Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, October 22, 2019

Dhanteras 2019


Dhanteras FestivalAt World First Exclusive Danvantri Temple.

Lord Danavantri :

According to the Hindu scriptures and traditions, Lord Danvantri is an incarnation of Lord Maha Vishnu. As per the Vedas and Puranas, Sri Danvantri is considered as the Physician of the Gods (Deva Vaidya). Hindus believe that worshiping and praying to him can improve their health. Danvantri is also considered as the God of Medicine.

Myth Behind the Birth of Lord Danvantri :

During the time of churning the ocean of milk by Gods and demons for Amrit’ (nectar), Lord Danvantri emerged from the ocean with a pot of Amrit. On the same day Goddess Mahalakshmi also born. Hence people celebrate the birthdays of Goddess Lakshmi and Lord Danvantri on the same day.

Danvantri Jayanthi - Day To Worship The God of Ayurveda :

Dhanteras is the day which marks the beginning of Deepavali. It is celebrated on the 13th day of the Karthikai month according to the Hindu calendar. It is the day Lord Vishnu took the avatar of Lord Danvantri. The same day Goddess Lakshmi also took Avatar. So the day Dhanteras is also the Jayanti Day of Goddess Lakshmi. ‘Dhan' literally means wealth and ‘tera' means thirteenth. On this day, Goddess Sri Lakshmi is worshipped in all Hindu households along with Lord Danvantri. On the auspicious day of Dhanteras, the devotees who do prayers and worships will get benefited by Good Health and Wealth.

Sri Danvantri Jayanthi - The National Ayurveda Day (25th October 2019) :

The Dhanwantari Jayanti (Dhanteras) is celebrated every year as The National Ayurveda Day. Ayurveda is perceived as one of the most ancient and well documented system of medicine equally relevant in modern times. Its holistic approach whether for healthy individuals or for diseased ones remains unparalleled. Prevention of disease and promotion of health is the main aim of Ayurveda. Lord Danvantri is considered as divine propagator of Ayurveda. He is conferred with the virtues of granting health and wealth. Therefore, Dhanvantari Jayanthi was preferred for celebration of Ayurveda Day to nationalize this system of medicine which can prove to be a cornerstone for its ultimate globalization In South India, mainly in Tamilnadu and Kerala some temples are dedicated to Lord Dhanvantari. In these temples, Dhanvantari Jayanthi is celebrated with utmost devotion. Worship Lord Dhanvantari For A Better Health.

1008 Kalasa Theertha Thirumanjanam and Deepavali Lehyam :

On the auspicious day of Lord Danvantri Jayanthi, 25.10.2019 Friday from 10.00 AM to 12.00 PM, we Sri Danvantri Arogya Peedam, Walajapet performing 1008 Kalasa Theertha Thirumanjanam, Nava Kalasa Thirumanjanam with Maha Danvantri Homam to Moolavar Sri Danvantri Perumal with the blessings of our Guruji “Yagnasri Kayilai Gnanaguru” Dr. Sri Muralidhara Swamigal. On that day evening 4.30 PM, the making of Deepavali Lehyam will take place. The Deepavali Lehyam is a Herbal Medicine, which can cure many diseases. The Lehyam will be distributed to the devotees on the day of Deepavali after the Nivethanam to Sri Danvantri Perumal is done.

We are inviting all the devotees to be a part of the grand poojas and get the blessings of Lord Danvantri.

For More Details, Contact :

Sri Danvantri Arogya Peedam,
Kilpudupet, Walajapet-632513,
Vellore District, Tamil Nadu,
Ph: 04172 230033 / 230274
Mob: 9443330203


Budha Graha Shanti Homam


தன்வந்திரி பீடத்தில்புதன் கிரக சாந்தி ஹோமம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 23.10.2019 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை புதன் கிரகத்தினால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகவும், புதன் கிரகத்தின் அனுக்கிரகங்களை பெற்று வளமுடன் வாழவும் புதன் கிரக சாந்தி ஹோமமும் காலசக்கிர பூஜையும் நடைபெற உள்ளது.

புதன் கிரகத்தின் சிறப்பு :

புதன் கிரகம் புத்தி கூர்மை, ஞானத்தை குறிக்கும் கிரகமாகும். ஒருவர் ஜாதகத்தில் புதன் உச்சமாக இருந்தால் அவர்கள் மிகவும் புத்தி கூர்மை உள்ளவர்களும், எழுத்தாளர்கள் ஆகவும், சிறந்த பேச்சாளராகவும், பேச்சால் அடுத்தவர் மனதை மயக்குபவராகவும் இருப்பார்கள். ஒரு மனிதனுக்கு சிறந்த சிந்தனை திறன், எழுத்து மற்றும் பேச்சாற்றல், செல்வ சேர்க்கை, கலைகளில் தேர்ச்சி, சிறந்த ஞாபக திறன், ஞானம் ஆகியவற்றிற்கு புதன் பகவான் காரகனாக இருக்கிறார். புதன் கிரகத்தின் ஆதிபத்தியம் ஒரு நபருக்கு குழந்தைப்பேறு கிடைப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஜாதகங்களில் சிலருக்கு புதனின் பாதகமான நிலைகளால் குழந்தைப்பேறு ஏற்படுவதில் சிக்கல் உண்டாகிறது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த புதன் கிரகத்தை வேண்டி நடைபெறும் ஹோமத்திலும், பூஜையிலும் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Sunday, October 20, 2019

Dasa Bhairavar Yagam


தன்வந்திரி பீடத்தில்தச பைரவர் யாகம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு வருகிற 21.10.2019 திங்கள்கிழமை மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத சொர்ணாகர்ஷண பைரவர், அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவருக்கு தசபைரவர் யாகத்துடன் பஞ்ச திரவியாபிஷேகமும், விசேஷ அர்ச்சனையும் நடைபெற உள்ளது.

சொர்ணாகர்ஷண பைரவர் :

வெண்நிற மேனியுடன், கையில் அட்சய பாத்திரத்துடன், பக்தர்களுக்கு செலவத்தை அளிக்கும் விதமாக காட்சி கொடுப்பவர் சொர்ணாகர்ஷண பைரவர். செல்வத்தை அளிப்பதால் இவரை சொர்ண பைரவர் என்றும் பணம் தரும் பைரவர் என்றும் அழைக்கப்படுகிறது. இவரை வணங்கி வழிபடும் பக்தர்களுக்கு செல்வத்தையும், புகழையும் அளித்து வளமுடன் வாழ வழிகாட்டுபவர்.

அஷ்ட பைரவர்கள் :

எட்டு திக்குகளையும் காப்பதிற்கு மஹாபைரவர் எடுத்த அவதாமே அஷ்ட பைரவர்கள் ஆவார். இவர்கள் அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீக்ஷன பைரவர், சம்ஹார பைரவர் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள்.

மஹா காலபைரவர் :

இவர் காலத்தையும், கால மாற்றங்களைடும் கட்டுபடுத்த கூடியவர். நவக்கிரகங்களில் மிகவும் கொட்டுமையான பலன்களை தரும் சனி பகவானின் குருவானவர். நவக்கிரகங்களை கட்டுப்படுத்தி காலத்தை தீர்மானம் செய்பவர். இவர் கபால மாலைகள் அணிந்து, நாய் வாகனத்துடன், நிர்வாண கோலத்தில் காட்சி தருபவர். பக்தர்களின் பயத்தினை போக்குவதினால் இவரை பைரவர் என்றும், க்ஷேத்திரங்களை காப்பதினால் க்ஷேத்திர பாலகர் என்றும், நிர்வாண கோலத்தில் காட்சி தருவதினால் நிர்வாணி என்றும், பிரம்மசிரேச்சிதர், உக்ர பைரவர், வடுகர், ஆபத்துதாரனர், சட்டைநாதர், கஞ்சுகன், கரிமுக்தன், சித்தன், கபாலி, வாதுகன், வயிரவன் போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த தச பைரவர்களை வேண்டி நடைபெறும் இந்த யாகத்திலும், அபிஷேகத்திலும், விசேஷ ஆராதனைகளிலும் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற்று நலமுடன் வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Danvantri Jayanti 2019 - 1008 Kalasa Theertha Thirumanjanam


தன்வந்திரி பீடத்தில்தன்வந்திரி ஜெயந்தியை முன்னிட்டுசிறப்பு ஹோமத்துடன் 1008 கலசதீர்த்த திருமஞ்சனம்தீபாவளி லேகியம் வழங்கும் விழா.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் தன்வந்திரி ஜெயந்தி மற்றும் தேசிய ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு வருகிற 25.10.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை நோய் தீர்க்கும் கடவுள் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு, உலக மக்கள் நலனுக்காக மஹா தன்வந்திரி ஹோமத்துடன் 1008 கலசதீர்த்த திருமஞ்சனம் நடைபெற உள்ளது. மேலும் தீபாவளியை முன்னிட்டு வருகிற 27.10.2019 ஞாயிற்றுக்கிழமை தீபாவளி லேகியம் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.

தீபாவளி மருந்தும், தன்வந்திரி சிறப்பும் :

மகாவிஷ்ணு தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள ஐப்பசி திரயோதசி நாளாகும். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாகவும் தேசிய ஆயுர்வேத தினமாகவும்  கொண்டாடப்படுகிறது.  சிலர் ஐப்பசி ஹஸ்த நட்சத்திரத்தையும், சிலர் ஐப்பசி சுவாதி நட்சத்திரத்தையும் தன்வந்திரி ஜெயந்தியாக கொண்டாடி வருகின்றனர்.

ஸ்ரீ தன்வந்திரி பெருமாளே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக ஐதீகம். இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறார் என்ற அரிய தத்துவத்தை இந்த வைத்திய அவதாரம் சுட்டிக்காட்டுகிறது.

காக்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாள், மஹா விஷ்ணுவின் அம்சமாக பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும்; முன்னிரு கரங்களில் ஒரு கரத்தில் அமிர்த கலசத்தையும், ஒரு கையில் சீந்தலைக் கொடியுடனும் காட்சி அளிக்கிறார். அக்கால மருத்துவ முறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப் பூச்சிகள் பயன்பட்டனவாம். இப்போதும் இந்த முறையின் பயனை தற்கால மருத்துவம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவேதான் தன்வந்திரி விக்ரஹத்தில் அட்டை பூச்சியும் இடம்பெற்றுள்ளது.

இத்தனை அம்சங்களுடன் கூடிய தன்வந்திரி பகவானை உலக நலன் கருதி, நோயற்று வாழட்டும் உலகு என்ற தாரக மந்திரத்துடன் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைத்து அங்கு மூலவராக ப்ரதிஷ்டை செய்து தினம் தோறும் ஹோமங்கள், ஜபங்கள் மற்றும் கூட்டுப்ரார்த்தனைகள் செய்து வருகிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

தன்வந்திரி ஜெயந்தியன்று மாலை பீடத்திற்கு வருகைத்தரும் பக்தர்களின் கைகளினால், நெய், மிளகு, சுக்கு, திப்பிலி, வெல்லம், பொருள்கள் சேர்கப்பட்டு, நோய் தீர்க்கும் தன்வந்திரி மஹா மந்திரங்களை உச்சரித்து, தன்வந்திரி பகவான் சன்னதி முன்பு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் இந்த லேகியம் தயாரித்து, ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு நிவேதனம் செய்து பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மாமருந்தாகவும், தீபாவளி லேகியமாகவும் வழங்கப்பட உள்ளது. இந்த பிரசாதத்தின் மூலம் பல்வேறு வகையான மந நோய்களுக்கும், உடல் நோய்களுக்கும் தீர்வு பெறலாம்.

மேலும் ஸ்ரீ தன்வந்திரி பகவான்  விசேஷமான மருத்துவர் கோலத்தில் ஸ்டெதஸ்கோப், டாக்டர் கோட் போன்ற உபகர்ணங்களுடன் மருத்துவ உடையில் சில மணி நேரங்கள் காட்சி தருவார். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த வைபவங்களில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று 78 பரிவார மூர்த்திகளையும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களையும் தரிசித்து இறையருளுடன் குருவருள் பெற்று ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யத்துடன் நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தனவந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Friday, October 18, 2019

Sri Bala Tripura Sundari Karikkola Bhavani


ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி விக்கிரகம்கரிக்கோல பவனி.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலைமதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வருகிற 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணிக்குள் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி ஆலய மஹாகும்பாபிஷேகம், 1008 சுமங்கலி பூஜை, 59 தம்பதி பூஜையுடன் நடைபெற உள்ளது.
மேற்கண்ட மூல விக்கிரகம் (கற்சிலை) 3.5 அடி உயரத்தில் 1.5 அடி அகலத்தில் மகாபலிபுரம் பிரகாஷ் சிற்பகலைக்குடத்தில் திரு. லோகநாத ஸ்தபதி அவர்களால் வடிவமைக்கப்பட்டு, பக்தர்கள் தரிசிக்கும் வகையில் 17.10.2019 வியாழக்கிழமை முதல் கரிக்கோல பவனியாக மகாபலிபுரத்திலிருந்து, கேளம்பக்கம், தரமணி, வேள்ச்சேரி, தாம்பரம், நெமிலி பாலா பீடம் வழியாக வாலாஜாபேட்டைக்கு வருகைபுரிந்து இன்று 18.10.2019 வெள்ளிக்கிழமை வாலாஜா பஸ் நிலயம், வாலாஜா பூக்காரர் தெரு, ஏகாம்பரநாதர் கோவில் தெரு, அணைக்கட்டு ரோடு, சோளிங்கர் ரோடு, உப்புக்காரர் தெரு, ஸ்ரீசாயி கார்டன் அம்மூர் ரோடு, ஆற்காடு மஹாத்மா காந்தி முதியோர் இல்லம் போன்ற இடங்களில் பக்தர்க+ளுக்கு தரிசனம் கொடுத்து ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வந்து சேர்ந்ததுள்ளது.
சித்தர்கள் தலைவியாகிய வாலை என்கிற ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி குழந்தை வடிவானவள். ஸ்ரீசக்கிரத்தின் வடிவானவள். இவள் அனைவருக்கும் பக்தியையும், ஞானத்தையும், அறிவையும் வழங்கக்கூடியவள். சதா சர்வ காலமும், அவளுடைய நாமத்தை, மூல மந்திரத்தை உச்சரிப்பவர்களூக்கு ஆயுள் கீர்த்தியையும், செல்வ செழிப்பையும், சௌபாக்யத்தையும் அளித்து காப்பவள்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியை பக்தர்கள் அனைவரும் தரிசித்து பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம். இந்த தக்வலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203





Sunday, October 13, 2019

Gandharva Raja Homam - Swayamvara Kala Parvathi Yagam - Santhana Gopala Yagam - Ekaroopa Rahu Kethu Annabhishekam - 468 Siddhargal Pooja

தன்வந்திரி பீடத்தில்திருமணத்தடை நீக்கும் யாகங்களும்ஏகரூப ராஹு கேதுவிற்கு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி பௌர்ணமியை முன்னிட்டு இன்று 13.10.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஆண்கள் திருமணைத்தடை நீக்கும் கந்தர்வராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீக்கும் சுயம்வரகலா பார்வதி யாகம், தம்பதிகள் குழந்தை வரம் பெற சந்தான கோபால யாகமும் நடைபெற்றது.
திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும், சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற்றது.

திருமணத்தடைகள் உள்ள பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி சுயம்வரகலா பார்வதி யாகம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடத்தபட்டது.

குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சங்கல்பம் செய்து சந்தான கோபால யாகம் சிறப்பாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ராஹு கேது தோஷங்கள் விலகவும், அன்னதோஷங்கள் அகலவும் பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஏகரூப ராஹு கேதுவிற்கு அனாபிஷேகம் நடைபெற்றது. மேலும் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த ஹோம பூஜைகளில் பங்கேற்ற நபர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருள் பிரசாதமும் ஆசீர்வாதமும் வழங்கி சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.










Wednesday, October 9, 2019

Aimperum Vizha


தெலுங்கானா ஆளுனருக்கு
யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அழைப்பு.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகரும் பீடாதிபதியுமான “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 07.10.2019 திங்கள்கிழமை தெலுங்கானா ஆளுனர் உயர்திரு. டாக்டர். தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் இல்லத்தில் சந்தித்து வருகிற 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை பீடத்தில் நடைபெற உள்ள ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி பிரதிஷ்டா வைபவம், 1008 சுமங்கலி பூஜை, ஸ்வாமிகளின் 59 ஆவது ஜெயந்தி விழா, ஸ்ரீ மஹா சுதர்சன தன்வந்திரி திருஷ்டி துர்கா கோடி ஜப ஹோம பூர்த்தி விழா, குருப்பெயர்ச்சி யாகம் 2019 – 2020 என்னும் ஐம்பெரும் விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் அளித்து பீடத்தில் நடைபெற்று வரும் ஹோம பூஜைகளின் பிரசாதங்களையும், அருளாசிகளையும் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.