Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, January 24, 2020

Sani Peyarchi Yagam 2020 - 2023 - Amavasai Prathyangira Devi Yagam


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்சனி பெயர்ச்சி யாகம் – அமாவாசை யாகம் – நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இன்று 24.01.2020 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை தை அமாவாசை மற்றும் சனி பெயர்ச்சியை முன்னிட்டு அமாவாசை மிளகாய் யாகம், சனி பெயர்ச்சி யாகம், நூல் வெளியீட்டு விழா இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் நடைபெற்றது.

இதில் ஏழரை சனி, விரையசனி, ஜென்மசனி, பாதசனி, அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி போன்ற தோஷங்கள் அகலவும், மிதுனம், கடகம், துலாம், தனுசு, மகரம், கும்பம் ராசிகள், சனிதிசை, சனிபுக்தி நடைபெறுபவர்களுக்கு சனி சாந்தி ஹோமம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரர் மற்றும் ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரருக்கு தைலாபிஷேகத்துடன் பஞ்ச கலச திருமஞ்சனமும், ‘சனி பெயர்ச்சி பலன்கள் 2020 – 2023’ நூல் வெளியீட்டு  விழாவும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து திருஷ்டி தோஷங்கள் அகலவும், சத்ரு உபாதைகள் தீரவும், பித்ரு சாபங்கள் தீரவும், இயற்கை வளம் வேண்டியும் தை அமாவாசையை முன்னிட்டு மிளகாய் வற்றல் கொண்டு திருஷ்டி துர்கா யாகமும் ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

இவ்வைபவங்களில் சென்னை ஜோதிடர் திரு. விமல் பாஸ்கர், காசிமேடு திரு. சிவமுருகேசன், கரூர் திரு. முத்துராஜா, இராணிப்பேட்டை பெல் திரு. முல்லை, திருநெல்வேலி திரு. காந்திமதிநாதன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி, சொர்ண யந்திரம், தன்வந்திரி டாலர், ஹோம பஸ்மம், தாமரை மணி பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.


















Thursday, January 23, 2020

365 Days - 365 Homam - 23th Day Sri Sukkira Santhi Homam....


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
365 நாள் – 365 ஹோமம் - 23வது நாள்
ஸ்ரீ சுக்கிர சாந்தி ஹோமம்.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன்  உலக மக்கள் நலன் கருதியும், உலக க்ஷேமத்திற்காகவும் சென்ற  26.04.2012  முதல்  25.05.2013 வரை நடைபெற்ற 365 நாள்    365 யாகம், ஏகோபித்த பக்தர்கள் வேண்டு கோளுக்கிணங்க இரண்டாவது முறையாக 01.01.2020 புதன்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து 23வது நாளான இன்று 23.01.2020 வியாழக்கிழமை ஸ்ரீ சுக்கிர சாந்தி ஹோமம் நடைபெற்றது. இதில் களத்திர தோஷம் நீங்கவும், நீண்ட ஆயுள், செல்வம், கல்வி மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவும் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஸ்ரீ சுக்கிர பகவானுக்குரிய பூக்கள், திரவியங்கள், மூலிகை பொருட்கள், பழங்கள், வஸ்திரங்கள் சேர்க்கப்பட்டது. மேலும் 24வது நாளான நாளை 24.01.2020 வெள்ளிக்கிழமை ஆயுள் விருத்தி, திருமணத்தடை, உத்தியோகத்தடை, ஆரோக்கியத்தடை, பித்ரு தடை, கிரகத்தடை, வாஸ்துத்தடை, நவக்கிரகத்தடை நீங்கவும் மேலும் பல நன்மைகள் பெறவும்  துர்கா ஹோமமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. இவ்வைபவம் வருகிற 31.12.2020  வரை  நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





Thursday, January 16, 2020

Thai 1st Friday - Sri Arogya Lakshmi Thirumanjanam...

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
தை வெள்ளியை முன்னிட்டு
ஆரோக்யத்துடன் ஐஸ்வர்யம் தரும்
ஆரோக்ய லக்ஷ்மி திருமஞ்சனம்.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வருகிற 17.01.2020 தை முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மிக்கு சிறப்பு திருமஞ்சனமும் விசேஷ ஆராதனைகளும் நடைபெற உள்ளது.
தை மாத வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உரிய நன்னாள். இந்த நாளில், அம்பாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் நடைபெறும். தை மாத வெள்ளிக்கிழமையில், அம்பாள் கோவிலுக்கு சென்று அம்பாளை வணங்கினால், நம்மையும் நம் குடும்பத்தையும் தழைக்கச் செய்வார். வீட்டில் உள்ள திருஷ்டி முதலானவை நீங்கும். வீட்டில் மங்கள காரியங்கள் விரைவில் நடக்கும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தை மாத முதல் வெள்ளிக்கிழமை உலக மக்கள் நலன் கருதியும், ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற்று அனைவரும் மகிழ்ச்சியுடன் நல்வாழ்வு வாழவும், கஷ்டங்கள் நீங்கவும், கடன் தொல்லைகள் அகலவும், குடும்பத்தில் லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகவும், ஆயுள் விருத்தி பெறவும், ராஜ வசியம் உண்டாகவும், செல்வம், சுவர்க்கபோகம் கிடைக்கவும், பாவநிவர்த்தி பெறவும் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்ற பஞ்ச திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனமும், விசேஷ பூஜைகளும் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் இதில் பங்கேற்று பயன் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் திருமஞ்சன திரவியங்கள், புஷ்பம், பழங்கள், நிவேதன பொருட்கள், வஸ்திரங்கள் அளித்து குடும்பத்தினர்களுடன் இறை கைங்கரியத்தில் ஈடுபடலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
                Email: danvantripeedam@gmail.com

Wednesday, January 15, 2020

365 Days - 365 Yagam - 15th Day - Sri Aditya Homam


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்365 நாள் – 365 ஹோமம் - 15வது நாள்
ஸ்ரீ ஆதித்ய ஹோமம்.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன்  உலக மக்கள் நலன் கருதியும், உலக க்ஷேமத்திற்காகவும் சென்ற  26.04.2012  முதல்  25.05.2013 வரை நடைபெற்ற 365 நாள்    365 யாகம், ஏகோபித்த பக்தர்கள் வேண்டு கோளுக்கிணங்க இரண்டாவது முறையாக 01.01.2020 புதன்கிழமை மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து 15வது நாளான இன்று 15.01.2020 புதன்கிழமை ஸ்ரீ ஆதித்ய ஹோமம் நடைபெற்றது. இதில் கண் பார்வை தோஷங்கள் விலகவும், பிரகாசமான வாழ்க்கை அமையவும், கர்ம வினைகள் அகலவும், சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கவும் மேலும் பல நன்மைகள் பெறவும் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆதித்ய பகவானுக்குரிய பூக்கள், திரவியங்கள், மூலிகை பொருட்கள், பழங்கள், வஸ்திரங்கள் சேர்க்கப்பட்டது.

மேலும் 16வது நாளான நாளை 16.01.2020 வியாழக்கிழமை நவக்கிரக தோஷம், பித்ரு சாபம், கண் திருஷ்டி, சூனியம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெறவும், தீய சக்திக அகலவும், எதிரிகள் நம்மை விட்டு விலகவும், தொழிலில் ஏற்படும் போட்டிகளில் வெற்றி பெறவும்மேலும் பல நன்மைகள் பெறவும் சத்ரு சம்ஹார திரிசதி ஹோமமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. இவ்வைபவம் வருகிற 31.12.2020  வரை  நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.