ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில் கருட ஜெயந்தி விழா
ஈரேழு லோகத்தை ஆளும் எம்பெருமான் ஸ்ரீ மஹா விஷ்ணு தன்வந்திரி பெருமாளாகவும் காக்கும் கடவுளாகவும் இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டையில் ஆரோக்யலக்ஷ்மி தாயாருடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், காணபத்யம் எனும் ஆறு மதங்களுக்குரிய தெய்வங்களையும் ரமணர், மகாவீரர், புத்தர், குழந்தையானந்த ஸ்வாமிகள், ராகவேந்திரர் போன்ற 16க்கும் மேற்பட்ட மகான்களையும், குருமார்களையும், ரிஷிகளையும், 468 சித்தர்களை சிவலிங்க ரூபமாகவும் பிரதிஷ்டை செய்து அன்றாடம் யாகங்களும், ஹோமங்களும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது. மேலும் பிரதி மாத அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, சஷ்டி, திருவோணம், ஏகாதசி போன்ற விஷேச தினங்களில் உலக நலன் கருதி பல்வேறு சிறப்பு யாகங்களும் நடைபெற்று வருகிறது. சஞ்சீவி கருட கங்கா எனும் தீர்த்தகுளம், அன்னதான கூடம், கோசாலை போன்றவைகள் அமைத்து பல்வேறு சமயப்பணி, சமுதாயப்பணி செய்து வரும் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 26.07.2023 புதன்கிழமை காலை, ஆடி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு உலகில் வேறெங்கும் இல்லாதவாறு 21 அடி உயரத்தில் எழுந்தருளிய அஷ்டநாக விஸ்வரூப கல் கருட பகவானுக்கு கருட ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ சுதர்சன ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ கருட ஹோமம், ஸ்ரீ அனுமந்த ஹோமம், ஸ்ரீ மகாலக்ஷ்மி ஹோமம் பல்வேறு சஞ்சீவிகளைக் கொண்டு சிறப்பு யாகங்களுடன் நவ கலச திருமஞ்சனமும், புஷ்பாஞ்சலியும், அன்னபிரசாதம் வழங்கும் நிகழ்வும் ஸ்வாமிகளின் ஆசியுரையும் நடைபெற்றது. நாளை 27.07.2023 வியாழக்கிழமை வாஸ்து நாளை முன்னிட்டு காலை 7.00 மணிமுதல் 9.00 மணிக்குள்ளாக அஷ்டதிக் பாலகர்கள், பஞ்ச பூதங்கள் மற்றும் வாஸ்து பகவானுக்கு சிறப்பு ஹோமத்துடன் திருமஞ்சனமும் நடைபெறவுள்ளது. மேலும் உங்கள் இல்லத்தில் தன்வந்திரி பகவான் என்ற வைபவத்திற்காக தன்வந்திரி உற்சவர் விஜய யாத்திரை பெங்களூரில் துவங்கவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.