Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, January 6, 2020

Vaikunta Ekadasi 2020 - Swarga Vasal Darshanam


தன்வந்திரி பீடத்தில்வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டுசொர்க வாசல் திறப்பு விழாவும்சிறப்பு ஹோமங்களும்  நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி இன்று 06.01.2020 திங்கள்கிழமை சுக்லபட்ச ஏகாதசி எனும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விடியற்காலை 5.00 மணியளவில் கோபூஜையுடன் சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மூல ஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பகவான் புறப்பட்டு வந்து, பரமபத வாசல் சந்நிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி புரிந்தனர். சரணாகதி தத்துவத்தை முன்னிருத்தும் பொழுட்டு பக்தர்கள் பரமபத வாயலில் பனிந்து வந்து தரிசித்தனர். இதனை தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் மூலவருக்கு பல்வேறு புஷ்பங்களால் அர்ச்சனையும், ஆராதனையும், ஸ்ரீ பால ரங்கநாதர் திருச்சன்னதியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, விசேஷ பூஜைகள் நடைபெற்று துளசி தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் காலை 8.00 மணியளவில் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், புருஷ சூக்த ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.










Sunday, January 5, 2020

Vaikunta Ekadasi - 2020...


தன்வந்திரி பீடத்தில்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு
சொர்க வாசல் திறப்பு விழாவும் சிறப்பு ஹோமங்களும்
நடைபெறுகிறது
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்” ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி நாளை 06.01.2020 திங்கள்கிழமை சுக்லபட்ச ஏகாதசி எனும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விடியற்காலை 5.00 மணியளவில் சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மூல ஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பகவான் புறப்பட்டு வந்து, பரமபத வாசல் சந்நிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி புரிய உள்ளார். இதனை தொடர்ந்து காலை 8.00 மணியளவில் ஸ்ரீ சூக்த ஹோமம், புருஷ சூக்த ஹோமம், தன்வந்திரி ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற ஹோமங்கள் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்றும், முக்கோடி ஏகாதசி என்றும் போற்றி வணங்கி வருகிறோம். இந்நாளில் விரதம் கடைப்பிடித்து பெருமாளை தரிசித்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த பரமபத வாசல் திறப்பு விழா நம்மாழ்வார் காலத்துக்குமுன் இல்லை என்று கூறுவார்.
கலியுகத்தில், நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்கு செல்வோர் யாரும் இல்லாததால், வைகுண்ட வாசல் மூடப்பட்டு இருந்ததாம். நம்மாழ்வார் முக்தியடைந்த நாளில்தான் அது திறக்கப்பட்டதாம். இதனை அறிந்த நம்மாழ்வார், "எனக்கு மட்டும் வைகுண்ட வாசல் திறந்தால் போதாது; என்னை தொடர்ந்து தங்கள்மீது பக்தி செலுத்தும் அடியவர்களுக்காகவும் வைகுண்ட வாசல் திறக்கவேண்டும்' என்று பெருமாளிடம் வேண்டினார். நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று, மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்கவாசல் திறக்க வழி செய்தார் மகாவிஷ்ணு. அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியாக போற்றப்படுகிறது என்பர்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த நாளில் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை வேண்டி நடைபெறும் வைபவங்களில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

365 Days - 365 Homam - 5th Day - Sri Durga Homam....


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
365 நாள் – 365 ஹோமத்தின்
ஐந்தாவது நாள்.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதியக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், உலக க்ஷேமத்திற்காகவும் சென்ற 26.04.2012 முதல் 25.05.2013 வரை நடைபெற்ற 365 நாள்365 யாகம், ஏகோபித்த பக்தர்கள் வேண்டு கோளுக்கிணங்க இரண்டாவது முறையாக 01.01.2020 புதன்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து ஐந்தாவது நாளான இன்று 05.01.2020 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ துர்கா ஹோமம் நடைபெற்றது. இதில் உலக மக்கள் நலனுக்காகவும், துக்க தோஷம் நிவர்த்தியாகவும், மண வாழ்க்கை மற்றும், உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் அகலவும், கோபம், பொறாமை, ஆணவம், சுயநலம், வெறுப்பு போன்ற தீமைகள் அழிந்தொழியவும் மற்றும் பல நன்மைகள் பெற பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஸ்ரீ துர்காவிற்கு உரிய புஷ்பங்கள், திரவியங்கள், நிவேதன பொருட்கள், பழங்கள், வஸ்திரங்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து ஆறாவது நாளான நாளை 06.01.2020 திங்கள்க்கிழமை திருமணத்தடை விலகவும், உறவுப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவும் ஸ்ரீ வாசவி ஹோமமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. இவ்வைபவம் வருகிற 31.12.2020 நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.




Saturday, January 4, 2020

365 Days - 365 Homam - 4th Day - Bala Tripurasundari Homam...


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
365 நாள் – 365 ஹோமத்தின்
நான்காவது நாளாக பாலா திரிபுரசுந்தரி ஹோமம் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதியக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், உலக க்ஷேமத்திற்காகவும் சென்ற 26.04.2012 முதல் 25.05.2013 வரை நடைபெற்ற 365 நாள்365 யாகம், ஏகோபித்த பக்தர்கள் வேண்டு கோளுக்கிணங்க இரண்டாவது முறையாக 01.01.2020 புதன்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து நான்காவது நாளான இன்று 04.01.2020 சனிக்கிழமை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி ஹோமம் நடைபெற்றது. இதில் உலக மக்கள் நலனுக்காகவும், இயற்கை வளம் வேண்டியும், நீர் நிலை ஆதாரங்கள் பெருகவும், ப்ரஹ்ம ஹத்தி தோஷம் நிவர்த்தியாகவும், ஞானம் மற்றும் பல நன்மைகள் பெற பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரிக்கு உரிய புஷ்பங்கள், திரவியங்கள், நிவேதன பொருட்கள், பழங்கள், வஸ்திரங்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து ஐந்தாவது நாளான நாளை 05.01.2020 ஞாயிற்றுக்கிழமை உலக க்ஷேமம், துக்க நிவாரணம், சத்ரு பயம் விலக மற்றும் பல நன்மைகள் பெற ஸ்ரீ துர்கா ஹோமமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.   இவ்வைபவம் வருகிற 31.12.2020 நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.




Friday, January 3, 2020

365 Days - 365 Homam - 3rd Day Sapthanadhi Homam....

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
365 நாள் – 365 ஹோமத்தின் மூன்றாவது நாளாக சப்தநதி ஹோமம் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், உலக க்ஷேமத்திற்காகவும் சென்ற 26.04.2012 முதல் 25.05.2013 வரை நடைபெற்ற 365 நாள் – 365 யாகம், ஏகோபித்த பக்தர்கள் வேண்டு கோளுக்கிணங்க இரண்டாவது முறையாக 01.01.2020 புதன்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து மூன்றாவது நாளான இன்று 03.01.2020 வெள்ளிக்கிழமை சப்தநதி ஹோமம் நடைபெற்றது. இதில் உலக மக்கள் நலனுக்காகவும், இயற்கை வளம் வேண்டியும், நீர் நிலை ஆதாரங்கள் பெருகவும், பல்வேறு நன்மைகள் பெறவும், பிரார்த்தனை நடைபெற்றது. இதில் சப்தநதிகளுக்கு உகந்த புஷ்பங்கள், திரவியங்கள், நிவேதன பொருட்கள், பழங்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து நன்காவது  நாளான நாளை 04.01.2020 சனிக்கிழமை உலக க்ஷேமம், ப்ரஹ்ம ஹத்தி தோஷ நிவர்த்தி, ஞானம் மற்றும் பல நன்மைகள் பெற பாலா திரிபுரசுந்தரி ஹோமம், ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.   இவ்வைபவம் வருகிற 31.12.2020 நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





Thursday, January 2, 2020

365 Day - 365 Homam - 2nd Day - Ashtakshari Homam


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்365 நாள் – 365 ஹோமத்தின்இரண்டாவது நாளாக அஷ்டாக்ஷரி ஹோமம் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், உலக க்ஷேமத்திற்காகவும் சென்ற 26.04.2012 முதல் 25.05.2013 வரை நடைபெற்ற 365 நாள்365 யாகம், ஏகோபித்த பக்தர்கள் வேண்டு கோளுக்கிணங்க இரண்டாவது முறையாக 01.01.2020 புதன்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று 02.01.2020 வியாழக்கிழமை அஷ்டாக்ஷரி ஹோமம் நடைபெற்றது. இதில் உலக மக்கள் நலனுக்காகவும், இயற்கை வளம் வேண்டியும், பல்வேறு நன்மைகள் பெறவும், பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து மூன்றாவது நாளன நாளை 03.01.2020 வெள்ளிக்கிழமை உலக க்ஷேமம் மற்றும் அனைவரும் சுபிக்ஷம் பெற சப்தநதி ஹோமம் நடைபெற உள்ளது.  இவ்வைபவம் வருகிற 31.12.2020 நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



Wednesday, January 1, 2020

Eka Dina Laksha Maha Ganapathi Homam - Aishwaryam Tharum "5"​ Homangal


வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்ஏக தின லக்ஷ மஹா கணபதி ஹோமத்துடன்ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு இன்று 01.01.2020 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ஏக தின லக்ஷ மஹா கணபதி ஹோமத்துடன், ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், மஹா சுதர்ஸன ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், மஹா தன்வந்திரி ஹோமம், குபேர லக்ஷ்மி ஹோமம் ஆகிய ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள் நடைபெற்றது.

இதில் கோபூஜை, மங்கள இசை, வேதபாரயணம், யாகசாலை பூஜை, விநாயகர் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நெய், தேன், மூலிகைகள், நவதானியங்கள், நவசமித்துகள், கொழுக்கட்டை, அருகம்புல், சுண்டல், பழங்கள், பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. இவ்வைபவங்கள் திரு. N.பரணிகுமார், திரு. பெருங்குளம் S.ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் இராணிப்பேட்டை ஆடிட்டர் தேவராஜன், சென்னை ராமசந்திரன், கரூர் அன்பு முத்துராஜா, கோயம்பத்தூர் சந்தோஷ், புதுச்சேரி சீனிவாசன், ஊட்டி ராஜசேகர் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.  இதில் கல்வியில் வளம் பெறவும், ஆயுள் பயம் அகலவும், நீண்ட ஆயுள் பெறவும், உடற்பிணி மனப்பிணி அகலவும், வளமான வாழ்க்கை பெறவும் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இதனை தொடர்ந்து தொடர் அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.