கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Thursday, March 17, 2022
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 16.03.2022 பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.
Tuesday, March 15, 2022
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பௌர்ணமி 16/02/2022 முன்னிட்டு சிறப்பு யாகங்கள் நடைபெற்றது
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் திருமணத்தடை நீங்க சிறப்பு யாகங்கள்
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 16.02.2022 புதன்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை முப்பெரும் யாகங்கள் நடைபெற்றது.
தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெற சந்தான கோபால யாகம்
சந்தான கோபால யாகம் பலன்கள் :
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு ஏற்படுகின்ற காலசர்ப தோஷம், சர்ப தோஷம், பித்ரு தோஷம், குலதெய்வ சாபம் போன்ற பல்வேறு தோஷங்கள் நீங்கி விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி சந்தான கோபால யாகமும், ஸ்ரீகிருஷ்ணருக்கு தொட்டில் பூஜையும் நடைபெற்றது.
ஆண்கள் திருமணத் தடை நீக்கும் கந்தர்வ ராஜ ஹோமம்
திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு உள்ள செவ்வாய் தோஷம், சுக்கிர தோஷம், களத்திர தோஷம், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற கந்தர்வ ராஜ ஹோமமும், கலசாபிஷேகம் நடைபெற்றது.
பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம்
சுயம்வர கலா பார்வதி ஹோமம் பலன்கள் :
இன்று நடைப்பெற்ற சுயம்வரகலா பார்வதி ஹோமத்தில் மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், வசீகர தோஷம், போன்ற எல்லாவிதமான திருமணத் தடைகளும், தோஷங்களும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழவும், மனைவிக்கு ஏற்ற கணவர் அமையவும். அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கலந்து கொண்ட பெண்களுக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது. முன்பாக ஸ்ரீ மஹா கணபதி பிரார்த்தனையும் 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜையும் சர்ப தோஷங்கள் நீங்க, ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.
மேற்கண்ட முப்பெரும் யாகங்களில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிர்வதித்து பிரசாதம் வழங்கினார் தொடர்ந்து அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு ஏகாதசி 14.3.2022 முன்னிட்டு நவகலச திருமஞ்சனம் நடைபெற்றது
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஏகாதசி முன்னிட்டு இன்று 14.3.2022 திங்கட்கிழமை மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு
நவகலச திருமஞ்சனம் நடைபெற்றது
Saturday, March 12, 2022
21 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடர் பிரதிஷ்டா வைபவம் 6.2.2022
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரிஆரோக்ய பீடத்தில் 21 அடி உயரமுள்ள
விஸ்வரூப அஷ்டநாக கல் கருடர் பிரதிஷ்டா வைபவம் 6.2.2022, ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 4.2.2022, வெள்ளிக்கிழமை பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் பிரதிஷ்டா வைபவ கால பூஜைகள் தொடங்கப்பட்டது. 5.2.2022, சனிக்கிழமை மூலவர் விஸ்வரூப அஷ்டநாக கல் கருடருக்கு நவகலச திருமஞ்சனம் வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து மேட்டூர் சகோதரர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
6.2.2022, ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் 21 அடி உயரமுள்ள அஷ்ட நாக விஸ்வரூப கல்கருடர் பிரதிஷ்டா வைபவத்தை முன்னிட்டுவிஸ்வரூபம், கோ பூஜை, த்வார பூஜை, கும்ப, மண்டல, பிம்ப, அக்னி சதுஸ்தான பூஜை, மஹா பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு, கும்ப உத்தாபனம், நூதன பிம்பத்திற்கு ப்ரோக்ஷணம், ப்ராணப் பிரதிஷ்டை, தீபாராதனை, சாத்துமுறை நடைபெற்றது. ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களால் 1000 கிலோ புஷ்ப அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு புஷ்ப பிரசாதமும், சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் தன்வந்திரி குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
SRI VISWAROOPA AHTA NAGA KAL GARUDAR PRADHISHTA MAHOTSAVAM ON 06/02/2022
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரிஆரோக்ய பீடத்தில் 21 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடர் பிரதிஷ்டா வைபவம் 6.2.2022, ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 4.2.2022, வெள்ளிக்கிழமை பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் பிரதிஷ்டா வைபவ கால பூஜைகள் தொடங்கப்பட்டது. 5.2.2022, சனிக்கிழமை மூலவர் விஸ்வரூப அஷ்டநாக கல் கருடருக்கு நவகலச திருமஞ்சனம் வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து மேட்டூர் சகோதரர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
6.2.2022, ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் 21 அடி உயரமுள்ள அஷ்ட நாக விஸ்வரூப கல்கருடர் பிரதிஷ்டா வைபவத்தை
முன்னிட்டுவிஸ்வரூபம், கோ பூஜை, த்வார பூஜை, கும்ப, மண்டல, பிம்ப, அக்னி சதுஸ்தான பூஜை, மஹா பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு, கும்ப உத்தாபனம், நூதன பிம்பத்திற்கு ப்ரோக்ஷணம், ப்ராணப் பிரதிஷ்டை, தீபாராதனை, சாத்துமுறை நடைபெற்றது. ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களால் 1000 கிலோ புஷ்ப அபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு புஷ்ப பிரசாதமும், சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் தன்வந்திரி குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
