கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Tuesday, November 14, 2017
உலக குழந்தைகள் தினம் 2017.....
தன்வந்திரி பீடத்தில்
உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு
சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை
வேலூர் மாவட்டம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகளின் ஆசிகளுடன் ஒவ்வொரு ஆண்டும் உலக தொழிலாளர் தினம், உலக மருத்துவர்கள் தினம்,
உலக புரோகிதர்கள் தினம், ஆகிய பல்வேறு விசேஷ தினங்கலில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள்,
கூட்டுப் பிரார்தனைகள் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் இன்று 14.11.2017 செவ்வாய்கிழமை
உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளின் நலன் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி
தன்வந்திரி பீடத்தில் சிறப்பு அபிஷேக பூஜைகளும், கூட்டுப் பிராத்தனையும் நடைபெற்றது.
இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Sunday, November 12, 2017
Saturday, November 11, 2017
Friday, November 10, 2017
காலாஷ்டமி பைரவர் ஹோமமும் கங்கார்த்தியும்……..
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் நாளை
காலாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும் அஷ்ட பைரவருக்கும் மஹா பைரவருக்கும்
சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு இன்று
10.11.2017 மாலை கோ பூஜையுடன் கங்கார்த்தியும் யாக்சாலா பூஜையும் நடைபெற்று ஜபங்கள்
துவங்கியது.
Friday, November 3, 2017
ஐப்பசி அன்னாபிஷேகம்....
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
ஐப்பசி அன்னாபிஷேகம்.
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தில் இன்று
நவம்பர் மாதம் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை ஐப்பசி
பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும், ஸ்ரீ இராகு கேதுவிற்கும் சிறப்பு அன்னாபிஷேகம்
நடைபெற்றது.
அன்னாபிஷேகப் பலன்கள்:
வியாபாரத்தில் பிரச்னை இருப்பவர்களும், நஷ்டமடைந்தவர்களும்
அன்னாபிஷேகத்தை தரிசித்துப் பிரசாதத்தை உண்டால் வியாபாரம் செழிக்கும். பள்ளிக் குழந்தைகளுக்கும்
ஏற்றது இது. சில குழந்தைகள்
நன்றாகப் படிப்பார்கள். ஆனால் தேர்வு நேரத்தில்
எல்லாம் மறந்து போகும். அந்தக்
குழந்தைகள் அன்னாபிஷேகப் பிரசாதத்தை உண்டால் எல்லாம் நன்றாக
நினைவில் நிற்கும். நீண்ட நாடளாக குழந்தைப்
பேறு இல்லாத தம்பதிகள் அன்னாபிஷேக
காட்சியை கண்டு பிரார்த்தனை செய்து
அன்ன பிரசாதம் உண்டால்
குழந்தை பிறக்கும். வருடம் முழுவதும் நல்ல
விளைச்சல் இருக்கும், ஊர் செழிக்கும், கலைகள்
வளரும், மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்
என்பது நம்பிக்கை. எக்காலத்திலும் உணவுப் பஞ்சம் வராமல்
இருக்கவும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினர் மேற்கண்ட பலன்களை பெற இன்று
ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும் ஸ்ரீ இராகு கேதுவிற்கும் சிறப்பு அன்னாபிஷேகம்
நடைபெற்றது! இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
Subscribe to:
Posts (Atom)

















