கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Monday, May 12, 2014
Sunday, May 11, 2014
உலக அன்னையர் தின சிறப்பு பூஜை
உலக அன்னையர் தினம் மற்றும் மாணவர்களின் கல்வி மேம்பாடு வேண்டி மே 11ம்தேதி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
அன்னையரின்றி உலகில் மனிதப்பிறவி என்பது இல்லை. அந்த அன்னையரை போற்றும் விதமாக நேற்று உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு, அன்னையர் குலம் நோய்நொடியின்றி நன்றாக வாழவும், தாய் சேய் நலன், பெற்றோர் பிள்ளைகள் நல்லுறவு, முதியோர் நலன், ஆரோக்கியம் வேண்டி வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஸ்ரீ பாரத மாதா, ஸ்ரீ ஆரோக்கிய லட்சுமி, ஸ்ரீஅன்னபூரணி, வேதமாதா ஸ்ரீகாயத்ரிதேவி ஆகிய சன்னதிகளிலும், மாணவர்களின் கல்வி திறன் வளரவும், தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எதிர்காலம் நன்றாக அமையவும், அவர்களுக்கு விரும்பிய துறையில் கல்வி பயில வாய்ப்பு கிடைக்கவும், நல்ல மதிப்பெண் பெற்ற ஏழை எளிய மாணவர்களுக்கும் நல்ல துறைகளில் கல்வி வாய்ப்பு கிடைக்கவும் லஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ வாணி சரஸ்வதி ஆகிய சன்னதிகளிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. அத்துடன் கல்வியில் மாணவர்களின் கல்வித்திறன் வளரவும், வித்யா லஷ்மி, சரஸ்வதி, ஹயக்ரீவர் ஹோமமும் நடைபெற்றது. பூஜையிலும், ஹோமத்திலும் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதமும்,அன்னதானமும் வழங்கப்பட்டது.
Saturday, May 10, 2014
நன்றி : தினபூமி
மதுரையில் பிறந்து, மதுரை மீனாட்சியம்மனால் அரவணைக்கப்பட்டு வளர்ந்தவரும், ஒரே நாளில் 4 இடங்களில் சமாதியானவருமான ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள் ஜெயந்தி மே 6-ம் தேதி நடைபெற்றது பற்றி தினபூமி நாளிதழில் வெளிவந்த செய்தி.
Thanks to Thinaboomi
The news published in Thinaboomi about The Siddha Purusha Sri Kuzandaiyananda Maha Swamigal (who is believed to have been nurtured by Madurai Goddess Meenakshi herself, was a great Guru) Jayanthi was celebrated in Peedam on May 6th day.
Subscribe to:
Posts (Atom)




