Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, November 15, 2016

வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் தைலாபிஷேகத்துடன் 108 மூலிகை தீர்த்த அபிஷேகம் நவம்பர் 28 முதல் துவங்குகிறது…

வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை அனந்தலை மதுரா கீழ்பதுப்பேட்டை யில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக மக்களின் உடல் பிணி தீர 8 அடி உயரமுள்ள ஸ்ரீ தன்வந்திரி முலவருக்கு 13 ம் ஆண்டு தைலாபிஷேக திருவிழா நடைபெற உள்ளது, இந்த வைபவம் நவம்பர் 28 வெள்ளிக் கிழமை முதல் டிசம்பர் 14 ம் தேதி ஞாயிற்று கிழமை வரை தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 6,00 மணி வரை நடைபெற உள்ளது.



தன்வந்திரி பகவான் யார்

தன்வந்திரி பகவான் நோய் தீர்க்கும் கடவுள் இவர் மகா விஷ்ணுவின் அவதாரம் கைகளில் அமிர்த கலசம் ஏந்தியவர் மருத்துவ கடவுள் உலக மக்களின் உடல் பிணி உள்ளத்து பிணி நீக்கி ஆயுஙள ஆரோக்கியத்தை தருபவர், இவரை வழிபடுவதால் அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தைலாபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள்

இங்கு தைலம் என்பது நல்ல எண்ணையை கொண்டு முலவர் தன்வந்திரி பகவானுக்கு அபிஷேகம் நடை பெற உள்ளது. நல்ல எண்ணை என்பது எள் விதையில்ருந்து எடுக்கப்படுவதாகும். எள் என்பது சனீஸ்வர பகவானுக்கு வேண்டிய விஷேச திரவியமாகும். எள்ளை கொண்டு தான் சனி கிரக தோஷம் உள்ளவர்களுக்கு பரிகார பிரித்தியாக எள்ளு தானமும் எள்ளு ஹோமமும் எள்ளு எண்ணையை கொண்டு தெய்வங்களுக்கு எண்ணை காப்பு சாற்றுவது போன்ற வைபவங்களுக்கு சனி ப்ரீத்திக்காகவும், பித்ரு தோஷ நிவர்த்திக்காகவும் இதர ருண ரோக நிவாரணத்திற்காக. இத்தகைய நல்லெண்ணெயினால் நோய் தீர்க்கும் கடவுளான தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகம் செய்வதால் நோய் உற்றவர்கள் விரைவில் குணமடையவும் ஆயுள் தோஷம் நீங்கவும் மனத் தடைகள் மன நோய்கள் நீங்கவும், பித்ரு சாபம் அகலவும், நவகிரகங்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் கஷ்டங்கள் குறையவும் ஏறை சனி அஷ்டம சனி அர்ராஷ்டம சனி போன்ற சனி கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கவும் வாய் புண் வயிற்று புண் குடல் சம்மந்தமான நோய்கள் கண் சம்மந்தமான நோய்கள் ஆரோக்கிய சம்மந்தமான குறைகள் நீங்குவதற்க்கு வழி வகை செய்யும். வருடாந்திர தைலாபிஷேகம் பூர்த்தியுடன் டிசம்பர் 14ம் தேதி 108 சுமங்கலி பூஜையும், டிசம்பர் 15ம் தேதி 108 மூலிகை தீர்த்தத்தினால் தன்வந்திரி பகவானுக்கு மஹா அபிஷேகம் செய்து, சிறப்பு நோய் நிவாரண ஹோமத்துடன் விசேஷ வழிபாடுகள் செய்து தைலாபிஷேகம் நிறைவடைகிறது. இந்த விஷேசமான வைபவத்தில் அனைத்து பக்தர்களும் பங்கேற்று பயன் பெற பிராத்திக்கின்றோம். இந்தத் தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா
வாலாஜாபேட்டை – 632513
Ph : 04172-230033
Cell : 9443330203

e-mail:  danvantripeedam@gmail.com  

வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவம்பர் 14 ம் தேதி ஸம்வத்ஸர அபிஷேகத்துடன் ராகு கேது அன்னாபிஷேகம் 2வது நாளாக நடைபெற்றது.


வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், இன்று (14.11.2016) டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி காணாபத்யம் முறையில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லட்சுமி கணபதி, ஸ்ரீ வல்லப கணபதி, ஸ்ரீ தன்வந்திரி விநாயகர், ஸ்ரீ விநாய தன்வந்திரி ஆகிய தெய்வங்களுக்கு  காலை யாகசாலை பூஜைகளுடன் துவங்கி மஹா ஹோமங்கள் செய்து ஸம்வத்ஸராபிஷேகம் நடைபெற்றது.

மேலும் ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு ஸ்ரீ மரகதேஸ்வரருக்கும், ராகுகேதுவுக்கும் அன்னாபிஷேகம் நடைபெற்றது (ப்ரதி மாதம் பௌர்ணமியில் ராகுகேதுவுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது) இதனைத் தொடர்ந்து 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் .வேலூர் அணைக்கட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு கலையரசு, கள்ளக்குறிச்சி லட்சுமி ஜுவல்லர்ஸ் உரிமையாளர் திரு. தண்டபாணி, காட்பாடி ஜெயசங்கர், மும்பை வெங்கண்ணா, டாக்டர். ரங்கராஜன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானமும், அன்னாபிஷேக பிரசாதமும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை 15.11.2016 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் கௌமார தெய்வமான கார்த்திகை குமரனுக்குஸம்வத்ஸராபிஷேகம்அபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு ப்ரார்த்திக்கின்றோம். இந்தத் தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.


திரு.K.ராதாகிருஷ்ணன், காவல் துறை தலைமை இயக்குநர், சிவில் சப்ளையிஸ், சென்னை. மற்றும் திரு.முருகையா IAS, மாநில ஆணையாளர், மாற்றுத்திறனாளிகள் நலம் ஆகியோர் தன்வந்திரி பீடத்தில் தன்வந்திரி ரதம் இழுத்து வழிபாடு செய்த காட்சி.


ராகு கேது அன்னாபிஷேக காட்சி


Sunday, November 13, 2016

வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவம்பர் 13 ம் தேதி ஸம்வத்ஸர அபிஷேக விசேஷம் ஹோம சப்தாஹம் இனிதே ஆரம்பமானது.


வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், 28ம் தேதி (13.11.2016) முதல்  கார்த்திகை மாதம் 4ம் தேதி (19.11.2016) வரையிலும் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி ஸமேத தன்வந்திரி பெருமாள் மற்றும் இங்கு பிரதிஷ்டை செய்துள்ள இதர 73 விதமான பரிவார தேவதைகளுக்கும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி ஸம்வத்ஸராபிஷேகம் சப்தாஹமாக நடைபெற உள்ளது.

இதில் முதல் நாளான இன்று 13.11.2016 கோ பூஜைவேத பாராயணம், விக்னேஸ்வர பூஜை போன்ற பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கப்பட்டு யாகங்கள் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்ச்சியின் போது ‘Danvantri Arogya Peedam – A National Temple’ எனும் ஆங்கில நூலானது வெளியிடப்பட்டது. மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி மகாதேவன் அவர்கள் வெளியிட உயர்திரு. K.மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர், வேலூர். டாக்டர். சதீஷ், சென்னை, திரு.K.ராதாகிருஷ்ணன், காவல் துறை தலைமை இயக்குநர், சிவில் சப்ளையிஸ், சென்னை. திரு.முருகையா IAS, மாநில ஆணையாளர், மாற்றுத்திறனாளிகள் நலம், சென்னை. டாக்டர். கோதண்டராமன், பஞ்சவடி, திரு.P.V.V.மூர்த்தி, முன்னாள் ஹிந்து நிருபர், வேலூர், டாக்டர். கோபால்-கனகலட்சுமி, பெங்களூர், டாக்டர் விஸ்வஜா, சென்னை ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மாலை 5.00 மணியளவில் திரு.K.ராதாகிருஷ்ணன், காவல் துறை தலைமை இயக்குநர், சிவில் சப்ளையிஸ், சென்னை. திரு.முருகையா IAS, மாநில ஆணையாளர், மாற்றுத்திறனாளிகள் நலம், சென்னை. மற்றும் 100க்கு மேற்பட்ட பக்தர்கள் தன்வந்திரி பீடத்தில் உள்ள தன்வந்திரி தேரினை வடம்பிடித்து இழுத்தனர் என்று தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.