Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, March 9, 2020

Mangala Maha Chandi Yagam


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்மங்கள மஹா சண்டியாகம் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் 08.03.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை மங்கள மஹா சண்டி யாகமும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு அபிஷேகமும் விசேஷ ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த சண்டி யாகமானது சென்ற 06.03.2020 வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வந்தது.

இதில் மங்கள இசை, கோ பூஜை, விநாயகர் பூஜை, நாங்காம் கால யாக பூஜை, பாராயணங்கள் நடைபெற்றது. தொடர்ந்து நெய், தேன், மூலிகைகள், பூசணிக்காய், புஷ்பங்கள், பழங்கள், மஞ்சள், குங்குமம், சௌபாக்ய பொருட்கள், பட்டு வஸ்திரங்கள், பலகாரங்கள், இனிப்பு வகைகள் மேலும் பல்வேறு திரவியங்கள் சமர்ப்பிக்கபட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவியப்பொடி, பன்னீர் போன்ற பல்வேறு திரவியங்களால் மஹா அபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரு. நந்த்கோபால் I.A.S. அவர்கள், திருமதி. நர்மதா I.A.S. அவர்கள் குடும்பத்தினர்கள், மாநில தகவல் ஆணையர் திரு. பிரதாப் குமார் அவர்கள், முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் திரு. வேலு அவர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேலும் மாணவ மாணவிகள் ஆண்டு தேர்வில் அதிக மதிபெண்கள் பெற ஸ்ரீ வித்யா கணபதி ஹோமம், ஸ்ரீ வித்யா லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஹோமம் என்ற ஆறு ஹோமங்களும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு ஹோமத்தில் வைத்து பூஜிக்கபட்ட எழுது பொருட்களை பிரசாதமாக வழங்கினார்.

இவ்வைபவங்களில் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





















Saturday, March 7, 2020

Mangala Maha Chandi Yagam - Sani Santhi Homam - Thailabhishekam


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்சனி சாந்தி ஹோமம், தைலாபிஷேகம் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 07.03.2020 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மாதத்தின் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சனி சாந்தி ஹோமத்துடன் ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரருக்கு சிறப்பு புஷ்பாஞ்சலியும், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வர்ருக்கு தைலாபிஷேகமும் நடைபெற்றது. மேலும் ஸ்ரீ விநாயகர் தன்வந்திரிக்கு சிறப்பு ஹோமத்துடன் பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்ற திரவியங்களால் அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து மஹா சண்டியாகத்தின் இரண்டாம் கால யாக பூஜைகளும் மஹா தீபாராதனையும் நடைபெற்றது.

இதில் சென்னை திருமதி. ஜலஜா கோபாலகிருஷ்ணன் குழுவினர்களின் தேவி மாஹாத்மியம், விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் பாராயணங்கள் நடைபெற்றது. இவ்வைபவங்களில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். மேலும் நாளை 08.03.2020 ஞாயிற்றுக்கிழமை மங்கள மஹா சண்டி யாகம் மஹா பூர்ணாஹுதியும், மாணவ மாணவிகள் ஆண்டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற ஸ்ரீ வித்யா கணபதி ஹோமம், ஸ்ரீ வித்யா லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஹோமம் போன்ற 6 ஹோமங்களும்,  விசேஷ ஆராதனைகளும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.












Friday, March 6, 2020

Maha Chandi Yagam Poorvanga Pooja - 27 Dravya Abhishekam


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடதில்ஸ்ரீ மஹிஷாசுர மர்த்துனிக்கு 27 திரவிய திருமஞ்சனமும்
மஹா சண்டி யாகம் பூர்வாங்க பூஜைகளும் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 06.03.2020 காலை 10.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை சுயம்வர கலாபார்வதி யாகம், நவக்கிரக ஹோமம், தன்வந்திரி ஹோமம், துர்கா ஹோமத்துடன் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு 27 வகை திரவியங்களை கொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்றது. மேலும் வருகிற 08.03.2020 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் மஹா சண்டி யாகத்தின் பூர்வாங்க பூஜைகளும் நடைபெற்றது.

இதில் மங்கள இசை, கோ பூஜை, புன்யாஹவாசனம், விநாயகர் பூஜை, யாகசாலை பூஜை, பாராயணங்கள் நடைபெற்றது. மேலும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் நெல்லிப்பொடி, சந்தனம், மஞ்சள், திரவியப்பொடி, பன்னீர், குங்குமம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிருதம், கரும்புசாறு, தேன், மாதுளம் பழம் சாறு, எலுமிச்சம் பழம் சாறு, பஞ்சகவ்யம், புஷ்ப தீர்த்தம், சொர்ண தீர்த்தம், அன்னம், குங்குமப்பூ, வேப்பிலை பொடி, நவதானியம், சீக்காய்ப்பொடி, மூலிகைகள், நெய், நல்லெண்ணெய், இஞ்சி, வெற்றிவேரு போன்ற 27 விதமான திரவியங்கள் சேர்க்கப்பட்டது. இதில் ஏராளமானவர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.











Tuesday, March 3, 2020

Hanumantha Homam - Sanjeevi Anjaneyar Abhishekam


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்ஹனுமந்த ஹோமத்துடன் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 03.03.2020 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள சஞ்சலம் தீர்க்கும் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு ஹனுமந்த ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதில் நெய், தேன், மூலிகைகள், நவதானியங்கள், புஷ்பங்கள், பழங்கள், சமித்துகள், வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், சந்தனம், பஞ்சாமிருதம், திரவியப்பொடி, பன்னீர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரமும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.











Monday, March 2, 2020

Vastu Homam - Ekadasi Homam - Amla Powder Thirumanjanam


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்வாஸ்து ஹோமமும் ஏகாதசி நெல்லிப்பொடி திருமஞ்சனமும்.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 05.03.2020 வியாழக்கிழமை ஏகாதசி மற்றும் வாஸ்து நாளை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் நெல்லிப்பொடி திருமஞ்சனமும், ஸ்ரீ வாஸ்து பகவாணுக்கு வாஸ்து சாந்தி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

வாஸ்து சாந்தி ஹோமம் :

இன்றைய காலத்தில் நிறைய மனைகள் விற்பனைக்கு வருகிறது. அளவற்ற ஆசையினாலும், நாமும் வீடு கட்டி வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் சிலர் அதை பெற்று வீடு எழுப்புகிறார்கள். சிலர் அதை சில காலம் கழித்து விற்பனை செய்கிறார்கள், சிலர் விற்பனை செய்ய முடியாமலும் சிலர் வீடு எழுப்ப முடியாமலும் அரைகுறையாக விட்டு விடுகின்றனர். பல லக்ஷங்கள் செலவு செய்து பெரிய பெரிய கட்டிடங்களும், அலுவலகங்களும், வீடுகளும், தொழிற்சாலைகளும் கட்டி குடியேறுகின்றனர். அங்கு குடியேறியபின் குடும்பத்தில் குழப்பம், தொழிலில் நஷ்டம் இப்படி எண்ணற்ற பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதன் அடிப்படைக் காரணம் என்னவென்று பார்த்தால் முறையாக வாஸ்து பார்த்துக் கட்டியிருக்க மாட்டார்கள். கட்டிய பின்னர் வாஸ்து பார்த்து திருத்தியமைக்க விரும்பினால், வீண் விரயங்களும் தேவையற்ற பொருளாதாரச் செலவுகள் ஏற்படுகின்றன எனலாம்.

வாஸ்து பகவான் பெரும்பாலும் யோக நிலையிலேயே இருப்பார். அவர் வருடத்தில் சில நாட்கள் மட்டுமே விழித்திருப்பார் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அப்படி அவர் விழித்திருக்கும் நாட்கள் வாஸ்து நாட்கள் என அழைக்கப்படுகின்றன. அந்த நாட்களில் வாஸ்து பகவானை பூஜை செய்து மனை, வீடு, பூமி சம்பந்தப்பட்ட அனைத்து நற்காரியங்களையும் தொடங்கினால் மங்களம் பெருகி நன்மை கிடைக்கும்.

ஏகாதசி ஹோமம், நெல்லிப்பொடி திருமஞ்சனம் :

காசியை மிஞ்சிய தீர்த்தமில்லை; "காயத்ரிக்கு நிகரான மந்திரமில்லை; தாய்க்குச் சமமான தெய்வமில்லை; ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை!' என்பது ஆன்றோரின் அருள்வாக்கு. அம்பரீஷன், ருக்மாங்கதன் போன்ற மன்னர்கள் ஏகாதசி விரதம் அனுஷ்டித்து நற்பலன்களைப் பெற்றார்கள். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11-ஆம் நாள் ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபக்ஷ ஏகாதசி, கிருஷ்ணபக்ஷ ஏகாதசி எனப் படுகின்றன. ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசி நாளிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை.

ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி திதியில் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி ஹோமத்துடன் சிறப்பு மருத்துவ குணம் கொண்ட நெல்லி பொடி திருமஞ்சனத்துடன் பலவகை மூலிகை தீர்த்தங்களை கொண்டு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றது. இந்த பூஜையின்போது ஸ்ரீ தன்வந்திரி பகவானை மனமுருக பிரார்த்தனை செய்து அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தம் உள்ளிட்ட பிரசாதத்தினை உட்கொண்டாலே நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த யாக பூஜைகளில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற்ற ஆனந்தம், ஆரோக்யம், ஐஸ்வர்யத்துடன் நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203