Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, March 22, 2019

Ugadi 2019


தன்வந்திரி பீடத்தில்தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி) பண்டிகையை முன்னிட்டுசிறப்பு தன்வந்திரி ஹோமம்.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் யுகாதி எனும் தெலுங்கு வருடப்பிறப்பு முன்னிட்டு வருகிற 06.04.2019 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் சிறப்பு தன்வந்திரி ஹோமமும் மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு மஹா அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. ஆந்திரா, கர்நாடகா, மற்றும் வட மாநிலங்களில் வாழு‌ம் மக்க‌ள் த‌ங்களது புத்தாண்டு ‌பிற‌ப்பை யுகாதி என்ற பெயரில் கொண்டாடி வருகி‌ன்றனர். ஆண்டின் தொடக்கத்தையே யுகாதி என்று அழைக்கிறார்கள்.

தமிழர்கள் தமி‌ழ் புத்தாண்டை கொண்டாடுவது போலவே ஆந்திரம், கர்நாடகம் வாழ் மக்கள் தங்களது புத்தாண்டை யுகாதியாக கொண்டாடுகின்றனர். அன்று அதிகாலையில் எழுந்து வாசலில் வண்ணக் கோலமிட்டு எண்ணை தேய்த்துக்குளித்து, புத்தாடை அணிந்து, இறைவனை வழிபடுவார்கள்.

இதில் ஒரு ‌சிறப்பம்சம் என்னவென்றால் வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் ‌விதமாக யுகாதி பச்சடி என்ற ஒரு உணவை தயாரிப்பார்கள். அதாவது வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி, உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவார்கள். இந்த பச்சடி ஆந்திராவில் யுகாதி பச்சடி என்றும், கர்நாடகத்தில், தேவுபெல்லா என்றும் அழைக்கப்படுகிறது. யுகாதி பச்சடி தயாரித்து இறைவனுக்கு படையல் இட்டு சூரியனை வழிபடுவார்கள். மாலையில் வாசலில் விளக்கேற்றிய பின்னர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த சிறப்பு நாளை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் யுகாதி நாளில் அனைத்து மக்களும் ஆரோக்யமாக வாழ சிறப்பு தன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் விசேஷ திரவியங்களுடன் பல வகையான புஷ்பங்கள், பழங்கள் சேர்க்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து தன்வந்திரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


Tuesday, March 19, 2019

Sahasra Kalasabhishekam - Nadha Sangamam


ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும்மஹோத்ஸவம் – 2019 விழாவில்தமிழக ஆளுனர் பங்கேற்றார்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 58வது ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் 15ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 16.03.2019 பங்குனி மாதம் 2ம் தேதி சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை 1000க்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர இசை கலைஞர்கள் பங்கேற்ற நாதசங்கம நிகழ்ச்சியுடன் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மஹா தன்வந்திரி யாகமும் சஹஸ்ர கலச திருமஞ்சனமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுனர் நண்பகல் 12.00 மணியளவில் வருகை புரிந்து பாரதமாதா சிலைக்கு தீபாராதனை செய்து சிறப்பு வழிபாடு செய்தார். தொடர்ந்து மஹோத்ஸவம் 2019 முப்பெரும் விழாவையொட்டிய நினைவு பலகையை திறந்து வைத்தார். பின்னர் மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கு ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற நெல்லிக்காய் பொடி திருமஞ்சனத்திலும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு நடைபெற்ற மஹா ஆரதியிலும், சஹஸ்ர கலச ஹோம பூர்ணாஹுதியிலும் பங்கு கொண்டார். மேலும் முப்பெரும் விழாவை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

நீதிபதி டாக்டர் பி. ஜோதிமணி அவர்கள் வரவேற்புறை நிகழ்த்தினார். பிறகு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் சார்பாகயக்ஞஸ்ரீடாக்டர் முரளிதர ஸ்வாமிகளும், திருமதி நிர்மலா முரளிதரன் அவர்களும் தமிழக ஆளுனர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு பொன்னாடை போற்றி, மாலை அணிவித்து கௌரவித்தார்கள். பிறகு ரெப்கோ வங்கியின் முன்னாள் இயக்குனர் ஆர். வரதராஜன் அவர்கள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துறைத்தார். தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் பீடாதிபதியக்ஞஸ்ரீடாக்டர் முரளிதர ஸ்வாமிகள் தனது பெற்றோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டதைப் பற்றியும், அவர்களுக்கு ஏற்பட்டது போன்ற நிலை வேறு எவருக்கும் ஏற்படக் கூடாது என்பதற்காக உலகில் உள்ள அனைவரின் நலனைக் கருத்தில் கொண்டு ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் தொடங்கப்பட்டது பற்றியும் உருக்கமாக விவரித்தார்.

தமிழக ஆளுனரின் வருகை ஸ்ரீதன்வந்திரி பீடத்துக்கே மிகவும் பெருமை சேர்ப்பதாகவும் நன்றியுடன் கூறினார். தமிழக ஆளுனர் தனது சிறப்புறையில் ஆயுர்வேதத்தின் முக்கியத்துவத்தையும், அதன் வளர்ச்சியையும் பெருமையாக கூறினார். பல சிறப்பு அம்சங்களைகொண்ட ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவிய திரு முரளிதார ஸ்வாமிகளை சிறப்பாக பாராட்டினார். மேலும் வாலாஜா தன்வந்திரி பீடத்தில் உலக மக்களின் நன்மைக்காக தினசரி தன்வந்திரி ஹோமம் மற்றும் பல சிறப்பு ஹோமங்களையும் நடத்தி வருவது பெருமைக்குறியது. முரளிதர ஸ்வாமிகளின் 58 வது ஜெயந்தி விழாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினர் மேதகு தமிழக ஆளுனருக்கு ஸ்ரீ தன்வந்திரி பகவானின் திருவுருவ படமும், அமிருத கலசமும் அருட்பிரசாதமாக ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளால் வழங்கப்பட்டது.

1000 தவில் நாதஸ்வரம் வித்வான்களின் நாதசங்கமம் விழாவில் பங்கேற்ற ஐந்து கலைஞர்களுக்கு பாரட்டு சான்றிதழ் வழங்கபட்டது. விழாவின் முடிவில் திரு. ஆர். பிரகாஷ் அவர்கள் விழாவில் பங்கேற்றவர்களுக்கும், மற்றும் இவ்விழா சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி கூறினார். பின்னர் தேசியகீதம் பாடப்பட்டது.

தொடர்ந்து ஏசியா புக் ஆப் ரிக்கார்ட்ஸின் சார்பாகயக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் முரளிதர ஸ்வாமிகளுக்கு 1000 தவில் நாதஸ்வர வித்வான்கள் ஒரே மேடையில் ஒரே நேரத்தில் வாசித்ததிற்கான சிறப்பு விருதை வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு. எஸ். . ராமன் ஐ..எஸ். அவர்கள் வழங்கினார்கள்.

மேலும் இதில் கலவை தவத்திரு. சச்சிதானந்த ஸ்வாமிகள், கோவை மஹாப்ரத்யங்கிரா பீடம் திரு. வெங்கடேச சர்மா, வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பளர், வட்டார வருவாய் அலுவலர், காஞ்சிபுரம் எஸ்.எம். சில்க்ஸ் உரிமையாளர் திரு மனோஹர் அவர்கள் மற்றும் ஏராளமானவர் பங்கேற்று சிறபபித்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
























Gho matha Thirukalyanam - 108 Sumangali Pooja - Samashti Upanayanam .


வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்கோமாதா திருக்கல்யாணம், 108 சுமங்கலி பூஜை,
சமஷ்டி உபநயனம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 58வது ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் 15ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 13.03.2019 மாசி மாதம் 29ம் தேதி புதன்கிழமை காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை கோமாதா திருக்கல்யாணம், 108 சுமங்கலி பூஜை, சமஷ்டி உபநயனம் பொதுமக்கள் முன்னிலையில் ஸ்வாமிகளின் ஆக்ஞப்படி நடைபெற்றது.
கோமாதாவை போற்றி வணங்கும் விதத்திலும், முப்பத்தி முக்கோடி தேவர்களின் ஆசி வேண்டியும், சகல விதமான தோஷங்கள் நீங்கவும், சகல விதமான ஜீவராசிகளின் நலன் வேண்டி கோமாதாவிற்கும் நந்தி பகவானுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

சம்பிரதாய பூஜையாக, பாரம்பர்யத்தை போற்றும் விதமாகவும், மூதாதையரின் ஆசீர்வாதங்களைப் பெறவும், பித்ருக்களின் விருப்பங்கள் நிறைவேறவும், குழந்தை பாக்யம், கணவனின் நீண்ட ஆயுள் மற்றும் நல்ல ஆரோக்கியம் மற்றும் நிறைவான வாழ்வு வேண்டியும், அனைத்து பக்தர்களுக்கும் மேற்கண்ட தெய்வங்களின் அனுக்கிரகம் வேண்டி 300 க்கும் மேற்பட்டம் சுமங்கலிகள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு ஸ்வாமிகள் ஆசிகளுடன் பாதபூஜை செய்து, புது வஸ்திரத்துடன் மங்கள பொருட்கள் அளித்து அன்னதானம் வழங்கப்பட்டது. 

வேத மாதாவின் அருள் வேண்டியும், வேதங்களை போற்றி ஆராதிக்கும் விதத்திலும், அந்தணர்களின் வாழ்வு சிறக்கவும் மணிபூணல் சமஷ்டி உபநயனம் நடைபெற்றது. இதில் இரத்தினகிரி தவத்திரு. பாலமுருகனடிமை ஸ்வாமிகள், முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு. இல.கணேசன், கலைமாமணி. திரு. ஏற்வாடி .S.ராதாகிருஷ்ணன், சென்னை திரு, தங்கராஜ், சென்னை திரு. அன்பழகன், சென்னை திரு. அசோகன் அவர்கள் மற்றும் ஏராளமானவர் பங்கேற்றனர். மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு பூஜை பிரசாதங்களுடன் சிறப்பு அன்னதானம் வழங்கபட்டது.

இதனை தொடர்ந்து நாளை 14.03.2019 வியாழக்கிழமை காலை 6.30 முதல் மதியம் 1.30 வரை ஒவ்வொருவருக்கும் மஹாவிஷ்ணு - மஹாலக்ஷ்மியின் அருள் கிடைத்து வாழ்வில் வளம் பெற துளசி தேவிநெல்லிராஜா ( துளசி செடிநெல்லி செடி) திருக்கல்யாணமும், பெண் சாபங்கள் நீங்கவும், குலதெய்வ தோஷங்கள் அகலவும், பாலாவின் பரிபூரண அருள் கிடைத்து குடும்பங்களில் சுபிட்சம் ஏற்படவும், சுப காரியங்கள் நடைபெறவும் 108 கன்னிபெண்கள் பங்கேற்கும் கன்யா பூஜை நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.