Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, October 22, 2015

தன்வந்திரி பீடத்தின் இரண்டாவது மஹா கும்பாபிஷேக வைபவத்தை முன்னிட்டு பந்தக்கால் பூஜை முகூர்த்தம் அக்டோபர் 22ல் சிறப்பாக நடைபெற்றது…







தன்வந்திரி பீடத்தின் இரண்டாவது மஹா கும்பாபிஷேக வைபவத்தை முன்னிட்டு  பந்தக்கால் பூஜை முகூர்த்தம் அக்டோபர் 22ல் சிறப்பாக நடைபெற்றது…

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டம், கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுராவில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தனது அன்னைக்குக் கொடுத்த சத்தியத்தின் பேரில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் 2வது மஹா கும்பாபிஷேகம் வருகிற 25.11.2015 புதன்கிழமை பௌர்ணமி முதல் 29.11.2015 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது.

இந்த கும்பாபிஷேக வைபவத்தில் ஷண்மத பீடமாக உள்ள தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுடன் 73 திருச்சன்னதிகளில் அமர்ந்து அருள்பாலித்து வரும் தெய்வங்களுக்கும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும் 29.11.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 7.15 மணி முதல் காலை 9.45 மணிக்குள் ஒரே நேரத்தில் குடமுழக்கு விழா நடைபெற உள்ளது. 

இதனை முன்னிட்டு ஆரம்பகால முகூர்த்தமாக 22.10.2015 வியாழக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து 11.00 மணிக்குள்  பந்தக்கால் முகூர்த்தமானது திருவலம், தவத்திரு ஸ்ரீ சாந்தா ஸ்வாமிகள், சங்கரர் குருஜி, இரத்தினகிரி கோவில் மேலாளர் சிவனாரமுது, முருகையா IG, பத்திர பதிவுத்துறை, திருவள்ளூர் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் B.போஸ், துர்கா பவன் உரிமையாளர் S.K.உதயசங்கர், திரைப்பட நடிகர் வையாபுரி, மலேசியா தொழிலதிபர்கள் வடிவேலு, பன்னீர்செல்வம், சுதாகர், சென்னை தொழிலதிபர் பாலமுருகன், கயிலை தங்கராஜ், சென்னை ஸ்கைலிப்ட் ராஜேந்திரன், மாந்தாங்கல் பச்சையப்பன், சென்னை டாக்டர் ரங்கராஜ், ஆடிட்டர் நளினி பத்பநாபன் ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள், ஆன்மிக பக்தர்கள் மற்றும் தன்வந்திரி குடும்பத்தினர்கள் பங்கேற்று கும்பாபிஷேகத்திற்கான பந்தக்கால் விழா இனிதே நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.

மேலும் தொடர்புக்கு…
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம்.  தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
Email : danvantripeedam@gmail.com
www.danvantritemple.org
www.danvantripeedam.blogspot.in

No comments:

Post a Comment