Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, August 8, 2022

AADI POORAM SPECIAL ALANKARAM TO SRI MAHISHASURA MARDHINI WITH 21000 OF BANGLES

                         வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஆடிப்பூரத்தை               முன்னிட்டு 9 அடி உயரமுள்ள ஸ்ரீ மகிஷாசுர மர்த்தினி          தேவிக்கு 21000 வளையல்கள் கொண்டு சிறப்பு அலங்காரம்

 


வாலாஜாபேட்டை  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக மக்களின் நலன் வேண்டியும் அனைத்து மக்களும் ஆடி மாதம் அம்மனின் அருள் பெற்று சகல சௌபாக்யங்களும் பெற வேண்டியும் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் .ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் ஆடி 16ம் நாள் 01.08.2022 திங்கள் கிழமை ஆடிப்பூரத்தினை முன்னிட்டு 9 அடி உயரமும் பதினெட்டு திருக்கரங்களுடன் சிரித்த முகத்துடன் எழுந்தருளி அருள்பாலிக்கும் அன்னை ஸ்ரீ மகிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு துர்கா ஹோமத்துடன் பஞ்ச திரவிய அபிஷேகம் நடைபெற்று 21000 வளையல்களைக் கொண்டு விஷேச அலங்காரம் செய்து திருவிளக்கு பூஜையுடன் குங்கும அர்ச்சனையும் நாக சதுர்த்தியை முன்னிட்டு ராகு-கேது ஹோமமும் நாகராஜர் வழிபாடும் நடைபெற்றது.












 

108 PONGAL FESTIVAL / AADI FESTIVAL 2022 @ SRI DANVANTRI AROGYA PEEDAM

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 05.08.2022 ஆடி 3ம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு 108 பொங்கலிடுதல் வைபவம் மற்றும் ஸ்ரீ நவகன்னிகைகள், ஸ்ரீ சப்த கன்னிகளுக்கு விஷேச பூஜையும் ஸ்ரீ மகிஷாசுர மர்த்தினி அம்மனுக்கு கூழ்வார்த்தல் வைபவமும் நடைபெற்றது.






 













Tuesday, July 12, 2022

SRI DANVANTRI KODI JABA YAGAM FROM 30.06.2022 TO 21.10.2022 @ SRI DANVANTRI AROGYA PEEDAM

                                           

  


                    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 116 நாட்கள் 

               ஸ்ரீ தன்வந்திரி கோடி ஜப மஹா  யாகம் தொடங்கியது.

மக்கள் பிணி தீர்க்கும் மருத்துவமனையாகத் திகழும் வாலாஜாபேட்டை                 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் குடும்ப க்ஷேமம் கருதியும், உடல் நலம் கருதியும், கொரோனா போன்ற கொடிய நோய்களின் அச்சுறுத்தல் இல்லாமல் இருக்கவும் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி ஆனி 16 (30.06.2022) வியாழக்கிழமை முதல் வருகிற ஐப்பசி 4 (21.10.2022) வெள்ளிக்கிழமை வரை  கோடி ஜப தன்வந்திரி மஹா  யாகம் ஆடி அமாவாசை, ஆஷாட நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி சனிக்கிழமை, சாரதா நவராத்திரி, ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 62 வது ஜெயந்தி மற்றும் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தியை முன்னிட்டு 116 நாட்கள் யாகத் திருவிழாவாக நடைபெறவுள்ளது.

இதன் முதல் நாளாக நேற்று 30.06.2022 வியாழக்கிழமை காலை கோ பூஜை, ஆரம்ப கால யாகசாலை பூஜை, மஹா கணபதி ஹோமம் மற்றும் விநாயகர் தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக காஞ்சிபுரம் ராஜ குபேர ஆலய பீடாதிபதி, அம்பத்தூர் திரு.ராமசாமி-சசிகலா குடும்பத்தினர், தொழிலதிபர் திரு.சரவணன் ஆற்காடு, ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. மூர்த்தி அவர்கள் மற்றும் டாக்டர். ரங்கராஜன், சென்னை, மற்றும் திரு. சீனிவாசன், பாண்டிச்சேரி ஆகியோர் யாகத்தில் பங்குபெற்றனர். மேலும் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற யாகத்தில் ஆஸ்திரேலியா நாட்டில் பணிபுரியும் மருத்துவர் திரு. டாக்டர். அழகர் சாமி குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு சுவாமிகளிடம் ஆசி பெற்று சென்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





Wednesday, June 8, 2022

PAVITHRA UTHSAVAM TO ALL 88 DEITIES @ SRI DANVANTRI AROGYA PEEDAM

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ ஆரோக்கிய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு பவித்ர உற்சவ வைபவம் 26.05.2022 அன்று முதல் 28.05.2022 வரை மஹோத்சவமாக நடைபெற்றது. 

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி 26.05.2022 வியாழக்கிழமை முதல் 28.05.2022 சனிக்கிழமை வரை ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு பவித்ர உற்சவ மஹோத்சவம் நடைபெற்றது.  

 பவித்ர உற்சவத்தின் சிறப்பு:

 ஆகம சாஸ்திர விதிகளுக்குட்பட்டு பகவதாலயங்களில் அனுதினம் செய்யப்பட வேண்டிய நித்திய நைமித்திய காம்ய கர்மங்களில் ஏற்படும் குறைபாடுகள், மற்றும் இதர தோஷங்களால் உண்டாகும் பகவத் அபசாரங்களிலிருந்து நிவர்த்தி பெறவும், ஷேத்திரத்தின் புனித  தன்மையை மேம்படுத்தவும், பெருமாளுக்கு ஸாந்நித்யத்தைக் கூட்டவும் பவித்ரோத்ஸவம் எனும் வைதீக ஹோமம் (வேள்வி) விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வைபத்தின் மூலம் நவக்ரஹ, பூத ப்ரேத பிசாசுகளால் உண்டாகும் துக்கங்கள், சத்ரு பயம் முதலான அநிஷ்டங்கள் விலகி ஆயுள், ஆரோக்கியம், புகழ். செல்வம், செல்வாக்கு, ஞானம் போன்ற நற்பலன்கள் கிடைப்பதற்காக நான்கு வேதங்களின் சாரமாக தொகுக்கப்பட்ட 1336 மந்திரங்களால் ஹோமம் செய்யப்படுகிறது. இந்த ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம்  கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பாக்கியம் கிடைக்கும். மேலும் 32 விதமான தோஷங்கள் நிவர்த்திக்கப்படும். இந்த வைபவம் 28.05.2022 அன்று மாலை 8.00 மணியளவில் பூர்த்தியடைந்தது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்..---






 

Thursday, May 26, 2022

PAVITHRA UTHSAVAM @ SRI DANVANTRI AROGYA PEEDAM ON 26.05.2022 TILL 28.05.2022

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பவித்ர உற்சவ வைபவம்  வருகிற  26.05.2022 முதல் 28.05.2022 வரை நடைபெறுகிறது.

THANKS TO SAKTHI ONLINE

https://www.shakthionline.com/news/must-read/8759-dhanvanthri-peedam-pavithra-urchava-homam.html



இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி வருகிற 26.05.2022 வியாழக்கிழமை முதல் 28.05.2022 சனிக்கிழமை வரை ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு பவித்ர உற்சவம் மஹோத்சவமாக நடைபெறவுள்ளது.  

பவித்ர உற்சவத்தின் சிறப்பு:

ஆகம சாஸ்திர விதிகளுக்குட்பட்டு பகவதாலயங்களில் அனுதினம் செய்யப்பட வேண்டிய நித்திய நைமித்திய காம்ய. கர்மங்களில் ஏற்படும் குறைபாடுகள், மற்றும் இதர தோஷங்களால் உண்டாகும் பகவத் அபசாரங்களிலிருந்து நிவர்த்தி பெறவும், ஷேத்திரத்தின் புனித  தன்மையை மேம்படுத்தவும், பெருமாளுக்கு ஸாந்நித்யத்தைக் கூட்டவும் பவித்ரோத்ஸவம் எனும் வைதீக ஹோமம் (வேள்வி) விதிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த ஹோமத்தின் மூலம் நவக்ரஹ, பூத ப்ரேத பிசாசுகளால் உண்டாகும் துக்கங்கள், சத்ரு பயம் முதலான அநிஷ்டங்கள்  விலகி ஆயுள், ஆரோக்கியம், புகழ். செல்வம், செல்வாக்கு, ஞானம் போன்ற நற்பலன்கள் கிடைக்க நான்கு வேதங்களில் சாரமாக தொகுக்கப்பட்ட 1336 மந்திரங்களால் ஹோமம் செய்யப்படவுள்ளது. இந்த ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம்  கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பாக்கியம் கிடைக்கும். மேலும் 32 விதமான தோஷங்கள் நிவர்த்திக்கப்படும் என்பது திண்ணம். அந்த விசேஷமான பவித்ரோத்சவம் ஆகமங்களில் விதித்துள்ளபடி வாலாஜாபேட்டையில் ஆட்சி புரிகின்ற ஸ்ரீ ஆரோக்கிய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கும்,   ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ பால ரங்கநாதர், ஸ்ரீ பட்டாபிஷேக ராமர், ஸ்ரீ சத்யநாராயணர், ஸ்ரீ கூர்மலக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ நவநீத கிருஷ்ணர், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ கார்த்தவீர்யாஜுனர், ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர்,  ஸ்ரீ செந்தூர ஆஞ்சநேயர், ஸ்ரீ லக்ஷ்மி வராஹர், 21 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடர், கருட ஆழ்வார் மற்றும் இதர பரிவார மூர்த்திகளுக்கும் நிகழும் சுப கிருது வருடம், வைகாசி மாதம் 12ந் தேதி (26.05.2022) வியாழக்கிழமை காலை துவங்கி வைகாசி மாதம் 14ந் தேதி (28.05.2022) சனிக்கிழமை வரை தினமும் காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை உபய வேத கிரந்த பாராயணங்களுடன் பூர்ணாஹூதி, சாற்று மறை, தீர்த்த பிரசாத விநியோககங்களுடன் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இவ்வைபவத்தை முன்னிட்டு நடைபெறும் கோ பூஜை, வேத பாராயணம், விஷேச திருமஞ்சனம், சகல தேவதா ஹோமங்கள், மஹா பூர்ணாஹூதி, மஹா தீபாராதனை மற்றும் ஸ்ரீ தன்வந்திரி உற்சவர் - தாயார் ரத புறப்பாடு நிகழ்ச்சிகளில் பக்த கோடிகள் பங்கு கொண்டு    யக்ஞஸ்ரீ டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன்    ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் அனுக்கிரகம் மற்றும் பரிவார மூர்த்திகளின் அருள் பெறவும் அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி நிரல்:

வைகாசி 12ம் தேதி 26.05.2022 வியாழக்கிழமை 
காலை 9.00 மணிக்கு புண்யாஹவாசனம், திரவிய பூஜை, திருமஞ்சனம், வாஸ்து ஹோமம்,                  வேத சாற்று முறை. 
மாலை 5.30 மணிக்கு பகவத் பிரார்த்தனை, எஜமான சங்கல்பம், புண்யாஹவாசனம், ம்ருத்சங்க்ரஹணம், அக்னி  பிரதிஷ்டை, அங்குரார்பணம், பவித்ர பூஜை, கலச ஆவாஹனம், சயநாதிவாசம், ஹெளத்ரம், ரக்ஷாபந்தனம், பிரதான ஹோமம், பூர்ணாஹுதி, சாற்றுமுறை, பிரசாத விநியோகம்

வைகாசி 13ம் தேதி 27.5.2022 வெள்ளிக்கிழமை 
காலை 9.00 மணிக்கு சுப்ரபாதம், புண்யாஹவாசனம்  பவித்ர ஜபம், அக்னி பிரதிஷ்டை, கால சாந்தி, பவித்ரம் சாற்றுதல், பிரதான ஹோமம், மஹா சாந்தி ஹோமம், பூர்ணாஹுதி, ஆராதனம், பிரசாத விநியோகம். மாலை 5.30 மணிக்கு புண்யாஹவாசனம், அக்னி ஆராதனம், பிரதான மூல மந்திர ஹோமம், சாந்தி ஹோமம், மஹா  சாந்தி பூர்ணாஹுதி, ஆராதனம், பிரசாத விநியோகம். வைகாசி 14ம் தேதி 28.05.2022 சனிக்கிழமை காலை புண்யாஹவாசனம், அக்னி ஆராதனம், ப்ரதான ஹோமம், அந்த ஹோமம், யாத்ரா தானம், சக்ர ஸ்தானம், கலச புறப்பாடு, ஆவாஹனம், பவித்ர விசர்ஜனம், சதுர் வேத  பூஜை, ப்ரம்ம கோஷம், அக்ஷதை ஆசீர்வாதம், தீர்த்த பிரசாத விநியோகம்.

பக்தர்கள் அனைவரும் இவ்வைபவத்தில் பங்கேற்று சிறப்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.