Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, August 1, 2018

Kan Drishti Ganapathi Yagam…..


வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்13.09.2018 விநாயக சதுர்த்தியில்

கர்மவினை போக்கும் கண் திருஷ்டி கணபதி யாகம்

(2018 பூசணி துண்டுகள் கொண்டு நடைபெறுகிறது)


மகாசக்தி கணபதி:
அகஸ்திய மாமுனிவர் "கண் திருஷ்டி" என்ற அசுரனை அழித்து சம்ஹாரம் செய்யவும், இந்த உலகையும், உலக மக்களையும் பாதுகாக்க ஒரு சர்வ வல்லமை பொருந்திய மகாசக்தியை தோற்றுவித்தார். அவர்தான் "கண் திருஷ்டி கணபதி" என்ற 33-வது மூர்த்தமாக இந்த உலகில் உதயமான சர்வ மகாசக்தி கணபதியாகும்.

"கண் திருஷ்டி கணபதி" :

இவர் சங்கு சக்கரதாரியாக விஷ்ணுவின் அம்சம் கொண்டு, சிவபெருமானின் அம்சமாக மூன்று கண்களையும் அன்னை பராசக்தியின் அம்சமாக கையில் திருசூலம் மற்றும் பல்வேறு தெய்வங்களின் பல ஆயுதங்களையும் ஒருங்கேப்பெற்று, சீறுகின்ற சிம்ம வாகனமும், மூஞ்சூறு வாகனமும் கொண்டவராக விளங்குகிறார். கண் திருஷ்டி கணபதியின் தலையைச் சுற்றிலும், சுழல வைக்கும் ஒன்பது நாகதேவதைகளையும், அக்னிப் பிழம்புகளையும் ஐம்பத்தோரு கண்களையும் தமது அவதார நோக்கத்தின் ஆக்க சக்தியாக இயக்கி இயல்புக்கு மாறாக ருத்ர பார்வையோடு விஸ்வ ரூபமெடுத்த நிலையில் காணப்படுகிறார்.

"கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது" என்பது பழமொழி :

திருஷ்டி என்றால் பார்வை என்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதான். கண்களால் இயல்பாகப் பார்க்கப்படுகின்ற பார்வை எந்தவிதக் கெடுதலையும் ஏற்படுத்தாது. ஆனால் அதே பார்வை தீய எண்ணத்துடனோ அல்லது பொறாமை குணத்துடனோ பார்க்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபரையோ அல்லது பொருளையோ நாசப்படுத்தும் வலிமை கொண்டது என்று முன்னோர்கள் காலந்தொட்டு கூறப்பட்டு வருகிறது. இதுபோன்ற "கண் திருஷ்டி" என்ற தீய பார்வையிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகத் தோன்றியவர்தான் கண் திருஷ்டி கணபதி.

கண் திருஷ்டி கணபதி யாகம் :

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 13.09.2018 வியாழக்கிழமை, காலை 10.30 மணியளவில் கண் திருஷ்டியாலும் துஷ்ட சக்திகளாலும் ஏற்படும் நோய்கள் அகல, வினைகள் நீங்க கண் திருஷ்டி கணபதி யாகமும், விநாயகர் தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.

கண் திருஷ்டிகளால் ஏற்படும் தொல்லைகள்:

இன்றைக்கு வியாதி, பணப் பிரச்னை, வேலை இல்லாமல் இருப்பது, கணவன் - மனைவிக்குள் பிரச்னை, சொத்துப் பிரச்னை, நேர்மையாகக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருப்பது, குடும்பத்துக்குள் தகராறு போன்ற பல பிரச்னைகளுக்குத் திருஷ்டியும் ஒரு மாபெரும் காரணமாக இருந்து வருவது பலருக்கும் தெரியாமலேயே இருக்கிறது.

திருஷ்டியின் பிடியில் அகப்பட்டுக் கொண்ட ஒருவருக்கு எதனால் தான் அவஸ்தைப்படுகிறோம் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் போய் விட்டால், என்னதான் பரிகாரம் செய்தும், நிவர்த்தி கிடைக்காமல் இருப்பது பெரும் சோகமே! இதன் பின், தொட்ட காரியம் எதுவும் துலங்காது. பொறமைகள் அதிகம் பணத்துக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும். வாழ்க்கை முழுக்க அவஸ்தைகள்தான் அடுத்தடுத்து தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஒருவர் வீடு கட்டி விட்டால், அதைப் பார்த்துப் பலர் பொறாமைப்படுகிறார்கள். ஒருவர் குறுகிய காலத்துக்குள் அதிக சம்பளத்தில் ஒரு வேலையில் அமர்ந்து விட்டால், அதைப் பார்த்து உடன்பிறந்த சொந்தங்கள் உட்பட அக்கம்பக்கமே பொறாமைப்படுகிறது. கணவன் - மனைவி ஜோடியாக - அந்நியோன்னியமாக - சந்தோஷமாக இருந்தால், அதைப் பார்த்தும் பலருக்குப் பொறாமை ஏற்படுகிறது. ஒருவரது வாழ்வில் கூடவே கூடாத குணம் - பொறாமை. இது உறவுகளைப் பிரித்து விடும்.

கண் திருஷ்டி கணபதி யாகத்தில் கலந்து கொண்டு ஒருவருக்கு ஏற்படும் கண் திருஷ்டியைப் போக்கி கண் திருஷ்டி கணபதியின் அருளால், வளமான எதிர்காலத்தை பெற்று அன்பும் அமைதியும் தழைத்தோங்கி வினைகளை எல்லாம் அழித்து ஞானம் பெறலாம்.

மேலும் பிறரின் வாழ்க்கை வளர்ச்சிகள், முன்னேற்றங்கள், உயர்வுகள், நல்லநிலைகள் போன்றவற்றை கண்டதும் மற்றவர்களுக்கு தாங்க முடியாத வயிற்றெரிச்சல் ஏற்படக் கூடும். நம்மால் இவ்வாறு இருக்க முடியவில்லையே என்ற ஏக்க பெருமூச்சும், பொருமலும், பொறாமையும் வெடித்து சிதறும். இந்த கெட்ட எண்ணங்களின் ஒட்டு மொத்த உருவமாக திகழ்பவரின் கண்பார்வை சக்தி வாய்ந்தது. அழிவை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. பல வகைகளில் பாதிப்பை சந்திப்பார்கள். அவர்களுக்கு கண்திருஷ்டி கவனக்குறைவையும், மந்தத்தையும், நினைவாற்றலில் பிரச்சினைகளையும், நோய் நொடிகளையும் திடீரென்று ஏற்படுத்திவிடும்.

திருஷ்டியால் தான் இதெல்லாம் நடக்கிறது என்பது தெரியாமலேயே இருக்கும். கண்திருஷ்டியால் ஏற்படும் நோய் நொடிகளுக்கு எந்த மருத்துவமும் சரியாக வேலை செய்யாது. நம்மால் திறமையாக இருக்க முடியவில்லையே என்ற ஒருவிதமான இயலாமை உணர்வின் தாக்கம் கூட திருஷ்டியாக மாறி விடும். இதெல்லாம் நடைமுறை வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் அனுபவப்பட்டிருப்போம். இவ்வாறு திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பல இன்னல்கள், இடையூறுகளை சந்திக்குமாறு பல எதிர்வினை சூழ்நிலைகள் ஏற்பட்டுவிடும். வாழ்வில் எல்லாமே எதிர்மாறாக நடைபெறுவதாக தோன்றும். இந்த இன்னல்களை விரட்ட வழிபாடுகளும், பரிகாரங்களும் பல விதங்களில் உள்ளன.

2018 பூசணி துண்டுகளுடன் கண் திருஷ்டி கணபதி யாகம் :

இவற்றை மனதில் கொண்டு ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் உலக நலன் கருதி தீமைகள் நீங்கி நன்மைகள் பெற வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கண் திருஷ்டி கணபதி ஹோமம் எலுமிச்சம் பழம், தேங்காய், பூசணிக்காய், ஊமத்தங்காய், கண்டங்கத்திரி, மஞ்சள், குங்குமம், நாயுருவி, வெண்கடுகு, கற்பூரம், கடுகு, உப்பு, எள்ளு, மிளகாய் வற்றல் கொண்டு கண் திருஷ்டி கணபதி யாகமும், விநாயகர் தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேகமும் பலருக்கும் உள்ள கண் திருஷ்டி தோஷங்கள் களையும் வண்ணம் நடைபெற இருக்கிறது.

தேனும், இஞ்சியும் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது :

கண் திருஷ்டி கணபதி யாகத்தில் தேனும், இஞ்சியும் நைவேத்தியமாக படைத்து வருகை புரியும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இவ்வாறு செய்வதன் மூலமாக தீய சக்திகளிடமிருந்தும், பொறாமை குணம் கொண்டவர்களிடமிருந்தும் காப்பாற்றப்பட்டு உடல் ஆரோக்கியம் பெருகி வாழ்வில் வளத்தை பெருகச் செய்வார் கண் திருஷ்டி கணபதி என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

தோஷ நிவர்த்தி பூஜை பொதுவாக கண் திருஷ்டி கணபதி ஹோமம் - பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதக ரீதியிலான தோஷங்கள் நீங்குவதற்கும் நடைபெறுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நாம் தூய எண்ணத்துடன் இருந்து முழுமையான கடவுள் பக்தியை இடைவிடாமல் அனுசரித்து வந்தால், திருஷ்டியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். என்றாலும், திருஷ்டி விலக்குவதற்கு உண்டான பரிகாரங்களையும் அவ்வப்போது மேற்கொள்வது அவசியம்.

தன்வந்திரி ஆரோக்கிய பீடம் இப்படிப் பலருக்கும் இருந்து வரும் திருஷ்டிகளையும் நோய்களையும் போக்கும் விதமாக வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் கண் திருஷ்டி ஹோமத்தை' ஏற்பாடு செய்திருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான ஹோமங்களை தொடர்ந்து செய்து வரும் இந்த பீடத்தில் நடக்கும் ஒவ்வொரு ஹோமத்துக்கும் உரிய பலன் நிச்சயம் உண்டு. வாலாஜாவையே யாக பூமி' யாக மாற்றிய பெருமை ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளுக்கு உண்டு. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஓம் ஸ்ரீம் கம் கணபதியே மம வாசஸ்தல திருஷ்டி தோஷம்
நிவர்த்தஸ் நிவர்த்தஸ் ஸ்வாஹா

இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், பூசணிக்காய், அஷ்ட திரவியங்கள், கரும்பு, எலுமிச்சம் பழம், தேங்காய், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் போன்ற பொருட்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் மற்றும் விநாயகர் தன்வந்திரி அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203








Kodi Japa Maha Danvantri Homam, Sangada Hara Ganapathi Homam, Thiruvona Homam

Kodi Japa Maha Danvantri Homam,

 Sangada Hara Ganapathi Homam,

 Thiruvona Homam 

at Sri Danvantri Arogya Peedam, Walajapet.

 Thanks to 

"DINAMANI, SAKSHI, ANDHRAJYOTHI"

Daily News Papers.





Swarna Akarshana Bhairava Sahasranama Archana and Homam


Swarna Akarshana BhairavaSahasranama Archana and Homam

At Sri Danvantri Arogya Peedam, Walajapet.

With the blessings of our Guruji, “Kayilai Gnanaguru”Dr. Sri Muralidhara Swamigal, we are conducting Swarna Akarshana Bhairavar Sahasranama Archana and Homam, on Arudra star 08.08.2018 Wednesday by 2.45 PM with Kanaka Pushpam, 1008 Lotus Flowers and 1008 Bilwa Leafs at our Sri Danvantri Arogya Peedam, Walajapet.

Benefits of Sahasranama archana and Homam :

Bairavar worship is simple and special and there are so many easy remedies for major problems in life. For money related problems one has to do offer vilvam and other good smelled flowers and should do sahasranama archana to Lord Bairavar. For dosha  related to saturn has to do sahasranaama archana to Lord Bairavar. For marriage, child, legal matters  and  lost properties related problems has to attened , Swarna Akarshana Bhairava pooja and homam.

 This Sahasranama Pooja and Homam eliminates all kind of dangers and financial problems. if done without any expectation, it gives yoga siddhi and moksha prapti. Swarna Akarshana Bhairava pooja and homam removes all kinds of miseries and blesses the devotees with everlasting happiness. All kinds of siddhis are blessed by lord bhairava to the true devotees.

Sri Swarna Akarshana Bhairavar Sahasra Nama Homam  being a tool for increasing wealth and earning more money. Today, there is nothing which cannot be resolved through them. These divine homam are possessed by special Gods each for a particular purpose and it is because of this that they are considered so pure and pious. One such Yagna quite known for its material and luxurious benefits is Sri Swarna Akarshana Bhairava Homam. It blesses the worshipper with gold, money and other riches and materiality of lives. The word “Swarna” means gold and Swarna Akarshana Bhairavar means that you will be showered with tons of gold and money.

This homam seems to be very powerful in terms of wealth and riches. The term gold symbolises Goddess Lakshmi and so it marks the entry of Goddess in your living space. People acquire divine blessings and get rid of all their financial problems. They seek success in their in their business and professional endeavours. They also acquire more properties and create a surplus in order to be able to help others.  It removes all kinds of miseries and curses from life and showers the everlasting happiness to the worshippers. 

More details Please Contact :
Sri Danvantri Arogya Peedam
Ananthalai Madura, Kilpudupet, Walajapet - 632513.
Vellore District, Tamil Nadu, India.
Tele : 04172-230033, 230274 | Cell : 9443330203

Arudra Homam - Swarna Akarshana Bhairava Homam....


தன்வந்திரி பீடத்தில் திருமகள் அருள் தரும்திருவாதிரை நக்ஷத்திரத்தில் சொர்ண பைரவருக்குஸஹச்ர நாம அர்ச்சனையுடன் சிறப்பு ஹோமம்.


ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சிறப்பு :

உலகில் வாழ்ந்து வரும் மாந்தர்கள் அனைவரையும் அவரவர் முற்பிறவி கர்மாக்களின்படி படைத்து, காத்து, அழித்து வருபவர்கள் முறையே பிரம்மன், விஷ்ணு, ருத்ரன் ஆவார்கள். இந்த மும்மூர்த்திகளையும் அந்த சதாசிவன் சார்பாக நிர்வாகித்து வருபவரே ஸ்ரீ காலபைரவர். ஸ்ரீகால பைரவரின் உயர்ந்த அவதாரமே ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் அவதாரமாகும். நமது மூளையில் இருக்கும் ரத்த சிகப்பணுக்களை இயக்குபவர் சூரியபகவானே! ஒவ்வொரு ஜாதகருக்கும் ஆத்மாக்காரகனாக இருந்து நமது ஆத்மாவை இயக்கி வருபவர் சூரியபகவான். அப்பேர்ப்பட்ட சூரியனுக்குள் இருந்து அருள்பாலித்து வருபவள் ஸ்ரீகாயத்ரிதேவி. ஆனால், சூரியனின் பிராண தேவதையாக இருப்பவர் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர்! அனைத்து குல தெய்வங்களுக்கு அருளாற்றலை நொடி தோறும் வழங்கிக் கொண்டிருப்பவரே இவர். இவரை பழங்காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் மற்றும் ஏராளமான குறுநில மன்னர்களும் தமது பொக்கிஷ அறையில் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவரை ஸ்தாபித்து, வழிபட்டு வளமோடும், வலிமையோடும், சகல சம்பத்துக்களோடும் வாழ்ந்து வந்துள்ளனர்.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சிறப்பான ஒரு தனி ஆலயம் :

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சிறப்பான ஒரு தனி ஆலயம் அமைக்கப்பட்டு பிரதி மாதம் அஷ்டமிகளிலும், பௌர்ணமி நாட்களிலும் திருவாதிரை நக்ஷத்திரத்திலும் சிறப்பு பூஜைகளும், ஹோமங்களும், அஷ்டோத்தரங்களும், ஸஹச்ர நாம அர்ச்சனைகளும், பணம் தரும் பைரவரான ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவருக்கு பக்தர்களின் நலம் கருதி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் விரும்பும் நாட்களிலும் சிறப்பு யாகங்கள் இங்கு நடைபெறுகிறது. மேலும் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதிகயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 08.08.2018 புதன்கிழமை ஆடி திருவாதிரை நக்ஷத்திரத்தில் மாலை 3.30 மணி முதல் 7.30 மணி வரை சொர்ண புஷ்பத்துடன் 1008 தாமரை இதழ்கள் கொண்டும், 1008 வில்வ இதழ்களை கொண்டு ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சொர்ண பைரவர் யாகம், மஹா அபிஷேகம், ஸஹச்ர நாம அர்ச்சனை நடைபெற உள்ளது.

சொர்ண பைரவர் யாகம், மஹா அபிஷேகம்ஸஹச்ர நாம அர்ச்சனையின் பலன்கள்:

மேற்கண்ட இந்த வைபவத்தில் பங்கேற்பவர்களுக்கு கடன்கள் தீரும், அரசு வேலை கிடைக்கும், நிறுவனம் வளர்ச்சியடையும், வராக்கடன் வசூலாகும், பொருளாதார நெருக்கடிகள் விலகும். ஆரோக்கியம் மேம்படும், வெளிநாட்டில் வாழும் நபர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் நீங்கும், வெளிநாடு செல்வதிற்கு வழி கிடைக்கும், தெரியாத குலதெய்வத்தை அறிந்து கொள்வீர்கள், கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும், பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவர், அவ்வாறு ஒன்று சேர்ந்தப் பின்னர் ஒருபோதும் அவர்களிடையே மனக்கசப்பு வராது, குழந்தைகளின் முரட்டுசுபாவம் படிப்படியாக மாறும், சுருக்கமாகச் சொன்னால் நமது நியாயமான லட்சியங்கள்/கோரிக்கைகள் நிறைவேறும், சாதி, சமய வேறுபாடுகள் இன்றி பக்தி உணர்வு உள்ள எவரும் சொர்ண புஷ்பத்துடன் 1008 தாமரை இதழ்கள், 1008 வில்வ இதழ்களை கொண்டு ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு நடைபெறும் சொர்ண பைரவர் யாகம், மஹா அபிஷேகம், ஸஹச்ர நாம அர்ச்சனை யாக பூஜைகளில் பங்கேற்கலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது:

நீங்கள் இந்த யாகத்திற்கும், மஹா அபிஷேகத்திற்கும், ஸஹச்ர நாம அர்ச்சனைக்கும் வெல்லக்கட்டிகள், மஞ்சள் பட்டுத்துண்டுகள், மண் அகல்விளக்கு, சுத்தமான பசுநெய், சந்தனம், வாசம் தரும் ஊதுபத்தி, அரைக்கப்பட்ட சந்தனம், வாழை இலை, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், செவ்வரளி மாலை, தாமரை புஷ்பங்கள், வில்வம், முந்திரி, திராட்சை, வஸ்திரங்கள் மற்றும் பூஜா பொருட்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் -9443330203


Bhavani Homam....


தன்வந்திரி பீடத்தில்

பாபம் போக்கும் பவானி யாகம்

வருகிற 03.08.2018 ஆடி வெள்ளியில் நடைபெறுகிறது.


நம் நாட்டில் தேவி வழிபாடு மிகவும் பழைமையானதும் பிரசித்தி பெற்றதுமாகும். எல்லா மனிதர்களாலும் தொன்று தொட்டு பூஜித்து வரக்கூடியது தேவி வழிபாடாகும். வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ, எச்சமயத்திலும் பெருகி வரும் சொல்அம்மாஎன்பதே தேவியை தாயாக வழிபட்டு அவளின் கருணையை பெறுவது மிகச்சிறந்த வழியாகும். வேதங்களும், தத்துவங்களும் இதையே கூறுகிறது. ஸ்ரீவித்யையில் தந்திர மார்க்கத்தில் காஷ்மீர் தேசத்தில் பவானி வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. நம் நாட்டில் லலிதா பரமேஸ்வரி போல் வடநாட்டில் பவானி. பவானி எனும் நாமமே மிகச்சிறந்த்து. பவன் என்றால் பரமேஸ்வரன், பவன் என்றால் மன்மதன். இவர்களுக்கு உயிர் அளித்து காப்பதனால் பவானி என்ற பெயர் வந்ததாக தேவி புராணம் கூறுகிறது. பவானியே பராப்ரக்ருதி என்றும் பராசக்தி என்றும் கீதை, இதிகாஸ புராணங்கள் கூறுகின்றன.

பிரம்ம வித்யா ஸ்வரூபமாக விளங்கும் அன்னை பவானியின் அருள் பெற, வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 03.08.2018 ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை உலக நலன் கருதியும், காரிய சித்தியும், பாப விமோசனமும் தரக்கூடியதும், வாக்கு, மனம், செயல் இவறால் செய்த பாபங்கள் போகவும்  பாபம் போக்கும் பவானி ஹோமம், சூக்த ஹோமங்கள், ஆடி கூழ் வார்த்தல், முனீஸ்வரன் மற்றும் நவகன்னிகைகளுக்கு பொங்கல் இடும் வைபவங்கள்,  நடைபெறுகிறது.

பவானி தேவிக்கு செய்யும் ஹோமம் மற்றும் வழிபாடு காட்டிலும் மிகவும் உயர்ந்த பலனை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை. பார்வதியின் திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இவளை தரிசிப்பவர்களுக்கு 'யாதொரு தீங்கும் நெருங்காது. பாபங்கள், சாபங்கள் நீங்கும். மேலும் குபேர யோகம் கிட்டும்; சகல செல்வங்களும் கிடைத்து சுபிட்சமாக வாழ்வர் என்பது ஐதீகம்.வழிபட்டு, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். சகல யோகங்களும் கைகூடும். பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தியான பவானி தேவியின் ஹோமத்தில் பங்கு பெற்று பில்லி, சூன்னியம், செய்வினை, ஏவல், போன்ற பலவிதமான தோஷங்களில் இருந்து விடுதலை பெற்று ஆரோக்யமாக வாழ ஸ்ரீ பவானி அன்னையை வணங்குவோம்.

இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203