Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, September 11, 2017

வாழை பூ பூஜை, தன்வந்திரி பீடத்தில்

தன்வந்திரி பீடத்தில் வருகிற 05.10.2017 பௌர்ணமியில் கால தோஷத்தால் தடுமாறும் தம்பதிகளுக்கு மண வாழ்க்கையை தரும் வாழை பூ பூஜை


அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பெற்றோர்கள் மற்றும் உற்றோர்கள் ஆசியுடன்  ஒரு மனைவியோடு வாழவேண்டும். இதுவே நல்ல குடும்பத்திற்கு அழகு என்பர். ஒருசிலர் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை  மறுமணம் முடித்து அவதிகுக்குள்ளாகி வருகிறார்கள். பெண் ணின் உறவினர்கள் நீதிமன்றம், கட்டப் பஞ்சாயத்து, மகளிர் காவல்  நிலையம் என்று  பல இடங்களில் அலைய நேரிடுகிறது.. கணவர் வேறு  தாரத்தோடு வாழச் சென்றுவிட்டால், முதல் மனைவி யின் வாழ்க்கை சூன்னியமாகி வருமானம், பாதுகாப்பு இல்லாமையால், குழந்தையை வளர்க்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார். இதெல்லாம் சமுதாயத்தில் சகஜம் என்று சிலர் சொல்வார்கள். பெண் கொடுக்கும்போதே மண மகனுக்கு இருதார தோஷம் ஆராய்ந்து பின்னர்  பெண்ணைக் கொடுக்க வேண்டும்.என்பர்,
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்துக்கு 7,8 ஆம் வீட்டிற்குரிய கிரகம் பாவியானாலும் அல்லது பாவ கிரகங்களின் பார்வை பெற்றிருந்தாலும் அவர் இருதார  தோஷம் உள்ளவர். அல்லது 12 ஆம் வீட்டில் குரு பகவான் செவ்வாயுடன் கூடினாலும் 2, 7-க்குடைய கிரகம் ஏதேனும் ஒன்று பாப கிரகமாக இருந்தாலும், அந்த ராசியில் பாவ கிரகம் இருந்தாலும்  7 ஆம் வீட்டிற்குரியவர் பாவ கிரகத்துடன் கூடி இரண்டால் வீட்டில் இருக்க, அந்த கிரகத்தைச் செவ்வாய் பகவான் பார்த்தாலும்,8ம் இடத்துக்குரியவர் 7ம் இடத்தில் அமர்ந்தால் திருமணம் என்பது ஒரு கேள்விக்குரியில் முடிகிறது. என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.

அந்த ஜாதகர் இரு தார தோஷம் உள்ளவர் என்பதை அறிந்து கொள்ளலாம். மேற்கண்டவாறு உள்ள  தார தோஷத்தில் பிறந்தவருக்கு ஒரு சிலபெற்றோர்கள் அறியாமையால் திருமணம்  நடந்தால் போதும் என்று திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதுவும் ஒரு வகையில் காலசக்கரத்தின் திருவிளையாடல் என்கின்றனர். இனி வரும் காலங்களில் பெற்றோர்கள் ஆண், பெண் திருமணத்திற்கு முன்பே  உரிய ஜோதிடரிடம் இரு தார தோஷம் அறிந்து  ஆலோசனை பெற்று உரிய எளிய  பரிகாரம் செய்து, தோஷங்களிலிருந்து, பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் கணவனோடு மனைவியும், மனைவியோடு கணவனும் ,சேர்ந்து வாழவும், அல்லது புதிய பாதையில் திருமண பந்தத்தை அமைத்துக் கொள்ளவும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி  வருகிற 05.10.2017 வியாழக் கிழமை ரேவதி நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் இரு வேளையும் பக்தர்கள் பங்கேற்று பலனடைய வேண்டி  மேற்கண்ட தார தோஷங்கள் விலகவும் ,ஆண், பெண் திருமணப் பிராப்தி   ஏற்படவும், சாபங்கள் விலகவும், களத்திர தோஷம் நீங்கவும், துர்மரணத்தால் வீட்டில் நிகழும் அசம்பாவிதங்கள், அசௌகர்ய நிகழ்வுகள்  காரிய தடைகள் நிவர்த்தி பெற்றிடவும், கர்ம வினைகளால் தொடரும் தோஷதடைகள் வீட்டில் ஏற்படும் குழப்பங்கள் விதண்டா வாதங்கள் நிவர்தி பெற்று ,சகல சௌபாக்யம் பெற்றிட சித்தர்கள் அருளிய வாழைப்பூ  காலசக்கர பூஜையுடன், நவகன்னியருக்கு சிறப்பு அபிஷேகமும் ,அலங்காரத்துடன் கன்யா பூஜை, தம்பதி பூஜை சுமங்கலி பூஜையும் நடைபெற்று பங்குபெரும் நபருக்கு கலசாபிஷேகம் செய்து தடைகள் நீங்கவும் திருஷ்டிகள் விலக  ஏற்ற இறக்க தீப பூஜை நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு,
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், அனந்தலை மதுரா,
கீழ்புதுப்பேட்டை வாலாஜாபேட்டை.632513
போன். 04172-230033,23274
www danvantripeedam@gmail. Danvantritemple.org


Saturday, September 2, 2017

Danvantri Peedam - Universal Peedam: தன்வந்திரி பீடத்தில் இலட்சார்ச்சனையுடன் குருப் பெய...

Danvantri Peedam - Universal Peedam: தன்வந்திரி பீடத்தில் இலட்சார்ச்சனையுடன் குருப் பெய...:     மனித வாழ்க்கையின் ஏற்றம் - இறக்கம்   எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன . பூ...

தன்வந்திரி பீடத்தில் இலட்சார்ச்சனையுடன் குருப் பெயர்ச்சி மகாயாகம் நடைபெற்றது.











  மனித வாழ்க்கையின் ஏற்றம் - இறக்கம்  எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை  அளிப்போர் நவகிரகங்கள் எனப் போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர். இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாக, நடு நாயகராகத் திகழ்பவர் குரு பகவான். தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரகம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான்குரு பார்க்க கோடி நன்மை’, குரு பார்வை தோஷ நிவர்த்திஎன்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப் பெறுகின்றது.
இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி வாக்கியபஞ்சாங்கப்படி இன்று 02.09.2017 சனிக்கிழமை  காலை 9.30 மணியளவில் குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு இடப்பெயர்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரிபீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் இன்று இலட்சார்ச்சனையுடன்  குருப்பெயர்ச்சி மஹாயாகம்,மற்றும்  ஸ்ரீதட்சிணாமூர்த்திக்குசிறப்பு அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
காலை 6.00 மணி முதல் 6.15 மணி வரை - சுப்ரபாதம்.6.15 மணி முதல் 6.30 மணி வரை - கோ பூஜை. 6.30 மணி முதல் 7.00 மணி வரை - வேத பாராயணம்.7.00 மணி முதல் 7.30 மணி வரை - யாக சாலை பூஜைகள் 8.00 மணி முதல் 09.00 மணி வரை - சூக்த பாராயணம், 09.00 மணி முதல் 11.00 மணி வரை - குரு பெயர்ச்சி மஹா யாகம்.11.00 மணி முதல் 11.30 மணி வரை -, மஹா பூர்ணாஹுதி.11.30 மணி முதல் 12.00 மணி வரை - கலச புறப்பாடு.12.00 மணி முதல் 12.30 மணி வரை - பஞ்ச திரவிய அபிஷேகம், சூக்த பாராயணம்.12.30 மணி முதல் 1.00 மணி வரை - மஹா அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, மஹா தீபாராதனை.1.00 மணி முதல் - பிரசாத விநியோகம். நடைபெற்றது.குரு பெயர்ச்சியை முன்னிட்டு  வியாழக் கிழமை மாலை தொடங்கப்பட்ட இலக்ஷார்ச்சனை  தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த ஹோமத்தில் அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடவேண்டியும்,சுப பலன்களான திருமணம், குழந்தைப்பேறு, தொழில், பொருளாதாரம், உயர்பதவி, அரசாங்க உதவி ஆரோக்யம் போன்றவைகளில் நன்மை பெற வேண்டி ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம். மீனம். இராசி நேயர்கள், குருபுத்தி குருதிசை, நடைபெறும் அன்பர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனைசெய்தனர். இதில்தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, மலேசியா, சிங்கப்ர், கனடா, போன்ற இடங்களிலிருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Thanks to Dinamalar Vellore Edition 02.09.2017


Thanks to Balajothidam 08.09.2017 Vol 33 Issue 37


Friday, September 1, 2017

நவராத்திரி விழாவை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திநரி பீடத்தில் பலன் தரும் பதினாறு ஹோமங்கள்.

வேலூர் மாவட்டம்வாலாஜாபேட்டைஅனந்தலை மதுராகீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டும்உலகத்தில் அனைத்து ஜீவ ராசிகளின் நலனுக்காகவும்சுமங்களிகளின் தீர்காயுள் வேண்டியும்லஷ்மிசரஸ்வதி , துர்கா தேவியர்களின் அருளாசி பெறவும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் 20.09. 2017 வியாழன்  முதல் 30.09.2017 சனிக் கிழமை வரை பத்து நாட்கள்  தினமும் காலை 10.00 மணியளவில் பலன் தரும் பதினாறு வகையான ஹோமங்கள் நடைபெற உள்ளது.
தன்வந்திரி ஹோமம்சூலினி துர்கா ஹோமம்சனி சாந்தி ஹோமம்கந்தர்வ ராஜ ஹோமம்சுயம்வர கலா பார்வதி ஹோமம்சுதர்ஸன ஹோமம்கார்த்தவீர்யாஜுனர் ஹோமம்சொர்ண கால  பைரவர் ஹோமம், , குபேர லஷ்மி ஹோமம்,  ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், சந்தான கோபால ஹோமம், குருதட்சிணாமூர்த்தி ஹோமம்ஆயுள் ஹோமம்த்ருஷ்டி துர்கா ஹோமம் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் ஹோமம் ,இராகு கேது ஹோமம் ஆகிய 16  ஹோமங்கள் நடைபெற உள்ளது.
20.09..2017 அமாவாசை முதல் காலை பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கும் இந்த ஹோமங்கள்,30.09. 2017 மாலை பூர்ணாகூதியுடன் நிறைவு பெறும்ஹோமங்களை தொடர்ந்துஅதற்குரிய தெய்வங்களுக்கு அபிஷேகமும்ஆராதனைகளும் நடைபெறும்.
இந்த ஹோமத்தில்பலவகையான புஷ்பங்கள்சமித்துக்கள்நெய்சிவப்பு காய்ந்த மிளகாய்பட்டு வஸ்திரங்கள்பல வகையான பழங்கள்பல வகையான இனிப்புகள்கார வகைகள் மற்றும் பல வகையான மூலிகை திரவியங்கள் சேர்க்கப்பட உள்ளதுநடக்க இருக்கும் இந்த ஹோமத்தில்பங்கு பெற்று நவராத்திரி நாயகிகளான லஷ்மிசரஸ்வதி மற்றும் துர்கா தேவியர்களின் அருளுடன் ஸ்ரீஆரோக்ய லஷ்மி சமேத  தன்வந்திரி பெருமாள் அனுகிரகத்துடன்   பதினாறும் பெற்று நோயின்றிசீறும்சிறப்புமாக வாழ வேண்டுமாய் கோருகிறோம்இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி பீடம்அனந்தலை மதுராகீழ்புதுப்பேட்டைவாலாஜாபேட்டை – 632513.
Ph. 04172 – 230033 , 230274 (M) 9443330203

Mail: danvantripeedam@gmail.com