Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, October 26, 2017

காலபைரவர் ஜெயந்தி 2017

நவம்பர் 10, 11ல் தன்வந்திரி பீடத்தில்
காலபைரவர் ஜெயந்தி மஹா யாகம்


இறைவன் நம்மைக் காத்து இரட்சிப்பவன் என்று எண்ணி நாம் அனைவரும் ஆலயங்களுக்குச் சென்று பிரதான கடவுளை வேண்டி வணங்குகிறோம். ஆனால் அந்த ஆலயத்தில் எல்லோரும் பரிவார தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுவது இல்லை என்றால் மிகையாகாது.  சிலர் ஆலயங்களில் உள்ள பரிவார மூர்த்திகளான ஆஞ்சனேயர், சக்ரத்தாழ்வார், சரபேஸ்வரர், கால பைரவர், தக்ஷிணா மூர்த்தி போன்ற பல வகையான மூர்த்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபட்டு வருகின்றனர். தற்பொழுது பரிவார மூர்த்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம் தேவைகளுக்காக வழிபட்டு வருகின்றோம். அதில் காக்கும் கடவுளாக உள்ள பைரவர்களுக்கு விசேஷ தினங்களிலும் தேய்பிறை அஷ்டமியிலும், ஜென்மாஷ்டமியிலும், காலாஷ்டமியிலும் சிறப்பு பூஜைகள் நம்பிக்கையுடன் செய்து வருகிறோம்.


தன்வந்திரி பீடத்தில் அஷ்ட பைரவருடன் மஹா காலபைரவர்...
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இந்தியாவில் எங்கும் இல்லாதவாறு ஒரே கல்லில் பல சிறப்புகள் கொண்ட சொர்ண பைரவருக்கும், ஒரு கல்லில் மஹா பைரவரும் ஆதார பீடத்தில் அசிதாங்க பைரவர், சம்ஹார பைரவர், ருரு பைரவர், க்ரோதன பைரவர், சண்ட பைரவர், கபால பைரவர், ருத்ர பைரவர், உன்மத்த பைரவர் என எட்டுத் திருநாமங்கள் கொண்டஅஷ்ட பைரவர்களை திசைக்கு இரண்டு பைரவர் வீதம் பிரதிஷ்டை செய்து ஆண்டுதோறும் 74 பைரவர் ஹோமங்கள், 64 பைரவர் ஹோமங்கள், தச பைரவர் ஹோமங்கள், அஷ்ட பைரவர் ஹோமம் போன்ற பல ஹோமங்களும் சிறப்பு பூஜைகளும் பக்தர்கள் நலனுக்காகவும் உலக நலனுக்காகவும் ஸ்வாமிகள் தன்வந்திரி பீடத்தில் செய்து வருகிறார்.


பைரவர் ஜெயந்தி விழா....
இந்தாண்டு பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 10.11.2017 வெள்ளிக்கிழமை மற்றும் 11.11.2017 சனிக்கிழமை ஆகிய இரு தினங்கள் கால பைரவர் அருள் கிடைக்கவும் பிதுர் தோஷம், திருமணத்தடை விலகவும்,  வியாபாரம் செழிக்க, வழக்கில் வெற்றி பெற, குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை அதிகரிக்க, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க,  தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெற, செல்வச் செழிப்பு ஏற்பட, சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்க,பிரம்மஹத்தி தோஷம் நீங்க, எதிரிகள் தொல்லை நீங்க, பில்லி, சூன்யம், திருஷ்டி அகல, அக்கம் பக்கத்தவர்களின் தொல்லைகள் அகல, யமபயம் நீங்க,வெளி நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் நீங்க நடைபெறும்  மஹா யாகங்களிலும், அபிஷேகங்களிலும், அர்ச்சனைகளிலும் சங்கல்பம் நடைபெறவுள்ளது. சிறப்பு அலங்காரத்துடன் நடைபெறும் பைரவர்  ஜெயந்தி விழாவில் அனைவரும் பங்கேற்று பலன் பெற அழைக்கின்றோம். 


காலபைரவர் ----பைரவரின் சிறப்புகள்...
சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. பைரவர், எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள் புரிகிறார். ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. சிவபெருமான் வீரச்செயல்களைச் செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக்கோலம் என்று புராணம் சொல்லும் பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன. பைரவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம்,
தண்டம் ஏந்தி காட்சி தருவார். பைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பிக்கப்படுகிறது. 

தன்வந்திரி பீடத்தின் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் / சொர்ண கால பைரவர்.....
சொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சிவபெருமானின் வடிவங்களுள் பைரவர் ஒரு அம்சமாகும் இந்த பைரவர், அமர்ந்த திருக்கோலத்தில் காணப்படுவார். தன்வந்திரி பீடத்தில் 4 அடி உயரத்தில் பைரவி என்ற திருநாமம் பெற்ற தனது மனைவியைத் தனது மடியில் இருத்திக்கொண்டு மலர்ந்த தாமரை மலர் முகத்துடன் சடைமுடியில் பிறைச்சந்திரன் சூடியும், கரங்களில் தாமரை மணிகள் பொதித்த சங்கம், அபய ஹஸ்தத்தொடு பொன் சொரியும் குடம் ஒரு கரத்தில் தாங்கி, மறுக்கரத்தால் ஆதி சக்தியை ஆலிங்கனம் செய்தபடியும் காட்சி அளிக்கிறார். மறு கரத்தில் சூலமும். கிரீடமும், பட்டு வஸ்திரமும் அணிந்து. தம்பதி சமேதராகக் காட்சி அளிக்கிறார் இவருக்கு அஷ்டமி திதி மற்றும் பவுர்ணமி நாளில், வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் இவரை பொன், பொருள், குடும்ப க்ஷேமம் வேண்டியும் சகல சம்பத்துகளும் பெறவும் வழிபட்டு வருகின்றனர். தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமி யாகம் முடிந்ததும். ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட ஸ்வர்ண காசு, ஸ்வர்ண யந்திரம், ஸ்வர்ண ரக்ஷை போன்றவை ஸ்வர்ணாகர்ஷண பைரவரின் பிரசாதங்களாக வழங்கப்படுகிறது. வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய விரும்பும் ஒவ்வொரு பக்தரும் இந்த பைரவரை தரிசித்து, பிரசாதங்கள் பெற்று ஆனந்தமான வாழ்வு வாழலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் தொடர்புக்கு :


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203
Web: www.danvantritemple.org | www.danvantripeedam.blogspot.in 
Email : danvantripeedam@gmail.com 



கந்த ஷஷ்டி சத்ரு சம்ஹார ஹோமம்

தன்வந்திரி பீடத்தில்
கந்த ஷஷ்டியை முன்னிட்டு
சத்ரு சம்ஹார ஹோமம்  ஆறு நாட்கள் நடைபெற்றது

வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் இன்று 25.10.2017 புதன் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் சத்ரு உபாதைகள் அகலவும் கந்த ஷஷ்டியை முன்னிட்டு சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமம் கந்த ஷஷ்டி துவக்க நாளான 20.10.2017 வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை நடைபெற்றது.

மேற்கண்ட ஹோமம் நோய்கள் அகலவும், எதிரிகள் விலகவும்  குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், குழந்தை பாக்யம் கிடைக்கவும் ,வேலைவாய்ப்பு அமையவும்,  கடன் தொல்லை நீங்கவும் மேலும் விரும்பிய பலனைப் பெறவும் நடைபெற்றது.

கந்த புராணத்தில் முருகப் பெருமானின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம் பெறுபவர்கள் கார்த்திகை பெண்கள். பரணி, கிருத்திகை, ரோகிணி, பூசம், உத்திரம், விசாகம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு.

கார்த்திகைப் பெண்களுக்கு வேலூர் மாவட்டம் வாலஜாபேட்டையில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பெற்ற தாய் எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம் வளர்ப்புத்தாய் என்று அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்திலும், வளர்ப்புத்தாய்க்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்திலும் முருகப்பெருமானே பார்வதி தேவிக்கு மேலாக கார்த்திகை பெண்களை நேசித்தார் என்ற வகையிலும் உலகில் எங்கும் இல்லாதவாறு ஆறு பெண்களுடன் தாமரை பீடத்தில் முருகருக்கே உரிய மயில், பால்கிண்ணம், சேவல், வேல், சூரியன், சந்திரன் என்ற பொருள்களுடன் மலர்ந்த முகத்துடன் ஞானக்குழந்தையாக 468 சித்தர்களுக்கும் ஞானகுருவாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் புதுமையான முறையில் விக்ரஹம் பிரதிஷ்டை செய்து சஷ்டி, கிருத்திகை, விசாகம், போன்ற நாட்களில் சிறப்பு ஹோமங்களை செய்து வருகிறார்.

சென்ற 20.10.2017 முதல் 25.10.2017 வரை கந்த ஷஷ்டியை முன்னிட்டு  நடைபெற்ற  சத்ரு ஸம்ஹார ஹோமத்திலும்தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையிலும், அபிஷேகத்திலும்,  பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு கார்த்திகை குமரனையும், கார்த்திகை பெண்களையும், 468 சித்தர்களையும் ஒரு சேர தரிசித்து, உடல் மற்றும் மனரீதியான நோய்களிலிருந்து நிவாரணம் பெற பிரார்த்தனை செய்தனர்.  இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





Thursday, October 19, 2017

கந்த ஷஷ்டி-சத்ரு சம்ஹார ஹோமம்

தன்வந்திரி பீடத்தில்
கந்த ஷஷ்டியை முன்னிட்டு
சங்கடம் தீர்த்து சந்ததி தரும்
சத்ரு சம்ஹார ஹோமம்


வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற 20.10.2017 வெள்ளிக்கிழமை முதல் 25.10.2017 புதன் கிழமை வரை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் சத்ரு உபாதைகள் அகலவும் கந்த ஷஷ்டியை முன்னிட்டு சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெறவுள்ளது.

கந்த ஷஷ்டியின் சிறப்பு:

விரதங்களுள் கலியுக வரதனும் கண்கண்ட தெய் வமுமான கந்தனுக்குரிய சிறந்த விரத நாட்கள் மூன்றாகும்.அவை முறையே சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், கந்தசஷ்டி விரதம் ஆகியவையாகும். இவற்றுள் மிகச் சிறந்த விரதம் கந்த சஷ்டி விரதமேயாகும்.
நாளை  கந்த சஷ்டி விரதம் ஆரம்ப மாகுவதுடன், எதிர்வரும் 25அம் தேதி வரை விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

கந்தசஷ்டி விரத முறைகளை ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்துப் பிரதமை முதல் சஷ்டி வரையிலான ஆறு நாட்களில் முருகன் பக்தர்கள் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

கந்தசஷ்டி விரதத்தின் பலன்:

நோய்கள் அகலவும், எதிரிகள் விலகவும்  குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், குழந்தை பாக்யம் கிடைக்கவும் ,வேலைவாய்ப்பு அமையவும்,  கடன் தொல்லை நீங்கவும் மேற்கண்ட யாகம் தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெறவுள்ளது "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.
எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த யாகமாகும். மேலும் விரும்பிய பலனைப் பெறலாம். கந்த புராணத்தில் முருகப் பெருமானின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம் பெறுபவர்கள் கார்த்திகை பெண்கள். பரணி, கிருத்திகை, ரோகிணி, பூசம், உத்திரம், விசாகம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு). கார்த்திகைப் பெண்களுக்கு வேலூர் மாவட்டம் வாலஜாபேட்டையில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பெற்ற தாய் எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம் வளர்ப்புத்தாய் என்று அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்திலும், வளர்ப்புத்தாய்க்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்திலும் முருகப்பெருமானே பார்வதி தேவிக்கு மேலாக கார்த்திகை பெண்களை நேசித்தார் என்ற வகையிலும் உலகில் எங்கும் இல்லாதவாறு ஆறு பெண்களுடன் தாமரை பீடத்தில் முருகருக்கே உரிய மயில், பால்கிண்ணம், சேவல், வேல், சூரியன், சந்திரன் என்ற பொருள்களுடன் மலர்ந்த முகத்துடன் ஞானக்குழந்தையாக 468 சித்தர்களுக்கும் ஞானகுருவாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் புதுமையான முறையில் விக்ரஹம் பிரதிஷ்டை செய்து சஷ்டி, கிருத்திகை, விசாகம், போன்ற நாட்களில் சிறப்பு ஹோமங்களை செய்து வருகிறார். நாளை 20.10.2017 முதல் 25.10.2017 வரை கந்த ஷஷ்டியை முன்னிட்டு  நடைபெறும்  சத்ரு ஸம்ஹார ஹோமத்திலும்,  தொடர்ந்து நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையிலும், அபிஷேகத்திலும்,  பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு கார்த்திகை குமரனையும், கார்த்திகை பெண்களையும், 468 சித்தர்களையும் ஒரு சேர தரிசித்து, உடல் மற்றும் மனரீதியான நோய்களிலிருந்து நிவாரணம் பெறவேணுமாய் கேட்டுக்கொள்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203


ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்.

தன்வந்திரி பீடத்தில்
 ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்.

யாகம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள்.......
ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும் சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான கோரிக்கைகள்) அவற்றை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார் . மேலும் தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.

தன்வந்திரி பீடத்தில் ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்கள்.

வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி  உலக நலன் கருதி வருகிற 12.11.2017  ஞாயிற்று கிழமை, காலை 10.00 மணியளவில் கீழ்கண்ட ஐந்து ஹோமங்கள் நடைபெறவுள்ளது.

1.   கல்வியில் சிறந்து விளங்க ஸ்ரீ சரஸ்வதி ஹோமம்.
2.  பில்லி சூனியம், எதிரிகள் விலக மஹா சுதர்ஸன ஹோமம்.
3.  ஆயுள் பயம் நீங்க ஆயுஷ்ய ஹோமம்.
4.  நீண்ட ஆயுள் பெற மஹா தன்வந்திரி ஹோமம்.
5.  வாழவில் வளம் பெற குபேர லட்சுமி ஹோமம்.

ஆகிய ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்களாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு காலை கோபூஜையும், கணபதி ஹோமமும், வேத பராயணமும், கலச பூஜையும், சிறப்பு அர்ச்சனையும், நவராத்திரி ப்ரார்த்தனையும் நடபெறவுள்ளது. அரயாண்டு தேர்வை முனிட்டும் ஐப்பசி மகம் நட்ச்சத்திரத்தை முன்னிட்டும் நடைபெறும் இந்த யாகங்களில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கு கொண்டு அதிக மதிப்பெண் பெறவும் மக்கள் பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லை, நோய்கள், நீங்கி ஆயுள் ஆரோக்யத்துடன் குபேர சம்பத்து பெற்று வாழ பிரார்திக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203


Wednesday, October 18, 2017

குபேர லக்ஷ்மி யாகத்துடன் ஆரோக்ய லஷ்மி ஹோமம்

தன்வந்திரி பீடத்தில்
 தீபாவளியை முன்னிட்டு
குபேர லக்ஷ்மி யாகத்துடன்
 ஆரோக்ய லஷ்மி ஹோமம் நடைபெற்றது.

செல்வம் தரும்  லட்சுமி குபேர வழிபாடு

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 18.10.2017 புதன் கிழமை மாலை  4.30 மணிக்கு உலக நலன் கருதி தீபாவளியை முன்னிட்டு மக்கள் ஆரோக்யத்துடன் வாழ்வில் வளத்தையும், செல்வத்தையும்  பெற வேண்டி குபேர லக்ஷ்மி யாகமும் ஆரோக்ய லஷ்மி ஹோமமும் நடைபெற்றது.
லட்சுமி குபேரன்
திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான், குபேரன் மீது கருணை கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார்.திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான், குபேரன் மீது கருணை கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார். இதனால்வாழப் பிறந்தவனுக்கு வடக்குஎன்ற பழமொழி உருவானது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன்லட்சுமி குபேரன்என்று அழைக்கப்படுகிறார்.
தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக, தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து வழிபடும் பழக்கம் உள்ளது.
ஓம் க்ஷய குபேராய      வைஸ்ரவணாய
தந தா நியாதி பதயே         தந்தாந்ய ஸம்ருத்திம்மே
தேவி தாபய ஸ்வாஹா
என்ற குபேரனின் மந்திரத்தை தியானித்து அவனை வழிபட வேண்டும்.
லட்சுமி குபேரரை வழிபட்டால் நீங்காத செல்வம் நிலைத்து இருக்கும்.

 வீட்டில் அமைதி நிலவும். செல்வம் நிலைக்கும். என்பது மக்களின் நம்பிக்கை. மேலும் தீராத நோய்கள் பசிப்பிணி அகலவும். தானியங்களின் விளைச்சல் அதிகம்பெறவும். காரியங்களில் வெற்றி, மனோதைரியம் குழந்தைப் பேறு, அனைத்து காரியங்களில் வெற்றி, தெய்வீக அருள் கிடைக்கவும், கல்வியும் செல்வமும் பெற்று வாழ்க்கையில் சௌபாக்கியங்களுடன்  ஆரோக்யம்,ஆனந்தம் ஜஸ்வர்யத்துடன் வாழவும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 18.10.2017 புதன் கிழமை மாலை  4.30 மணிக்கு உலக நலன் கருதி தீபாவளியை முன்னிட்டு மக்கள் ஆரோக்யத்துடன் வாழ்வில் வளத்தையும், செல்வத்தையும்  பெற வேண்டி குபேர லக்ஷ்மி யாகமும் ஆரோக்ய லஷ்மி ஹோமமும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் மேற்கண்ட யாகத்திலும் இதனை தொடர்ந்து நடைபெற்ற அபிஷேகத்திலும் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்






Lord Danvantri Jayanti

Lord Danvantri Jayanti Celebrations at Sri 

Danvantri Peedam, Walajapet. Thanks to 

"DINAMALAR, DINAMANI, 

SAKSHI, ANDHRA JYOTHI" 

Daily News Papers 18.10.2017.






Tuesday, October 17, 2017

ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா - உலக ஆயுர்வேத தினம்

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
உலக ஆயுர்வேத தினம்-ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று  17.10.2017 செவ்வாய்க்கிழமை திரயோதசி திதி, தன்வந்திரி ஜெயந்தி மற்றும் உலக ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு காலை கோ பூஜை, கணபதி பூஜை, யாகசாலா பூஜை, கலச பூஜை, சூக்த பாராயணத்துடன் 108 மூலிகைகளை கொண்டு மாபெரும் தன்வந்திரி ஹோமமும்,108 கலசங்களில் 108 மூலிகைகளை கொண்டு சிறப்பு மூலிகை தீர்த்த அபிஷேகமும், சிறப்பு சஹஸ்ர நாம அர்ச்சனையும், தீபாவளி மருந்து நிவேதனமும் சதுர்வேத பாராயணமும் நடைபெற்றது.

தீபாவளி மருந்தும் தன்வந்திரி சிறப்பும்

மகாவிஷ்ணு தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள ஐப்பசி திரயோதசி நாளாகும். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாகவும் சென்ற ஆண்டு முதல் உலக ஆயுர்வேத தினமாகவும்  கொண்டாடப்படுகிறதுசிலர் ஐப்பசி ஹஸ்த நட்சத்திரத்தையும், சிலர் ஐப்பசி சுவாதி நட்சத்திரத்தையும் தன்வந்திரி ஜெயந்தியாக கொண்டாடி வருகின்றனர். இவரே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக ஐதீகம். இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறான் என்ற அரிய தத்துவத்தை இந்த அவதாரம் சுட்டிக்காட்டுகி றது.

ஸ்ரீ தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாக, பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும்; முன்னிரு கரங்களில் ஒரு கரத்தில் அமிர்த கலசத்தையும் ஒரு கையில் சீந்தலைக் கொடியுடனும் காட்சி அளிக்கிறார். அக்கால மருத்துவ முறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப் பூச்சிகள் பயன்பட்டனவாம். இப்போதும் இந்த முறையின் பயனை தற்கால மருத்துவம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவேதான் தன்வந்திரி விக்ரஹத்தில் அட்டை பூச்சியும் இடம்பெற்றுள்ளது.

இத்தனை அம்சங்களுடன் கூடிய தன்வந்திரி பகவானை உலக நலன் கருதி, நோயற்று வாழட்டும் உலகு என்ற தாரக மந்திரத்துடன் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைத்து அங்கு மூலவராக ப்ரதிஷ்டை செய்து தினம் தோறும் ஹோமங்கள், ஜபங்கள் மற்றும் கூட்டுப்ரார்த்தனைகள் செய்து வருகிறார். இன்று 13வது ஆண்டாக தன்வந்திரி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பீடத்திற்கு வருகைத்தரும் பக்தர்களின் கைகளினால், நெய், மிளகு, சுக்கு, திப்பிலி, வெல்லம், பொருள்களைக் கொண்டு, தன்வந்திரி மந்திரங்களை உச்சரித்து, தன்வந்திரி பகவான் சன்னதி முன்பு இந்த லேகியம் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் மருந்து தயாரித்து தன்வந்திரி பகவானுக்கு நிவேதனம் செய்யப்பட்டது. நாளை தீபாவளியன்று பீடத்திற்கு வருகைதரும் பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மாமருந்தாகவும், தீபாவளி லேகியமாகவும் வழங்கப்பட உள்ளது. மேலும் ஸ்ரீ தன்வந்திரி பகவான்  விசேஷமான மருத்துவர் கோலத்தில் ஸ்டெதஸ்கோப், டாக்டர் கோட் போன்ற உபகர்ணங்களுடன் மருத்துவ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதனை தொடர்ந்து இரதோற்சவம் நடைபெற்றது. நாளை காலை 10.00 மணிக்கு தீபாவளியை முனிட்டு சிறப்பு லக்ஷ்மி பூஜை நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.