Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, January 18, 2016

தன்வந்திரி பீடத்தில் வள்ளலார் சிறப்பு வள்ளலார் ஹோமம்
அருளாளர் ராமலிங்க அடிகளார் (வள்ளலார்) வடலூரில் சன்மார்க்கசங்கம், சத்திய தரும சாலை, சத்திய ஞான சபை, சித்தி வளாகம்போன்ற அமைப்புகளை நிறுவி பசிப்பிணி போக்கி, பக்தி நெறியைப்பரப்பி வந்தவர். இவர் 1874-ம் ஆண்டு தைப்பூச நன்னாளில்இறைவனுடன் கலந்தார். ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில்வடலூரில் ஏழு திரைகள் விலகி ஜோதி தரிசனம் நிகழும். ஒவ்வொருதிரைக்கும் ஒவ்வொரு சக்தி என்பது நம்பிக்கை. (கண்ணாடிக்கதவுகளில்) கறுப்புத்திரை என்பது மாயா சக்தி, நீலத்திரை - கிரியாசக்தி,பச்சைத் திரை - பராசக்தி, சிவப்புத் திரை - இச்சா சக்தி, பொன்வண்ணத்திரை - ஞானசக்தி, வெண்மைத் திரை - ஆதிசக்தி, கலப்புத்திரை -சிற்சக்தி!

அருட்பெருஞ்சோதியாகிய இறைவனை அன்று தரிசிக்கிறோம் என்பதுகருத்து. தைப்பூச நாளில் விடியற்காலையில் மேற்கே சந்திரனும்கிழக்கே சூரியனும் காணப்பெறும். அந்த நேரத்தில்தான் ஞான சபையில்அருட்பெருஞ்ஜோதியைக் காட்டியருளினார் அடிகள்!

இத்தனை அற்புதங்கள் நிறைந்த வள்ளலாருக்கென்று தன்வந்திரி பீடத்தில் தனி சன்னதி அமைத்து பூஜைகளும், ஹோமங்களும் செய்து வருகிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். அந்த வகையில் உலக மக்களின் நலன் கருதி வருகிற 24.01.2016 FRIDAY தைபூச நன்னாளை முன்னிட்டும், வள்ளலார் ஜோதியில் கலந்த நன்னாளை முன்னிட்டும் பீடத்தில் அமைந்துள்ள வள்ளலாருக்கு சிறப்பு பூஜையும், வள்ளலார் ஹோமமும் நடைபெற உள்ளது.

வள்ளலார் கொள்கைகளான ஜீவ காருண்யம், மன அமைதி, மனித நேயம், அன்னதானம்,  மது, மாமிசம் உண்ணாமலிருப்பது, ஜாதி, இனம், சமுதாய வேறுபாடின்றி நடப்பது, எக்காரியத்திலும் பொதுநோக்கத்தோடு இருப்பது போன்ற கொள்கைகளை நாமும் பின்பற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இந்த ஹோமம் ஸ்வாமிகள் நடத்த உள்ளார்.

இந்த ஹோமத்தில் பங்கேற்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கப்பெற்று அனைவரிடத்தும் அன்பு செலுத்தும் எண்ணமும் மேலோங்கும். இதனால் வாழ்வில் சகலமும் பெற்று வளமுடன் வாழ வழிவகைச் செய்யும். ஆகவே பக்தர்கள் அனைவரும் வள்ளலார் ஹோமத்திலும், தொடர்ந்து நடைபெறும் சிறப்பு அன்னதானத்திலும் கலந்து கொண்டு பயன்பெற வேணுமாய் ப்ரார்த்திக்கின்றோம்.

தொடர்புக்கு.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலஜாபேட்டை – 632513. வேலூர் மாவட்டம்.
போன் : 04172-230033, 230274

No comments:

Post a Comment