Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, April 18, 2014

ஸ்ரீதன்வந்திரிபீடம் ஆன்மீக அலைகளும்
இறை சக்தியும் நிரம்பிய இடம்!
விஸ்வயோகி விஸ்வாம்ஜி மஹராஜ் குரு
பக்தர்களுக்கு அருளுரை

    ஆந்திர மாநிலம் குண்டுர் அருகில் விஸ்வம் நகரில் மாபெரும் மருத்துவமனையை நிறுவி மக்களுக்கு சேவை புரிபவரும், ஆந்திர மக்களால் தத்தாத்ரேயர் என்று போற்றப்படுவருமான ஸ்ரீ விஸ்வயோகி விஸ்வாம்ஜி மஹராஜ் விஸ்வகுரு அவர்கள் அவருடைய 70வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று 18.04.2014 வெள்ளிக்கிழமை வாலாஜாப்பேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்திற்கு வருகை புரிந்தார்.































         காலை 10 மணியளவில் அவரது நலன் வேண்டி ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நடைபெற்ற மாபெரும் ஆரோக்கிய வேள்வியில் பங்கேற்று பக்தர்களுக்கு அருளுரை வழங்கினார்.
          அப்போது, இந்த பீடம் ஆன்மிக அலைகள் நிரம்பிய இடமாக இருக்கிறது. இங்கு ஆரோக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்து. ஹோமங்கள் நடத்தினால் நிச்சயம் பலன் கிடைக்கும். பஞ்சபூதங்களின் சேர்க்கையே இந்த உடலும் உலகமும். இந்த சேர்க்கையில் வித்தியாசம் ஏற்படும்போது. பூமியில் சுனாமி, பூகம்பம், எரிமலை சீற்றம், வெள்ளம் போன்ற பேரழிவுகள் ஏற்படுகிறது. இதே போல் உடலில் வித்தியாசம் ஏற்படும்போது உடலில் நோய் ஏற்படுகின்றது. இதை தீர்க்க, பஞ்சபூதங்களின் சேர்க்கை நாயகனான ஸ்ரீ நாராயணரை துதிக்க வேண்டும். தன்வந்திரி பகவானும் விஷ்ணு நாராயண சொரூபமானவரே. இருவரும் வேறு வேறு அல்ல, ஒருவரே. எனவே பஞ்சபூதங்களின் சேர்க்கையும் இறை சக்தியும் சரியாக அமைந்துள்ள இந்த தன்வந்திரி ஆரோக்கியபீடத்தில், பகவானை வேண்டி நாம் நடத்தும் யாக ஹோமங்களினால் நாம் ஆரோக்கியமாக வாழமுடியும் என்று அருளுரை வழங்கினார்.

Tuesday, April 15, 2014

14.4.2014, 15,000 வாழைப்பழங்களைக் கொண்டு ஸ்ரீ மகா கணபதி யாகம் மற்றும் ஆஞ்சநேயர் யாகம்

தமிழ்ப்புத்தாண்டு தினத்தையொட்டியும் ,சர்க்கரை  நோய் பாதிப்பை தவிர்க்கவும், மாணவர்கள் தோ்வில் வெற்றி பெறவேண்டியும் கோடை உக்கிரம் தணிய வேண்டியும் ,மழை வேண்டியும்,விவசாயிகள் நலன்கருதியும,மன தைரியம் கிடைக்கவும் 15,000 வாழைப்பழங்களைக் கொண்டு ஸ்ரீ மகா கணபதி யாகம் மற்றும் ஆஞ்சநேயர் யாகம்
 சிறப்பாக நடைப்பெற்றது.

சிறப்பு விருந்தினராக டி.என்.பி.எஸ்.சி.தலைவர் நவநீத கிருஷ்ணன் காட்பாடி பதஞ்சலி யோக பீடம் சங்கரர் குருஜி,வேலூர் பூவேநதன்,சென்னை எழூம்பூர் முருகேன், பாண்டிசசேரி ஸ்ரீனிவாசன், ஊட்டி ராஜசேகர் கலந்து கொண்டனர்.







Thanks to Dinathanthi Daily News Paper


Thanks to Dinamani Daily News


Thanks SAKSHI Telugu Daily News Paper.





Thanks to Enadu Telugu Daily News paper.


Sunday, April 13, 2014

ஐம்பெரும் விழா

13.04.2014 அன்று பங்குனி உத்திரம் விழாவையொடி, பீடத்தில் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும் , ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு ஹோமமும்  அபிஷேகமும் , ஸ்ரீ கார்த்திகை குமரன் சுவாமிக்கு சிறப்பு  ஹோமமும் அபிஷேகமும், ஸ்ரீ மஹாவிர் ஜெயந்தியை முன்னிட்டு  ஸ்ரீ மஹாவிர் சிறப்பு பூஜையும் ஸ்ரீ சத்யநாராயண பெருமாள் விக்ரஹம் பிரதிஷ்டை ஆகிய ஐம்பெரும் விழாவாக சிறப்புடன் நடைபெற்றது.

 ஸ்ரீ சத்யநாராயணா  பிரதிஷ்டை விழாவில் காலை பூர்ணாஹிதியுடன் கலச புறப்பாடும், கலசாபிஷேகமும் திருக்கோவலூர் ஜியர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.