Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, December 17, 2014

வாலாஜா தன்வந்திரி பீடத்தில் டிசம்பர் 21,12,2014 அனுமன் ஜெயந்தி சிறப்பு ஹோமம்


மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன்இவரதுபெருமை ராமாயணத்தில் மட்டுமில்லைபல  புராணங்களிலும் உண்டுஇதற்கு முக்கியகாரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும்சைவத்தில் சிவனின் அம்சமாகவும்இருப்பது  தான்.எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும்பலத்தையும்,தைரியத்தையும்கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே  உண்டு.ஹயக்கிரீவர்சரஸ்வதிதட்சிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்விகேள்விகளில் சிறந்து விளங்கலாம்.  எல்லோரையும் கலங்கச்செய்யும் சனிபகவனையேஒரு முறை இவர் கலங்கச் செய்தார்இதனால் சனி தோஷத்தினால்  பாதிக்கப்பட்டவர்கள்இவரை வழிபடுவது சிறப்புஇவர் அவதரிக்க போவதான செய்தியை வாயுபகவானுக்கு,பரம்பொருள் அறிவித்த ஊர்,  மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூர் ஆகும்இந்த ஊரில்தான் திருவாசகம் தந்த மாணிக்க வாசகர் அவதரித்தார்தமிழ்நாட்டில்  திரும்பியஇடமெல்லாம் விநாயகர் கோயில் இருப்பதை போல்மேற்கு தொடர்ச்சி மலைதொடங்கும் கேரளா முதல் மகாராஷ்டிரம்  வரை ஆஞ்சநேயருக்கு தனி கோயில்கள்அதிகம்பொதுவாக ஆஞ்சநேயர் விஷ்ணு கோயில்களில் தனி சன்னதியிலும்சிவன் கோயில்களில் தூணிலும் அருள்பாலிப்பது வழக்கம்.சொல் ஒன்று இருந்தால் அதற்குஒரு அர்த்தம் இருப்பது போல், "ராமா என  சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர்இருப்பது நிச்சயம்இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும்செந்தூரப்பூச்சும்,வெற்றிலை  மாலையும் நிச்சயம் இடம் பெறும்இவரது சன்னதியிலும் துளசியே பிரதானபிரசாதம்பாரதப்புண்ணிய பூமியில் தொண்டரையே  தெய்வமாக போற்றப்படும்,மேன்மையை ஆஞ்சநேயர் வரலாற்றில் காணலாம்ஆஞ்சநேயர் பெரியவனாக வளர்ந்தபிறகு பெரிய கடலை  தாண்டினார் என்றாலும்சிறியவனாக இருந்த போது பூமியிலிருந்துஒரே தாவலில் சூரியனை எட்டிப்பிடித்தவர்,. எனவே இவர் தனது  பக்தர்களுக்குஅனைத்தையும் சாதிக்க இயலும் என்ற எண்ணத்தை அருளுகிறார்.   அனுமன் அவதாரநாளில்  தன்வந்திரி பீடத்தில் உள்ள  சஞ்சீவிஆஞ்சநேயரு க்கு  சிறப்பு யாகம்நடைபெறஉள்ளது அத்துடன் அனுமன் ஜெயந்தியன்று அவரது புகழ்பரப்பும் "அனுமன்சாலீஸா  பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும்என்பது நம்பிக்கை.அனுமன்ராமனுக்கு தூதனாக இருந்தாலும்இவர் சிவனின்  அம்சமாக தோன்றியவர்.

ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர்அதில் மகாவிஷ்ணுராமனாகவும்மகாலட்சுமி சீதாதேவியாகவும்ஆதிசேஷன்  லட்சுமணனாகவும்பாத்திரமேற்றனர்இந்த ராமாயணத்தில் பங்குபெற எல்லாம் வல்ல சிவனுக்கும் ஆசைஏற்பட்டதுஅத்துடன்  மகாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணமும்இருந்து வந்ததுஇதனால் சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து  ராமாயணத்தில்ராமருக்கு சேவை செய்தார் என்பது முக்கியமான செய்தியாகும்ஆஞ்சநேயரைவழிபட்டால் சிவனையும் பெருமாளையும்  சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.ஆஞ்சநேயனின் ஜெயந்திஜெயந்திக்கெல்லாம் ஜெயந்திஅந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும்நினைத்த காரியம்கைகூடும்துன்பம் விலகும்குடும்பத்தில் இன்பம்  பெருகும்ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு,  வடைமாலை சாத்திவெற்றிலை மாலை அணிவித்து,வெண்ணெய் சாத்தி,  ஆராதிக்க வேண்டும். ,இந்த தகவலை ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்தெரிவித்தார்,

No comments:

Post a Comment