Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, July 5, 2013

சித்தனருள் பெறவேண்டுமா?

ப்ரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  5.7.2013  வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் சிவலிங்க ரூபத்தில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜையும், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரருக்கு சிறப்பு ஆரத்தியும், கூட்டுப்பிரார்த்தனையும் நடைபெற்றது. இந்த கூட்டுப்பிரார்த்தனையில் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

மேலும் ஒவ்வொரு பிரதோஷ நாட்களிலும் இந்த கூட்டுப்ரார்த்தனை மாலை வேளையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை.

தொலைபேசி  : 04172 - 230033   செல் : 9443330203

பிரதோஷத்தை முன்னிட்டு 
நடைபெற்ற காட்சிகள் 

கார்த்திகை குமரனுக்கு சிறப்பு ஆரத்தி.
468 சித்தர்களுக்கு சிறப்பு வழிபாடு.

468 சித்தர்கள் வழிபாட்டில் பக்தர்கள்.
468 சித்தர்கள் வழிபாட்டில் பக்தர்கள்.

468 சித்தர்கள் வழிபாட்டில் பக்தர்கள்.
468 சித்தர்கள் வழிபாட்டில் பக்தர்கள்.


468 சித்தர்களுக்கு சிறப்பு வழிபாடு.
நவ கன்னியருக்கு சிறப்பு வழிபாடு.


468 சித்தர்களுக்கு சிறப்பு வழிபாடு.
468 சித்தர்கள் வழிபாட்டில் வேலூர் மாவட்டம், இலத்தேரி தனலட்சுமி வங்கி மேலாளர் திரு.சிஜூ நாயர்.


அனைத்து தேவதைகளும் ஒருங்கே இணைந்த வண்ணி மரத்திற்கு சிறப்பு ஆரத்தி.
ஸ்ரீ குழந்தையானந்த மகா சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு.


ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு.
ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரர் வழிபாட்டில் பக்தர்கள்.

Wednesday, July 3, 2013

ஹோமங்கள் தொடர் கட்டுரை பாகம் - 6

டாக்டர் ஞானகுரு ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்

நலம் தரும் ஹோமங்கள்!


ஹோமம் நடக்கின்ற இடங்களில் ஆத்மார்த்தமாகக் கலந்து கொண்டாலே எண்ணற்ற பலன்கள் நம்மை வந்து அடையும். வேத மந்திரங்கள் அட்சர சுத்தமாக ஒலித்துக் கொண்டே இருக்கும் அந்த இடத்தில் நிலவுகிற அதிர்வலைகள் பக்தர்களது மனதை நிறைத்து, பாஸிட்டிவ் எண்ணங்களை அவர்களுக்குள் உருவாக்கும். இது பல நல்ல செயல்களுக்குக் காரணமாக அமையும். 

தவிர, வேத பண்டிதர்களால் மந்திரங்கள் சொல்லி ஹோம அக்னியில் இடப்படுகிற திரவியங்கள் மற்றும் சமித்துக்களின் புகை, அந்தப் பகுதி முழுக்கப் பரவி, பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். இன்றைக்கு ஒரு தலைவர் உடல்நலம் சரி இல்லாமல் போனாலும், விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்றாலும், தேசத்தில் எதிரிகள் ஒழிய வேண்டும் என்றாலும் ஹோமங்கள் செய்கிற நடைமுறை பிரபலமாகி வருகிறது. இதனால் பலனும் கிடைக்கிறது என்பதை நவீன விஞ்ஞானம் ஏற்றுக் கொண்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபால் விஷ வாயுக் கசிவை எவரும் மறக்க முடியாது. அப்பேர்ப்பட்ட சீரழிவின்போதும் ஒரே ஒரு வீட்டில் இருந்தவர்கள் மட்டும் எந்த விதமான சிறு பாதிப்பும் இல்லாமல் தப்பினார்களாம். காரணம் என்ன? அந்த வீட்டில் தினமும் ஹோமம் நடக்குமாம். விஷ வாயுவின் பிடியில் இருந்தே விடுபடுவதற்கு ஹோமம் உதவும் என்றால், அதன் மகத்துவத்தை நாம் அனைவரும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.

இதனால்தான் தனிப்பட்ட முறையில் ஹோமங்கள் அமையாமல், உலக நலத்தை முன்னிட்டும், மழை பொழிய வேண்டும் என்றும், வியாதிகள் குறைய வேண்டும் என்றும், நாட்டில் நிலவுகிற அசாதாரணமான சூழல் விலக வேண்டும் என்றும் பல பொது இடங்களில் ஹோமங்கள் பெரிய அளவில் இன்றைக்கு நடத்தப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் டெங்கு ஜுரம் என்கிற கோர அசுரன் விஸ்வரூபமாகக் கிளம்பி பலரையும் பீதி அடைய வைத்தான். ஆங்காங்கே அழுகுரல்கள்... அவல ஓலங்கள்... தமிழகமே களேபரமானது. அந்த வேளையில் பல பக்தர்களும் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் வந்து, ‘டெங்கு அசுரனின் பார்வை நமது தேசத்திலேயே படக் கூடாது. அதற்காக ஒரு விசேஷ ஹோமம் செய்யுங்கள்’ என்று என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். தேசத்தின் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தி, வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீதன்வந்திரி ஹோமம் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது.  

பல விஷக் கிருமிகளை நசுக்குகிற வல்லமை நமது ஹோம மந்திரங்களுக்கும், மூலிகை திரவியங்களுக்கும் உண்டு. இதை மனதில் கொண்டுதான் சித்த மருத்துவங்களும், மூலிகை வைத்திய முறைகளும் பண்டைய காலத்தில் துவங்கின. அந்த முறைகளும் பாரம்பரியமும் நம்மை விட்டுப் போய் விடக் கூடாது என்று அனைத்தையும் காத்து வருகின்ற அரும் பணியைத்தான் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் இன்று சிரமேற்கொண்டு செய்து வருகிறது. 
இது குறித்த ஆராய்ச்சிகளிலும், முயற்சிகளிலும் தீவிரமாக இறங்கி வருகிறோம். கருத்தரங்குகளை நடத்தி வருகிறோம்.

தீர்வு இல்லாத பிரச்னைகள் இருக்க முடியாது. அதுபோல் தீர்க்க முடியாத வியாதிகளும் கிடையாது. எந்த ஒரு நோய்க்கும் & நம் சித்தர்கள் அருளிய நூல்களில் ஒரு தீர்வு சொல்லப்பட்டிருக்கிறது. முறையான வல்லுநர்களைக் கொண்டு அனைத்தையும் ஆராய்ந்து வருகிறோம். நோயில்லா ஒரு உலகத்தை உருவாக்க ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் அயராது பாடுபட்டு வருகிறது.
மருத்துவக் கடவுளான ஸ்ரீதன்வந்திரி பகவான் பிரதானமாக வீற்றிருக்கக் கூடிய இந்த பீடத்தில் அவரது அருளோடும், ஆசியோடும் பல முயற்சிகளை செய்து வருகிறேன். இதற்குப் பல மகான்களின் அருளாசியும், தெய்வங்களின் அனுக்ரஹமும் எனக்கு இருந்து வருகிறது.

வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் வந்து திரும்பும் பக்தர்கள் மன நிம்மதியோடு செல்கிறார்கள். இந்த யக்ஞ பூமியில் கால் பதித்த பின் தங்களுக்குள் நிகழும் பல நல்ல மாறுதல்களை பக்தர்கள் என்னிடம் மெய் சிலிர்ப்போடு தெரிவிக்கிறார்கள். இந்த அனுபவங்களை அவர்கள் மற்றவர்களிடம் சொல்லும்போது இந்த பீடத்தின் மகிமை பலருக்கும் போய்ச் சேருகிறது. 

‘ஒரு ஹோமத்தில் கலந்து கொள்வதால் எனக்கு என்ன பலன் சாமீ?’ என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். இன்றைய யுகத்தில் வாழுகின்ற மனிதர்கள் பலனை எதிர்பார்த்துதான் எதையும் செய்கிறார்கள். அதை தவறு என்று நான் சொல்லவில்லை. அதே சமயம் & சித்தர்களும் மகரிஷிகளும் நமக்கு அருளிய ஏராளமான ஹோமங்கள், நம்மை வாழ்விக்க வந்தவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முன்காலத்தில் யாகங்களே ஒரு தேசத்தையும் மன்னனையும் வாழ்வித்தன. மனிதர்களுக்கு இருக்கக் கூடிய எந்த ஒரு பிரச்னை அகல்வதற்கும் ஹோமம் சிறந்த பரிகாரமாக அமைந்துள்ளது.
ஆதி சங்கரர் வகுத்துள்ள ஷண்மதங்களை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான ஹோமங்கள் இங்கே நடந்து வருகின்றன. ஸ்ரீதன்வந்திரி ஹோமம், ஸ்ரீசண்டி ஹோமம், ஸ்ரீநிகும்பலா ஹோமம், ஸ்ரீபிரத்யங்கிரா ஹோமம் & இப்படி பல ஹோமங்கள் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடந்து வருகின்றன.

(இன்னும் வரும்)

Tuesday, July 2, 2013

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு

உலக சமாதான ஆலய நிறுவனர் குருமகான் பரஞ்ஜோதியார் வருகை…

உடுமலைப்பேட்டை, திருமூர்த்தி மலையில் உலகசமாதான ஆலயத்தை நிறுவி உலக மக்களின் நலன் காக்கும் வகையில் மாபெரும் புரட்சி செய்து வருகின்ற குருமகான் பரஞ்ஜோதி அவர்கள் வருகிற 6/7/2013 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகின்ற பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளார்.

மேலும் தியானம், யோகா, மருத்துவம் போன்ற பல பணிகளையும் வாழ்க்கைக் கல்வி, வாழ்வியல் பயிற்சி போன்ற பல உயரிய திட்டங்களையும் செய்து வருகின்ற மகானின் ஆசியை அனைவரும் பெறுவோம். குருவருளுடன் திருவருளுக்கு பாத்திரமாவோம்.

Telugu News at Sri Danvantri Arogya Peedam - Thanks to Sakshi News Paper


Monday, July 1, 2013

ஸ்ரீதன்வந்திரி பீடத்தின் கொடி:

ஸ்ரீதன்வந்திரி பீடத்தின் கொடி:ஒவ்வோர் அரசாங்கத்துக்கும் ஒரு கொடி உண்டு. பிரபலமான ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு டிரேட் மார்க் (முத்திரை) அதாவது & சின்னம் உண்டு. தங்களது பொருட்களைப் பிரபல்யப்படுத்தும்போது அந்த முத்திரை பிரதானமாக இருக்கும். அதைப் பார்த்த மாத்திரத்திலேயே ‘ஓ... இது இந்த கம்பெனியின் தயாரிப்பு’ என்று வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்வர்.  அதுவும் உலக அளவில் தரச் சான்றிதழ்கள் வாங்கிய தன்வந்திரி பீடத்துக்கும் ஒரு கொடி & அதாவது அடையாளம் வேண்டாமா? உலக மக்களின் நலனுக்காக அவர்களின் நோய், நொடிகளைத் தீர்த்து வைத்து அவர்களை சகல சௌபாக்யங்களுடன் வாழ வைக்கும் வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் அடையாளமாக ஒரு கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் ஓர் உருண்டைப் பந்து. அதன் காரணமாக வெளிச்சுற்று ஒரு வட்டம். மேலும் இன்னொரு கருத்து பூமியென்னும் வட்டத்துக்குள் முக்கோணத்துக்குள் தன்வந்திரி பகவான்... ‘சத்வம், ரஜோ, தமோ எனும் முக்குணங்களால் அமைந்த மனிதர்களே... உங்களுக்கு வாதம், பித்தம், கபம் என்னும் முத்தோஷங்களால் ஏற்படக்கூடிய நோய்களிலிருந்தும் காத்தருள இதோ நான் இருக்கிறேன்’ என்று சொல்வதைப் போல இவ்வுருவம் அமைந்துள்ளது. இந்தக் கொடி ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் 2007இல் சிறப்பாக நடைபெற்ற ருத்ர ஹோமத்தன்று கூனம்பட்டி ஆதீனம் முன்னிலையில் பீடத்தின் முன் ஏற்றப்பட்டது.

புத்துயிர் தரும் புனர்விவாஹ ஹோமம்