கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Friday, February 7, 2020
Thai Poosam 2020 - Gandharva Raja Homam - Swayamvara Kala Parvathi Homam - Santhana Gopala Yagam
திருமணவரம் வேண்டி
2500க்கும் மேற்பட்ட ஹோமங்கள் நடைபெற்ற
வாலாஜாபேட்டை ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில்முத்தான மூன்று ஹோமங்கள்.
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 08.02.2020 சனிக்கிழமை தைப்பூசம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலாபர்வதி யாகம், சந்தான கோபால யாகம் நடைபெற உள்ளது. பங்கேற்ற ஆண், பெண்களுக்கு கலசாபிஷேகமும், தம்பதிகளுக்கு தொட்டில் பூஜையும் நடைபெற உள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு கார்த்திகை குமரன் மற்றும் வள்ளல் பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து உணவு சரிமானம் ஏற்படவும், அன்னதோஷம் விலகவும் மாலை 4.30 மணிக்கு ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு விசேஷ வழிபாடும் முத்தான மூன்று ஹோமங்களாக நடைபெற உள்ளது.
கந்தர்வ ராஜ
ஹோமம் :
திருமணத்தடைகள்
உள்ள ஆண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும்,
நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும்,
மூதாதையர் சாபங்களும், சகல தோஷங்களும் நீங்கி
விரைவில் திருமணம் நடைபெற வேண்டி கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது.
சுயம்வர
கலாபார்வதி யாகம் :
திருமணத்தடைகள்
உள்ள பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி சுயம்வர கலாபார்வதி
யாகம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் சுயம்வரகலா
பார்வதி ஹோமம் நடத்தப்பட உள்ளது. இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் பலன்கள்
ஏராளம். திருமணத் தடைகள் நீங்கி உடனே திருமணம் நடைபெற்று மகிழ்ச்சியாக வாழலாம்,
மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான
இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.
சந்தான கோபால
யாகம் :
குழந்தை
பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி
சங்கல்பம் செய்து சந்தான கோபால யாகம் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த யாகம்
செய்வதின் மூலம் எல்லாவிதமான தடைகளும் நீங்கி
விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். தம்பதியருக்குள்
மிகுந்த அந்யோன்யம் ஏற்படும். நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருளும் கிடைக்கும்.
மேலும் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
இராணிப்பேட்டை மாவட்டம்.
தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
Saturday, February 1, 2020
Aswamedha Pooja - Aswarooda Pooja....
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்அஸ்வமேத பூஜையுடன் அஸ்வாரூட ஹோமம்.
இராணிப்பேட்டை
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று
ரதசப்தமியை முன்னிட்டு 01.02.2020 சனிக்கிழமை காலை
10.30 மணியளவில்
அதிர்ஷ்ட தேவதையின் ஆசிர்வாதம் வேண்டியும், அரசர் வாழ்வு வேண்டியும் அஸ்வாரூட
ஹோமத்துடன் அஸ்வமேத பூஜை நடைபெற்றது.
காலை
மங்கள இசையுடன் கோ பூஜை, வேத பாராயணங்களுடன் யாகசாலை பூஜை,
மஹா கணபதி பூஜை, மஹாசங்கல்பம் நடைபெற்றது. தொடர்ந்து மஹா கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம்,
லக்ஷ்மி ஹோமம், ருத்ர ஹோமம், ஆஸ்வாரூட ஹோமத்துடன் ஐந்து குதிரைகளுக்கு (அஸ்வங்களுக்கு)
விசேஷ அலங்கார ஆராதனைகள் அஸ்வமேத பூஜையாக நடைபெற்றது.
ராஜபோக
வாழ்வு வேண்டியும், ராஜகுமாரன் அமைய வேண்டியும், இந்திர பதவியுடன் இந்திரன் போல்
வாழ வேண்டியும், வசீகர சக்தி பெறவும், மக்கள் வசியம்
பெறவும், வெற்றிமேல் வெற்றி பெறவும், பெரும் செல்வம், செல்வாக்கு, புகழ் பெறவும்,
எதிரிகளை வெல்லவும், தொழில் வியாபாரத்தில் ஏற்படும் மந்த
நிலை மற்றும் தடைகள் விலகவும், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவும், அனைத்தும்
குதிரை வேகத்தில் நன்மைகள் கிடைத்து ராஜ போக வாழ்க்கையுடன் போட்டி, பந்தயங்களில்
வெற்றி பெறவும், எதிர்பாராத வகையில் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகவும், ஆண் சந்ததி
ஏற்படவும், வம்ச விருத்தி கிடைக்கவும், சினிமா, அரசியல்
மற்றும் பெரும் வியாபாரம் பெருகவும், எதிரிகளையும், சத்ருக்களையும் எதிர்கொள்ளும்
வல்லமை பெறவும், சொப்ன தேவியின் அருள் கிடைத்து ஆட்சி செய்யும் அதிகாரத்தையும்
பெற்று செல்வாக்குடன் வாழவும், மிக பெரிய கோடீஸ்வரர்களாக வேண்டியும், திருமணம்
ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடவும், நல்ல மண வாழ்க்கை அமையவும் பக்தர்கள்
கூட்டு பிரார்த்தனை செய்தனர். இதில் பத்துக்கும் மேற்பட்ட சிவாசாரியர்கள் பங்கேற்று
வேத பாராயணங்கள் செய்தனர்.
இந்த
யாகத்தில் கனடா நாட்டில் வெளிவரும் உதயன் பத்திரிகை ஆசிரியரும் நிர்வாகியுமான
திரு. லோகேந்திர லிங்கம், திருமதி. லோகேந்திர லிங்கம், மலேசியா தொழிலதிபர் சரவணன்,
ஸ்ரீபுரம் நாராயணி பீடம் விஜயகுமார், சுரேஷ், சென்னை குணசேகரன் குடும்பத்தினர்,
ராம்குமார் குடும்பத்தினர், ராமச்சந்திரன் குடும்பத்தினர், பிரகாஷ், ஹரிஹரன்,
இன்பவல்லி விஜயவாடா சுரேஷ் குடும்பத்தினர், சென்னை தினகரன் குடும்பத்தினர், ஆரணி
கண்ணன் குடும்பத்தினர், பெங்களூர் சங்கமேஸ்வரன் குடும்பத்தினர், பாணிச்சேரி
தண்டபாணி, சீனுவாசன் குடும்பத்தினர், கரூர் முத்துராஜா, திருநெல்வேலி வழக்கறிஞர்
சங்கர், தாமிரா டீவி நாகமணி மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள்
பங்கேற்றனர். மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு
யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இதனை
தொடர்ந்து மஹா அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.



Thursday, January 30, 2020
Bhagwan Mahaveer - Sri Agasthyar - Sri Ramakrishna Paramahamsar Aalaya Punar Prathishta
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்பகவான் மஹாவீரர், ஸ்ரீ அகத்தியர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆலய புனர் பிரதிஷ்டை நடைபெற்றது.
இராணிப்பேட்டை
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று
30.01.2020 வியாழக்கிழமை
காலை
9.00 மணி முதல்
11.30 மணி வரை
பகவான் மஹாவீரர், ஸ்ரீ அகத்தியர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆலயங்களின் புனர் பிரதிஷ்டா
வைபவமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
காலை
மங்கள இசையுடன் கோ பூஜை, வேத பாராயணங்களுடன் யாகசாலை பூஜை நடைபெற்று, மஹா கணபதி ஹோமம்,
கலச பூஜை, மஹாவீரர் அகஸ்தியர் மற்றும் ரமகிருஷ்ண பரமஹம்ஸர் நெய், தேன், மூலிகைகள்,
சமித்துகள், பழங்கள், நிவேதன பொருட்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொண்டு மூலமந்திர
ஹோமம், ருத்ர ஹோமத்துடன் மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து யாத்ரா தானமும், கலசபுறப்பாடும்
கலசாபாபிஷேகமும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று
பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை
வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Monday, January 27, 2020
Sunday, January 26, 2020
71st Republic Day - Pattabhisheka Ramar Homam - Bharath Matha Homam - Vastu Homam - Sanjeevi Anjaneyar Homam
அயோத்தியில் விரைவில் ராம ஆலயம் அமைய வேண்டிஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ளஸ்ரீ பாரத மாதா, ஸ்ரீ வாஸ்து பகவான், ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் மற்றும் ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்குசிறப்பு பூஜைகள் மற்றும் கூட்டுபிரார்த்தனைகள்71 ஆவது குடியரசு
தினத்தில் நடைபெற்றது.
இராணிப்பேடை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் குடியரசு தினம் மற்றும் வாஸ்து நாளை முன்னிட்டு இன்று 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை குடியரசு தின கொடியேற்றமும், அயோத்தியில் விரைவில் ராம ஆலயம் அமைய வேண்டி ஸ்ரீ பாரத மாதா, ஸ்ரீ வாஸ்து பகவான், ஸ்ரீ பட்டாபிஷேக ராமர், ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு ஹோமங்களும், அபிஷேகங்களும் நடைபெற்று, தங்க முலாம் பூசபட்ட வாஸ்து யந்திரம், மச்ச யந்திரம், நவரத்தினம் மற்றும் பஞ்ச லோஹ தகிடுகளுக்கு பக்தர்கள் அயோத்தியில்
ராமர் ஆலயம் விரைவில் அமைய வேண்டி பிரார்த்தனையுடன் ராம நாம ஜபத்துடன் தங்கள்
கைகளால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதில் தமிழ்நாடு விஸ்வ இந்து பரிக்ஷத் துணை
தலைவர் திரு. M.J. துளசிராம் மற்றும் அவர் குடும்பத்தினர்கள், சிப்காடு நவசபரி ஆலய நிர்வாகி திரு. ஜெயச்சந்திரன்,
ஆரிய சமாஜம் பிரச்சாரக் திரு. கண்ணன் ஜி அவர்கள்,
வேலூர் சிருஷ்டி ஸ்கூல் காரியதர்சி திருமதி. பூர்ணிமா
பிரசன்னா, ISRO சங்கர், கரூர் வாஸ்து
ஜோதிடர் திரு. முத்துராஜா, M.S. ஸ்க்ரீன்ஸ் சேதுராமன், சென்னை தொழில் ஆலோசகர் திரு. ராமநாதன் குடும்பத்தினர், மலேசியா திரு. பழனிசாமி செட்டியார் விஸ்வநாதன், தர்மபுரி திரு.
R.மணி குடும்பத்தினர், திருநெல்வேலி திரு.
நாகமணி, திரு. திருமுருகன்
மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை
செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி
இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






Subscribe to:
Posts (Atom)













































