Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, August 4, 2016

தன்வந்திரி பீடத்தில் நாளை 05.08.2016 ஆடிவெள்ளியை முன்னிட்டு நவகன்னி பூஜையுடன் கூழ்வார்த்தல் திருவிழா நடைபெறுகிறது

வேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி நாளை காலை ஆடி மாதம்  3 வது வெள்ளிக்கிழமை 11ஆம் ஆண்டு கூழ் வார்க்கும் திருவிழா நண்பகல் 12.00 மணியளவில், நவகன்னிமார்களுக்கும் முனீஸ்வரனுக்கும் பொங்கல் வைத்து படையல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஆடி மாதத்தில் கூழ்ஊற்றுவது வழக்கம்.
உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று வரம் அளித்தார். இச்சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் மேலும், ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள். இதை ஆடிக்கஞ்சி என்பர். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர்-இவற்றை லேசாகத் தட்டி எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துக்கொள்ளவேண்டும். அரிசியைக் கஞ்சியாக வேகவைத்து அதில் இந்தத் துணியில் உள்ள மருந்துகளைப் பிழிய வேண்டும்; அல்லது, கஞ்சிக்குள் அந்தத் துணிப் பொட்டலத்தைச் சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்துவிடவேண்டும். அதன்பிறகே ஆடிக் கஞ்சியைப் பரிமாற உள்ளோம்.
பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள மகிசாசுரமர்த்தினி அம்மனின் அருளை பெற்று நவகன்னியரின் அருளுக்கு பாத்திரமாகும்படி கேட்டுக்காள்கிறோம். மேலும் திருவாடிப்பூரத்தை முன்னிட்டு ஆரோக்ய லட்சுமி தாயார் மரகதாம்பிகை அன்னபூரணி தேவி,குபேர லட்சுமி மற்றும் இதர தெய்வங்களை தரிசித்து மாங்கல்ய தோஷங்கள் நீங்கி வீடு மனை மக்களுடன் வாழ அழைக்கின்றோம் இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும் தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை-632513.
வேலூர் மாவட்டம்
Ph: 04172-230033,9443330203

No comments:

Post a Comment