Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, May 26, 2022

PAVITHRA UTHSAVAM @ SRI DANVANTRI AROGYA PEEDAM ON 26.05.2022 TILL 28.05.2022

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பவித்ர உற்சவ வைபவம்  வருகிற  26.05.2022 முதல் 28.05.2022 வரை நடைபெறுகிறது.

THANKS TO SAKTHI ONLINE

https://www.shakthionline.com/news/must-read/8759-dhanvanthri-peedam-pavithra-urchava-homam.html



இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி வருகிற 26.05.2022 வியாழக்கிழமை முதல் 28.05.2022 சனிக்கிழமை வரை ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு பவித்ர உற்சவம் மஹோத்சவமாக நடைபெறவுள்ளது.  

பவித்ர உற்சவத்தின் சிறப்பு:

ஆகம சாஸ்திர விதிகளுக்குட்பட்டு பகவதாலயங்களில் அனுதினம் செய்யப்பட வேண்டிய நித்திய நைமித்திய காம்ய. கர்மங்களில் ஏற்படும் குறைபாடுகள், மற்றும் இதர தோஷங்களால் உண்டாகும் பகவத் அபசாரங்களிலிருந்து நிவர்த்தி பெறவும், ஷேத்திரத்தின் புனித  தன்மையை மேம்படுத்தவும், பெருமாளுக்கு ஸாந்நித்யத்தைக் கூட்டவும் பவித்ரோத்ஸவம் எனும் வைதீக ஹோமம் (வேள்வி) விதிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த ஹோமத்தின் மூலம் நவக்ரஹ, பூத ப்ரேத பிசாசுகளால் உண்டாகும் துக்கங்கள், சத்ரு பயம் முதலான அநிஷ்டங்கள்  விலகி ஆயுள், ஆரோக்கியம், புகழ். செல்வம், செல்வாக்கு, ஞானம் போன்ற நற்பலன்கள் கிடைக்க நான்கு வேதங்களில் சாரமாக தொகுக்கப்பட்ட 1336 மந்திரங்களால் ஹோமம் செய்யப்படவுள்ளது. இந்த ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம்  கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பாக்கியம் கிடைக்கும். மேலும் 32 விதமான தோஷங்கள் நிவர்த்திக்கப்படும் என்பது திண்ணம். அந்த விசேஷமான பவித்ரோத்சவம் ஆகமங்களில் விதித்துள்ளபடி வாலாஜாபேட்டையில் ஆட்சி புரிகின்ற ஸ்ரீ ஆரோக்கிய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கும்,   ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ பால ரங்கநாதர், ஸ்ரீ பட்டாபிஷேக ராமர், ஸ்ரீ சத்யநாராயணர், ஸ்ரீ கூர்மலக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ நவநீத கிருஷ்ணர், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ கார்த்தவீர்யாஜுனர், ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர்,  ஸ்ரீ செந்தூர ஆஞ்சநேயர், ஸ்ரீ லக்ஷ்மி வராஹர், 21 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடர், கருட ஆழ்வார் மற்றும் இதர பரிவார மூர்த்திகளுக்கும் நிகழும் சுப கிருது வருடம், வைகாசி மாதம் 12ந் தேதி (26.05.2022) வியாழக்கிழமை காலை துவங்கி வைகாசி மாதம் 14ந் தேதி (28.05.2022) சனிக்கிழமை வரை தினமும் காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை உபய வேத கிரந்த பாராயணங்களுடன் பூர்ணாஹூதி, சாற்று மறை, தீர்த்த பிரசாத விநியோககங்களுடன் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இவ்வைபவத்தை முன்னிட்டு நடைபெறும் கோ பூஜை, வேத பாராயணம், விஷேச திருமஞ்சனம், சகல தேவதா ஹோமங்கள், மஹா பூர்ணாஹூதி, மஹா தீபாராதனை மற்றும் ஸ்ரீ தன்வந்திரி உற்சவர் - தாயார் ரத புறப்பாடு நிகழ்ச்சிகளில் பக்த கோடிகள் பங்கு கொண்டு    யக்ஞஸ்ரீ டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன்    ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் அனுக்கிரகம் மற்றும் பரிவார மூர்த்திகளின் அருள் பெறவும் அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி நிரல்:

வைகாசி 12ம் தேதி 26.05.2022 வியாழக்கிழமை 
காலை 9.00 மணிக்கு புண்யாஹவாசனம், திரவிய பூஜை, திருமஞ்சனம், வாஸ்து ஹோமம்,                  வேத சாற்று முறை. 
மாலை 5.30 மணிக்கு பகவத் பிரார்த்தனை, எஜமான சங்கல்பம், புண்யாஹவாசனம், ம்ருத்சங்க்ரஹணம், அக்னி  பிரதிஷ்டை, அங்குரார்பணம், பவித்ர பூஜை, கலச ஆவாஹனம், சயநாதிவாசம், ஹெளத்ரம், ரக்ஷாபந்தனம், பிரதான ஹோமம், பூர்ணாஹுதி, சாற்றுமுறை, பிரசாத விநியோகம்

வைகாசி 13ம் தேதி 27.5.2022 வெள்ளிக்கிழமை 
காலை 9.00 மணிக்கு சுப்ரபாதம், புண்யாஹவாசனம்  பவித்ர ஜபம், அக்னி பிரதிஷ்டை, கால சாந்தி, பவித்ரம் சாற்றுதல், பிரதான ஹோமம், மஹா சாந்தி ஹோமம், பூர்ணாஹுதி, ஆராதனம், பிரசாத விநியோகம். மாலை 5.30 மணிக்கு புண்யாஹவாசனம், அக்னி ஆராதனம், பிரதான மூல மந்திர ஹோமம், சாந்தி ஹோமம், மஹா  சாந்தி பூர்ணாஹுதி, ஆராதனம், பிரசாத விநியோகம். வைகாசி 14ம் தேதி 28.05.2022 சனிக்கிழமை காலை புண்யாஹவாசனம், அக்னி ஆராதனம், ப்ரதான ஹோமம், அந்த ஹோமம், யாத்ரா தானம், சக்ர ஸ்தானம், கலச புறப்பாடு, ஆவாஹனம், பவித்ர விசர்ஜனம், சதுர் வேத  பூஜை, ப்ரம்ம கோஷம், அக்ஷதை ஆசீர்வாதம், தீர்த்த பிரசாத விநியோகம்.

பக்தர்கள் அனைவரும் இவ்வைபவத்தில் பங்கேற்று சிறப்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Saturday, May 21, 2022

CRORE OF JABA HOMAM TO SRI DANVANTRI FROM 08.09.2022 TO 21.10.2022

 


LAKH OF DASA SAHASRA MOOLAMANTRA JAPA HOMAM TO SRI LAKSHMI NARASIMHAR HOMAM

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ஒரு லக்ஷ்ச தச சஹஸ்ர மூலமந்திர ஜப ஹோமம் 14.05.2022 அன்று காலை 10.00 மணி முதல் 15.05.2022 மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது. 











Monday, May 2, 2022

SHYAMALA DEVI JAYANTHI CELEBRATION AND ONE LAKH COINS ABISHEGAM TO SRI LAKSHMI KUBERAR ON AKSHAYA TRITHI DAY – 3 MAY 2022 AT SRI DANVANTRI AROGYA PEEDAM

                                  DEVI RAJAMATHANKI @ SHYAMALA DEVI JAYANTHI CELEBRATION AND 

                                            ONE LAKH COINS ABISHEGAM TO SRI LAKSHMI KUBERAR


ON AKSHAYA TRITHI DAY – 3 MAY 2022

Yagnasri Dr Sri Muralidhara Swamigal, Founder and Managing Trustee of Sri Danvantri Arogya Peedam, Walajapet, is organising SRI DEVI RAJAMATHANKI @ SHYAMALA DEVI JAYANTHI on the auspicious day of AKSHAYA TRITHI DAY on Tuesday the 3rd May 2022 at Sri Danvantri Arogya Peedam, Walajapet, Ranipet District, Tamil Nadu.

Devi Rajamathanki is the Three eyed form of Devi Shakthi.  Goddess Matanki demonstrates as one of the powerful Shakthi, a symbol of Love and Affection.  Performing Rajamathanki Homam blesses the person with Power, Status, Knowledge, Speech, Wealth and Happiness.

On this Special day ONE LAKH Coin Abishegam to Sri Lakshmi Kuberar.  Also performing Kubera Lakshmi Homam and Rajamathanki Yagam on the day of  Goddess Rajamathanki Jayanthi, and Akshaya Trithi Day on  Wednesday, 3rd May 2022. The abishegam pereformed Coins will be given as Prasadam to the Devotees who are visiting the Sri Danvantri Peedam, on this Day.

Devotees can avail this great opportunity of participating in the Special Poojas and Homams and also collect the Lakshmi Kubera Coins along with the blessings of Sri Danvantri Muralidhara Swamigal.

BENEFITS OF RAJAMATHANKI HOMAM:

Will get the Blessings of Sri Mahalakshmi and Sri Mahavishnu.

Mahalakshmi will shower her blessings on you with Wealth, Prosperity, Supreme Wisdom and overall well being.

Your Financial Situation will improve considerably. You will be associated and get attracted by the best People who are very rich and most successful, 

which will help to fulfil your Dreams and Goals.

It also helps to overcome any Government related problems or obstacles.  Also blesses and protects one’s family from misery and money related sorrows, 

thereby giving a high fortune in Life.  The person gains Proficiency in Music, Knowledge and Wisdom.

BENEFITS OF LAKSHMI KUBERA HOMAM:

Acquires Prosperity, Wealth and improves financial status and also gives great relief from Debts. Ashtabuja Rajamadhanki is already in Karikola Yatra since 25th April 2022 in various places of Chennai, Vandavasi, Tindivanam, Puduchery, Iyyarmalai, Karur, Thiruchengodu, Erode, Salem, Dharmapuri, Palakkod, Hosur, Bengaluru, Krishnagiri, etc. and is going to be Pradishta on Friday the 3rd June 2022 at Sri Danvantri Arogya Peedam, Walajapet, Ranipet District.


For more details

Ct 94433 30203.

Saturday, April 30, 2022

ஸ்ரீ ராஜமாதங்கி ஜெயந்தி மற்றும் அட்சய திருதியில் ஒரு லட்சம் காசுகள் கொண்டு சிறப்பு பூஜை 03.05.2022

                             வாலாஜா தன்வந்திரி பீடத்தில் அட்சய திருதியில் 

                                   ஒரு லட்சம் காசுகள் கொண்டு சிறப்பு பூஜை



இராணிப்பேட்டைடை மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 3.5.2022, செவ்வாய்கிழமை ஸ்ரீ ராஜமாதங்கி ஜெயந்தி, அன்னபூரணி ஜெயந்தி மற்றும் அட்சய திருதியை முன்னிட்டு சோளிங்கர் சாலையில் கிழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி குபேரன் கோவிலில் ஒரு லட்சம் காசுகள், வில்வ இலைகள், தாமரை மலர்கள், தாழம்பூ குங்குமம், மஞ்சள் கிழங்கு, தாமரை மணிகள் கொண்டு சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீ ராஜமாதங்கி ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் ஹோமம், அன்னபூரணி ஹோமம், அஷ்ட லஷ்மி ஹோமம், சாம்ராஜ்ய லஷ்மி ஹோமம், மஹா லஷ்மி ஹோமத்துடன் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமம் நடைபெறுகிறது

அன்று காலை 7:00 மணிக்கு கோ பூஜை, 7.30 மணிக்கு புண்ணியாவாசனம், யாகசாலை பூஜைகள், கும்ப அலங்காரம், கும்ப பூஜை நடைபெற்று மஹா கணபதி ஹோமத்துடன் சிறப்பு ஹோமங்கள் நோய்கள் நீங்கவும், ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி அருள் பெறவும், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறவும் 11 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், 12.00 மணிக்கு லக்ஷ்மி குபேரருக்கு மஹா திருமஞ்சனம் சிறப்பு அலங்கார மகா தீபாராதனை நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து லக்ஷ்மி குபேரருக்கு ஒரு லட்சம் காசுகள், வில்வ இலைகள், தாமரை மலர்கள், தாழம்பூ குங்குமம், மஞ்சள் கிழங்கு, தாமரை மணிகள் கொண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. இந்த நாளில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ராஜ தேவியாக விளங்கும் சாம்ராஜ்ய லக்ஷ்மியை வணங்கினால், வறுமை நீங்கும், குறையாத செல்வம் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

ஸ்ரீ லட்சுமி குபேரர் திருக்கோவில்

அழகாபுரி, குபேரபுரி, ஐஸ்வர்யபுரி, ஆரோக்கியபுரி சம்பத்துபுரி, ஸ்வர்ணபுரி, சௌபாக்யபுரி என்று பல்வேறு வகையான பெயர்களில் பக்தர்கள் அழைத்து மகிழும் தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி குபேர கோவில் இது ஒரு ஆரோக்ய ஐஸ்வர்ய பீடமாகும். செல்வத்திற்காக ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவரையும், குபேர சம்பத்திற்காக ஸ்ரீ லட்சுமி குபேரரையும் பிரதிஷ்டை செய்து சீரான செல்வம் நமக்கு வந்தடையவும், இழந்த செல்வத்தை மீட்கவும் தினசரி பூஜைகளும் யாகங்களும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நடைபெற்று வருகிறது. திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க செல்லும் அனைத்து பக்தர்களும், திருப்பதி செல்லும் முன் வாலாஜாபேட்டை - திருப்பதி மார்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஆட்சிபுரிகின்ற லட்சுமி குபேரரை நீங்கள் வழிபட்டு திருப்பதி செல்வது மிகவும் மேலான பலன்களை தரும். இந்த ஹோமங்கள் நம்மில் சிலர் செல்வம் இருந்தும் மனதில் நிம்மதியின்றி இருபவருக்கு நிம்மதி கிடைக்கவும், போதிய செல்வம் கிடைத்து வாழ்வில், முன்னேறவும், போராட்டமான வாழ்க்கையை மாற்றி ஆனந்தம் பெறவும், பணத்தினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், மனதில் உள்ள கஷ்டங்கள் நீங்கவும், பணவளக்கலையை அறிந்து மிகுந்த செல்வம் பெற்று வளமோடு வாழவும் நடைபெறுகிறது. இந்த யாகத்தின் மூலம் பண வரவு அதிகரிக்கும். துணைவிக்கு தங்க ஆபரணங்களை வாங்கி வழங்குவீர்கள். மேலும், குழந்தை வரம் கிடைப்பதோடு, இல்லறத்தில் நிலவி வந்த சங்கடங்கள் விலகும். யாகத்தில் பங்கேற்று இங்குள்ள தன்வந்திரி பகவானை தரிசனம் செய்தால் மன நோய்கள், உடல் நோய்கள் நீங்கும்.

குபேரன் என்றாலே நமக்கு நினைவில் வருவது தங்கமும், வைடூரியமும், பொற்காசுகளும் நிறைந்த திருப்பதி ஏழுமலையானுக்கே கடன் கொடுத்த கடவுள் என்பதே. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது நம்பிக்கை. குபேர யந்திரம், குபேர யாகம் போன்றவை நம்மை செல்வத்தின் அதிபதியாக்கும் என நம்பப்படுகிறது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஹோமங்கள் மக்கள் நன்மை பெறும் விதத்தில் ஒரு கோடி தாமரை விதைகளை கொண்டு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யாகமும் செல்வ அருள் பெறவும், வழக்கில் வெற்றி பெறவும், பயங்கள் அகலவும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்படவும், வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்க ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் யாகம் செவ்வரளி மற்றும் தாமரை மலர்கள் கொண்டு நடைபெறும். இந்த ஹோமத்தில் பங்கேற்று, குபேர யந்திரம், குபேர காசு, குபேர ரக்ஷை, குபேர குங்குமம்,அட்சதை பிரசாதங்கள் நேரிலோ அல்லது கூரியர் மூலம் பெறலாம். தொடர்புக்கு 94433 30203.


Monday, April 25, 2022

Thanks to Right Time Right News

இங்கு சென்றால்
உடல் நோய்,
மன நோய்
குணமாகும்


இன்றைய வாழ்க்கையில், பணம், பொருள், வீடு, கார் இருந்தால் போதாது. அதற்கு  மேலாக உடல் ஆரோக்கியம் இருந்தால் தான் இவற்றையெல்லாம் அனுபவிக்க முடியும். உடல் ஆரோக்கியம் பெறவும்,  மன அமைதி பெற்று வாழவும் வழிபட வேண்டிய கடவுள் தன்வந்திரி பகவான்.

தன்வந்திரி பகவானுக்கு தனிக்கோவில் வேலுார் மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே, கீழ்புதுப்பேட்டையில், உள்ளது. கோவிலின் பெயர் ஸ்ரீதன்வந்திரி 
ஆரோக்கிய பீடம். இதை அமைத்தவர் ஸ்ரீமுரளிதர சுவாமிகள். இங்கு அழகிய திருக்கோலத்தில் தன்வந்திரி பகவன் காட்சி அளிக்கின்றார்.  75 க்கும் மேற்பட்ட சுவாமி சன்னதிகள், 468 சித்தர்கள் சன்னதி  உள்ளது.

மூலவர்– தன்வந்திரி பகவான்
தாயார்– ஆரோக்கிய லட்சுமி
உற்சவர்– ஸ்ரீவைத்ய லட்சுமி ஸமேத வைத்தியராஜன்
ஸ்தல விருட்சம்– புன்னை மரம்
தீர்த்தம்–வேகவதி நதி
பிரசாதம்– சுக்கு, வெல்லம், தைலம்

நேர்த்திக்கடன்– சுக்கு, வெல்லம், நல்லெண்ணை, பச்சரிசி, வெண்ணெய், மூலிகை, தேன், நெய் போன்ற பொருட்களினால் தன்வந்திரி பகவானுக்கு அபிேஷகம், யாகம் செய்யலாம்

தல புராணம்– தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை  கடைந்த போது, வந்த ஜோதியில் பிறந்தவர் தான் தன்வந்திரி பகவான். கையில்  சங்கு, சக்கரம், அட்டைச்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றுடன் தெய்வீக மருத்துவராக காட்சி தந்தவர்.  மனிதர்களுக்கு அவரவர் கர்ம வினைப்படிதான் நோய்கள் வந்து தீரும். இதில் இருந்து நம்மை காக்கும் ஒரே கடவுள் தன்வந்திரி பகவான் தான். இவரை தரிசித்தால் நோய் நொடிகள் விலகி ஆரோக்கியம், ஐஸ்வர்யம், ஆனந்தம் கிடைக்கும்.

பீடத்தில் உள்ள கோவில்கள்: குபேர லட்சுமி, கணபதி,  பால முருகன்,  சூரியன், சந்திரன், ரமணர், புத்தர், குருநானக், மகாவீர், சீரடி பாபா என 75 க்கும் மேற்பட்ட சன்னதிகள்
உள்ளது.

தரிசிக்கும் முறை– ஆண்கள் சட்டை, பனியன், லுங்கி, தொப்பி, தலைப்பாகை அணியாமல் வர வேண்டும்.

விருது–  சுற்றுச் சூழலுக்காக ஐஎஸ்ஓ 14001– 2004 ம் ஆண்டும், நோய்கள் குணப்படுத்துவதற்காக ஐஎஸ்ஓ 9001– 2008 ம் ஆண்டும் வழங்கப்பட்டது.

சாதனை– 500 க்கும் மேற்பட்ட சண்டி யாகம், சூலினி துர்கா யாகம், 1, 32, 000 மோதகங்களுடன் வாஞ்சா கல் பலதா கணபதி யாகம், 74 குண்டங்களில் 74 பைரவர் ேஹாமம், 6, 000 கிலோ சிகப்பு மிளகாய் வற்றலுடன் மஹா ப்ரத்யங்கிரா தேவி யாகம், 10 ஆயிரம் மாதுளை பழங்களுடன் மஹா காளி யாகம், 365 நாட்களும் 365 ேஹாமங்கள், 15 ஆயிரம் வாழப்பழங்களுடன் மஹா ஆஞ்சநோய ேஹாமம் என நுாற்றுக்கானக்காக ேஹாமம், யாகம் நடந்துள்ளது.

சிறப்பு நிகழ்ச்சி–  நவ 28 மகாமந்திர ப்ரதிஷ்டா தினம், நவ 28 முதல் டிச 13 வரை மூலவர் தன்வந்திரிக்கு தைலாபிேஷகம், டிச 14 சுமங்கலி பூஜை, டிச 15 வருஷாபிேஷகம், மே 1 உலக தொழலாளர் நல வேள்வி, ஆக 15 பாரத மாதா பூஜை,
சித்ரா பெளர்ணமியில் 468 சித்தர்களுக்கும் 468 குண்டங்களில் சித்தர்கள் ேஹாமம், ஜன 26 உலக ஜோதிடர் குடும்ப நல வேள்வி

மாதாந்திர நிவாரண பூஜைகள்– அன்னபூரணிக்கு படையல், சாந்தி ேஹாமம், சந்தான கோபால யாகம், கர்தர்வராஜ ேஹாமம், சுயம் வர கலா பார்வதி ேஹாமம், வாஸ்து யாகம்,
வாராந்திர நிவாரண பூஜைகள்

பீடத்தின் பிரசாதம்– அமிர்த கலச தீர்த்தம்,  மூலிகை ரக்சை, தன்வந்திரி யந்திரம், மூலிகை பஸ்பம், ேஹாம காசு, மந்திர ரக்சை, மாங்கல்ய சரடு, தேன், நெய், தைலம்,  தன்வந்திரி ஜப தீர்த்தம், சுக்கு, வெல்லம்

அருள்– பல்வேறு பிரச்சனைகள் தீர, நோய்கள் விலக தன்வந்திரி ஆரோக்கிய பீடத்திற்கு வந்து ேஹாமம், யாங்களில் பங்கேற்று பலன் பெறலாம்.

எப்படி செல்வது– சாலை வழியாக சென்னை– பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 110 வது கி.மீ.,  வாலாஜாபேட்டை பஸ் ஸ்டாண்டுக்கு வந்து அங்கிருந்து சோளிங்கர் செல்லும் வழியில் வரலாம்.
திருவண்ணாமலையில் இருந்து 100, வேலுாரில் இருந்து 30 கி.மீ., துாரத்தில் உள்ளது.
ரயில் வழியாக, சென்னையில் இருந்து பெங்களூர் மற்றும் கோவை மார்க்கத்தில் செல்லும் ரயில்களில் ஏறி,  வாலாஜா சந்திப்பு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து கார், ஆட்டோவில் வரலாம்.

திறந்திருக்கும் நேரம்– தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 வரை.

ஆரத்தி நேரம்– தினமும் காலை 10 மணி, மாலை 6 மணிக்கு கூட்டு பிராத்தனை மற்றும் மங்கள ஆரத்தி. ஞயிறு, வியாழன், சனிக்கிழமை மற்றும் ஓலைச்சுவடி படி 7 நாட்களும் தன்வந்திரி பகவானை தரிசிக்க உகந்த நாட்களாகும்.



தொடர்புக்கு–     ஸ்ரீமுரளிதர சுவாமிகள், 
                                ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம், 
                                அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, 
                                வாலாஜாபேட்டை– 632513, வேலுார் மாவட்டம்
                                தொலைபேசி– 04172  230033, 230274        
                                மொபைல்:  94433 30203

Comments

MAHA ABISHEKAM TO MAHISHASURA MARDHINI BEGINS 24.04.2022 TILL 26.05.2022

                           மங்கள வாழ்வு தரும் ஸ்ரீமகிஷாசுரமர்த்தினிக்கு

                41 நாட்கள் தொடர் மஹா அபிஷேகம் இன்று துவங்கியது.


 

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 23.4.2022 சனிக்கிழமை அக்னி நக்ஷத்திரத்தின் தாக்கம் குறையவும், மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும், மரண பயம் நீங்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், திருமணம் பாக்கியம் கைகூடவும், சந்தானம் பாக்கியம் பெறவும், தொழில் வியாபாரம் சிறக்கவும், தன ஆகர்ஷண மற்றும் ஜன ஆகர்ஷண பெருகவும், சகலவிதமான பயங்கள், தோஷங்கள் விலகி வாழ்க்கையில் வெற்றிகளை பெறவும், சர்வ மங்களம் பெற்று  மங்கள வாழ்வு பெறவும் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினிக்கு மஹா அபிஷேகம் இன்று முதல் 41 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள், பொது மக்கள் கலந்து கொண்டு இவ்விழாவை துவக்கி வைத்தனர். இந்த அபிஷேகம் 3.6.2022 வெள்ளிக்கிழமை வரை 41 நாட்கள் தினமும் காலை முதல் மாலை வரை ஹோம பூஜைகளுடன் தொடர் அபிஷேகம் நடைபெறும். மேலும் நாளை முதல் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு 33 நாட்கள் (24.4.2022 முதல் 26.5.2022 வரை) தொடர் திருமஞ்சன திருவிழா நடைபெற உள்ளது. இங்கு நடைபெறும் ஹோமம், அபிஷேகம், மற்றும் பூஜைகளில் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.