Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, February 20, 2020

Maha Shivaratri 2020 ....


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்மஹாசிவராத்திரி சிறப்பு பூஜைகள்.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேடை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் மஹா சிவராத்திரியை முன்னிட்டு வருகிற 21.02.2020 வெள்ளிக்கிழமை ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சிவபஞ்சாக்ஷர யாகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் பீடத்தில் சிவலிங்க ரூபமாக பிரதிஷ்டை செய்துள்ள 468 சித்தர்களுக்கு சிறப்பு ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

சிவ பஞ்சாக்ஷர ஹோமத்தை செய்வதால் உங்கள் வீடுகளில் இருக்கின்ற எதிர்மறை சக்திகள் அனைத்தும் நீங்கும், உங்கள் குடும்பத்தில் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும், உங்கள் வீட்டை அண்டி இருக்கும் துஷ்ட சக்திகள் நீங்கி, தரித்திரமும் வறுமை நிலையும் உங்களை என்றும் அண்டாமல் காக்கும், தொழில், வியாபாரங்களில் நஷ்டங்கள் ஏற்படாமல் தடுத்து லாபங்களை பன்மடங்கு பெருக்கும், செல்வம் பெருகும், புதியசொத்துக்களின் சேர்க்கை உண்டாகும், வாழ்வில் எப்போதும் கடன் வாங்காத ஒரு நிலையை ஏற்படுத்தும்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த யாக பூஜைகளில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற்று நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம். மேலும் இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் அபிஷேக திரவியங்கள், மூலிகைகள், சமித்துகள், புஷ்பங்கள், பழங்கள், பூஜை பொருட்கள், வஸ்திரங்கள் அளித்து குடும்பத்தினருடன் இறைகைங்கரியத்தில் ஈடுபடலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Saturday, February 8, 2020

Pournami - Thaipoosam Yagam...


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
திருமணத்தடை நீக்கும் ஹோமங்களுடன்
குழந்தை வரம் தரும் ஹோமமும்
ஸ்ரீ வள்ளலார் மற்றும் கார்த்திகை குமரனுக்கு
சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 08.02.2020 சனிக்கிழமை பௌர்ணமி மற்றும் தைபூசத்தை முன்னிட்டு ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலாபர்வதி யாகம், தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகம், ஸ்ரீ வள்ளலார் மற்றும் கார்த்திகை குமரனுக்கு விசேஷ ஹோமத்துடன் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை அன்னதோஷங்கள் விலக ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும், வாழ்வில் நலம் பெற சித்த புருஷர்கள் ஆசிகள் வேண்டி சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
இந்த யாகங்களில் நெய், தேன், மூலிகைகள், சமித்துகள், வஸ்திரங்கள், புஷ்பங்கள், பழங்கள், நிவேதன பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கும், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும் ஆராதனைகள் நடைபெற்று, கந்தர்வ ராஜ ஹோமம் மற்றும் சுயம்வர கலாபார்வதி ஹோமத்தில் பங்கேற்ற ஆண், பெண்களுக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது. மேலும் சந்தான கோபால யாகம் நடைபெற்று ஸ்ரீ நவநீத கிருஷ்ணருக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று பங்கேற்ற தம்பதிகளுக்கு வெண்ணை பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் தைபூசத்தை முன்னிட்டு ஸ்ரீ வள்ளலார் மற்றும் கார்த்திகை குமரனுக்கு மூல மந்திர ஹோமங்களுடன் பஞ்ச திரவிய அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி பிராசதங்களை வழங்கினார். தொடர்ந்து மஹா அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
















Friday, February 7, 2020

Sani Peyarchi Maha Yagam 24 01 2020 Part 2 | Pathala Swarna Saneeswarar ...

Sani Peyarchi Maha Yagam 24 01 2020 Part 1 | Pathala Swarna Saneeswarar ...

Thai Poosam 2020 - Gandharva Raja Homam - Swayamvara Kala Parvathi Homam - Santhana Gopala Yagam


திருமணவரம் வேண்டி
2500க்கும் மேற்பட்ட ஹோமங்கள் நடைபெற்ற
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்முத்தான மூன்று ஹோமங்கள்.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 08.02.2020 சனிக்கிழமை தைப்பூசம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலாபர்வதி யாகம், சந்தான கோபால யாகம் நடைபெற உள்ளது. பங்கேற்ற ஆண், பெண்களுக்கு கலசாபிஷேகமும், தம்பதிகளுக்கு தொட்டில் பூஜையும் நடைபெற உள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு கார்த்திகை குமரன் மற்றும் வள்ளல் பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து உணவு சரிமானம் ஏற்படவும், அன்னதோஷம் விலகவும் மாலை 4.30 மணிக்கு ஸ்ரீ ஏகரூப ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு விசேஷ வழிபாடும் முத்தான மூன்று ஹோமங்களாக நடைபெற உள்ளது.

கந்தர்வ ராஜ ஹோமம் :

திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும், சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது.

சுயம்வர கலாபார்வதி யாகம் :

திருமணத்தடைகள் உள்ள பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி சுயம்வர கலாபார்வதி யாகம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடத்தப்பட உள்ளது. இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் பலன்கள் ஏராளம். திருமணத் தடைகள் நீங்கி உடனே திருமணம் நடைபெற்று மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.

சந்தான கோபால யாகம் :

குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி சங்கல்பம் செய்து சந்தான கோபால யாகம் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த யாகம் செய்வதின் மூலம் எல்லாவிதமான தடைகளும் நீங்கி  விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். தம்பதியருக்குள் மிகுந்த அந்யோன்யம் ஏற்படும். நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருளும் கிடைக்கும்.
மேலும் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
இராணிப்பேட்டை மாவட்டம்.
தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Saturday, February 1, 2020

Aswamedha Pooja - Aswarooda Pooja....


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்அஸ்வமேத பூஜையுடன் அஸ்வாரூட ஹோமம்.

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று ரதசப்தமியை முன்னிட்டு 01.02.2020 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் அதிர்ஷ்ட தேவதையின் ஆசிர்வாதம் வேண்டியும், அரசர் வாழ்வு வேண்டியும் அஸ்வாரூட ஹோமத்துடன் அஸ்வமேத பூஜை நடைபெற்றது.

காலை மங்கள இசையுடன் கோ பூஜை, வேத பாராயணங்களுடன் யாகசாலை பூஜை, மஹா கணபதி பூஜை, மஹாசங்கல்பம் நடைபெற்றது. தொடர்ந்து மஹா கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், லக்ஷ்மி ஹோமம், ருத்ர ஹோமம், ஆஸ்வாரூட ஹோமத்துடன் ஐந்து குதிரைகளுக்கு (அஸ்வங்களுக்கு) விசேஷ அலங்கார ஆராதனைகள் அஸ்வமேத பூஜையாக நடைபெற்றது.

ராஜபோக வாழ்வு வேண்டியும், ராஜகுமாரன் அமைய வேண்டியும், இந்திர பதவியுடன் இந்திரன் போல் வாழ வேண்டியும், வசீகர சக்தி பெறவும், மக்கள் வசியம் பெறவும், வெற்றிமேல் வெற்றி பெறவும், பெரும் செல்வம், செல்வாக்கு, புகழ் பெறவும், எதிரிகளை வெல்லவும், தொழில் வியாபாரத்தில் ஏற்படும் மந்த நிலை மற்றும் தடைகள் விலகவும், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவும், அனைத்தும் குதிரை வேகத்தில் நன்மைகள் கிடைத்து ராஜ போக வாழ்க்கையுடன் போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறவும், எதிர்பாராத வகையில் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகவும், ஆண் சந்ததி ஏற்படவும், வம்ச விருத்தி கிடைக்கவும், சினிமா, அரசியல் மற்றும் பெரும் வியாபாரம் பெருகவும், எதிரிகளையும், சத்ருக்களையும் எதிர்கொள்ளும் வல்லமை பெறவும், சொப்ன தேவியின் அருள் கிடைத்து ஆட்சி செய்யும் அதிகாரத்தையும் பெற்று செல்வாக்குடன் வாழவும், மிக பெரிய கோடீஸ்வரர்களாக வேண்டியும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடவும், நல்ல மண வாழ்க்கை அமையவும் பக்தர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர். இதில் பத்துக்கும் மேற்பட்ட சிவாசாரியர்கள் பங்கேற்று வேத பாராயணங்கள் செய்தனர்.

இந்த யாகத்தில் கனடா நாட்டில் வெளிவரும் உதயன் பத்திரிகை ஆசிரியரும் நிர்வாகியுமான திரு. லோகேந்திர லிங்கம், திருமதி. லோகேந்திர லிங்கம், மலேசியா தொழிலதிபர் சரவணன், ஸ்ரீபுரம் நாராயணி பீடம் விஜயகுமார், சுரேஷ், சென்னை குணசேகரன் குடும்பத்தினர், ராம்குமார் குடும்பத்தினர், ராமச்சந்திரன் குடும்பத்தினர், பிரகாஷ், ஹரிஹரன், இன்பவல்லி விஜயவாடா சுரேஷ் குடும்பத்தினர், சென்னை தினகரன் குடும்பத்தினர், ஆரணி கண்ணன் குடும்பத்தினர், பெங்களூர் சங்கமேஸ்வரன் குடும்பத்தினர், பாணிச்சேரி தண்டபாணி, சீனுவாசன் குடும்பத்தினர், கரூர் முத்துராஜா, திருநெல்வேலி வழக்கறிஞர் சங்கர், தாமிரா டீவி நாகமணி மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.  மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இதனை தொடர்ந்து மஹா அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.