கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Thursday, May 10, 2018
Wednesday, May 9, 2018
Ekadasi Amla Powder Abhishekam..
தன்வந்திரி பீடத்தில்ஏகாதசி நெல்லிபொடி அபிஷேகம்
உடலில் எதிர்ப்பு சக்தி குறைதல், உடல் சூடு மற்றும் கண்நோய் சர்க்கரை நோய், செரிமான இல்லாமை, சிறுநீர் சம்பந்தமான நோய்கள், குடல் வாயுவை, எலும்புருக்கி நோய் நீங்கி ஆயுள் பலம் கூட,
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்
ஆக்ஞைப்படி வருகிற 11.05.2018 வெள்ளிக் கிழமை ஏகாதசி திதியை முன்னிட்டு காலை
10.00 மணி முதல் 12.00 மணி வரை மூலவர் தன்வந்திரி
- விநாயக தன்வந்திரிக்கு ஏகாதசி ஹோமத்துடன் நெல்லிபொடி அபிஷஷேகம் நடைபெறுகிறது.
ஆயுள் தோஷம் நீங்கும் ஔஷத
பிரசாதம்.
நுரையீரல் சார்ந்த காசநோய் வைட்டமின் “சி” சத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்கள் உடலில் எதிர்ப்பு சக்தி
குறைதல். உடல் சூடு மற்றும் கண்நோய் சர்க்கரை நோய், செரிமான இல்லாமை, சிறுநீர் சம்பந்தமான
நோய்கள், குடல் வாயுவை, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெள்ளை, இருமல், சளி
கண்ணில் தண்ணீர் வருவல் போன்ற பல நோய்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தகைய நோய்களிலிருந்து
நீங்கி ஆயுள் பலம் பெற தன்வ்ந்திரி மூலவருக்கு அபிஷேகம் செய்த நெல்லிக்காய் பொடி தீர்த்த
பிரசாதம் நீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி), கை கால் வலி, மூட்டு வலி, தூக்கம் இன்மை,
வலிப்பு நோய், போன்ற நோய்கள் நீங்கவும் சகல ஐஸ்வர்யம் பெறவும் ஸ்வாமிகளின் திருக் கரங்களால்
ஔஷதமாக வழங்கப்படவுள்ளது.
இன்றைக்கு எத்தனையோ ஹோமங்கள், சிறப்பு வழிபாடுகள், சிறப்பு ஹோமங்கள்
என்றெல்லாம் நித்தமும் நடந்து வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் ஒரு தனித்துவத்துடன்
வெளியே அடையாளம் காணப்பட்டாலும், இவை அனைத்துக்கும் பின்னால் சுமார் 46 லட்சம் பக்தர்கள்
கைப்படை எழுதிய 54 கோடி தன்வந்திரி மஹா மந்திரங்களை கொண்டு மந்திர மலை எனும் ஔஷதகிரியில்
பிரமாண்ட நாயகனாக விஸ்வரூபம் எடுத்து நிற்பவர் சாட்சாத் மருத்துவ கடவுளான ஸ்ரீ தன்வந்திரி
பகவானும் யக்ஞபுருஷரான ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளும் தான்!
இந்த யக்ஞ பூமியின் நாயகர்கள் இவர்கள் தான். இவர்கள் தான் அனைத்துக்கும்
ஆதாரம். இன்றைக்கு தன்வந்திரி பீடம் தேடி வரும் பல லட்சக்கணக்கான பக்தர்களின் பிணிகளைத்
தீர்த்து, அவர்களின் துயரங்களை வேரோடு களைந்து வரும் தன்வந்திரி பீடத்தில் அன்னபூரணி,
காயத்ரி தேவி, சஞ்சீவீ ஆஞ்சநேயர், மஹா அவதார பாப, மஹிஷாசுர மர்த்தினி, குபேர லக்ஷ்மி,
அஷ்ட நாக கருடன் என 75 க்கும் மேற்பட்ட பரிவார சந்நிதிகளுடனும், 468 சித்தர்களுடனும்
வைத்ய ராஜ்யம் நடத்தி வருகிறார் ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பகவான். இத்தகைய சிறப்புகள்
வாய்ந்த பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கும்
உற்சவர் வைத்தியராஜனுக்கும் மேற்கண்ட தினத்தில் ஹோமமும் நெல்லி பொடி அபிஷேகமும் நடைபெறுகிறது.
இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள்,
மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள்,
நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில்
ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
Bank Details :
Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFSC: SBIN0000775
Kaali Yagam........
தன்வந்திரி பீடத்தில்
காளி யாகத்துடன் காலபைரவர் ஹோமம் நடைபெற்றது.
வேலூர்
மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
08.05.2018 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு
உலக நலன் கருதி காளி யாகத்துடன் காலபைரவர்
யாகம் நடைபெற்றது.
காளி
காலத்திற்கும், கால மாறுதல்களுக்கும்
அதிபதி ஆவாள். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை இவற்றிற்கும் காரணம்
இவளே. இவற்றை
போக்குவதும், நீக்குவதும்
இவளே. காளி
நேர்மையின் வடிவம். நாம்
நேர்மையாக இருந்தால் காளியை வைத்து யாரும் எவ்வித துன்பங்களையும் நமக்கு செய்ய இயலாது. மாறாக யார் துன்பம் செய்ய நினைத்தார்களோ
அவர்கள் வாழ்வு படிப்படியாக அழிவது நிச்சயம் என்கிறது புராணங்கள்.
காளி அன்னையின் வடிவம். தீமைகளை அழிப்பவள். வெற்றிகளை அளிப்பவள். காலம் மற்றும் மரணம் இவற்றிற்கு காரணமான தெய்வம் ஆவாள். இவளின் அருள் இருந்தால் காலத்தையும், மரணத்தையும் வெல்லமுடியும். ஞானத்தையும், செல்வத்தையும் அளிப்பவள். கல்வியையும் அளிப்பவள். துணிவை தருபவள். பயத்தை போக்குபவள். நோயிலிருந்து விடுவிப்பவள். நோய்களை போக்குபவள். மரணமிலா பெருவாழ்வு தருபவள். மனிதர்கள் மட்டும் அல்லாமல், தேவர்களுக்கும், அசூரர்களுக்கும் அருள்பாலித்தவள் இவளே. சிவபெருமானின் உயரிய வடிவமான சரபேஸ்வரருக்கும் சக்தி அளித்தவள் இவளே. இவளை வழிபடுவதில் பல முறைகள் உண்டு. மனதில் நினைத்தாலே போதும் ஓடோடி வந்து காப்பவள் இந்த காளி. காளியின் அருள் பெற்றவர்களே இதற்கு சாட்சியாகும். இன்றைய உலக மக்கள்
தேவையற்ற ஆசைகளை பூர்த்தி செய்துகொள்ள பலவிதமான குறுக்கு வழிகளிலும், தீய செயல்களிலும் ஈடுபட்டு அதை நிவர்த்தி செய்ய அனுபவம் இல்லாத நபர்களின் வழிகாட்டுதல்களால்
பல்வேறு மக்களுக்கு தீங்கிளைக்கும் வகையில் செயல்பட்டு செய்வினை, பில்லி, சூன்யம், மற்றும் மந்திரம், யந்திரம், தந்திரம் என்ற விபரீதமான பூஜைகளில் பங்கேற்று பயத்திற்கு ஆளாகி வாழ்வில் அனைத்தையும் இழந்து பரிதவிக்கின்றனர். அறியாமையினாலும், தவறான வழிகாட்டுதல்களினாலும், நரபலி வரை சென்றுவிடுகின்றனர்.
இத்தகைய நோய்களில் இருந்து விடுபடவும், நல்வழிப்படுத்தவும் சிறந்த வேதவிற்பன்னர்களைக் கொண்டு உலக மக்களின் நலனுக்காக இந்த ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் காளிக்கே உரிய செவ்வரளி பூ, தாமரை பூ, நாயுருவி, வெண்கடுகு, கடுகு, மிளகு போன்ற விசேஷ திரவியங்கள் சேர்க்கப்பட உள்ளது. மேலும் பூசணிக்காய், மாதுளம் பழம், இலுப்பை எண்ணெய், முந்திரி, பேரீச்சை போன்ற பல்வேறு காய்கறிகள், பழங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் ஹோமத்தில் சேர்க்கப்பட்டது. மேலும் துஷ்ட சக்திகள் அகலவும், கலைத்துறையில் சிறந்து விளங்கவும், கடன் தொல்லைகள் நீங்கவும், வியாபார மற்றும் தொழிலில் உள்ள தடைகள் நீங்கவும், தடைப்பட்ட திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்கியம் பெறவும், கல்வியில் மேன்மை அடையவும், சொந்த வீடூ, வாசல், நன்மக்கள் அமையவும் இந்த மாபெரும் மகா காளி யாகத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டது.
வருகை புரிந்த பக்தர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருட் பிரசாதம் வழங்கி
ஆசிர்வதிதார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Monday, May 7, 2018
Yaga Thiruvizha
Sri Danvantri Arogya Peedam, Walajapet conducting Sri Maa Kali Yagam and Kalabairavar Yagam on 08.05.2018, Srividhya homam, Navavarana Pooja, 51 Sakthi Peeda Yagam, 108 Lakshmi Pooja from 26.05.2018 to 27.05.2018, Mangala Chandi Yagam from 05.06.2018 to 06.06.2018.
Sunday, May 6, 2018
Srividhya Homam - Sakthi Peeda Yagam...
வாலாஜாபேட்டை,
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
26.05.2018
சனிக்கிழமை
நவாவரண
பூஜை, ஸ்ரீவித்யா ஹோமம்,
27.05.2018
ஞாயிற்று கிழமை
தனாகர்ஷண
யக்ஞம், 51 யாக குண்டங்களில் 51 சக்திபீட யாகம்,
சீதா
கல்யாணம், 108 லக்ஷ்மி பூஜையுடன் சிறப்பு வைபவங்கள் நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தின், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை
ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி தன்வந்திரி பீடத்தில் வருகிற 26.05.2018 சனிக்கிழமை
காலை 7.00 மணி முதல் 1.30 மணி வரை கோபூஜை, கலச பூஜை, யாகசாலை பூஜை,
மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், நக்ஷத்திர ஹோமம், நவாவரண பூஜையும் மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரை ஸ்ரீவித்யா ஹோமமும் திவ்ய நாம பஜனையும்,
27.05.2018 ஞாயிறுக் கிழமை காலை 8.00 மணி முதல் பாண்டிச்சேரி
தன்வந்திரி குடும்பத்தினர் பங்கேற்கும் தனாகர்ஷண யக்ஞத்துடன், 51 யாக குண்டங்களில் 51 பெண்கள் பங்கேற்று நடைபெறும் 51 சக்தி பீட யாகம், 108 பெண்கள் பங்கேற்று நடைபெறும் 108 லக்ஷ்மி பூஜை, ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி, ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி,
ஸ்ரீ பிரித்யங்கிரா தேவி, மாமேரு மற்றும் குபேர லக்ஷ்மிக்கு சிறப்பு அபிஷேகங்களும்,
பூஜைகளும் பாண்டிச்சேரி பக்தர்கள் கைங்கர்யத்தால் நடைபெற உள்ளது. மேற்கண்ட நாட்களில்
நடைபெறும் யாக வேள்வியை காஞ்சிபுரம் ஸ்ரீதேவி லலிதாம்பிகா பீடம், ஸ்ரீ பாலானந்த ஸ்வாமிகள்
பங்கேற்று நிகழ்த்த உள்ளார். இதனை தொடர்ந்து மதியம் 2.00 மணி முதல் 4.00 மணி வரை காஞ்சி மடம் ஆஸ்தான வித்வான் ஸ்ரீ சந்த் முரளிதாஸ் பாகவதர், பொழிச்சலுர், சென்னை
அவர்கள் நிகழ்த்தும் சீதாகல்யாண வைபவமும்
நடைபெறுகிறது.
நவாவரண
பூஜை என்பது ஒரு மிகச்
சிறந்த பூஜையாகும். பூஜை செய்யக்கூடிய
சாதகர், தகுந்த குரு மூலம்
ஸ்ரீவித்யா மந்திர உபதேசங்கள் பெற்று, சாதகம்
செய்யவேண்டும். மேலும் அவரிடமிருந்து ஸ்ரீ பஞ்சதசாக்ஷரி
/ மஹா ஷோடசி மந்திரங்கள் உபதேசம்
பெற்று, இந்த நவாவர்ண பூஜை
செய்ய பீடாதிகாரம் பெற்றவர்கள் இந்தப் பூஜையை செய்வது மிகவும் சிறப்பு. பூஜை செய்பவர், தான் ஒரு ஜீவன் என்ற பாவமற்று தானே சிவம்
என்ற பாவனையுடன் அம்பிகையை பூஜிப்பதேயாகும். தன் ஹ்ருதயத்தில் அமர்ந்திருக்கும் அம்பிகையை ஸ்ரீசக்ரத்தில்
அல்லது மேருவில் ஆவாஹனம் செய்து, பூஜைகள்
செய்து, முடிவில் தேவியை மீண்டும்
தன் ஹ்ருதயத்திலேயே அமரச் செய்கிறபடியால், சாதகன்,
தன்னைத்தானேப் பூஜை செய்து கொள்ளும்
நிலை ஏற்படும்பொழுது ஒரு உயர்ந்த நிலையை அடைகிறார். இதுவே இந்த பூஜையின் விசேஷம்.
பூஜை
மற்றும் ஹோமத்தின் பலன்கள் :
இப்பூஜை செய்பவருக்கும், ஏற்பாடு
செய்தவருக்கும், மற்றும் அதை காண்பதற்கும், பங்கேற்பதற்கும்,
கைங்கர்யம் செய்வதற்கும் அம்பிகையின் அருள்
இருந்தால் மட்டுமே அது நடக்கும்.
இப்பூஜையில் பங்கேற்பவர்களுக்கு 51 சக்திபீட தேவியின் அருள் கிடைத்து வாழ்வில்
எல்லா நலங்களுடன் சீரும் சிறப்புடன், ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெற்று ஆனந்த வாழ்வு
வாழ்வர்.
திருமணத் தடைகள் விலகும், குழந்தைப்
பேறு தடைகள் நீங்கும், நல்ல வேலை
கிடைக்கும், சீறான தொழில் அமையும்,
நோய்கள் தீரும், வாழ்வின் பலவிதமான தொல்லைகள் நீங்கும், குழந்தைகள் கல்வி, கேள்வியில்
சிறந்து விளங்குவர், நாடு நலம் செழிக்கும், மேலும் பல்வேறு கலைகளில் சிறந்து விளங்குவர், சௌபாக்யங்கள் கிடைத்து சிறப்புடன் வாழ்வர், போன்ற
பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
இந்த
யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள்,
மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள்,
நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில்
ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513,
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 –
230033, செல் – 9443330203.
Bank Details :
Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFSC: SBIN0000775
Subscribe to:
Posts (Atom)









