கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Saturday, April 21, 2018
Chitra Pournami - Gandharva Raja Homam, Swayamvara Kalaparvathi Homam, Santhana Gopala Yagam.
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தில்
சித்ரா பௌர்ணமியில்
முத்தான மூன்று ஹோமங்கள்.
(கந்தர்வ ராஜ
ஹோமம், சுயம்வர கலாபார்வதி யாகம், சந்தான கோபால யாகம் )
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை
ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக மக்களின் நலன் கருதி வருகிற
29.04.2018 ஞாயிற்றுக்கிழமை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஆண்கள் திருமணத்தடை
நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வரகலா பார்வதி யாகம் மற்றும்
தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால ஹோமம் ஆகிய முத்தான மூன்று ஹோமங்கள் காலை
10.00 மணியளவில் நடைபெற உள்ளது.
கந்தர்வ ராஜ ஹோமம் :
திருமணத்தடைகள்
உள்ள ஆண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும், சகல தோஷங்களும்
நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது. மேலும்
பீடத்தில் சென்ற 14
ஆண்டுகளில்
ஏறக்குறைய சுமார் 2500க்கும் மேற்பட்ட கந்தர்வராஜ
ஹோமங்கள் நடைபெற்று எண்ணற்ற ஆண்கள் பங்கு பெற்று பயனடைந்துள்ளார்கள்.
சுயம்வர கலாபார்வதி யாகம் :
திருமணத்தடைகள் உள்ள பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி
சுயம்வரகலா பார்வதி யாகம்
நடைபெற உள்ளது. இந்த
ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை,
கிரகதோஷங்கள்
நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் சுயம்வரகலா பார்வதி ஹோமம்
நடத்தப்பட உள்ளது. இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் பலன்கள் ஏராளம்.
திருமணத் தடைகளும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள்.
மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.
சந்தான கோபால யாகம் :
குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு
விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சங்கல்பம் செய்து சந்தான கோபால யாகம் சிறப்பாக
நடைபெற உள்ளது.
இந்த யாகம் செய்வதின் மூலம் எல்லாவிதமான
தடைகளும் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம்
பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். தம்பதியருக்குள் மிகுந்த அந்யோன்யம் ஏற்படும். நவநீத
கிருஷ்ணனின் பரிபூரண அருளும் கிடைக்கும்.
இந்த ஹோமங்களில் பங்கேற்ககும்
நபர்களுக்கு ஸ்தாபகர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருள் பிரசாதமும் ஆசீர்வாதமும் வழங்க உள்ளார். மேலும் 468 சித்தர்கள்
ஆசீர்வாதமும் கிடைக்கும். இந்த
யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள்,
மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள்,
நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் தானம் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு
இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513,
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
Bank Details :
Name : Sri
Muralidhara Swamigal
Bank Name : State
Bank of India
Account Number :
10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFSC: SBIN0000775
Sri Ramanujar Jayanti 2018....
தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி விழா
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு”
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 21.04.2018 சனிக் கிழமை காலை
10.00 மணியளவில்
சித்திரை மாதம் திருவாதிர நக்ஷத்திரத்தில் ஸ்ரீ ராமானுஜரின் 1001 வது ஆண்டு ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு
ஹோமங்களும் பூஜைகளும் நடைபெற்றது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவைஷ்ணவ குலதில் அவதரித்த
ஸ்ரீராமானுஜர் ஸ்ரீ நமோ நாராயணா மந்திரத்தை
மக்களிடம் உபதேசம் செய்தவர். இவர் ஒரு தத்துவ மேதை. சமூகப்புரட்சியாளர், மனிதாபிமானம்
மிக்க சமுதாயச் சிந்தனையாளர். சம்நோக்கும், சமூக நோகும் கொண்டவர். ராமானுஜர் தாம் ஒரு
வேதாந்தியாக மட்டும் வாழ்ந்திடாமல், சமுதாய நலனில் அக்கறை கொண்டவராகச் செயல்பட்டார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டு, அந்த கோயில் வழிபாட்டை
ஆழ்வார்கள் பாசுரத்தில் கூறியபடி, திருத்தி அமைத்து செயல்படுத்தினார். கோயில் பணியாளர்களில்
அனைத்து தரப்பு மக்கள், பெண்கள் ஆகிய அனைவரும் இறைத் தொண்டில் ஈடுபடும் நடைமுறையை ஏற்படுத்தினார்.
சமுதாய மக்களிடையே சமத்துவம் மலரசெய்வதும், எல்லாரும் ஒற்றுமையாக வாழச் செய்வதும் இவரின்
நோக்கமாகும். இப்படிபட்ட ஸ்ரீவைஷ்ணவ குருவின் அவதார திர்னத்தன்று நாம் அவரை வேண்டி
வணங்கி நலம் பெறுவோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Friday, April 20, 2018
Adi Shankaracharya Jayanti 2018....
ஆதிசங்கரர் அவதார
தினத்தில்
தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ஹோமங்கள்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை
ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 20.04.2018 வெள்ளிக்
கிழமை சித்திரை மாதம் மிருகசீர்ஷ நக்ஷத்திரம், சதுர்த்தி திதியில் அவதரித்த ஸ்ரீமத்
ஆதிசங்கரர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்களும், பூஜைகளும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து
நாளை 21.04.2018 சனிக்கிழமை சித்திரை திருவாதிர
நக்ஷத்திரத்தை ஸ்ரீமத் இராமானுஜருடைய 1001
வது ஆண்டு ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் நடைபெற உள்ளது.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மகான்
ஆதிசங்கரர்!
எளிய விளக்கங்களாலும், அனைவரும்
ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறைகளாலும் இந்து மதத்தை எழுச்சியுறச்
செய்த மகான் ஆதிசங்கரர்! சிவபெருமானின்
அம்சமாகப் போற்றப்படும் ஆதிசங்கரரின் அவதார தினம் இன்று!
கேரளாவின் காலடி என்ற ஊரில்
சிவகுரு - ஆர்யாம்பாள் தம்பதிக்கு, திருச்சிவபேரூர் என்னும் திருச்சூர் வடக்குநாதப்
பெருமானின் அருளால் பிறந்தவர் ஆதிசங்கரர்.
மகாலட்சுமியை ஸ்தோத்திரங்களால் துதித்து, தங்க நெல்லிக்கனிகளைப் பொழியச்
செய்தவர். அந்த ஸ்தோத்திரம்தான் 'கனகதாரா
ஸ்தோத்திரம்.
இவர் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், விஷ்ணு
சஹஸ்ரநாமம், பகவத் கீதை ஆகியவற்றுக்கு
விளக்கம் எழுதிய மகா ஞானி.
மாத்ருகா பஞ்சகம், கோவிந்தாஷ்டகம், ஆத்மபோதம், பஜகோவிந்தம், சுப்ரமண்ய புஜங்கம், மனிஷா பஞ்சக ஸ்தோத்திரம்,
சிவானந்த லஹரி, கனகதாரா ஸ்தோத்திரம்,
சித்தாந்த சாங்கியம், விவேக சூடாமணி ஆகிய
ஸ்தோத்திரம் மற்றும் சாஸ்திர நூல்களை
இயற்றினார்.
ஸ்ரீஆதிசங்கரர் உருவாக்கியதுதான் ஸ்ரீசக்கர வழிபாடு. அம்பிகையை ஸ்ரீசக்கர வடிவில் வழிபடுவது இன்றும்
தொடர்கிறது. இதில் விஞ்ஞானமும், துல்லியமான
கணிதமும் இருப்பதைக் கண்டு இன்றைய விஞ்ஞானிகளும்
வியக்கின்றனர்.
`காலடி'-யில் அவதரித்து,
தம் காலடித் தடங்களை புண்ணிய
பாரதம் முழுவதும் பதித்த மகான் ஆதிசங்கரர்.
தம்முடைய 32-வது வயதில் தாம்
எங்கிருந்து வந்தாரோ அந்தப் பரம்பொருளிடமே
ஐக்கியமாகிவிட்டார். இந்து தர்மத்துக்கு இணையற்ற
அரும் பணிகள் ஆற்றிய மகான்
ஆதிசங்கரரின் அவதார தினத்தில், அவருடைய
திருவடிகளைப் பணிந்து புனிதமடைவோம்!
Thursday, April 19, 2018
Dakshinakali Yagam
Dakshinakali YagamAt Sri Danvantri Peedam.
With the
devine blessings of our Guruji “Kayilai
Gnanaguru” Dr. Sri Muralidhara Swamigal, Sri Danvantri Arogya Peedam,
Walajapet conduting Dakshinakali Yagam with on 8th May 2018
Krishnapaksha Ashtami ( Theipirai Ashtami) from 5.00 PM to 8.00 PM. The word
Kali came from the sankrit word Kaala. Actually KalI is the correct
pronunciation. Kalii means who wins the period(time). Another meaning is dark
in colour. So we too call as Kalii. Maa Kali takes away our darkness. She takes
away the darkness from everyone who strives for perfection by performing the
spiritual disciplines of purifying austerities. “Kala” also means time, and
Kali means the One Who is Beyond Time. In the form of Prakrithi, Mother Nature,
Kali dances on the field of consciousness, depicted as the broad chest of Lord
Shiva. She dances with wild and unselfconscious abandon. She is Mukthi, the
primal energy of spiritual freedom.
Kali Matha
is the Energy of Wisdom (Gnana sakthi), and by Her Grace all knowledge is
conceived, and all wisdom is intuited. With Her wisdom, Kali takes away the
darkness of the external world. Then She bestows the True Light of the inner
world. Her love and her grace are beyond what words can describe. Maa Kali is
our Mother, and the Mother of all the universes. With Her love we become
unattached, and free from action and reaction, we become a silent witness
resting in universal delight.
Benefits of Dakshinakali Homam :
When one
can reside within, without identification or attachment to the ever-changing
external influences, then the Supreme Truth can be realized. This is the path
that Mother Kali shows us. By spreading Her darkness over worldly desire, Kali
makes seekers totally oblivious to the transient external elements. They then
become totally contained the Self. To worship Mother Kali, we perform Her puja,
sing Her names, recite Her mantras, and remember Her in both times of ease and
in times of difficulties.
Worship and Celebrations at Our Prathyangira Devi Temple
Kali
worship is performed daily at our Devi Mandir as part of the Cosmic Puja. A
grand Kali Puja and Dakshinakali Homam is held on 8th May 2018
Krishnapaksha Ashtami ( Theipirai Ashtami) from 5.00 P.M to 8.00 P.M. This
Homam and Pooja is an occasion to call
out the Divine Mother Kali to take away the darkness of ignorance from our
minds, and to illuminate our lives with Divine Light and True Wisdom.
For more details, Contact :
Sri Muralidhara
Swamigal
( Founder and
Peedathipathi ),
Sri Danvantri
Arogya Peedam,
Kilpudupet,
Walajapet - 632513,
Phone : 04172-230033 / 09443330203
Email : danvantripeedam@gmail.com
Chitra Pournami 2018............
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை
ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தில் வருகிற 29.04.2018 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணிக்கு 468 யாக குண்டங்களில் 468 பேர் பங்கேற்கும்
நாளும்
நன்மை தரும் 468 சித்தர்கள் யாகம்,
22ஆம் ஆண்டு மஹேஸ்வர பூஜை
ஜோதிடர்கள் குடும்ப நலன் கருதி மாபெரும்
தன்வந்திரி ஹோமம்
ஆண்-பெண் திருமணத்தடை நீக்கும் சுயம்வரகலா
பார்வதி ஹோமம்
நக்ஷத்திர தோஷம் நீக்கும் 27 நக்ஷத்திர ஹோமம்
நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 29.04.2018 ஞாயிற்று கிழமை காலை
10.00 மணிக்கு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை
ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி 468 யாக குண்டங்களில் 468
பேர் பங்கேற்கும் நாளும் நன்மை தரும் 468 சித்தர்கள் யாகம், 22ஆம் ஆண்டு மஹேஸ்வர பூஜை,
ஜோதிடர்கள் குடும்ப நலன் கருதி மாபெரும் தன்வந்திரி ஹோமம், ஆண்-பெண் திருமணத்தடை நீக்கும்
சுயம்வரகலா பார்வதி ஹோமம், நக்ஷத்திர தோஷம் நீக்கும் 27 நக்ஷத்திர ஹோமம், ஸ்ரீ சத்ய
நாராயண ஹோமம், இராகு-கேது அன்னாபிஷேகம், அன்ன யக்ஞம், சிவ பஞ்சாட்சர யாகம் நடைபெறுகிறது.
சித்தர்கள் "சித்தர்"
என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது
பொருள். இயமம், நியமம், ஆதனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி
முதலிய எட்டு வகையான யோகாங்கம்
முலம் எண் பெருஞ் சித்திகளை
பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.
சித்தர்கள் இயல்புகள்
சித்தர்கள்
பொது வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று
தனி வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கி
நாடு, நகரம், மொழி, இனம்
என அனைத்தையும் கடந்த இயற்கையோடு இயற்கையான
வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஆவார். சித் - அறிவு,
சித்தை உடையவர்கள் சித்தர்கள். நிலைத்திருக்கும் பேரறிவு படைத்தவர்கள் சித்தர்கள்.
சித்தர்கள்
என்றால்
நிறைமொழி
மாந்தர்
என்னும்
அறிஞர்கள்
என்றும்
பொருள்படுவதாக
பழந்தமிழ்
நூல்கள்
கூறுகின்றன.
மருத்துவத்தோடு
யோகம்,
சோதிடம்,
மந்திரம்,
இரசவாதம்
போன்ற
அரிய
அறிவியலையும்
தந்தவர்கள்
சித்தர்கள்
என்று
அழைக்கப்பட்டனர்.
சித்தர்கள்
இயற்கையை கடந்த (supernatural) சக்திகள் உடையவர்கள்
என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும்
இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை
சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே
தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ,
இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள்
இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன.
ஆயினும் இவர்கள் வெறும் பௌதிகவாதிகள்
(materialists) அல்ல. மெய்ப்புலன் காண்பது
அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிஜ
நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.
இத்தகைய அற்புதமான சக்தி படைத்த சித்தர்களுக்கு
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களில்
உள்ள சித்தர்கள் மற்றும் மஹான்களின் அனுஷ்டானம், அதிஷ்டானங்களுக்கு சென்று பிரார்த்தனை
செய்து அங்கிருந்து ம்ருதி (புநித மண்) கொண்டு வந்து சிவ பஞ்சாட்சர யந்திரத்துடனும்
மந்திரத்துடனும் 15 நாட்கள் அதிருத்ர மஹாயாகம் செய்து 468 சித்தர்களுக்கு 468 சிவலிங்கம் என்ற வகையில் தன்வந்திரி பீடத்தில்
பிரதிஷ்டை செய்து ஒவ்வொரு பிரதோஷ நாட்களிலும் பௌர்ணமி நாட்களிலும் மற்றும் விசேஷ தினங்களில்
சிறப்பு பூஜைகளும் சித்தர்கள் யாகமும் நடைபெற்று வருகிறது. மேலும் சித்ரா பௌர்ணமியில் 468 யாக குண்டங்கள் அமைத்து
468 குண்டங்களில் சாதுக்கள், மஹாங்கள், சித்தர்கள், சிவனடியார்கள், ஜோதிடர்கள்,
பக்தர்கள் பங்கேற்கும் மாபெரும் சித்தர்கள் யாகமும், சப்த ரிஷி பூஜையுடன் மஹேஸ்வர்
பூஜையும், ஸ்வாமிகளின் பெற்றோரும் குருவுமான ஸ்ரீமதி கோமளவல்லி சமேத ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு 21 ஆண்டுகளாக
குரு பூஜை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகிற 29.04.2018 ஞாயிற்று
கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி
வரை மேற்கண்ட சித்தர்கள் யாகமும், ஜோதிடர்கள் குடும்பநல வேள்வியும், நக்ஷத்திர சாந்தி
ஹோமமும், குழந்தை வரம் வேண்டி சந்தானகோபால யாகமும், ஆண் – பெண் திருமணத் தடை நீக்கும்
சுயம்வரகலா பார்வதி யாகத்துடன் கந்தர்வ ராஜ ஹோமமும், சிவ பஞ்சாட்சர ஹோமத்துடன் மஹா
தன்வந்திரி ஹோமமும், சத்ய நாராயண ஹோமமும் 468 யாக குண்டங்களில் நடைபெறுகிறது. இதனை
தொடர்ந்து அன்ன ய்க்ஞத்துடன் இராகு – கேதுவிற்கு அன்னாபிஷேகமும் 10 க்கு மேற்பட்ட சிவாச்சாரியர்கள்,
500க்கு மேற்பட்ட சாதுக்கள் மற்றும் ஜோதிடர்கள் பங்கேற்கும் விதத்தில் நடைபெற உள்ளது.
மேற்படி வைபவத்தில்
மக்கள் அனைவரும் கலந்துகொண்டு நாளும் நன்மை தரும் 468 சித்தர்களை வணங்கி ஸ்ரீ ஆரோக்ய
லக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் பேரருளுடன் 75 பரிவார மூர்த்திகளின் ஆசிபெற
பிரார்த்திக்கின்றோம். இந்த யாகத்திற்கு
புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள்,
பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர்
வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து
கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513,
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 –
230033, செல் – 9443330203
Bank Details :
Name : Sri Muralidhara Swamigal
Bank Name : State Bank of India
Account Number : 10917462439
Branch : Walajapet
Bank Code: 0775
IFSC: SBIN0000775
Subscribe to:
Posts (Atom)


