்கும்.
6.  அகால மரணம் அடைந்த மூதாதயர்கள் மோட்சம் பெறுவர்.
7. மன உளைச்சல் அகலும்.
8. வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும்.
9. பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும்.
10.கடல் கடந்து சென்று வெற்றி பெறுவீர்.
11.வெளிநாட்டில் உள்ள நமது சொந்தங்கள் சிறப்படையும்.
12.ணவனை பிரிந்துவாடும் நங்கைகள் கணவனுடன் வெளிநாடு சென்று வாழ்க்கையை ஆரம்பிப்பர்.
13.ஆயிரம் பசுதானம் செய்த  பலன் கிடைக்கும்.
14.திருமண யோகம் தரும்.
15.பாபத்தை போக்கும். நல்ல பேற்றினை ஏற்படுத்தும்.
16.துரோகிகள் விலகுவர்.
17.உடல் சோர்வு நீக்கும்.
18.பெண்களுக்கு உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.
19.ரத்த சோகை அகலும்.
20.வளர்ச்சிக்காக காணும் கனவுகள் (சிந்தனைகள்) வெற்றிபெறும்.
21.உடல் ஆரோக்கியம் தரும்.
22.சௌ பாக்யம் எனும் அனைத்தும் கிடைக்கும்.
23.வாழ்க்கையில் அனைத்து வெற்றியும் கிட்டும்.
24.ஸ்ரீகேதாரிநாத், பத்ரிநாத் யாத்திரை சென்ற பலன் கிடைக்கும்.
25.கயாவில் தர்ப்பம் செய்த பலன்
26.பிராயாகையில் புண்ணிய ஸ்நானம் செய்த பலன்
27.சிவராத்திரி விரத பூஜை பலன்.
28.இஷ்ட நற்சக்திகளை தர வல்லது.
29.முன்னோர்களின் ஆசியையும், அவர்களது எதிர்பார்ப்புகளை நம் மூலம் செயல்படுத்தி நம்மை வெற்றியாளராக்குவது ஆகும்.
30.கனவிலும் நினைக்காத கற்பனைக் கெட்டாத வாழ்க்கை அமையும்.
31.குழந்தைகள் கல்வியில் சிறக்கவும் விரும்பிய மேல்படிப்பு அமையவும், சிறந்த மாணவ- மாணவிகளாக திகழவும் செய்வார்கள்
32.சொர்ணம் வீட்டில் தங்கும் (தங்கம் நம் வீட்டில் தங்கும்).
33.நமதுவீட்டு கிணறு, ஆழ்குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும். ஊருக்கும் தண்ணீர் பஞ்சம் வராது.
34.வறுமை ஒழியும், நோய் அகலும், பசிப்பிணி நீங்கும்,
35. நிம்மதி நிலைக்கும்,
36. தீர்த்த யாத்திரை சென்ற புண்ணியம் கிடைக்கும்.

தன்வந்திரி ஹோமத்தில்வெண்கடுகு வெற்றிவேர்,சீந்தல் கொடி பசும்நெய், தேன்,மற்றும் பலவகையான மூலிகை திரவியங்கள் சேர்க்கப்படுகிறது. தன்வந்திரிக்கு நடைபெறும் தன்வந்திரி பெருமாளுக்கு மூலிகை தைலத்துடன் நெல்லிக்காய் பொடி, கரும்புசாறு, பால்,தயிர், துளசி தீர்த்தம், சங்கு தீர்த்தம், மற்றும் மஞ்சள், சந்தனம், இதர வாசனாதி திரவியங்களை கொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்று மூலிகை தைலம் துளசி தீர்த்தம் பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

Wednesday, March 22, 2017

தன்வந்திரி பீடத்தில் சனி பிரதோஷம் - 25.03.2017

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில்
அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் 25.03.2017 சனி பிரதோஷம் மாலை 4.30 மணி முதல் 6. 00 மணி நடைபெறுகிறது.

சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும் பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. அவற்றில் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷம் இன்று சிறப்பாக அனைத்து கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை  மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷம் நித்ய பிரதோஷம் ,மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும்.

தினம் தோறும் மாலை 4.30 மணி முதல் 6. 00 மணி வரையிலான காலம் நித்ய பிரதோஷ காலம் எனப்படும். இந்த சமயத்தில் இறைவனை வழிபடுவது மிகவும் சிறப்பு ஆகும். மாதம் தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் மாதப் பிரதோஷம் எனப்படும். ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது. சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சனி பிரதோஷத்தன்று முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

‌ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது.

வாலாஜா தன்வந்திரி பீடத்தில் நந்தி பீடத்தின் மேல் சிவன் உள்ளதால் இவரை சனி பிரதோஷத்தில் தரிசித்து  பிரசாதம் பெற்று விரதத்தை முடிக்கலாம். . பிரதோஷ தரிசனத்தால் கடன், வறுமை,, நோய்பயம் போன்றவை விலகும்.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்..

Monday, March 20, 2017

தன்வந்திரி பீடத்தில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ சூலினிதுர்கா,ஸ்ரீசொர்ணகாலபைரவர், ஆயுள்ஹோமம், மிருத்ஞ்ய ஹோமம் நடைபெற்றது..

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுராவில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி உலக நலன் கருதி பல்வேறு வகையான ஹோமஙகள் நடைபெற்றது.


தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு  நடைபெற்ற இந்த ஹோமத்தில் பங்கேற்றவர்கள் சர்ப தோஷம், ராகு தசை, ராகு புக்தியினால் ஏற்படும் தொல்லைகள் அகலவும், செய்வினை கோளாறு, பில்லி சூன்யம் போன்ற மாந்த்ரீகம், தோஷங்கள் அகலவும், திருமணம் கைக்கூடவும், சந்தான ப்ராப்தம் கிடைக்கவும், தொழில் தடைகள், பணப்பிரச்சினை, கடன் பிரச்சினை தீரவும்சத்துருக்களால் ஏற்படும் தொல்லைகள், மரணபயம், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும், மண்வளம், மழைவளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும், மனிதர்களுக்கு ஏற்படும் சகலவிதமான த்ருஷ்டி தோஷங்கள் நீங்கவும் வெண்கடுகு, வால் மிளகு, வேப்பெண்ணையை கொண்டு சூலினி துர்கா ஹோமம், ஆயுள் ஹோம்ம் மிருத்திஞ்சய ஹோமம்  நடைபெற்றது. இதனை முதல் இரவு 7.00 மணி வரை அஷ்டபைரவர் ஸகித காலபைரவர் யாகம் மற்றும் சொர்ண ஆகர்ஷ்ண பைரவர் யாகம் நடைபெற்றது.

பக்தர்கள் சொர்ண கால பைரவர் ஹோமத்தில் . தொழில் உள்ள இறங்குமுகம், வாராக்கடன், போன்ற பல இன்னல்கள் நீங்கவும் பிரிந்த உறவினர்கள் ஒன்று சேரவும் உயர் பதவி கிடைக்கவும்பிரார்த்தனை செய்தனர்.இந்த யாகத்தில் பல்வேறு வகையான மூலிகைகள் சேர்க்கப்பட்டு பால், தயிர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், மஞ்சள், இளநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து  உளுந்து வடைமாலை சார்த்தப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். இநத யாகத்தில் முன்னாள் வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.ராஜேந்திரன். I.A.S  அவர்கள், ஆற்காடு தொழிலதிபர் திரு.J.L. லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்









Sunday, March 19, 2017

தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 20.03.2017 திங்கட் கிழமை காலை 10.00 மணிமுதல் 1.00மணி வரை ஸ்ரீ சூலினி துர்கா, ஸ்ரீ கால பைரவர் சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமம் நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுராவில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி உலக நலன் கருதி சூலினி துர்கா  ஹோமத்துடன் ஸ்ரீ காலபைரவர் ஸ்ரீ சொர்ணாகர்ஷண
பைரவர் யாகம் நடைபெற உள்ளது.

சர்ப தோஷம், ராகு தசை, ராகு புக்தியினால் ஏற்படும் தொல்லைகள் அகலவும், செய்வினை கோளாறு, பில்லி சூன்யம் போன்ற மாந்த்ரீகம், தோஷங்கள் அகலவும், திருமணம் கைக்கூடவும், சந்தான ப்ராப்தம் கிடைக்கவும், தொழில் தடைகள், பணப்பிரச்சினை, கடன் பிரச்சினை தீரவும்சத்துருக்களால் ஏற்படும் தொல்லைகள், மரணபயம், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும், மண்வளம், மழைவளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும், மனிதர்களுக்கு ஏற்படும் சகலவிதமான த்ருஷ்டி தோஷங்கள் நீங்கவும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நாளை காலை 10.00 மணியளவில் 1.00 மணி வரை வெண்கடுகு, வால் மிளகு, வேப்பெண்ணையை கொண்டு சூலினி துர்கா ஹோமம், ஆயுள் ஹோம்ம் மிருத்திஞ்சய ஹோமம்  நடைபெறுகிறது இதனை தொடர்ந்து ஸ்ரீமகிஷாசுரமர்த்தனிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை அஷ்டபைரவர் ஸகித காலபைரவர் யாகம் மற்றும் சொர்ண ஆகர்ஷ்ண பைரவர் யாகம் நடைபெறும்.

இந்த பிரபஞ்சத்தில் வாழும் சகல ஜீவராசிகளும் வான் மண்டலத்தில் சுற்றி சுழன்றுக் கொண்டிருக்கும் நவ கிரகங்களும் காலச்சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டவை ஆகும். காலச் சக்கரத்தில் சிக்கி துன்புறும் பக்தர்களை காப்பாற்றுவதால் ஆபத்தாரணர் என்று போற்றி புகழப்படுகிறார். காலத்தின் கட்டுப்பாட்டை கடந்து துன்பப்படும் பக்தர்களுக்கு நன்மை செய்பவர் காலபைரவர் ஆவார். பைரவர் என்ற பதத்திற்கு பயத்தை போக்குபவர் என்றும் பொருள். காலபைரவர் சட்டநாதர், மகா காளர், பிரம்ம சிரச்சேத மூர்த்தி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அடியார்களுடைய பயத்தை போக்குவதும் அடியார்களின் எதிரிகளுக்கு பயத்தை அளிப்பவரும் இவரது அருள்பாலிக்கும் செயல்களாகும்.
பைரவர் வழிபாட்டில் சிறந்தது சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு. இந்த வழிபாடு செய்வதற்கு தேய்பிறை அஷ்டமி உகந்த நாளாகும். தொழில் உள்ள இறங்குமுகம், வாராக்கடன், போன்ற பல இன்னல்கள் நீங்கும். பிரிந்த உறவினர்கள் ஒன்று சேரலாம், உயர் பதவி கிடைக்கும்.
வேண்டுபவர்களுக்கு வேண்டியவாறு பொன்னையும் பொருளையும் வாரித் தருவார் என்பதால் தான் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் என இவர் அழைக்கப்படுகின்றார். தேய்பிறை அஷ்டமியில் வழிபடத் துவங்கினாலே உங்களது பொருளாதார வளர்ச்சியை அடுத்த சில நாட்களில் உணரலாம். சிரத்தையான உண்மையான வழிபாடு மூலம் பலனை உடனே அடையலாம்.
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று மாலை சொர்ண ஆகர்ஷ்ண பைரவர், அஷ்டபைரவர் ஸகித காலபைரவர் யாகமும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



" Special events conducted at Sri Danvantri Peedam, Walajapet " THANKS TO ' SAKSHI ' DAILY NEWS PAPER