Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, January 5, 2018

சத்ரு சம்ஹார சுப்ரமண்ய ஹோமம்...

தன்வந்திரி பீடத்தில்
சத்ரு சம்ஹார சுப்ரமண்ய ஹோமம்.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதியும் பெற்றோர்களின் குறை தீரவும், தம்பதிகளின் வாழ்வு சிறக்கவும், வம்ச விருத்தி அடையவும் ஆண் – பெண்கள் வாழ்கை மலரவும், குழந்தை பாக்யம் வேண்டியும் பூமி விருத்தி, வீடு, மனை விருத்தி, நிலம் விற்பது போன்ற செயல்களுக்கும் எதிரிகளை வெற்றி கொள்வதற்கும், தடைப்படும் காரியங்களின் தடைகளை நீக்கவும், அரசு உத்தியோகம் பெறவும், பில்லி, சூனியங்கள், வினைகள் தொடராமலிருக்கவும், வஞ்சகமும், சூது மதியினரை வெல்லவும், சத்ரு ஜெயம், தீர்க்காயுசு, ரோக நிவாரணம், எதையும் தாங்கும் இதய பலம் தந்து நிவாரணம் கிடைக்கவும். கல்வி தடைப்பட்டவர்களுக்கும், செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கும், இரத்த சம்பந்தமான புற்றுநோயாளிகளுக்கும் நிவர்த்தியைத் தரவல்லவும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் வருகிற 07.01.2018 ஞாயிற்று கிழமை ஷஷ்டி திதியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் சத்ரு சம்ஹார சுப்ரமண்ய ஹோமமும் கார்த்திகை குமரனுக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.

தைப்பூசத்தில் (31.01.2018) காரியசித்தி ஹோமங்கள்

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
தைப்பூசத்தில் (31.01.2018) காரியசித்தி ஹோமங்கள்
( சுயம்வரகலா பார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம், சந்தானகோபால யாகம் )
ஹோமங்களின்போது, பல்வேறு இயற்கைப் பொருட்கள் கொண்டு வளர்க்கப்படும் தீயில் இருந்து கிளம்பும் புகையானது, காற்றில் கலந்து அந்தச் சூழல் முழுவதுமாகப் பரவி இயற்கையில் ஒரு நல்ல மாற்றத்தைச் செய்கிறது என்பதை நவீன விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல. ஹோமங்களின்போது உச்சரிக்கப்படும் பல்வேறுபட்ட மந்திரங்களின் ஒலியலைகள், அந்த ஹோமம் எதற்காகச் செய்யப்படுகிறது என்ற நோக்கத்தை நிறைவேற்றிவைக்க உதவுகிறது. இதற்காகத்தான் பல்வேறு நோக்கங்களுக்காகச் செய்யப்படும் ஹோமங்களும் பல்வேறு தெய்வங்களின் மீதான, விதம் விதமான மந்தர உச்சாடனங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றன.

உலகின் சகல ஜீவராசிகளையும் படைத்தும், காத்தும், அழித்தும் உலக இயக்கத்தை நிகழ்த்திவருகிறான் இறைவன். தன்பாலும் தான் படைத்த உயிர்கள்பாலும் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் இறைவனிடம் நமது சுயநலன்களுக்காகச் செய்யும் பிரார்த்தனைகளைத் தவிர வேறு எதையும் இறைவனுக்காக நாம் செய்வதில்லை. அந்தக் குறையைத் தீர்ப்பதற்காகச் செய்யப்படுவதே ஹோமங்கள். முற்காலங்களில் உலக நன்மைக்காகவும் இறைவனாக நாம் காணும் இயற்கையைக் குளிர்விக்கவுமே ஹோமங்கள் செய்யப்பட்டு வந்தன. ஆயினும் இன்று தனிப்பட்டவர்களின் நலன்களுக்காகவும் ஹோமங்கள் செய்யப்பட்டுவருகின்றன என்பது உண்மை. இந்த வகையில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதியும் பெற்றோர்களின் குறை தீரவும், தம்பதிகளின் வாழ்வு சிறக்கவும், வம்ச விருத்தி அடையவும் ஆண் – பெண்கள் வாழ்கை மலரவும், குறித்த வயதில் திருமணம் நடைபெற வேண்டியும், திருமணத் தடைகள் விலகவும், குழந்தை பாக்யம் வேண்டியும் வருகிற 31.01.2018 புதன் கிழமை தைப்பூசம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் பெண்கள் திருமணத் தடை நீங்க சுயம்வரகலா பார்வதி யாகமும் ஆண்கள் திருமணத் தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமமும், குழந்தை பாக்யம் வேண்டி சந்தானகோபால யாகமும் நடைபெற உள்ளது. மேற்கண்ட மூன்று ஹோமங்களும் பிரதி மாதம் பௌர்ணமிதோறும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஹோமங்களில் கலந்துகொண்டு தன்வந்திரி பகவான் அருளுடன் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிபெற்று சிறப்புடன் வாழ பிரார்த்திக்கின்றோம்.  இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு:
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுப்பேட்டை,
அனந்தலை மதுரா, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர்  மாவட்டம், தமிழ்நாடு,
தொலைபேசி: 04172-230033 / 230274 / 09443330203



Thursday, January 4, 2018

Arudra Special Yagam - Ramana Maharshi Jayanthi...

Arudra Special Yagam and Ramana Maharshi Jayanthi Special Aradhana at
Sri Danvantri Arogya Peedam, Walajapet.
Thanks to " MAALAI MALAR, PATRIKA, SAKSHI, ANDHRA JYOTHI " Daily News Papers.




சங்கடஹர கணபதி ஹோமம்

தன்வந்திரி பீடத்தில்

சங்கடஹர கணபதி ஹோமம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாளை 05.01.2018 வெள்ளிக் கிழமை மாலை 5.00 மணி அளவில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள தன்வந்திரி கணபதி சன்னதியில் சங்கடஹர சதுர்த்தியில் மாபெரும் சங்கடஹர கணபதி ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது.

சங்கடஹர சதுர்த்தியின் சிறப்பு :

"ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகு சங்கடஹர சதுர்த்தி  என்பது  விநாயகர் வழிபாட்டில்  முக்கியமான விழாவாகும். கஷ்டம் என்பது வறுமை, இல்லாமை; சங்கம் என்றால் சேருதல். கஷ்டம் மனிதனின் வாழ்வில் சேருவதே (சங்+கஷ்டம்=சங்கஷ்டம்) சங்கஷ்டம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த சங்கஷ்டமே பின்பு சங்கட்டமாகி, சங்கடமாக உருமாற்றம் பெற்று விட்டது. சங்கடத்தை நீக்குவதே சங்கடஹர சதுர்த்தியாகும் . அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.

யாகத்தின் சிறப்பு :

யாகத்தில்கரும்புஅருகம்புல், நெல்பொரி, அவல், வறுகடலை, கொப்பரை, வெல்லம், எள், நெய், வெண்பட்டு போன்றவை சேர்க்கப்பட உள்ளது.


ஹோமத்தின் பலன்கள் ஹோமத்திலும் அபிஷேகத்திலும் சிறப்பி பூஜையில் பங்பேற்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இந்த யாகத்தில் பங்கேற்பதின் மூலம் சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும் என்கிறார். கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

Wednesday, January 3, 2018

திருமணத் தடை நீக்கும் ஹோமங்களுடன் குழந்தை வரம் வேண்டி யாகம்....

தன்வந்திரி பீடத்தில்
திருமணத் தடை நீக்கும் ஹோமங்களுடன்
குழந்தை வரம் வேண்டி யாகம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி  இன்று புதன் கிழமை 03.01.2018  காலை 10..00  மணி முதல் 1.00 மணி வரை குழந்தை பாக்கியம் பெற வேண்டி சந்தான கோபால யாகம் மற்றும் ஆண்கள் திருமணத் தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமமும் பெண்கள் திருமணத் தடை நீங்க சுயம்வரகலா பார்வதி யாகமும் நடைபெற்றது.

சந்தான கோபால யாகம்

பெண்கள் கருத்தடை பிரச்சனைகள் நீங்கவும், குழந்தை பிறக்கத் தடையாக உள்ள  நாகதோஷம் மற்றும் கர்ம பிரச்சினைகள் இருந்து மீட்கவும், கர்ப்ப பிரச்சினைகள், ஜாதக கிரகங்களின் எதிர்மறை விளைவுகளை அகற்றவும் செய்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பெற்றெடுக்கும் போது ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைக்கவும் இந்த ஹோமம் நடைபெற்றது. இதில் கணவன் மனைவி இர்வரும் கலந்துகொண்டு நவநீத கிருஷ்ணருக்கு வெண்ணைக் காப்பு சார்த்தி குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





Tuesday, January 2, 2018

தன்வந்திரி பீடத்தில்
ஆருத்ராவை முன்னிட்டு
சிறப்பு யாகம்

வேலூர் மாவட்டம் வாலாஜபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள, 

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு 

டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, ஆருத்ராவை 

முன்னிட்டு இன்று 02.01.2018 காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை 

சிறப்பு ஹோமமும் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.


இதனை தொடர்ந்து நாளை காலை 10.00 மணியளவில் ஆண்கள் திருமணத் தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத் தடை நீங்க சுயம்வரகலா பார்வதி யாகம் மற்றும் தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபல யாகம் ஆகிய மூன்று யகங்கள் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



புத்தாண்டில் தன்வந்திரி பீடத்தில்
அஷ்ட ஐஸ்வர்யம் தரும்
ஐந்து ஹோமங்கள் – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
 

வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி  உலக நலன் கருதி பௌர்ணமி மற்றும் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு 01.01.2018 திங்கள் கிழமை, காலை 10.00 மணியளவில் கீழ்கண்ட ஐந்து ஹோமங்கள் நடைபெற்றது.

  1. கல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீ சரஸ்வதி ஹோமம்.
  2. பில்லி சூனியம், எதிரிகள் விலக - மஹா சுதர்ஸன ஹோமம்.
  3. ஆயுள் பயம் நீங்க - ஆயுஷ்ய ஹோமம்.
  4. நீண்ட ஆயுள் பெற - மஹா தன்வந்திரி ஹோமம்.
  5. வாழவில் வளம் பெற - குபேர லட்சுமி ஹோமம்.



ஆகிய ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்களாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை கோபூஜையும், கணபதி ஹோமமும், வேத பராயணமும், கலச பூஜையும், போன்ற பூர்வாங்க பூஜைகளுடன் ஹோமங்கள் நடைபெற்று மஹா பூர்ணாஹுதியும் சிறப்பு அர்ச்சனையும், கூட்டு ப்ரார்த்தனையும் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று பின்பு தன்வந்திரி பகவானையும் இதர 75 பரிவார மூர்த்திகளையும் 468 சித்தர்களையும் தரிசனம் செய்தனர். இதில் புத்தாண்டு முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்னாடக, புதுச்சேரி, மஹாராஷ்டிர மாநில பக்தர்களும் மலேஷ்யா, சிங்கப்பூர், கனடா போன்ற மேலை நாட்டு பக்தர்களும் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற தன்வந்திரி பகவானை பிரார்த்தனை செய்து ஸ்வாமிகளிடம் ஆசிபெற்று சென்றனர். வருகை புரிந்த பக்தர்களுக்கு குடிநீர் வசதி, கழுவறை வசதி, வாக்னம் நிறுத்தும் வசதி, போக்கு வரத்து வசதி, தொந்தரவுகள் இல்லாமல் தரிசனம் செய்ய பாரிக்கேட் வசதி, பாதுகாப்பு வசதி போன்ற பல்வேறு வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. பங்கேற்ற பக்தர்களுக்கு தன்வந்திரி பிரசாதமாக சுக்கு-வெல்லம் பிரசாதத்துடன் மதியம் அன்ன பிரசாதமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.