Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, February 24, 2017

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ மஹா சிவராத்ரியை முன்னிட்டு சிவபஞ்சாட்சர ஹோமமும் 468 சித்தர்களுக்கும் மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி சிறப்பு அபிஷேகமும் ஹோமமும் நடைபெற்றது..இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பக்தர்களஅவர்கள் கைகளினாலே அபிஷேகம் செய்து ஆனந்தம் அடைந்தனர்.இதனை தொடர்ந்து வருகை புரிந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.











தன்வந்திரி பீடத்தில் அருள்தரும் அற்புத ஹோமங்கள் 26.02.2017 ஞாயிறு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 26.02.2017 ஞாயிற்றுகிழமை  உலக மக்களின் நலன் கருதியும் பல்வேறு வகையான அருள் தரும் அற்புத ஹோமங்கள் கீழ்கண்டவாறு நடைபெறுகிறது.

1.  அறிவு சார்ந்த 5 ஹோமங்கள்

ள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் வருகிற பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும் தேர்வு பயம் நீங்கவும், மேற் கல்வியில் சேர ஏற்படும் தடைகள் நீங்கவும், வாக்தேவியின் அருள் பெறவும்,, பெற்றோர்கள், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் நிர்வாகிகளுக்கு நல்ல ஒரு இணக்கம்  ஏற்படவும் ஆரோக்ய குறைவு ஏற்படாமல் இருக்கவும் ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஹோமம், ஸ்ரீ வித்யா லட்சுமி ஹோமம், ஸ்ரீ வித்யா கணபதி ஹோமம், ஆகிய 5 அறிவு சார்ந்த ஹோமங்கள் நடைபெறுகிறது.

2.  ஸ்ரீ மஹா தன்வந்திரி ஹோமம்

லக  மக்களின் உடற்பிணி உள்ளத்து பிணி நீங்க ஆரோக்யம் பெற 108 விதமான மூலிகைகளை கொண்டு நோய் தீர்க்கும்  மாபெரும் ஸ்ரீ தன்வந்திரி ஹோமம் நடைபெறுகிறது.



3.  சுயம்வர கலா பார்வதி ஹோமம்

பெண்களுடைய திருமணத்தடைக்கு காரணமாக விளங்குகின்ற செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம்,நவக்கிரக தோஷம், மாங்கல்ய தோஷம்,போன்ற பல்வேறு வகையான தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற  பார்வதி பரமேஸ்வரர் ஆன உமா மகேஸ்வரரை வழிபடும் விதத்தில் சுயம்வர கலாபார்வதி ஹோமம் நடைபெற உள்ளது.

4.  ஸ்ரீ சூலினி துர்கா ஹோமத்துடன் அமாவாசை யாகம்

மாசி அமாவாசையை முன்னிட்டு உலக மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படும் தோஷங்களையும் திருஷ்டிகளையும், சாபங்களையும் நீக்க வேண்டி பித்ருக்களுக்குரிய நாளான அமாவாசை அன்று தைரியங்களையும் , ஐஸ்வர்யங்களையும் தரக்கூடிய ஸ்ரீ
மஹா ப்ரத்தியங்கிரா தேவியை வழிபடும் விதத்திலும் ராகுகேது தோஷங்கள் அகலவும், பித்ரு தோஷங்கள் அகலவும் போட்டி பொறாமை போன்றவற்றிலிருந்து விடுபடவும் தொழில் உத்தியோகம், அபிவிருத்தி அடையவும் தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ சூலினி துர்கா ஹோமத்துடன் அமாவாசை யாகம் நடைபெறுகிறது.


மேற்கண்ட அனைத்து ஹோமங்களும் தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி ஞாயிறு காலை 10.00 மணியளவில் யாகசாலை பூஜையுடன் துவங்க உள்ளது.இந்த ஹோமத்தில் பல்வேறு வகையான மூலிகைகள், பழங்கள், புஷ்பங்கள், நெய், தேன், பட்டு வஸ்த்திரங்கள், சித்ரா அன்னம், திருஷ்டி நீக்கும் பொருட்கள் சேர்க்கப்பட உள்ளது..இதில்மாணவ மாணவிகள் திருமணத்தடை நீங்கும் பெண்கள் மற்றும் கல்வி  நிறுவனர்கள், பொது மக்கள் வியாபாரிகள், ஆகியோர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். 

Thursday, February 23, 2017

தன்வந்திரி பீடத்தில் அறிவு சார்ந்த 5 ஹோமங்கள் 26.02.2017 ஞாயிறு காலை 10.00 முதல் பகல் 1.00 மணி வரை

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் கல்விக்கு தொடர்புடைய ஸ்ரீவித்யா கணபதி, ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ வித்தியாசரஸ்வதி, ஸ்ரீ வித்யா லஷ்மி , ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் போன்ற தெய்வங்களை முன்னிருத்தி யாகங்கள் செய்யப்படும்.இந்த ஹோமத்தில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கல்வி தரம் உயரவும் பெற்றோர் மகிழ்ச்சியடையவும் கல்வியில் சிறந்து கல்வி உலகத்தை உருவாக்கவும், தேர்வு பயம் நீங்கவும், ஆரோக்யம் சிறப்பாக இருக்கவும், பெற்றோர்களும் மாணவ மாணவியர்களும் மற்றும் ஆசிரியர்களும், உடல் ஆரோக்கியத்துடன் வாழ மேற்கண்ட ஹோமங்கள் நடைபெறுகிறது. ஹோமம் முடிந்தவுடன் அந்தந்த தெய்வங்களுக்கு விஷேச திருமஞ்சனமும் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட எழுது பொருட்கள்  பிரசாதமாக வழங்கப்படும். இதில் சுற்றுப்புற கல்லூரி  மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்க உள்ளனர். இந்த தகவலை  கயிலை ஞானகுரு டாக்டர்  ஸ்ரீ முரளிதர ஸ்வாமகள் தெரிவித்தார்.


தன்வந்திரி பீடத்தில் அமாவாசை ஹோமம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 26/02/2017 ஞாயிற்றுக்கிழமை அமாவாசையை முன்னிட்டு காலை 10.30 மணிளவில், பீடாதிபதி ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி  அமாவாசை ஹோமம் நடைபெறுகிறது..
ஜோதிட சாஸ்திர, வான நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில் ஒரே ராசியில்சேர்வதே அமாவாசைஆகும். இந்நாளில் முன்னோர்கள், மூத்தோர்கள், இறந்த தாய், தந்தையரை நினைத்து வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது.

அமாவாசை முன்னிட்டு சூலினி துர்கா ஹோமம் மஹா ப்ரத்தியங்கிரா ஹோமம் மற்றும்   சகல தேவதா ஹோமம் நடைபெற உள்ளது..இந்த ஹோமத்தில் மிளகாய் வற்றல் பூசணிக்காய் கடுகு, மிளகு, உப்பு, சிவப்பு நிற புஷ்ப;ங்கள்,, சிவப்பு நிற பழங்கள் சிவப்பு வஸ்த்திரங்கள், மற்றும் வேப்பெண்ணை, யாகத்தில் சேர்க்கப்பட உள்ளது.. இதை தொடர்ந்து மஹா பூர்ணாஹீதி நடைபெற உள்ளது.. இதனை தொடர்ந்து 468 சித்தர்கள், மகிஷாசுரமர்த்தினி, ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் கால பைரவர், ராகு கேது, மற்றும் மஹா ப்ரத்தியங்கிரா தேவிக்கும் அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற உள்ளது.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 468 சித்தர்களுக்கு சிவ பஞ்சாட்சர ஹோமத்துடன் சிறப்பு பூஜை

கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 24/02/2017 வெள்ளிக்கிழமை அன்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு 468 சித்தர்கள் பூஜையுடன் சிவ பஞ்சாட்சர ஹோமம் நடைபெற உள்ளது.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 320 ஜீவ சமாதிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள சித்தர்களை தரிசித்து அப்புண்ணிய பூமியின் புனித ம்ருத்தியை கொண்டு 15 நாட்கள் ருத்ர ஹோமம் செய்து சிவ யந்திரத்துடன் 468 சித்தர்களை சிவலிங்க ரூபமாக பிரதிஷ்டை செய்து பிரதி அமாவாசை, பௌர்ணமி, சிவராத்திரி, பிரதோஷ காலங்களில் யாகங்கள், பூஜைகளை சிறப்பாக செய்து வருகிறார்.

மேலும் மரகதலிங்கம், வள்ளலார், மகா அவதார பாபா, சீரடி பாபா, ஸ்ரீ ராகவேந்திரர், ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர், புத்தர், குருநானக், குழந்தையானந்தா சுவாமிகள், ஸ்ரீ வீரபிரம்மேந்திரர், சேஷாத்ரி சுவாமிகள் போன்ற மகான்களையும் பிரதிஷ்டை செய்து சித்தர் முறையில் பூஜித்து வருகிறார்.



வருகிற மஹா சிவராத்திரி 24.02.2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் உலக மக்கள் நலன் பெறவும் இயற்கை வளம் பெறவும் சிவ பஞ்சாட்சர ஹோமமும், ருத்ராபிஷேகமும், ருத்ர பாராயணமும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு விவாஹ பிராப்தம், சந்தான பாக்கியம், நல்ல நட்புகள், வறுமை நீங்கி வளமை, குரல் வளம், இனிய சரீரம், நல்விளைச்சல், தொழில், வணிகம், வியாபாரம் பெருகும் மற்றும் பலவிதமான சாபங்களும் தோஷங்களும் அகலும். இது மோட்சம் கிடைக்க வழிவகை செய்யும் என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

Tuesday, February 7, 2017

தன்வந்திரி பீடத்தில் வள்ளலார் ஹோமத்துடன் சிறப்பு அன்னதானம்…

அருளாளர் ராமலிங்க அடிகளார் (வள்ளலார்) வடலூரில் சன்மார்க்க சங்கம், சத்திய தரும சாலை, சத்திய ஞான சபை, சித்தி வளாகம் போன்ற அமைப்புகளை நிறுவி பசிப்பிணி போக்கி, பக்தி நெறியைப் பரப்பி வந்தவர். இவர் 1876-ம் ஆண்டு தைப்பூச நன்னாளில் இறைவனுடன் கலந்தார். ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் வடலூரில் ஏழு திரைகள் விலகி ஜோதி தரிசனம் நிகழும். ஒவ்வொரு திரைக்கும் ஒவ்வொரு சக்தி என்பது நம்பிக்கை. (கண்ணாடிக் கதவுகளில்) கறுப்புத்திரை என்பது மாயா சக்தி, நீலத்திரை - கிரியாசக்தி, பச்சைத் திரை - பராசக்தி, சிவப்புத் திரை - இச்சா சக்தி, பொன்வண்ணத் திரை - ஞானசக்தி, வெண்மைத் திரை - ஆதிசக்தி, கலப்புத்திரை - சிற்சக்தி!

அருட்பெருஞ்சோதியாகிய இறைவனை அன்று தரிசிக்கிறோம் என்பது கருத்து. தைப்பூச நாளில் விடியற்காலையில் மேற்கே சந்திரனும் கிழக்கே சூரியனும் காணப்பெறும். அந்த நேரத்தில்தான் ஞான சபையில் அருட்பெருஞ்ஜோதியைக் காட்டியருளினார் அடிகள்!

இத்தனை அற்புதங்கள் நிறைந்த வள்ளலாருக்கென்று தன்வந்திரி பீடத்தில் தனி சன்னதி அமைத்து பூஜைகளும், ஹோமங்களும் செய்து வருகிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். அந்த வகையில் உலக மக்களின் நலன் கருதி வருகிற 09.2.2017 வியாழக்கிழமை தைபூச நன்னாளை முன்னிட்டும், வள்ளலார் ஜோதியில் கலந்த நன்னாளை முன்னிட்டும் பீடத்தில் அமைந்துள்ள வள்ளலாருக்கு சிறப்பு பூஜையும், வள்ளலார் ஹோமமும் நடைபெற உள்ளது.

வள்ளலார் கொள்கைகளான ஜீவ காருண்யம், மன அமைதி, மனித நேயம், அன்னதானம்மது, மாமிசம் உண்ணாமலிருப்பது, ஜாதி, இனம், சமுதாய வேறுபாடின்றி நடப்பது, எக்காரியத்திலும் பொதுநோக்கத்தோடு இருப்பது போன்ற கொள்கைகளை நாமும் பின்பற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த ஹோமத்தை ஸ்வாமிகள் நடத்த உள்ளார்.. அன்று மாலை 6.00 மணியளவில் நித்திய அன்னதான கூடம் திறப்பு விழா
நடைபெறுகிறது.

இந்த ஹோமத்தில் பங்கேற்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கப்பெற்று அனைவரிடத்தும் அன்பு செலுத்தும் எண்ணமும் மேலோங்கும். இதனால் வாழ்வில் சகலமும் பெற்று வளமுடன் வாழ வழிவகைச் செய்யும். ஆகவே பக்தர்கள் அனைவரும் வள்ளலார் ஹோமத்திலும், தொடர்ந்து நடைபெறும் சிறப்பு அன்னதானத்திலும் கலந்து கொண்டு பயன்பெற வேணுமாய் ப்ரார்த்திக்கின்றோம்.

தொடர்புக்கு.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலஜாபேட்டை – 632513. வேலூர் மாவட்டம்.

போன் : 04172-230033, 230274.