Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, December 12, 2019

2020 Calendar Launching Ceremony ....




வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 2020 ஆம் ஆண்டு காலண்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 12.12.2019 வியாழக்கிழமை 2020 ஆம் ஆண்டு காலண்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பங்கேற்றவர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி காலண்டர் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.




Wednesday, December 11, 2019

Datta Jayanti 2019 - Pournami Yagam


வாலாஜாபேட்டை தத்த ஆலயத்தில்தத்தாத்ரேய ஜெயந்தி விழாவும்பௌர்ணமி யாகங்களும் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 11.12.2019 புதன்கிழமை ஸ்ரீ தத்தாத்ரேயர் ஜெயந்தி மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ தத்தாத்ரேயர் ஹோமம், ஆண்கள் திருமணத்தடை நீக்கும் கந்தர்வராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீக்கும் சுயம்வர கலா பார்வதி யாகம், தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகம், ஸ்ரீ தத்தாத்ரேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் ஏராளமானவர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகள் வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இதனை தொடர்ந்து மஹா அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.








Tuesday, December 10, 2019

Sudarshana Jayanthi 2019 - Maha Sudarshana Homam


வாலாஜாபேட்டை சுதர்சனர் ஆலயத்தில்சுதர்சனர் ஜெயந்தி விழா நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி சுதர்சனர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று 10.12.2019 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மஹா சுதர்சன ஹோமத்துடன் ஸ்ரீ சுதர்சன பெருமாளுக்கு நவகலச திருமஞ்சனமும், விசேஷ ஆராதனைகளும் நடைபெற்றது.

இதில் நெய், தேன், வெண்கடுகு, நவ சமித்துகள், வஸ்திரங்கள், புஷ்பங்கள், பழங்கள், நிவேதன பொருட்கள், மூலிகைகள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ சுதர்சன பெருமாளுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி, நெல்லிப்பொடி, பன்னீர், துளசி தீர்த்தம், தேன் போன்ற பொருட்களால் நவகலச திருமஞ்சனம் நடைபெற்று விசேஷ ஆராதனைகள் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று உலக நலனுக்காகவும், பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்கவும், சத்ரு பயம் அகலவும், பசுக்கள் ஆரோக்யமாக இருந்து பசு விருத்தி பெறவும், வாழ்க்கையில் வளர்ச்சி, வெற்றி, மகிழ்ச்சி போன்றவற்றை பெறவும், சத்ரு பயம், விரக்தி, துர் சொப்னம் போன்றவை நீங்கவும், எதிர்மறை எண்ணங்கள் விலகவும், துன்பங்களும், தோஷங்களும், சாபங்களும் விலகவும், எதிரிகள் தொல்லை அகலவும், பயம் நீங்கி வலிமை கிடைக்கவும் கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.

மேலும் இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.









Sunday, December 8, 2019

Surya Grahan - Navagraha Homam - Kalachakra Pooja


ஆறு கிரக சேர்க்கையினால் ஏற்படும் தோஷங்கள் விலகவும்சூரிய கிரகணத்தின் தாக்கம் குறையவும்தன்வந்திரி பீடத்தில் சிறப்பு யாகங்கள்.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் ஆறு கிரக சேர்க்கை மற்றும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு வருகிற 26.12.2019 வியாழக்கிழமை, 27.12.2019 வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் காலை, மாலை இருவேளையும் மாபெரும் நவக்கிரக ஹோமத்துடன் ஆதித்ய ஹோமமும், காலசக்கிர பூஜையும் நடைபெறுகிறது.

தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் டிசம்பர் 25 இரவு முதல் டிசம்பர் 27 இரவு வரை சூரியன், சந்திரன், சனி, குரு, புதன், கேது ஆகிய ஆறு கிரகங்கள் ஒன்றாக தனுசு ராசியில் இணைந்திருக்கும். அதன்பிறகு சந்திரன் மகரம் ராசிக்கு நகர்ந்து விட்டாலும் ஐந்து கிரகங்களின் கூட்டணி ஜனவரி 13ஆம் தேதி வரை நீடிக்கிறது. இந்த கிரகங்களின் சேர்க்கையை முன்னிட்டு 12 ராசிக்காரர்களுக்கும் பரிகாரம் செய்து கொள்ளும் விதத்தில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மாபெரும் பரிகார ஹோமங்கள், பூஜைகள் சிறப்பு அபிஷேகங்கள் காலை, மாலை இருவேளையும் நடைபெற உள்ளது.

சந்திரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறையும், சூரியன் மாதம் ஒருமுறையும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர்கின்றன. குரு ஆண்டுக்கு ஒருமுறையும், சனி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும், ராகு கேது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறையும் இடப்பெயர்ச்சி அடைகின்றன. இந்த ஆண்டு இறுதி வரை தனுசு ராசியில் சனி, கேது, குரு சஞ்சரிக்கின்றன. இந்த சூழ்நிலையில்தான் ராஜகிரகங்கள் சூரியன், சந்திரன், புதன் தனுசுவில் இணையப்போகின்றன. சூரியன், வியாழன் சேர்க்கை பற்றிய பயம் வேண்டாம். இந்த கிரக சேர்க்கையினால் பெரிய பேரழிவு எல்லாம் வராது. சூரியனும் சனியும் சேர்ந்து பாக்ய ஸ்தானத்தில் இணைவதால் பிறக்கும் குழந்தைக்கு யோகங்கள் வரும்.

காலபுருஷ தத்துவப்படி 9ம் வீட்டில் அதாவது தனுசில் குரு ஆட்சி புரிந்து இருப்பது மிகச் சிறந்த ஒன்று. டிசம்பர் 25, 26, 27 தேதிகளில் தனுசில் சூரியன், சந்திரன், குரு, சனி, கேது, புதன் சேர்க்கை என்பது இரண்டரை நாட்களில் இந்த நிகழ்வு நடைபெறப்போகிறது. இந்த அமைப்பால் ஒரு சில யோகங்கள், கிரக யுத்தம், மற்றும் தோஷங்கள் நடைபெறும். வருஷ கிரகங்கள் என்று கூறப்படும் குரு, சனி, கேதுக்களுடன் மாத கிரகங்கள் என்று கூறப்படும் சூரியன், புதன் மற்றும் இரண்டரை நாட்கள் சஞ்சரிக்கும் மனோகரகனுடன் சந்திரனோடு சேரும் பொழுதும் அதே நேரம் ராகுவின் பார்வையும் இந்த காலகட்டத்தில் இடம்பெறும்.

கால புருஷனுக்கு ஒன்பதாம் வீடு, பாக்ய ஸ்தானத்தில் தந்தை கிரகமான சூரியன், தாய் கிரகமான சந்திரன், உழைப்பு கிரகமான ஆயுள்காரகன் சனி, அறிவு கிரகமான புதன், ஞானகாரகன் கேது கூடவே குருவும் இணைகின்றன. ஒரு ராசியில் இப்படி ஆறு கிரகங்கள் இணைவது பல ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கும். இந்த ஆண்டு அது நிகழப்போகிறது. இதனால் சில அரசியல் மாற்றங்கள் சட்டங்கள் இயற்ற முற்படுவார்கள். இத்தகைய சூழ்நிலையில் கர்மாவை போக்கி கொள்ள தான தர்மம் செய்வதும், ஆன்மீக செயல்களில் தன்னை ஈடுபடுத்தி கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும் என்கிறார் ஸ்தாபகர் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

இந்த ஆறு கிரகங்களின் தாக்கத்தின் காரணமாக சில பிரச்னைகளுக்கு மன குழப்பமான சூழ்நிலையில் முடிவெடுக்க வேண்டியிருக்கும். 12 ராசிக்காரர்களுக்கும் அசுப பலன்கள் குறையவும், சுப பலன்களை அனுபவிக்கவும், முக்கியமாக ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், தனுசு, மகரம் போன்ற ராசிகள் மற்றும் லக்கினகாரர்களுக்கு ஏற்படும் அசுப பலன்கள் குறையவும், 6 கிரகங்களால் ஏற்படும் பயங்கள், தோஷங்கள் அகலவும், சூரிய கிரகணத்தினுடைய தாக்கம் குறையவும், முன்னோர்களின் ஆசி வேண்டியும் தன்வந்திரி பீடத்தில் வருகிற 26.12.2019 மற்றும் 27.12.2019 ஆகிய இரண்டு நாட்கள் மாபெரும் நவக்கிரக ஹோமத்துடன் ஆதித்ய ஹோமமும், காலசக்கிர பூஜையும் நடைபெற உள்ளது. மேலும் பரிகார க்ஷேத்திரமாக ஆந்திரா மாநிலம் களாஸ்த்ரிக்கு அடுத்த படியாக வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடம் திகழ்ந்து வருவதால், இப்பீடத்தில் நடைபெறும் பரிகார ஹோமத்தில் பங்கேற்று பலன் பெற பிரார்த்திக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


Sudarshana Jayanthi


வாலாஜாபேட்டை சுதர்சனர் ஆலயத்தில்சுதர்சனர் ஜெயந்தி விழா.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி சுதர்சனர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 10.12.2019 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை பெற்ற பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்கவும், சத்ரு பயம் அகலவும், பசுக்கள் ஆரோக்யமாக இருந்து பசு விருத்தி பெறவும் மஹா சுதர்சன ஹோமத்துடன் ஸ்ரீ சுதர்சன பெருமாளுக்கு நவகலச திருமஞ்சனமும், விசேஷ ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

காக்கும் கடவுள் மகாவிஷ்ணுவின் கையில் சுழலும் ஆயுதம், சுதர்சன சக்கரம் ஆகும். மாபெரும் சக்தியும் ஒளிரும் தன்மையும் கொண்ட இந்த சக்ராயுதம், மகத்தான ஆற்றல் வாய்ந்தது. தீமையை அழித்து, நன்மையை நிலைநாட்டக் கூடியது. சுதர்சனர் என வழிபடப்படும் இந்த சுதர்சன சக்கரத்துக்குச் செய்யப்படும் ஹோம வழிபாடு, மஹா சுதர்சன ஹோமம் எனப்படுகிறது.

சுதர்சன பெருமாளை வழிபட்டு யாகத்தில் பங்கேற்பவர்களுக்கு அவரை சூழ்ந்துள்ள தீய சக்திகளை அழித்து, நன்மைகள் பல நிறைந்த ஒரு பெரும் பாதுகாப்பு சக்தியாக நம்மைக் காத்து நிற்கும். வாழ்க்கையில் வளர்ச்சி, வெற்றி, மகிழ்ச்சி போன்றவற்றை தரும் என்பது சுதர்சன ஹோமத்தின் சிறப்பம்சங்கள் ஆகும்.

விஷ்ணுவை ஆயிரம் நாமங்களால் போற்றும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்துடன், மஹா சுதர்சன ஹோமம் செய்வது, விஷ்ணு பகவானின் ஆசியையும் அவரது சக்தி வாய்ந்த சகராயுதத்தின் பரிபூரண ஆசிகளையும் பெற்றுத் தரும். இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதன் மூலம், உங்களைச் சூழ்ந்துள்ள இருளும், அறியாமையும் விலகும். நேர்மறை ஆற்றல், உங்களுக்குள் நிறையும். நன்மைகள் பெருகி, நல்வாழ்வு வாழ இயலும்.

மஹா சுதர்சன ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம் சத்ரு பயம், விரக்தி, துர் சொப்னம் போன்றவை நீங்கும், எதிர்மறை எண்ணங்கள் விலகும், துன்பங்களும், தோஷங்களும், சாபங்களும் விலகும், எதிரிகள் தொல்லை விலகும், பயம் நீங்கி வலிமை கிடைக்கும், நடைமுறையில் நல்ல மாற்றங்கள் நிகழும், தன்னம்பிக்கை பிறக்கும், தொழிலில் வளர்ச்சி, வழக்கில் வெற்றி, இயற்கை வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, அற்புதமான வாழ்கை, போன்ற பல்வேறு நன்மைகள் சுதர்சன ஜெயந்தியை முன்னிட்டு நடைபெறும் சுதர்சன ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம் பெறலாம் என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த யாகத்தில் பங்கேற்பவர்களுக்கு  ரட்சை என்று அழைக்கப்படும் ஹோம பஸ்பம் மற்றும் குங்குமம் பிரசாதமாக வழங்கப்படும்.

மேலும் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று பிரார்த்தனை செய்து இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203