Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, December 16, 2017

ஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்...

தன்வந்திரி பீடத்தில் புத்தாண்டில்
ஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும்
ஐந்து ஹோமங்கள்.

யாகம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள்.......
ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும் சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான கோரிக்கைகள்) அவற்றை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார் . மேலும் தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.

வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி  உலக நலன் கருதி வருகிற ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு 01.01.2018 திங்கள் கிழமை, காலை 10.00 மணியளவில் கீழ்கண்ட ஐந்து ஹோமங்கள் நடைபெறவுள்ளது.

  1. கல்வியில் சிறந்து விளங்க ஸ்ரீ சரஸ்வதி ஹோமம்.
  2. பில்லி சூனியம், எதிரிகள் விலக மஹா சுதர்ஸன ஹோமம்.
  3. ஆயுள் பயம் நீங்க ஆயுஷ்ய ஹோமம்.
  4. நீண்ட ஆயுள் பெற மஹா தன்வந்திரி ஹோமம்.
  5. வாழவில் வளம் பெற குபேர லட்சுமி ஹோமம்.


ஆகிய ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்களாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு காலை கோபூஜையும், கணபதி ஹோமமும், வேத பராயணமும், கலச பூஜையும், சிறப்பு அர்ச்சனையும், ப்ரார்த்தனையும் நடைபெறவுள்ளது. பக்தர்கள் மற்றும் மாணவ மாணவிகள் இந்த யாகங்களில் பங்கு கொண்டு அதிக மதிப்பெண் பெறவும் மக்கள் பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லை, நோய்கள், நீங்கி ஆயுள் ஆரோக்யத்துடன் குபேர சம்பத்து பெற்று வாழ பிரார்திக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203


அமாவாசை யாகத்துடன் ஸ்ரீ ஹனுமன் ஜயந்தி விழா

தன்வந்திரி பீடத்தில் அமாவாசை யாகத்துடன்
ஸ்ரீ ஹனுமன் ஜயந்தி விழா

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி வருகிற டிசம்பர் மாதம் 17ம் தேதி அமாவாசை மற்றும் ஹனுமன் ஜயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ சுதர்சன ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், ஹனுமந்த் ஹோமம் மற்றும் அமாவாசை யாகம் நடைபெற உள்ளது. மேலும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சனேயருக்கும் செந்தூர ஆஞ்சனேயருக்கும் விசேஷ அபிஷேகமும், வெண்ணை, வடை மாலை, துளசி மாலை, பழமாலை, வெற்றிலை மாலை மற்றும் புஷ்ப மாலை சார்த்தி புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது.

மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல  புராணங்களிலும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பது  தான். எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும், கொடுக்கிறவர் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே  உண்டு. ஹயக்கிரீவர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி போன்று ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்எல்லோரையும் கலங்கச் செய்யும் சனிபகவனையே ஒரு முறை இவர் கலங்கச் செய்தார். இதனால் சனி தோஷத்தினால்  பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு.
சொல் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பது போல், "ராமா” என  சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப் பூச்சும், வெற்றிலை  மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம். பாரத புண்ணிய பூமியில் தொண்டரையே  தெய்வமாக போற்றப்படும், மேன்மையை ஆஞ்சநேயர் வரலாற்றில் காணலாம்.

அனுமன் அவதார நாளில் தன்வந்திரி பீடத்தில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு யாகம் நடைபெற உள்ளது அத்துடன் அனுமன் ஜெயந்தியன்று.


ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி. அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும், குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்திஆராதிக்க வேண்டும். இந்த தகவலை ஸ்தாபகர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

Friday, December 15, 2017

தைலாபிஷேகத்துடன் 108 கலச தீர்த்த அபிஷேகம்...

வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் .
தைலாபிஷேகத்துடன் 108 கலச தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை அனந்தலை மதுரா கீழ்பதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக மக்களின் உடல் பிணி தீர 8 அடி உயரமுள்ள ஸ்ரீ தன்வந்திரி முலவருக்கு 14ம் ஆண்டு தைலாபிஷேக திருவிழாவும் 108 கலச தீர்த்த அபிஷேகம் இன்று 15.12.2017 வெள்ளிக் கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெற்றது.

தன்வந்திரி பகவான் நோய் தீர்க்கும் கடவுள் இவர் மகா விஷ்ணுவின் அவதாரம் கைகளில் அமிர்த கலசம் ஏந்தியவர் மருத்துவ கடவுள் உலக மக்களின் உடல் பிணி உள்ளத்து பிணி நீக்கி ஆயுஙள ஆரோக்கியத்தை தருபவர், இவரை வழிபடுவதால் அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தைலாபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள் :


இங்கு தைலம் என்பது நல்ல எண்ணையை கொண்டு முலவர் தன்வந்திரி பகவானுக்கு அபிஷேகம் நடைபெற உள்ளது. நல்ல எண்ணை என்பது எள் விதையில்ருந்து எடுக்கப்படுவதாகும். எள் என்பது சனீஸ்வர பகவானுக்கு வேண்டிய விஷேச திரவியமாகும். எள்ளை கொண்டு தான் சனி கிரக தோஷம் உள்ளவர்களுக்கு பரிகார பிரித்தியாக எள்ளு தானமும் எள்ளு ஹோமமும் எள்ளு எண்ணையை கொண்டு தெய்வங்களுக்கு எண்ணை காப்பு சாற்றுவது போன்ற வைபவங்களுக்கு சனி ப்ரீத்திக்காகவும், பித்ரு தோஷ நிவர்த்திக்காகவும் இதர ருண ரோக நிவாரணத்திற்காக. இத்தகைய நல்லெண்ணெயினால் நோய் தீர்க்கும் கடவுளான தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகம் செய்வதால் நோய் உற்றவர்கள் விரைவில் குணமடையவும் ஆயுள் தோஷம் நீங்கவும் மனத் தடைகள் மன நோய்கள் நீங்கவும், பித்ரு சாபம் அகலவும், நவகிரகங்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் கஷ்டங்கள் குறையவும் ஏழறை சனி அஷ்டம சனி அர்ராஷ்டம சனி போன்ற சனி கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கவும் வாய் புண் வயிற்று புண் குடல் சம்மந்தமான நோய்கள் கண் சம்மந்தமான நோய்கள் ஆரோக்கிய சம்மந்தமான குறைகள் நீங்குவதற்க்கு வழி வகை செய்யும். வருடாந்திர தைலாபிஷேகம் பூர்த்தியுடன் இன்று 15.12.2017 வெள்ளிக் கிழமை 108 மூலிகை தீர்த்தத்தினால் தன்வந்திரி பகவானுக்கு மஹா அபிஷேகமும், சிறப்பு நோய் நிவாரண ஹோமமும் விசேஷ வழிபாடுகள் செய்யபட்டு தைலாபிஷேகம் நிறைவடைந்தது. இந்த விஷேசமான வைபவத்தில் எராளமான பக்தர்கள் பங்கேற்று பிராத்தனை செய்தனர். இந்தத் தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.




Thursday, December 14, 2017

108 சுமங்கலிபூஜை

108 சுமங்கலிகள் பங்கேற்ற

சுமங்கலிபூஜை நடைபெற்றது.


தம்பதிகள் நலன் கருதி இன்று 14.12.2017 வியாழக் இழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ சூக்த ஹோமம் மற்றும் கர்ப ரக்ஷாம்பிகை யாகத்துடன் 108 சுமங்கலிகள் பங்கேற்ற சுமங்கலி பூஜையும் நடைபெற்றது.

இதில் 108 சுமங்கலிகள் கலந்து கொண்டு கணவன் மனைவி ஒற்றுமை வேண்டியும், மாங்கல்ய பலம் கிடைக்கவும், நீண்ட ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் கிடைக்கவும், தம்பதியரிடையே சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை வேண்டியும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர வேண்டியும், குழந்தை பாக்யம் போன்ற பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து சுமங்கலி பூஜையும் கூட்டுப்பிரார்த்தனையும் யாகத்துடன்  நடைபெற்றது.

இந்த பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட சௌபாக்ய பொருட்களான மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு, கண்ணாடி, சீப்பு, வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம், அட்சதை, புடவை, ஜாக்கெட் ஆகியவைகள் சுமங்கலிகளுக்கு வழங்கப் பட்டது . இதனை தொடர்ந்து 15.12.2017ல் மூலவர் தன்வந்திரிக்கு 108 கலசங்களில், 108 மூலிகை கொண்டு சிறப்பு அபிஷேகத்துடன் வருஷாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





Monday, December 4, 2017

Karthikai Deepam - Sandal Alangaram for Lord Danvantri

Karthikai Deepam - Sandal Alangaram for Lord Danvantri at Sri Danvantri Peedam, Walajapet. Thanks to " DINAMANI, SAKSHI, ANDHRA JYOTHI " Daily News Papers 04.12.2017....



Sunday, December 3, 2017

கார்த்திகை பௌர்ணமி சந்தன அலங்காரம்........

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு சந்தன அலங்காரத்தில் ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் திருக்காட்சி.


Friday, November 24, 2017

தன்வந்திரி பீடத்தில் பதினோரு ஹோமங்கள்.

தன்வந்திரி பீடத்தில்
பதினோரு ஹோமங்கள்.

உலக நலன் கருதி வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி இன்று 24.11.2017 வெள்ளிக்கிழமை, திருவோண நட்சத்திரம், சஷ்டி திதி, வாஸ்து நாள் முன்னிட்டு ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஹோமம், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம், ஸ்ரீ குபேர லக்ஷ்மி யாகம், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் யாகம், ஸ்ரீ தன்வந்திரி யாகம், ஸ்ரீ சுதர்சன ஹோமம், கார்த்தவீர்யார்ஜுனர் யாகம், வாஸ்து ஹோமம், சத்ரு சம்ஹார யாகம், திருஷ்டி துர்கா ஹோமம், பிரத்யங்கிரா ஹோமம், சூலினி ஹோமம் போன்ற பதினோரு யாகங்கள் நடைபெற்று அதுக்குறிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அராதனயும் நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்கள் ஆரோக்யம், கல்வி, செல்வம், ஆனந்தம், குடும்ப க்ஷேமம் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.


இதில் ஏராளமான நபர்கள் பங்கேற்று ஹோம, அபிஷேக பிரசாதங்கள் பெற்று சென்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.