Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, September 28, 2017

அஷ்ட லஷ்மி யாகத்துடன் ஆரோக்ய லஷ்மி ஹோமம்.

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
அஷ்ட லஷ்மி யாகத்துடன் ஆரோக்ய லஷ்மி ஹோமம்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 30.09.2017 சனிக் கிழமை காலை 10.30 மணிக்கு வாழ்வில் வளத்தையும், செல்வத்தையும்  பெற வேண்டி அஷ்டலட்சுமி மஹா யாகமும் ஆரோக்ய லஷ்மி ஹோமமும் நவராத்ரி மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மக்கள் ஐஸ்வர்யம் ஆனந்தம் ஆரோக்யம், பெற வேண்டி நடைபெற உள்ளது.
அஷ்ட லஷ்மி  யாகத்தில் கலந்து கொள்வதால்
 ஏற்படும் நன்மைகளும் சிறப்புகளும்
ஆதிலட்சுமி
ஆதி அந்தம் என்பார்கள். ஆதி என்றால் முதல் என்று பொருள். திருப்பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த முதல் லட்சுமிதான் ஆதிலட்சுமி என்றழைக்கப்படுவது. இவளை வணங்கினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்று நம்புகிறார்கள்.
தான்யலட்சுமி
ஆறு திருக்கரங்களுடன், கரங்களில் தானிய நெற்கதிர் மற்றும் கரும்பு உடையவளாய் கஜபீடத்தில் அமர்ந்து அருள்புரிகிறாள்இவள் உலகில் பசிப்பிணி தீர்ப்பவள். தானியங்களின் விளைச்சல் தருபவள். வயிறு சம்பந்தமான பிணி தீர்ப்பவள். இவளை வழிபட்டால் பசிப்பிணி போகும்.
தைரியலட்சுமி
மனத்திற்கு தைரியத்தைக் கொடுத்து தன்னம்பிக்கையூட்டுபவள். இந்த தைரியலட்சுமிக்கு வீரியம் அதிகம். செய்யும் காரியங்களில் வெற்றியும், மனோதைரியமும் வேண்டுபவர்கள் வழிபட வேண்டிய தேவி இவள்
சந்தானலட்சுமி
சந்தானம் என்றால் குழந்தைச் செல்வம் என்று பொருள்சந்ததி வளர குழந்தைச் செல்வம் தந்து வரமளிப்பதால் சந்தானலட்சுமி என்று பெயர் பெற்றாள்.  சடையுடன் கிரீடத்தைத் தரிசித்தபடி வரத அபயத் திருக்கரங்களுடன் கத்தி, கேடயம்  ஆகிய ஆயுதங்களை அணிந்து காட்சி தருகிறாள். இவளது பீடத்தில் இரு கன்னிப் பெண்கள் சாமரம் வீசியபடியும், விளக்கைக் கையிலேந்தியும்  நின்று கொண்டிருக்கின்றனர்இவளை வழிபட்டால் குழந்தைப் பேறு கிடைக்கும்.
விஜயலட்சுமி
அன்னப் பறவையின் மீது வீற்றிருப்பவள் விஜயலட்சுமி. விஜயம் என்றாலே ஜெயம். வெற்றி என்று பொருள். தன்னை வணங்கி காரியம் தொடங்குபவர்களுக்கு வெற்றி, ஜெயம் அருள்பவள் இவளே.
வித்யாலட்சுமி
கலைவாணியும் லட்சுமியும் இணைந்து நிற்பவள்தான் இந்த வித்யாலட்சுமி. இவள். வித்யை என்பதற்கு ஞானத்தின் மூலம் கற்கும் வித்தைகள் என்று பொருள். இந்தத் திருமகளை வழிபட்டால் கல்வியும் வளரும், செல்வமும் வளரும்.
கஜலட்சுமி
இரண்டு யானைகள் இருபுறமும் துதிக்கையில் கலசம் ஏந்திப் போற்ற, தாமரை மலரின் மீது வீற்றிருக்கிறாள். கஜம் என்றால் யானை என்று பொருள். இருபுறமும்  யானைகள் கலசம் ஏந்தித் திருமஞ்சனம் செய்வது போல் அமர்ந்திருப்பதால் கஜலட்சுமி என்ற பெயர் அமைந்தது. கஜலட்சுமியை ராஜலட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி என்றும் அழைப்பதுண்டு. கஜலட்சுமியின் உருவத்தை வீடுகளின் வாசல் நிலைப்படியில் பெரும்பாலும் காணலாம். வாழ்க்கையில் சௌபாக்கியங்களும் பெற விரும்புபவர்கள் கஜலட்சுமியை வணங்குங்கள்.
தனலட்சுமி
செல்வங்களை அள்ளியள்ளித் தரும் தனலட்சுமி இடது கரத்தில் கெண்டி வைத்துக் கொண்டும், வலது கரத்தில் தாம்பூல வெற்றிலை கொண்டும் காட்சி தருபவள். தன்னை நம்பி வருபவர்களுக்கு தனத்தை அளிக்கும் பாவனையே இந்த பாவனை.
ஆரோக்ய லஷ்மி
அஷ்ட லஷ்மிகளின் அனுக்கிரகம் பெற்றிருந்தாலும் அதனை அனுபவிக்க ஆரோக்ய லஷ்மியின் அருள் வேண்டி உள்ளதால் இவளை வணங்கி ஆரோக்யம் பெற்று ஆனந்தம் ஜஸ்வர்யத்துடன் வாழலாம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அஷ்ட லஷ்மிகளின் அருள் பெற தன்வந்திரி பீடத்தில் விஜய தசமியன்று நடைபெறும் அஷ்டலஷ்மி யாகத்தில் கலந்து கொண்டு தன்வந்திரி பீடத்தில் உள்ள ஆரோக்ய லஷ்மியையும் கஜலஷ்மியையும் குபேர லஷ்மியையும் வழிபட்டு வாழ்வில் வளம் பெறப்ரார்த்திக்கின்றோம்.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும் தொடர்புக்கு :
 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டைஅனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203


Wednesday, September 27, 2017

சரஸ்வதி மஹா யாகம், ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
சரஸ்வதி மஹா யாகம்

சரஸ்வதி துதி

சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர் பவதுமே சதா

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்” ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர்ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்” ஆக்ஞைப்படி நவராத்திரியை முன்னிட்டும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டும் மாணவ மாணவியர்களின் கல்வித்தரம் உயரவேண்டியும், ஞானத்தின் பிறப்பிடமான கல்வி கடவுள் சரஸ்வதி தேவியின் அருள்பெற வருகிற 29.09.2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் மஹா சரஸ்வதி யாகம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று சரஸ்வதி தேவியை  வணங்கி ஞான தெளிவை பெறுவோம்.

கல்விச் செல்வம் அளித்து அதன் மூலம் உலகில் வாழத் தேவையான அனைத்து வளங்களையும் பெற வழி வகை செய்பவள் சரஸ்வதி. பிரம்மனின் மனைவியான சரஸ்வதி கல்வி அறிவை வழங்குபவள். கல்வி என்பது குழந்தைகள், இளைஞர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் எக்காலத்திற்கும் தேவையானதுதான். இவ்வுலகத்திற்கு வேண்டிய அறிவையும், அவ்வுலகத்திற்குத் தேவையான ஞானத்தையும் அளிப்பவள் சரஸ்வதி.

சரஸ்வதி தேவி பிரம்மாவை மணம் புரிய ஊசியின் முனை மேல் நின்று உத்த தவம் செய்ததாகக் கூறுவர். சரஸ்வதிக்குப் பெரும்பாலும் நிறைய கோயில் இல்லை. தமிழகத் தில் கூத்தனூரில் மட்டுமின்றி வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கு தனிக்கோயில் அமைந்துள்ளார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இல்லம்தோறும் சரஸ்வதி பூஜையன்று கோலோச்சுபவள் சரஸ்வதியே. வெண் தாமரையில் வீற்றிருப்பவள் சரஸ்வதி. வெள்ளை நிற அன்ன வாகனம் கொண்டவள். தன் கரங்களில் வீணையை யும் புத்தகத்தையும் தாங்கிய கலாவாணி. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சரஸ்வதி தேவிக்கு வருகிற 29.09.2017 ல் சரஸ்வதி பூஜையன்று வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் மஹாசரஸ்வதி யாகத்தில் பங்கேற்று சரஸ்வதியை வணங்குவதால் மாணவ, மாணவிகள் தங்கள் கல்வி நிலை உயரப் பெறுவார்கள். சரஸ்வதியின் பாதங்களிலும் யாகத்திலும் வைத்து பூஜித்த எழுது பொருட்களான நோட்டு புத்தகம், பேனாக்களை பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு ஸ்வாமிகள் திருக்கரங்களால் அருட்பிரசாதமாக வழங்கவுள்ளார். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203


Nava Durga Yagam at Sri Danvantri Peedam

ஸ்ரீ  தன்வந்திரி  பீடத்தில்
நாளை  நவதுர்கா  ஹோமம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி நவராத்திரியை முன்னிட்டும் பெண்கள் சௌபாக்கியங்கள் பெற்று தீர்க சுமங்கலிகளாக வாழவேண்டி நாளை 28.09.2017 வியாழக்கிழமை வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு நவதுர்கா ஹோமமும், ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெறவுள்ளது.

நவதுர்கைகள் யார் யார் :

சமசுகிருதத்தில் 'நவ' என்றால் ஒன்பது என பொருள்படும். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றன.

சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என அன்னை ஒன்பது வடிவம் கொண்டிருக்கிறாள்.

இந்த ஒன்பது வடிவங்களுக்கும் வட இந்தியாவில் நவராத்திரி நாட்களில் பூஜை செய்வர். இந்த ஒன்பது நாட்களும் அன்னையை முறையாக பூஜை செய்தால் அவள் அனைத்து நலன்களும் அள்ளித் தருவாள் என்பது ஐதீகம்.

துர்க்கையின் வடிவம் எதிரிக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடியது. இவளின் உடல் மழை மேகம் போல் கருமை நிறம் கொண்டது. இவள் நான்கு கரம் கொண்டவள். ஒரு கரத்தில் வஜ்ராயுதமும், மறுகரத்தில் வாளும் இருக்கும். மற்ற இரு கரங்கள் பக்தருக்கு அபயம் தரும். அன்னை கழுதை வாகனத்தில் ஏறி வருபவள். இவளின் பார்வை பட்டாலே பாவம் தொலையும் என்றும், பேய் பிசாசுகள் பயந்து ஓடும் என்றும் நம்புகின்றனர். பக்தருக்கு இவளின் உருவம் பயம் தராது. பக்தருக்கு நன்மை செய்வதால் இவளை 'சுபங்கரி' என்பர்

துர்கா மந்திரம் :
ஓம் ஹ்ரீம் தும் துர்க்கே பகவதி
மநோக்ருஹ மந்மத மத
ஜிஹ்வாபிஸாசீருத்
ஸாதயோத் ஸாதய
ஹிதத்ருஷ்டி அஹிதத்ருஷ்டி
பரத்ருஷ்டி ஸர்பத்ருஷ்டி
சர்வத்ருஷ்டி விஷம் நாசய நாசய
ஹூம் பட் ஸ்வாஹா

நவதுர்கா  ஹோம பலன்

பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும்மாத்ரு - பித்ரு தோஷம் அகலுவதற்கும்,கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் செய்யப்படுகிறது. இந்த நவதுர்கா  ஹோமத்தில் சிறப்பு திரவியங்கள் சேர்க்கபடவுள்ளனர். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203