Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, November 14, 2018

Pavithrotsavam - Koti Japa Kubera Lakshmi Yagam ....

தன்வந்திரி பீடத்தில்

பவித்ரோத்ஸவம் நிறைவும் 

கோடி ஜப குபேர யக்ஞம் தொடக்கமும்.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி சென்ற 12.11.2018 முதல் 14.11. 2018 இன்று வரை உலக நலன் கருதியும், க்ஷேத்திர அபிவிருத்திக்காகவும் பவித்ரோத்ஸவம் நடைபெற்றது. இதில் 10 க்கும் மேற்பட்ட ஸ்ரீவைஷ்ணவ ஆச்சாரியர்கள் பங்கேற்று தினமும் கோ பூஜை, வேத பாராயணம், யாகசாலை பூஜை, கலச பூஜை, பவித்ர ஹோமங்கள் நடைபெற்று, தெய்வ சன்னதிகளுக்கு பவித்ர மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டு, சிறப்பு திருமஞ்சனம், பல்வேறு விதமான ஹோமங்கள் நடைபெற்றது. இன்று மதியம் மஹா பூர்ணாஹூதி நடைபெற்று கலச தீர்த்தங்கள் ப்ரோக்ஷித்து பவித்ர மாலைகள் கலையப்பட்டு ஸ்ரீ தன்வந்திரி மூலவருக்கு சிறப்பு ஆராதனைகளும், பிரார்த்தனைகளும் நடைபெற்றது. இதில் வேலூர் பிரியா டெக்ஸ்டைல்ஸ் உருமையாளர் திரி. சுரேஷ், சென்னை டெக்ஸ்டைல் உருமையாளர்கள், செய்யாறு தாசில்தார் திருமதி. ரேணுகா கிருஷ்ணமூர்த்தி, சிங்கப்பூர் வேதவியாச குடும்பத்தினர்கள், கோயம்பத்தூர் ஆடிட்டர் திரு. ராஜகோபாலன், ஊட்டி ராஜசேகர் மற்றும் பலவேறு தரப்பு மக்கள் பங்கேற்றனர். பவித்ரோத்ஸவத்திற்கான பவித்ர மாலைகளை புதுச்சேரி, பஞ்சவடி க்ஷேத்திரத்தின் தலைவர் திரு. கோதண்டராமன் அவர்கள் ஆலயம் சார்பாக உபயம் செய்து பவித்ரோத்ஸவம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கும் பங்கேற்ற ஆச்சாரியர்களுக்கும் பவித்ர மாலைகள் வழங்கி தீர்த்தபிரசாதமும், அன்ன பிரசாதமும் வழங்கப்பட்டது. 

பவித்ரோத்ஸவ பலன் :

ஆகம சாஸ்திர விதிகளுக்குட்பட்டு பகவதாலயங்களில் அனுதினம் செய்யப்படவேண்டிய நித்திய நைமித்திக காம்ய, கர்மங்களில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் இதர தோஷங்களால் உண்டாகும் பகவத் அபசாரங்களிலிருந்து நிவர்த்தி பெற பவித்ரோத்ஸவம் என்னும் வைதீக ஹோமம் (வேள்வி) விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஹோமத்தினால் ஆயுள், ஆரோக்யம், புகழ், ஞானம் போன்ற நற்பலன்கள் கிடைப்பதுடன் நவக்ரஹ, பூத, ப்ரேத, பிசாசுகளால் உண்டாகும் துக்கங்கள், சத்ரு பயம் முதலான அநிஷ்டங்கள் அகலும்.  நான்கு வேதங்களில் சாரமாக தொகுக்கப்பட்ட 1336 மந்திரங்களால் இந்த ஹோமம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று 14.11.2018 முதல் 25.11.2018 வரை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஐஸ்வர்யம் வேண்டியும், ஆரோக்யம் வேண்டியும், சகல காரிய ஜயம் வேண்டியும் நடைபெற உள்ள கோடி ஜப லக்ஷ்மி குபேரர் யக்ஞத்தின் பூர்வாங்க பூஜைகள் காலை 10.00 மணிக்கு துவங்கியது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.









Childrens Day 2018 ....


தன்வந்திரி பீடத்தில் உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை....

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் ஒவ்வொரு ஆண்டும் உலக தொழிலாளர் தினம், உலக மருத்துவர்கள் தினம், உலக புரோகிதர்கள் தினம், ஆகிய பல்வேறு விசேஷ தினங்கலில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், கூட்டுப் பிரார்தனைகள் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் இன்று 14.11.2018 புதன்கிழமை உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளின் நலன் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ஹோமங்களும், பூஜைகளும், கூட்டுப் பிராத்தனையும் நடைபெற்றது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



Saturday, November 10, 2018

KOTI JAPA KUBERA LAKSHMI YAGAM - SWARNA AKARSHANA BHAIRAVAR HOMAM ....


ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் கோடி ஜப யக்ஞம்
சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமத்துடன்கோடி தாமரை விதைகள் கொண்டு வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்வருகிற 14.11.2018 புதன்கிழமை முதல்
25.11.2018 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 14.11.2018 புதன்கிழமை முதல் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை வரை சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமத்துடன் கோடி கோடியாக கொழிக்க செய்யவும், செல்வ வளத்தை வாரி வழங்கி செழிக்க செய்யவும் ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கு  கோடி ஜப யக்ஞம் கோடி தாமரை விதைகள் கொண்டு நடைபெறுகிறது.

இந்த யாகத்தின் சிறப்பு :

இந்த யாகத்தின் மூலம் நம்மில் சிலர் செல்வம் இருந்தும் மனதில் நிம்மதியின்றி இருப்வருக்கு நிம்மதி கிடைக்கவும், போதிய செல்வம் கிடைத்து வாழ்வில் முன்னேறவும் போராட்டமான வாழ்க்கையை மாற்றி ஆனந்தம் பெறவும், பணத்தினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், மனதில் உள்ள கஷ்டங்கள் நீங்கவும், பணவளக்கலையை அறிந்து மிகுந்த செல்வம் பெற்று வளமோடு வாழவும் மேற்கண்ட யாகம் நடைபெறுகிறது.
இந்த யாகத்தின் மூலம் பண வரவு அதிகரிக்கும். துணைவிக்கு தங்க ஆபரணங்களை வாங்கி வழங்குவீர்கள். மேலும், குழந்தை வரம் கிடைப்பதோடு, இல்லறத்தில் நிலவி வந்த சங்கடங்கள் விலகும். யாகத்தில் பங்கேற்று இங்குள்ள தன்வந்திரி பகவானை தரிசனம் செய்தால் மன நோய்கள், உடல் நோய்கள் நீங்கும்.

ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் :

குபேரன் என்றாலே நமக்கு நினைவில் வருவது தங்கமும், வைடூரியமும், பொற்காசுகளும் நிறைந்த திருப்பதி ஏழுமலையானுக்கே கடன் கொடுத்த கடவுள் என்பதே. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது நம்பிக்கை. குபேர யந்திரம், குபேர யாகம் போன்றவை நம்மை செல்வத்தின் அதிபதியாக்கும் என நம்பப்படுகிறது. புத்த மதத்திலும் கூடு குபேரன் குறித்து கதைகள் உள்ளன. புத்த மதத்தினர் இவரை வைஸ்ரவணா என்றும், ஜைன மதத்தில் குபேரனை சர்வானுபூதி என்றும் வழிபடுகின்றனர். சிறந்த சிவபக்தரான குபேரன் பத்மம், மஹாபத்மம், மகரம், கச்சபம், குமுதம், நந்தம், சங்கம், நீலம், பத்மினி ஆகிய நவ நிதிகளுக்கும் அதிபதியாக உள்ளார்.

லட்சுமி குபேரர் திருக்கோவில் :

ஆரோக்ய ஐஸ்வர்ய பீடமாக திகழும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், தமிழகத்தில் வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுபேட்டையில் அமைந்துள்ளது. ஆரோக்யத்திற்காக ஸ்ரீ தன்வந்திரி பகவானையும், ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மியையும், கல்விக்காக ஸ்ரீ சரஸ்வதி மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவரையும், செல்வத்திற்காக ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவரையும், குபேர சம்பத்திற்காக ஸ்ரீ லட்சுமி குபேரரையும் பிரதிஷ்டை செய்து சீரான செல்வம் நமக்கு வந்தடையவும், இழந்த செல்வத்தை மீட்கவும் தினசரி பூஜைகளும் யாகங்களும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நடைபெற்று வருகிறது.
திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க செல்லும் அனைத்து பக்தர்களும், திருப்பதி செல்லும் முன் வாலாஜாபேட்டை – திருப்பதி மார்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஆட்சிபுரிகின்ற லட்சுமி குபேரரை நீங்கள் வழிபட்டு திருப்பதி செல்வது மிகவும் மேலான பலன்களை தரும் என்கிறார் பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

ஆரோக்ய பீடத்தின் சிறப்பு :

ஷண்மத பீடமாகவும், சமத்துவ பீடமாகவும், ஐஸ்வர்யம் மற்றும் ஆரோக்ய பீடமாக திகழும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வேறெங்கும் காணமுடியாத வகையில் மிகச்சிறப்பான முறையில், அழகான முகத்துடன், காண்போரைக் கவரும் புன்சிரிப்புடன் வெள்ளிக்கவசத்தில் காட்சி தரும் லக்ஷ்மி குபேரர் காட்சி நம்மனதில் ஒருவித பரவசத்தை ஏற்படுத்துகிறது. இடது கையில் சங்கநிதி, வலது கையில் பதுமநிதியுடன் கலசத்தை அணைத்துக் கொண்டு லட்சுமி அம்மையாருடனும், துணைவி சித்ரலேகா, பத்ரா எனும் சித்தரிணீயுடனும் இப்பீடத்தில் காட்சியளிக்கிறார். மூலவர் தன்வந்திரி பகவான் சன்னதி சுற்றியுள்ள பிரகாரத்தில் லட்சுமி கணபதி, மரகதலிங்கம், கார்த்திகைகுமரன், அன்னபூரனி, லக்ஷ்மி நரசிம்மர், கார்த்தவீர்யார்ஜுனர், வாஸ்து பக்வான், ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி, சஞ்சீவி ஆஞ்சநேயர் உள்ளிட்ட 75 பரிவார மூர்த்திகளுடன் 468 சித்தர்கள் சிவலிங்க ரூபமாக உள்ளன.

குபேரன் வரலாறு :

குபேரர் சிவபெருமானின் மீது அதிக பக்தி கொண்டவர். குபேரரின் தவத்தைக் கண்டு சிவன் காட்சி தந்தார். சிவனுடன் அழகின் மொத்த உருவமாகக் காட்சியளித்த பார்வதியைக் கண்ட குபேரன் அழகில் மயங்கிப் போனார். இதனால் ஆத்திரமடைந்த பார்வதி குபேரனின் ஒரு கண்ணை வெடிக்கச் செய்தார். பின், அவர் மன்னிப்புக் கேட்க வெடித்த கண்ணுக்கு பதிலாகச் சிறிய கண்ணை வரமாக தந்தார் சிவபெருமான். அத்துடன், குபேரரின்தவத்தை பாராட்டி காவலர்களில் ஒருவராக சிவன் நியமித்தார். குபேரனை தன தானிய அதிபதியாக லட்சுமி தேவி நியமித்தார். அன்று முதல் இன்று வரை தனத்திற்கும், தானியத்திற்கும் காவலராக இருந்து வேண்டுபவர்களுக்கு செல்வ வளம் தரும் கடவுளாக குபேரன் உள்ளார்.

சிறப்பு யாகங்கள் :

தன்வந்திரி பீடத்தில் 365 நாட்களும் வைபவங்கள் யாகங்களுடன் நடைபெறுகின்றன. தீபாவளி தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதனைத் தவிர்த்து வைகுண்ட ஏகாதசி, அட்சய திருதியை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, பஞ்சமி, திருவோணம், ஸ்வாதி, ஷஷ்டி உள்ளிட்ட தினங்களில் ஸ்ரீ தன்வந்திரி பகவானுடன் இங்குள்ள குபேரருக்கு சிறப்பு வழிபாடும், பிரார்த்தனையும் செய்யப்படுகிறது.

வழிபாடு :

இத்தலத்தில் உள்ள லட்சுமி குபேரரையும், சொர்ணாகர்ஷண பைரவரையும் சிறப்பு யாகங்கள், அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்து புத்தாடைகள் சாற்றி பிரார்த்தனை செய்யுகின்றனர். மேலும் புது வீடு, நிலம், வாகனம் வாங்குவோர், அல்லது வாங்க திட்டமிடுவோர் முன்னதாக இப்பீடத்தில் உள்ள வாஸ்து பகவானுடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரரிடம் கோரிக்கை வைத்து வழிபட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

எப்போது, எப்படிச் செல்வது ?

இத்திரு நாட்டில் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுடன் லட்சுமி குபேரர், விநாயக தன்வந்திரி, பட்டாபிஷேக ராமர் என 75 பரிவார மூர்த்திகளுக்கு ஷண்மதங்களுக்கும் உள்ள தனிக் கோவில் என்றால் அது வேலூர், வாலாஜாபேட்டை உட்பட்ட கீழ்புதுப்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் தான். இப்பீடம் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோவில் நடை  திறக்கப்பட்டிருக்கும். வேலூர் மாநகரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திலும், வாலாஜா ரோடு ரயில் நிலயத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இப்பீட்த்திற்கு வரலாம். சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இத்தலத்தை அடைய பேருந்து வசதிகள் உள்ளது.

வாரந்தோறும் வெள்ளிக் கிழமையன்று இத்தல இறைவனையும், குபேரரையும் வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவ்வாறு வேண்டிய காரியம் நிறைவேறியதும் பக்தர்கள் மூலவருக்கு அபிஷேகம் செய்து, குபேரருக்கு மலர் சூட்டி நிவாரணம் பெறுகின்றனர். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பீடத்தில் மக்கள் நன்மை பெறும் விதத்தில் ஒரு கோடி தாமரை விதைகளை கொண்டு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யாகமும் செல்வ அருள் பெறவும், வழக்கில் வெற்றி பெறவும், பயங்கள் அகலவும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்ப்படவும், வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்க ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் யாகம் செவ்வரளி மற்றும் தாமரை மலர்கள் கொண்டு நடைபெறும் இந்த யாகங்களில் அனைவரும் பங்கேற்று ஸ்ரீ குபேர லக்ஷ்மி அருள் பெற்று நலமுடன் வாழ அன்புடன் அழக்கின்றோம்.  இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் 9443330203

Tuesday, November 6, 2018

Dhanteras 2018 - Diwali 2018 - Amavasai ....

தன்வந்திரி பீடத்தில்தன்வந்திரி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டுஇலவச ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை முகாம் சிறப்பு வைபவங்கள்.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 06.11.2018 செவ்வாய்கிழமை தீபாவளியை முன்னிட்டு பீடத்தில் பிரதிஷ்  டை செய்துள்ள ஸ்ரீ தங்க அன்னபூரணிக்கு சிறப்பு அன்னபூரணி ஹோமம், அபிஷேகம் மற்றும் அன்னபடையலும் நடைபெற்றது. மேலும் பீடத்தில் வருகை புரியும் பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் உடல் பிணி மனப் பிணி நீங்க தீபாவளி லேகிய பிரசாதம் வழங்கலும் நடைபெற்றது. சென்ற 04.11.2018 முதல் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தாந்தெராஸ், தீபாவளி மற்றும் அமாவாசையை முன்னிட்டு நடைபெற்று வருகின்ற ஸ்ரீ குபேர சாம்ராஜ்ய மஹாலக்ஷ்மி யாகத்தின் மூன்றாவது கால யாகம் நடைபெற்றது. நாளை 07.11.2018 அமாவசையில் மஹா பூர்ணாஹுதியுடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கு சிறப்பு அபிஷேகமும், ராகு-கேது யாகம் மற்றும் காளி யாகம் நடைபெற உள்ளது. தன்வந்திரி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று 05.11.2018 முதல் இலவச ஆயுர்வேத மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமானவர் பயன்பெற்று வருகின்றனர். இதில் பேங்க் ஆப் இந்தியா உயர் அதிகாரி திரு. சிதம்பர குமார் அவர்கள், இரத்தினகிரி கனரா வங்கி மேலாளர் திருமதி. சாந்தி அவர்கள் மற்றும் பெங்களூர் கனரா வங்கி ஊழியாளர் திருமதி. கற்பகம் அவர்கள் பங்கேற்றனர். இந்த முகாம் நாளை நிறைவு பெறுகிறது.  இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.











Sunday, November 4, 2018

Kubera Samrajya Mahalakshmi Yagam


Sri Danvantri Arogya Peedam
 conducting
 Kubera Samrajya Mahalakshmi Yagam
From 05.11.2018 to 07.11.2018.

With the blessings of our guruji “Yagnasri Kayilai Gnanaguru” Dr. Sri Muralidhara Swamigal, We are conducting Kubera Samrajya Mahalakshmi Yagam from 05.11.2018 to 07.11.2018 at our Sri Danvantri Arogya Peedam, Walajapet.

ABOUT YAGAM :

By devoting yourself to the Kubera Samrajya Mahalakshmi Yagam, you can attain wealth and prosperity. Homam is essentially the worship of Gods and Goddesses through the medium of fire. A powerful and effective practice was taught in ancient eras by the rishis. By performing this homa, experiencing an inner or spiritual transformation becomes possible. This positive experience further helps in blocking negative karmas that quell your fate and success. Conducting an agnihotra will enable swift recovery from debts as it appeases the deities Lakshmi and Kuberar. It assists in breaking different barriers that block your path from achieving success and accumulating wealth.

LORD LAKSHMI KUBERAR :

Lord Kuberar is revered as the Yakshas leader who helps in procuring wealth for the benefit of mankind. He is further renowned as the Lord of riches in Hindu mythology. Also known as Dhanapathi, Kuberar is said to be sage Vishrava’s son. Ancient texts state that Kuberar is the leader of Uttara disa that signifies the direction of North in Sanskrit. Some scriptures denote that he is Ravana, the Lord of Lanka’s brother. Iconography of this deity explains that he carries a bag or pot of gold coins and wears gold jewelry. The Brahma gave Kuberar immortality and made him the God of prosperity and wealth.

Kuberar is also known as the guardian of earths treasures who distributes wealth to deserving people. Goddess Lakshmi is the Hindu deity of prosperity, wealth, wisdom, generosity and fortune. It is believed that Devi Lakshmi protects devotees from financial worries and removes money-associated woes. Worshipping Devi Lakshmi and Kuberar helps in providing material wealth and comforts. The Rigveda mentions the combined power of these deities and leaders of wealth who are also the storehouse of affluence and other riches.

DAYS FOR CONDUCTING THE YAGNA :

Sri Danvantri Arogya Peedam conducting Kubera Samrajya Mahalakshmi Yagam from 05.11.2018 to 07.11.2018.  Festivals associated with Lord Kubera and Goddess Lakshmi include Dhanteras or Dhantrayodashi. Devotees perform that pious yajna on this day. Another religious event is Sharad Purnima where you can offer your prayers for appeasing these deities. Certain other suitable days include Purnima Tithi and Trayodashi.

For More Details, Contact ;
Sri Danvantri Arogya Peedam,
Kilpudupet, Walajapet – 632513,
Vellore District.
Ph : 04172 230033, 9443330203.

Saturday, November 3, 2018

Pavithrotsavam Celebrations .........


Pavithrotsavam Celebrations
November 12th to November 14th, 2018
(Monday to Wednesday)

Pavithrotsavam is a religious ceremony performed annually for purification. As per scriptures that guide the rituals to be performed in the temples, this religious function is performed every year to maintain a very high level of Divine Power for the deities. This religious program is also a “prayaschitta” event to mitigate the effects of any omissions or shortcomings that might have occurred unknowingly during the worship and services performed to the deities during the year.

The three-day religious ceremony consists of Homam, special abhishekam to Lord Danvantri Mula Murthi and Utsava Murthies and other purification rites in preparation of the Pavitra’s, which are sacred threads in the form of garlands that have been specially procured for this occasion.

On Sunday October 28th, these sanctified “Pavitra’s” will adorn the deities during the “Pavitra Samarpana” sacred ceremony thereby creating an atmosphere charged with religious fervor and divine power to the deities. At the conclusion of the religious ceremony, sponsors will receive the pavitra’s that were adorned on deities. Devotees have an excellent opportunity to participate in this religious event and receive divine blessings.

Event Schedule

Monday, 12th November 2018

3.30 PM : Sankalpam, Deeksha Dharanam and Ankurarpanam.

Tuesday, 13th November 2018

8.00 AM : Vedaparayanam
8.30 AM : Sakala Devatha Thirumanjanam
10.30 AM : Lord Danvantri Thayar Special Alangaram, Archanai, Maha Arthi
11.00 AM : Lord Danvantri Utsavamurthi Abhishekam
12.00 Noon Pavithra Homam
4.30 PM : Sahasranama Archanai
5.00 PM : Pavithra Mantapa Alangaram and Sakala Devatha Pooja
6.00 PM : Maha Shanthi Homam

Wednesday, 14th November 2018

6.30 AM : Suprabhatham with Vedaparayanam
8.00 AM : Sakala Devatha Thirumanjanam
8.30 AM : Sakala Devatha Homam
9.00 AM : Pavithra Abhishekam for Lord Danvantri Mula Murthi
11.00 AM : Special Alangaram, Pavithra Samarpana and Sathumurai
11.45 AM : Maha Poornahuthi
4.00 PM : Shanthi Vaibhavam, Deeksha Visarjanam and Asheervachanam

For More Details, Contact ;
Sri Danvantri Arogya Peedam,
Kilpudupet, Walajapet – 632513,
Vellore District.
Ph : 04172 230033, 9443330203.


Pavithrotsavam .........


தன்வந்திரி பீடத்தில்பவித்ரோத்ஸவம்


ஆகம சாஸ்திர விதிகளுக்குட்பட்டு பகவதாலயங்களில் அனுதினம் செய்யப்படவேண்டிய நித்திய நைமித்திக காம்ய, கர்மங்களில் ற்படும் குறைபாடுகள் மற்றும் இதர தோஷங்களால் உண்டாகும் பகவத் அபசாரங்களிலிருந்து நிவர்த்தி பெற பவித்ரோத்ஸவம் என்னும் வைதீக ஹோமம் (வேள்வி) விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஹோமத்தினால் ஆயுள், ஆரோக்யம், புகழ், ஞானம் போன்ற நற்பலன்கள் கிடைப்பதுடன் நவக்ரஹ, பூத, ப்ரேத, பிசாசுகளால் உண்டாகும் துக்கங்கள், சத்ரு பயம் முதலான அநிஷ்டங்கள் அகலும்.  நான்கு வேதங்களில் சாரமாக தொகுக்கப்பட்ட 1336 மந்திரங்களால் இந்த ஹோமம் செய்யப்பட உள்ளது. இந்த ஹோமத்தின் மூலம் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட பாக்கியம் கிடைக்கும் மேலும் 32 விதமான தோஷங்கள் நிவர்த்திக்கபடும் என்பது திண்ணம்.

இந்த விசேஷமான பவித்ரோத்ஸவம் ஆகமங்களில் விதித்துள்ளபடி வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஆட்சிபுரிகின்ற ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கும், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ பாலரங்கநாதர், ஸ்ரீ பட்டாபிஷேகராமர், ஸ்ரீ சத்தியநாராயணர், ஸ்ரீ கூர்மலக்ஷ்மி  நரசிம்மர், ஸ்ரீ நவநீதகிருஷ்ணர், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்கிரீவர், ஸ்ரீ சஞ்சிவீ ஆஞ்சநேயர், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர், ஸ்ரீ கருடாழ்வார் போன்ற இதர பரிவார மூர்த்திகளுக்கும்  “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி நாளது விளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 26ந்தேதி (12.11.2018) திங்கட்கிழமை மாலை துவங்கி மாதம் 28ம் தேதி (14.11.2018) புதன்கிழமை வரை தினமும் காலை சுமார் 10.00 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை சுமார் 6.30 மணி முதல் 8.00 மணி வரையும் உபய வேத, கிரந்த பாரயணங்களுடன் பூர்ணாஹூதி, சாற்றுமறை, தீர்த்த ப்ரசாத வினியோகங்களுடன் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.  ஹோமத்திற்கு தேவையான நெய், ஹோமத்ரவ்யங்கள் மற்றும் பவித்திர மாலைகளுக்கு உபயம் ஆளித்து திவ்யானுக்ரஹத்திற்கு பாத்திரர்களாகும்படி விண்ணப்பிக்கின்றோம்.

இவ்வைபவத்தை முன்னிட்டு நடைபெறும் கோ பூஜை, வேதபாராயணம், விசேஷ திருமஞ்சனம்,  சகல தேவதா ஹோமங்கள், மஹாபூர்ணாஹூதி,  மஹா தீபாராதனை மற்றும் ஸ்ரீ தன்வந்திரி உற்சவர் தாயார் ரத புறப்பாடு நிகழ்ச்சிகளில் பக்த கோடிகள் பங்கு கொண்டு பகவத்கைங்கர்யத்தில்   கலந்துக்கொண்டு ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் அனுக்கிரகத்துடன்  பரிவாரமூர்த்திகளின் அருள்பெறவும் யக்ஞஸ்ரீ ஸ்ரீ டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகள் பெறவும்  அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203