Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, July 2, 2019

Sudarshana Jayanthi - Maha Sudarshana Homam


தன்வந்திரி பீடத்தில்சுதர்சன ஜெயந்தி சிறப்பு யாகம்.

பெற்ற பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்கவும், சத்ரு பயம் அகலவும், பசுக்கள் ஆரோக்யமாக இருந்து பசு விருத்தி பெறவும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி சுதர்சன ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 10.07.2019 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மஹா சுதர்சன ஹோமத்துடன், நவகலச திருமஞ்சனமும், விசேஷ ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவின் கையில் சுழலும் ஆயுதம், சுதர்சன சக்கரம் ஆகும். மாபெரும் சக்தியும் ஒளிரும் தன்மையும் கொண்ட இந்த சக்ராயுதம், மகத்தான ஆற்றல் வாய்ந்தது. தீமையை அழித்து, நன்மையை நிலைநாட்டக் கூடியது. சுதர்சனர் என வழிபடப்படும் இந்த சுதர்சன சக்கரத்துக்குச் செய்யப்படும் ஹோம வழிபாடு, மஹா சுதர்சன ஹோமம் எனப்படுகிறது.

சுதர்சன பெருமாளை வழிபட்டு யாகத்தில் பங்கேற்பவர்களுக்கு அவரை சூழ்ந்துள்ள தீய சக்திகளை அழித்து, நன்மைகள் பல நிறைந்த ஒரு பெரும் பாதுகாப்பு சக்தியாக நம்மைக் காத்து நிற்கும். வாழ்க்கையில் வளர்ச்சி, வெற்றி, மகிழ்ச்சி போன்றவற்றை தரும் சுதர்சன ஹோமத்தின் சிறப்பம்சங்கள்.

விஷ்ணுவை ஆயிரம் நாமங்களால் போற்றும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்துடன், மஹா சுதர்சன ஹோமம் செய்வது, விஷ்ணு பகவானின் ஆசியையும் அவரது சக்தி வாய்ந்த சகராயுதத்தின் பரிபூரண ஆசிகளையும் பெற்றுத் தரும். இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம், உங்களைச் சூழ்ந்துள்ள இருளும், அறியாமையும் விலகும். நேர்மறை ஆற்றல், உங்களுக்குள் நிறையும். நன்மைகள் பெருகி, நல்வாழ்வு வாழ இயலும்.

மஹா சுதர்சன ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம் சத்ரு பயம், விரக்தி, துர் சொப்னம் போன்றவை நீங்கும், எதிர்மறை எண்ணங்கள் விலகும், துன்பங்களும், தோஷங்களும், சாபங்களும் விலகும், எதிரிகள் தொல்லை விலகும், பயம் நீங்கி வலிமை கிடைக்கும், நடைமுறையில் நல்ல மாற்றங்கள் நிகழும், தன்னம்பிக்கை பிறக்கும், தொழிலில் வளர்ச்சி, வழக்கில் வெற்றி, இயற்கை வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, அற்புதமான வாழ்கை, போன்ற பல்வேறு நன்மைகள் சுதர்சன ஜெயந்தியை முன்னிட்டு நடைபெறும் சுதர்சன ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம் பெறலாம் என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த யாகத்தில் பங்கேற்பவர்களுக்கு  ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்பம் மற்றும் குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும்.

மேலும் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று பிரார்த்தனை செய்து இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Bhuvaneswari Homam - Puthra Bhagya Yagam


தன்வந்திரி பீடத்தில்புவனேஸ்வரி ஹோமத்துடன்புத்திர பாக்ய யாகம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், பல ஆண்டுகளாக உள்ள குலதெய்வ குறைபாடுகள் நீங்கவும் காவல் தெய்வமான ஸ்ரீ முருகப்பெருமானின் அருள் வேண்டியும், மனக்குறை போகவும், சாபங்கள், தோஷங்கள் அகலவும் வருகிற 16.07.2019 செவ்வாய்கிழமை மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ புவனேஸ்வரி ஹோமமும், புத்திர பாக்ய யாகமும், திருமண பிராப்தி வேண்டி திருமண ஹோமமும் விசேஷ பூஜைகளும் நடைபெற உள்ளது.

ஸ்ரீசாக்த வழிபாடு எனும் முறைப்படி செய்யப்படும் பூஜைகளில் முதன்மையானதாகவும், மிக மேன்மையானதாகவும் விளங்குவது ஸ்ரீ நவாவரண பூஜையாகும். ஸ்ரீ மாதா புவனேஸ்வரி மஹா ராஜ ராஜேஸ்வரியாக, திரிபுர சுந்தரியாக, பஞ்ச ப்ரஹ்ம ஆசனத்தில் அமர்ந்து அகிலங்கள் அனைத்தையும் பரிபாலனம் செய்து வருகின்றாள். அத்தகைய புவனேஸ்வரி தேவியை வணங்கி நடைபெறும் யாகமே ஸ்ரீ புவனேஸ்வரி ஹோமம் ஆகும்.

ஸ்ரீ புவனேஸ்வரி தேவி :

அன்னை ஸ்ரீ புவனேஸ்வரி தேவி ஸ்ரீ சக்ர நாயகியாகவும், அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாகவும் விளங்குகிறாள். இவள் வேதங்கள் போற்றும் வேத மாதாவாகவும், அனைத்துலகையும் ஈன்று, எல்லா உயிரினங்களுக்கும் தாயாக விளங்குபவள், மாபெரும் சக்தி படைத்து ஈரேழு பதினான்கு லோகங்களையும் அரசாட்சி புரிந்து, நம்மை அரவணைக்கும் அன்னையே ஸ்ரீ மாதா புவனேஸ்வரியாகும். இவளே அனைத்திற்கும் காரண காரணியாகயிருந்து வழி நடத்தி வருகிறாள்.

ஸ்ரீ புவனேஸ்வரி தேவியின் யாகத்தில் கலந்துகொண்டு வழிபட கல்வி, செல்வம், வீரம்யென யாவும்கிட்டும். புவனேஸ்வரி ஹோமத்தின் மூலம் இந்திரனை போல் செல்வம் நிறைந்தவராகலாம் என்று ரிக் வேதம் சொல்கிறது. பூர்வ ஜன்ம புண்ணியம் உள்ளவர்களே இவளை உபாசிக்க முடியும். நமது பூமியைப்போல் எண்ணற்ற உலகங்கள் இருப்பதாக வேதம் கூறுகிறது அவை யாவற்றுக்கும் புவனேஸ்வரியே அதிபதி. புவனம் என்றால் அண்டம், உலகம் என்றும் ஈஸ்வரி என்றால் காப்பவள் என்றும் பொருள் எனவே இவள் மாதா புவனேஸ்வரி எனப்படுகிறாள்.

புவனேஸ்வரி ஹோமம்:

புவனேஸ்வரி ஹோமம் மற்றும் பூஜையானது செவ்வாய்க்கிழமைகளில் செய்யப்படும் பொழுது நாம் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்யும் பொழுது வீடு, நிலம் வாங்குவோம், விவசாயம் விளைச்சல்பெரும், பலசாபம் விலகும், குடும்ப ஒற்றுமை, இரத்தம் சம்பந்தபட்ட நோய்கள் விலகும், சுபிக்க்ஷம் அடையலாம், பூமி வழி லாபம் புதிய வீடு கட்டவும் வாங்கவும், மாடுகள் தர கூடியவை,  சகோதர, சகோதரி ஒற்றுமை அமையவும், நல்ல மக்கள் பேரும், நல்ல மனைவி குழந்தை அமையவும், தீராத தடைகள் தீர்ககவும், திருமணம், குழந்தை பாக்யம் பெறவும் சிறப்பு ஹோமங்களுடன் கூட்டுப்பிரார்த்தனை நடைபெறுகிறது.

மேலும் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று பிரார்த்தனை செய்து இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
.

Drishty Durga Homam - Soolini Durga Homam ....


வாலாஜா தன்வந்திரி பீடத்தில்அமாவாசையை முன்னிட்டுதிருஷ்டி துர்கா சூலினி துர்கா ஹோமம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் அமாவாசையை முன்னிட்டு வருகிற 02.07.2019 செவ்வாய்கிழமை காலை 11.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை திருஷ்டி துர்கா ஹோமத்துடன் சூலினி துர்கா ஹோமம் நடைபெற்றது.

திருஷ்டி தோஷத்தினால் ஏற்படும் வியாதி, பணப் பிரச்னை, வேலை இல்லாமல் இருப்பது, கணவன் மனைவிக்குள் பிரச்னை, சொத்துப் பிரச்னை, நேர்மையாகக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருப்பது, குடும்பத்துக்குள் தகராறு போன்ற பல பிரச்னைகள் நிவர்த்தியாக மேலும் பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரமாகவும், மாத்ரு பித்ரு தோஷம் அகலுவதற்கும், கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், சூலினி துர்கா ஹோமமும் நடைபெற்றது.

இயற்கைச் சீற்றங்கள் குறையவும், மழை வேண்டியும், சகல வளங்களையும் பெறவும், தொழில், உத்யோக அபிவிருத்தி, வழக்குகளில் வெற்றி போன்ற பல்வேறு நன்மைகளுக்காக கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

இந்த யாகங்களில் மிளகாய் வற்றல், வேப்ப எண்ணெய், கடுகு, வெண் கடுகு, நாயுருவி, சிகப்பு அரளி, 108 மூலிகைகள், கல் உப்பு, எலுமிச்சை சாதம், புளி சாதம், சர்க்கரை பொங்கல், இனிப்பு மற்றும் கார வகைகள், சிகப்பு குங்குமம், மஞ்சள், 108 முறம், 108 வெள்ளை பூசணிக்காய் போன்ற பல்வேறு விசேஷ திரவியங்கள் சேர்க்கப்பட்டது.

இவ்வைபவங்களில் ஆந்திரா குண்டூர் தொழிலதிபர் திரு.T.உமாசங்கர் குடும்பத்தினர் மற்றும் ஏராளமானவர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இறைப்பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தார். இதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






Monday, July 1, 2019

National Doctors Day Special Homam


தன்வந்திரி பீடத்தில்

தேசிய மருத்துவர் தின விழா சிறப்பு பூஜைகள்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திர் ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்கள் நலன் கருதியும், இயற்கை வளத்திற்காகவும் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இன்று 01.07.2019 திங்கள்கிழமை காலை 10.30 மணி முதல் நன்பகல் 12.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு தன்வந்திரி ஹோமத்துடன் விசேஷ ஆராதனைகள் நடைபெற்றது.

உலகம் முழுவதும் மருத்துவம் ஒரு உன்னதமான தொழிலாகக் கருதப்படுகிறது. உலகில் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படும் ஒரு நபர் உண்டு என்றால், அவர் மருத்துவராகத்தான் இருப்பார்கள். சிறந்த சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதில் செவிலியர், தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்ற பலரின் கூட்டு முயற்சி அடங்கி இருந்தாலும் அக்குழுவை வழிநடத்திச் செல்பவர் மருத்துவரே. நாட்டிற்கு மருத்துவர்களின் பங்களிப்பைப் போற்றும் வண்ணமாகப் இந்தியாவில் இது ஜூலை 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பிறர் வாழ்க்கை ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் அமைய மருத்துவர்கள் தங்களது சிறந்த முயற்சியை அளிக்கின்றனர்.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அருள்பாவித்து வரும் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளை நம்பிக்கையுடன் மனமுருகி வேண்டுபவர்களுக்கு, எத்தகைய நோய்கள் இருந்தாலும் குணமாகிறது என்பது மக்களின் நம்பிக்கையா உள்ளது. ஆகவே நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பீடத்திற்கு வருகை புரிந்து யாக பூஜைகளில் கலந்து கொண்டு நலம் பெற்று செல்கின்றனர்.

மேலும் மருத்துவம் படிக்கவிரும்பும் மாணவர்களும் மருத்துவம் படித்துவிட்டு தொழில் தொடங்க நினைப்பவர்களும் இங்கு வந்து மருத்துவ உபகரணங்களை வைத்தியநாத  தன்வந்திரி பெருமாளின் பொற்பாதங்களில் வைத்து பிரார்த்தித்து மருத்துவ படிப்பையும், மருத்துவ தொழிலையும் துவங்குகின்றனர். இத்தகைய சிறப்புகளுடைய ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு மருத்துவ குடும்பங்களின் நலம் வேண்டி சிறப்பு தன்வந்திரி ஹோமமும், அர்ச்சனையும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து சத்ரு சம்ஹார காரிய சித்தி ஹோமத்துடன் மஹா கணபதி ஹோமம், சொர்ண பைரவர் ஹோமம், காலபைரவருக்கு குருதி பூஜையும் நடைபெற்றது. இப்பூஜையில் தொழிலில் ஏற்படும் போட்டிகளில் வெற்றி காணவும், தெய்வ சாபங்கள், நவகிரக்க தோஷங்கள், பித்ரு சாபங்கள் நீங்கவும், கர்ம வினைகளைத் தீர்த்துக் கொள்ள வழி பிறக்கவும். கண் திருஷ்டி, பயம், மன சோர்வு, நோய்கள், கடன் தொல்லைகள் போன்றவற்றிலிருந்து விடுதலை கிடைக்கவும், கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இறைப்பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.