Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, April 13, 2018

Sarabha Soolini Prathyangira Yagam.......


தன்வந்திரி பீடத்தில்சகல திருஷ்டி, தோஷம் நீங்கி சௌபாக்யம் தரும்
ஸ்ரீ சரப சூலினி ப்ரிதயங்கிரா யாகம்


வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 15.04.2018 ஞாயிற்றுக் கிழமை அமாவாசை திதியை முன்னிட்டு காலை 10.30 மணிளவில், பீடாதிபதி மற்றும் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக மக்களின் நலன் கருதி ஸ்ரீ சரப சூலினி ப்ரித்யங்கிரா யாகம்  நடைபெற உள்ளது.

ஜோதிட சாஸ்திர,  வான நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில் ஒரே ராசியில் சேர்வதே அமாவாசைஆகும். இந்நாளில் முன்னோர்கள், மூத்தோர்கள், இறந்த தாய், தந்தையரை நினைத்து வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக் கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது.

இந்த ஹோமத்தில் பங்கு கொள்பவர்களுடைய சந்ததியினர் தோஷமில்லாமல் நலமுடன் வாழ, அவர்களை நினைவுகூர்ந்து நாம் செய்யும் வழிபாடுகள், தர்ம காரியங்கள் ஆகியவை அந்த ஆத்மாக்களுக்கு மகிழ்வளிக்கும் செயலாகும். இதனால், அவர்களது பரிபூரண ஆசி நமக்கும் நம் சந்ததிக்கும் கிடைக்கும். துர்மரணம், விபத்து, அகால மரணம் அடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைக்கப் பெறுவர்கள்.
உலகத்தில் இன்றைக்கு இருக்கிற மோசமான வியாதிகளுள் திருஷ்டிஎனப்படும் வியாதி மிக கொடூரமான ஒன்று. இந்த திருஷ்டியினால் தனிப்பட்ட நபரின் முன்னேற்றம் பாதித்தல், குடும்பத்தில் சச்சரவு ஏற்படுதல், தாம்பத்திய உறவில் விரிசல், நல்ல வேலையை இழத்தல், ஓரடி எடுத்து வைத்தால் இரண்டடி சறுக்குதல் உட்பட ஏராளமான பாதிப்புகள் விளைகின்றன. எனவே, ஒவ்வொருவரும் தங்களுக்குள்ள திருஷ்டியை அவ்வப்போது கழித்துக் கட்டுவது நல்லது.

மேலும் நாக தோஷம், சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும், பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும், மண் வளம், மழை வளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சகல திருஷ்டி, தோஷம் நீங்கி சௌபாக்யம் தரும் ஸ்ரீ சரப சூலினி ப்ரிதயங்கிரா யாகம்  நடைபெறுகிறது. இதில் அனைவரும் பங்கு கொண்டு பித்ருக்களின் ஆசிகளையும், ஸ்ரீ துர்கா தேவியின் அருளையும் பெற்று, பெரு வாழ்வு வாழலாம் என்று  ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவிக்கிறார்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுராகீழ்புதுப்பேட்டைவாலாஜாபேட்டை – 632 513.

வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033செல்  9443330203


Bank Details :

Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFSC: SBIN0000775


Tamil New Year 2018


நீர் நிலை ஆதாரங்கள் சிறப்படையவும்,
இயற்கை வளம் பெறவும் விவசாய பெருமக்கள் மகிழ்ச்சியடையவும்.
மழை வேண்டியும் மத நல்லிணக்கம், மனித நேயம் வளரவும்
தன்வந்திரி பீடத்தில் புத்தாண்டு சிறப்பு ஹோமம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞப்படி  நாளை 14.04.2018  சனிக் கிழமை காலை 10.00 மணிக்கு தமிழ் புத்தாண்டு முன்னிட்டு மகா தன்வந்திரி ஹோமத்துடன் ஸ்ரீ மகா லஷ்மி யாகமும்  ஸ்ரீ விநாயகர் தன்வந்திக்கு சிறப்பு வழிபாடும் நடைபெறுகிறது.

வருகிற தமிழ் புத்தாண்டில் அனைத்து மக்களும் நோய் நொடிகளின்றி ஆரோக்யமாக வாழவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும், தொழில், வியாபாரம், உத்தியோகம், சிறக்கவும்.குடும்பத்தில் சுப காரியங்கள் ஏற்படவும் குழந்தைகள் முழு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று  மேல் கல்வி சேரவும். நீர் நிலை ஆதாரங்கள் சிறப்படையவும், இயற்கை வளம் பெறவும் விவசாய பெருமக்கள் மகிழ்ச்சியடையவும்.

மேலும் மழை வேண்டியும் மதநல்லிணக்கம், மனித நேயம் வளரவும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞப்படி சிறப்பு தன்வந்திரி ஹோமமும் ஸ்ரீ மகாலஷ்மி யாகமும் ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. இந்த யாகத்திலும் பூஜையிலும் பக்தர்கள் பல்வேறு நன்மைகள் பெற பலவகையான மலர்கள், பட்டு வஸ்திரம், நெய், தேன், வெண்கடுகு, வால்மிளகு, சீந்தல்கொடி போன்ற 108 விதமான மூலிகைகளும் சேர்க்கப்பட உள்ளது.

மேலும் நல்லெண்ணை,கரும்புசாறு,மூலிகை தீர்த்தம், நெல்லிக்காய் பொடி பால், தயிர் இளநீர், மஞ்சள், சந்தனம், மற்றும் துளசி தீர்த்தம்கொண்டு தன்வந்திரி பீடத்தல் உள்ள  ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு  சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று பலவகை புஷ்பங்களால் சிறப்பு அர்ச்சனை செய்து, பஞ்சதீபம் ஏற்றப்பட உள்ளது. தமிழ் புத்தாண்டில் பக்தர்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பலன்பெற்று ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற வேண்டுகிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு : 
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுராகீழ்புதுப்பேட்டைவாலாஜாபேட்டை – 632 513.

வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033செல்  9443330203


Bank Details :

Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFSC: SBIN0000775

Tuesday, April 10, 2018

74 Bhairavar Yagam with 64 Yogini Pooja

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
74 பைரவர் யாகத்துடன் 64 யோகினிகள் பூஜை..

பைரவருக்கு  74 குண்டங்களில் 74 சிவாச்சாரியர்கள் அமர்ந்து 74 பைரவர் ஹோமம் நடைபெற்ற மஹாபீடம் என்று அழைக்கப்படும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 08.04.2018 ஞாயிற்று கிழமை காலை முதல் மாலை வரை க்ருஷ்ண பக்ஷ தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்துள்ள அஷ்ட பைரவர் சகித மஹா பைரவருக்கும் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவருக்கும் மற்றும் 64 பைரவருக்கும் 64 குண்டத்தில் மஹா ஹோமம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஸ்ரீ சக்ரத்தில் நித்யவாசம் செய்யும் பராம்பிகையைச் சுற்றி வீற்றிருக்கும் 64 யோகினிகளுக்கு சிறப்பு பூஜைகள் சென்னை சாக்த ஸ்ரீ பரணிகுமார் அவர்கள் நிகழ்த்தினார். ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் மற்றும் அஷ்ட பைரவர்களான 1. ஸ்ரீ அசிதாங்க பைரவர், 2. ஸ்ரீ ருரு பைரவர், 3. ஸ்ரீ சண்ட பைரவர், 4. ஸ்ரீ குரோதன பைரவர், 5. ஸ்ரீ உன்மத்த பைரவர், 6. ஸ்ரீ கபால பைரவர், 7. ஸ்ரீ பீக்ஷன பைரவர், 8. ஸ்ரீ சம்ஹார பைரவர் மற்றும் மஹா பைரவருக்கும், 64 பைரவர் 64 யோகினிகள் பூஜை  கணபதிபூஜை, குரு மண்டல பூஜை, 64 பைரவர் சகித 64 யோகினிகள் மூல மந்திர அர்ச்சனை, கட்கமாலா, ஆஸ்ரேய அஷ்டோத்திரம், நவாவரண சக்ரேஸ்வரி த்யானம், லலிதா ஸஹஸ்ர நாமம் என தொடர்ந்து  64 விளக்குகள் ஏற்றி தீபாராதனையுடன் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவருக்கும், அஷ்ட பைரவ சகித மஹா கால பைரவருக்கும் மஹா அபிஷேகம் நடைபெற்று ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இவ்வைபவத்தில் ஸ்ரீ நாராயண தீர்த்தர் என்கிற ஸ்ரீ கங்கோத்ரி ஸ்வாமிகள், சத்குரு மாதா அன்னபூரணி, அடிஅண்ணாமலை மாதா புவனேஸ்வரி, காஞ்சீபுரம் லளிதாம்பிகா பீடம் ஸ்ரீவித்யா உபாசகர் ஸ்ரீ பாலானந்த ஸ்வாமிகள், அடயார் பாலாபீடம் ஸ்ரீ கணேசன் ஸ்வாமிகள், ஆத்ரேய கோத்திரம் பைரவ ரமணி, மற்றும் அம்பாள் உபாசகர் ஸ்ரீ சங்கரநாராயணன் சென்னை அவர்கள் பங்கேற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.








Thursday, April 5, 2018

தைலாபிஷேகம்.....


தன்வந்திரி பீடத்தில் தைலாபிஷேகம்....

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 10.04.2018 செவ்வாய் கிழமை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை உலக மக்களின் உடல் நோய் மன நோய் நீங்கவும், சகல தோஷங்கள் நிவர்த்தியாகவும் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, விநாயக தன்வந்திரிக்கும் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கும் உற்சவ மூர்த்திக்கும் தன்வந்திரி ஹோமத்துடன் தைலாபிஷேகமும் நடைபெறுகிறது.

தன்வந்திரி பகவான் யார் : தன்வந்திரி பகவான் நோய் தீர்க்கும் கடவுள் இவர் மகா விஷ்ணுவின் அவதாரம் கைகளில் அமிர்த கலசம் ஏந்தியவர் மருத்துவ கடவுள் உலக மக்களின் உடல் பிணி உள்ளத்து பிணி நீக்கி ஆயுஙள ஆரோக்கியத்தை தருபவர், இவரை வழிபடுவதால் அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தைலாபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள் :
இங்கு தைலம் என்பது நல்ல எண்ணையை கொண்டு தன்வந்திரி பகவானுக்கு மூலமந்திர ஜபத்துடன் அபிஷேகம் நடைபெற உள்ளது. நல்ல எண்ணை என்பது எள் விதையிலிருந்து எடுக்கப்படுவதாகும். எள் என்பது சனீஸ்வர பகவானுக்கு வேண்டிய விஷேச திரவியமாகும். எள்ளை கொண்டு தான் சனி கிரக தோஷம் உள்ளவர்களுக்கு பரிகார பிரித்தியாக எள்ளு தானமும், எள்ளு ஹோமமும், எள்ளு எண்ணையை கொண்டு தெய்வங்களுக்கு எண்ணை காப்பு சாற்றுவது போன்ற வைபவங்களுக்கு சனி பிரித்தியாக கருதுகிறோம். இத்தகைய எண்ணையினால் நோய் தீர்க்கும் கடவுளான தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகமாக செய்வதால் நோய் உற்றவர்கள் விரைவில் குணமடையவும், நீரிழிவு நோய், மூட்டு வலி, ஆயுள் தோஷம் நீங்கவும், மனத் தடைகள், மன நோய்கள் நீங்கவும், நவக்கிரகங்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் கஷ்டங்கள் குறையவும், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி போன்ற சனி கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கவும், வாய் புண், வயிற்று புண், குடல் சம்மந்தமான நோய்கள், கண் சம்மந்தமான நோய்கள், ஆரோக்கிய சம்மந்தமான குறைகள் நீங்குவதற்க்கு வழி வகை செய்யும்.

மேற்கண்ட யாகத்திலும் அபிஷேகத்திலும் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு:
ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்,
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம்.
போன்: 04172 230033, மொபைல்: 94433 30203,

Monday, April 2, 2018

ஷஷ்டி சத்ரு சம்ஹார ஹோமம்.......


தன்வந்திரி பீடத்தில்ஷஷ்டி சத்ரு சம்ஹார ஹோமம்


வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற 06.04.2018 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் சத்ரு உபாதைகள் அகலவும், நோய்கள் அகலவும், எதிரிகள் விலகவும் மேற்கண்ட யாகம் நடைபெறவுள்ளது. "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த யாகமாகும். மேலும் விரும்பிய பலனைப் பெறலாம்.


கந்த புராணத்தில் முருகப் பெருமானின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம் பெறுபவர்கள் கார்த்திகை பெண்கள். பரணி, கிருத்திகை, ரோகிணி, பூசம், உத்திரம், விசாகம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு.

கார்த்திகைப் பெண்களுக்கு வேலூர் மாவட்டம் வாலஜாபேட்டையில் “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பெற்ற தாய் எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம் வளர்ப்புத்தாய் என்று அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்திலும், வளர்ப்புத்தாய்க்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்திலும் முருகப்பெருமானே பார்வதி தேவிக்கு மேலாக கார்த்திகை பெண்களை நேசித்தார் என்ற வகையிலும் உலகில் எங்கும் இல்லாதவாறு ஆறு பெண்களுடன் தாமரை பீடத்தில் முருகருக்கே உரிய மயில், பால்கிண்ணம், சேவல், வேல், சூரியன், சந்திரன் என்ற பொருள்களுடன் மலர்ந்த முகத்துடன் ஞானக் குழந்தையாக 468 சித்தர்களுக்கும் ஞானகுருவாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் புதுமையான முறையில் விக்ரஹம் பிரதிஷ்டை செய்துள்ளார்.

பிரதி மாதம் சஷ்டி, கிருத்திகை, விசாகம், போன்ற நாட்களில் சிறப்பு ஹோமங்கள் செய்து வருகின்றனர். அந்த வகையில் வருகிற 06.04.2018ல் ஷஷ்டியை முன்னிட்டு  நடைபெறும்  சத்ரு ஸம்ஹார ஹோமத்திலும்,  தொடர்ந்து நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையிலும், அபிஷேகத்திலும்,  பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு கார்த்திகை குமரனையும், கார்த்திகை பெண்களையும், 468 சித்தர்களையும் ஒரு சேர தரிசித்து, உடல் மற்றும் மனரீதியான நோய்களிலிருந்து நிவாரணம் பெறவேணுமாய் கேட்டுக்கொள்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.


தொடர்புக்கு:
ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்,
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம்.
போன்: 04172 230033, மொபைல்: 94433 30203,


சங்கடஹர கணபதி ஹோமம்..


தன்வந்திரி பீடத்தில்
சங்கடஹர சதுர்த்தி சங்கடஹர கணபதி ஹோமம்..

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 03.04.2018 செவ்வாய்க் கிழமை மாலை 5.00 மணி அளவில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் தன்வந்திரி சன்னதியில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சங்கடஹர கணபதி ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது.

சங்கடஹர சதுர்த்தியின் சிறப்பு:

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து ஹோம பூஜைகளில் கலந்து கொள்பவர்கள் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களிலும் வெற்றி பெறலாம்..
"ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.

யாகத்தில் கரும்பு, அருகம்புல், நெல்பொரி, அவல், வறுகடலை, கொப்பரை, வெல்லம், எள், நெய், வெண்பட்டு போன்றவை சேர்க்கப்பட உள்ளது.
ஹோமத்தின் பலன்கள் ஹோமத்திலும் அபிஷேகத்திலும் சிறப்பி பூஜையில் பங்பேற்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள்  இந்த யாகத்தில் பங்கேற்பதின் மூலம் சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும் என்கிறார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு:

ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்,
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம்.
போன்: 04172 230033, மொபைல்: 94433 30203,