Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, August 13, 2016

செப்டம்பர் 5ல்-2016. வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் 23 இலைகளைக் கொண்டு சிறப்பு அர்ச்சனை

வேலுார் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் விநாயகர் சதூர்த்தி விழா வரும் 05.09.2016 தேதி திங்கள்கிழமை நடைபெற உள்ளது
13 ஆண்டுகளுக்கு முன்பு தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறுங்கும் இல்லாத வகையில் நான்கடி உயரத்தில் சிம்ம பீடத்தில் ஓரே கல்லில் ஓரு புறம் வினைதீர்க்கும் விநாயகர், மறுபுறம் பீணிதீர்க்கும் தன்வந்தரி வடிவமைக்கப்பட்டு அவ்வப்போது கணபதிக்குரிய கணபதி ஹோமம் நடைபெற்று வருகிறது.சமீபத்தில்1,32 ஆயிரம் மோதகங்களை கொண்டு வாஞ்சாகல்பதா கணபதி ஹோமம் சிறப்பாக நடைப்பெற்றது.
வருகிற 5ம் தேதி திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில்  விநாயகர் சதூர்த்தியை முன்னிடடு, கர்ம வினைகள் தீரவும், காரியங்கள் சித்தி பெறவும், பிராத்தனைகள் நடைபெறவும் மகாகணபதி ஹோமம், நடைபெற உள்ளது.
பின்னர் ஓரே கல்லில்லான விநாயகர் தன்வந்தரிக்கு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் 23 வகையான இலைகளைக்கொண்டு ஜபத்துடன் அர்ச்சிக்கப்பட உள்ளது.

இலைகளின் பெயர்கள்

முல்லை இலை, கரிசலாங்கண்ணி இலை, வில்வம் இலை, அருகம்புல், இலந்தை இலை, ஊமத்தை இலை, வன்னி இலை, நாயுருவி , கண்டங்கத்தரி, அரளி இலை, எருக்கம் இலை, மருதம் இலை, விஷ்ணுகிராந்தி இலை, மாதுளை இலை, தேவதாரு இலை, மருக்கொழுந்து இலை, அரசம் இலை, ஜாதிமல்லி இலை, தாழம் இலை, அகத்தி இலை, தவனம் இலை, தும்பை இலை, குண்டுமணி இலை ஆகும்.
சிறப்பு கந்தர்வராஜ யாகம்
இதனைத் தொடர்ந்து 17.09.2016 சனிக் கிழமை காலை 10.30 அளவில் தம்பதிகளுக்கு குழந்தைவரம் வேண்டி சந்தான கோபால யாகமும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு வெண்ணை காப்பு அலங்காரமும் சிறப்பு பிரார்த்தனையும்  18.09.2016  ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் 1.00  ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வராஜ யாகம் நடைபெற இருக்கிறது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் திருமணம் நடக்க வேண்டி சங்கல்பம் செய்து இறுதியாக கந்தர்வராஜ யாகம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கந்தர்வராஜ யாகம் செய்வதின் மூலம் அடையும் பலன்கள் ஏராளம். எல்லாவிதமான திருமணத் தடைகளும் நீங்கி விரைவில் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், கணவனுக்கு ஏற்ற மனைவி அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.
மேலும் இதில் பங்கேற்க்கும் நபர்களுக்கு கலசாபிஷேகம்   செய்து அன்னதானமும் வழங்கப்படும்.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்று வருகின்ற இந்த ஹோமங்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியினை தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். 

தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203


No comments:

Post a Comment