Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, November 9, 2019

Soolini Durga Homam


தன்வந்திர் பீடத்தில் ராகு தோஷத்தை நீக்கி
துஷ்ட சக்திகளை விரட்டும் சூலினி துர்கா ஹோமம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் அமாவாசையை முன்னிட்டு வருகிற 26.11.2019 செவ்வாய்கிழமை காலை 11.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை சூலினி துர்கா ஹோமத்துடன் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது.

உறவுப பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவும், தீய விளைவுகள் நீங்கவும், ராகு தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறவும், மன அழுத்தம், பதட்டம்‌ குறையவும், அனைத்து செயல்களிலும் நம்பிக்கை கிடைக்கவும், குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கவும் நடைபெறும் இப்பெரும் சக்தி வாய்ந்த ஹோமம் துர்கா தேவியின் அளப்பரிய, தெய்வீக ஆற்றலை உணரவும், அதைப் பெற்று, அன்றாட வாழ்க்கையில் பயன் பெறவும் வகை செய்கிறது.

இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, நம்மை வாட்டி வதைக்கும் அனைத்து தீமைகள், சந்தேகம், குழப்பம் போன்ற எதிர்மறை உணர்வுகள் ஆகியவற்றுக்கு எதிராக, வலுவான பாதுகாப்பு பெற்று, சகல திருஷ்டிகளையும், தோஷங்களையும் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் ஹோமம் சூலினி துர்கா ஹோமம் ஆகும். மேலும் தடைகள் நீங்கும், தீய சக்திகள் அகலும், முற்பிறவி சாபம் விலகும், பிதுர் தோஷம், சாபங்களை போக்கும் உன்னத யாகமே சூலினி துர்கா யாகமாகும். நவக்கிரக தோஷங்கள், செய்வினை, ஏவல், பில்லி சூன்யம், வசியம் போன்ற மாந்திரீக கோளாறுகளால் ஏற்பட்ட பிரச்னைகள் மற்றும் எதிரி தொல்லைகளில் இருந்து விடுபடவும் இந்த சூலினி துர்கா ஹோமம் நடைபெறுகிறது.

ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி தேவியின், ஆசிகளைப் பெற இந்த ஹோமம் நடத்தப்படுகின்றது. மண வாழ்க்கை மற்றும், உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க நடைபெறும் இந்த ஹோமத்தில் பங்கேற்பதன் மூலம் கோபம், பொறாமை, ஆணவம், சுயநலம், வெறுப்பு போன்ற தீமைகள் அகலும் பெரும் சக்தி வாய்ந்த துர்கா தேவியின் அளப்பரிய, தெய்வீக ஆற்றலை உணரவும், அதைப் பெற்று, அன்றாட வாழ்க்கையில் பயன் பெறவும் வகை செய்கிறது. ஆகவே இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, நம்மை வாட்டி வதைக்கும் அனைத்து தீமைகள், சந்தேகம், குழப்பம் போன்ற எதிர்மறை உணர்வுகள் ஆகியவற்றுக்கு எதிராக, வலுவான பாதுகாப்பை பெறலாம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

மேற்கண்ட ஹோமங்கள் நடைபெற்று ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் மஹா யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203



Gandharva Raja Homam - Swayamvara Kala Parvathi Homam - Santhana Gopala Yagam


தன்வந்திரி பீடத்தில்திருமணத்தடை நீக்கும் ஹோமத்துடன்சந்தான பாக்ய யாகம் நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் பௌர்ணமியை முன்னிட்டு வருகிற 12.11.2019 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஆண், பெண் திருமணத்தடை நீக்கும் ஹோமங்களுடன் சந்தான பாக்யம் தரும் யாகம் நடைபெற உள்ளது.

ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும், சகல தோஷங்களும் நீங்கி, மனைவிக்கு ஏற்ற கணவர், கணவருக்கு ஏற்ற மணைவி அமையவும், அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும் ஆண், பெண் திருமணத்தடை நீக்கும் ஹோமங்கள் நடைபெற உள்ளது.

மேலும் குழந்தை பாக்யம் இல்லாத தம்பதிகளுக்கு சகல வித தோஷங்களும் விலகி விரைவில் குழந்தை பாக்யம் பெற்ற ஸ்ரீ நவநீத கிருஷ்ணரை வேண்டி சந்தான பாக்ய யாகமும் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஸ்ரீ நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்க உள்ளார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Aippasi Annabhishekam


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஆனந்தம் தரும் ஐப்பசி அன்னாபிஷேகம்!

வருகிற 12.11.2019 செவ்வாய்கிழமை மதியம் மரகதேஸ்வரருக்கும் மாலை ராகு கேதுவிற்கும் ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

சாம வேதத்திலே ஒரு இடத்தில் அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோஎன்று கூறப்பட்டுள்ளது,

எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.

ஐப்பசி மாதத்தில் தான் சந்திரன் பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுவதாக கூறுகிறது வானவியல். நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால் ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பாகும்.

சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது. சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட் கருணையினால் குளிர்வது இயற்கைதானே.

அன்னத்தின் சிறப்பு : ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்ப்டுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது. எனவே அவனே பரம்பொருள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.

தன்வந்திரி பீடத்தில் அன்னாபிஷேகம் :

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 12.11.2019 செவ்வாய்கிழமை மதியம் 12.00 மணியளவில் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு பஞ்ச திரவிய அபிஷேகத்துடன் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறி, கனி வகைகளையும் கொண்டு அலங்காரம் செய்யப்பட உள்ளது.

மரகத லிங்கத்தை மூன்று பகுதிகளாக பிரிட்து கீழ்ப்பகுதி, பிரம்ம பாகம். நடுப்பகுதி, விஷ்ணு பாகம். இதுவே ஆவுடை. மேற்பகுதி பாணம், சிவபாகம். போன்ற எல்லா பாகங்களுக்கும் அன்னாபிஷேகம் ஈஸ்வரனுக்கு முழுமையாகவே செய்யப்பட உள்ளது.

மேலும் பகவான் சன்னதியில் யஜுர் வேத பாராயணமும், ருத்திரம், சமகம் பாராயணமும் நடைபெறும். நமது இந்து மதம் எப்போதும் மனிதனை மட்டுமே முன்னிறுத்தி எதையும் இறைவனிடம் வேண்டுவதில்லை. எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்கு தேவையான உணவு தடையின்றி கிடைக்கும் என்பதை அன்னாபிஷேக பிரசாதத்தை நீரில் வாம் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் நீரில் கரைக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து அன்ன பிரசாதத்துடன் சாம்பார், தயிர், மோர் சேர்த்து நோய் நொடிகள் நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும் மஹா பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

தொழில், வியாபாரத்தில் பிரச்னை உள்ளவர்கள், நஷ்டப்பெட்டவர்கள் அன்னாபிஷேக தரிசனத்தை கண்டு இறை பிரசாதத்தை உண்டு, சிறந்த முறையில் வியாபாரம் நடைபெறவும், குழந்தைகள் ஆரோக்யம், கல்வியில் முன்னேற்றம் அடையவும், ஞாபக சக்தி பெருகவும், புத்ர பாக்யம் கிடைக்கவும், உணவு தட்டுபாடு அகலவும், தன தான்ய சம்பத்துகள் பெருகவும், இயற்கை வளம் பெருகவும், ஆய கலைகள் வளரவும், கிராம நகர அபிவிருத்தி உண்டாகவும், குடும்ப மகிழ்ச்சிக்காகவும்,  பிரார்த்தனை செய்வோம்.

ஏகரூப ராகு கேதுவிற்கு பிரதி மாத பௌர்ணமியில் அன்னாபிஷேகம் :

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் மாலை 5.00 மணிக்கு ஏகரூப ராகு கேதுவிற்கு உணவு குழலில் ஏற்படும் தோஷங்கள் அகலவும், ராகு கேதுவினால் ஏற்படும் தடைகள் விலகவும், அன்னதோஷம் அகலவும், குடும்பத்தில் பல்வேறு விதமான சுப காரியங்கள் நடைபெறவும், தன தானிய சம்பத்து பெருகவும் அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது.

மேலும் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் பல்வேறு சிறப்புகள் தரும் என்பதால் தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் இவ்விரு அன்னாபிஷேகத்திலும் பக்தர்கள் பங்கேற்று நாடு நலம் பெறவும், குடும்ப நலம் பெறவும் பிரார்த்திப்போம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

Friday, November 8, 2019

Ekadasi Nava Kalasa Thirumanjanam


தன்வந்திரி பீடத்தில்ஏகாதசி திதியை முன்னிட்டுஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிப்பொடி திருமஞ்சனத்துடன்நவகலச திருமஞ்சனம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் ஏகாதசி திதியை முன்னிட்டு இன்று 08.11.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு தன்வந்திரி ஹோமம், நெல்லிப்பொடி திருமஞ்சனம் மற்றும் நவ கலச திருமஞ்சனம் நடைபெற்றது.

இதில் விசேஷ மூலிகைகள், நெய், தேன், நவ சமித்துகள், புஷ்பங்கள், பழங்கள், நிவேதன பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு பால், தையிர், மஞ்சள், சந்தனம், பன்னீர், திரவியப்பொடி, துளசி தீர்த்தம், பஞ்சாமிருதம் போன்ற திரவியங்களால் நவ கலச திருமஞ்சனம் நடைபெற்று நெல்லிப்பொடி திருமஞ்சனம் நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்களுக்கு நெல்லிப்பொடி தீர்த்தத்துடன் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.







Monday, November 4, 2019

Swamigal's 59 Jayanthi Vizha - Bala Tripurasundari Alaya Kumbhabhishekam - 1008 Sumangali Pooja

Swamigal's 59 Jayanthi Vizha

Bala Tripurasundari Alaya Kumbhabhishekam

1008 Sumangali Pooja 

Conducted at Sri Danvantri Arogya Peedam, Walajapet.

Thanks to 

"DINAMANI, MAALAI MALAR, SAKSHI,

 ANDHRA JYOTHI" Daily News Papers.





Swamigal's 59th Jayanthi Vizha - Sri Bala Tripurasundari Temple Kumbhabhishekam - 1008 Sumangali Pooja


வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்ஸ்வாமிகளின் 59 ஆவது ஜெயந்தி விழா முன்னிட்டுஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி ஆலய மஹா கும்பாபிஷேகம்,
1008 சுமங்கலி பூஜை நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 59 வது ஜெயந்தியை முன்னிட்டு இன்று 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி ஆலய மஹா கும்பாபிஷேகம், 1008 சுமங்கலி பூஜை, 59 தம்பதி பூஜை, 108 தவில் நாதஸ்வர கலைஞர்களின் இசை சங்கமம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் சென்னை மண்டலி பக்தி பாராயண குழுவினர்களில் லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் போன்ற பல்வேறு பாராயணங்கள் நடைபெற்றது. இவ்வைபங்கள் சென்னை லலிதா சமிதி திரு. மோகன் குருஜி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. பிரவேஷ் குமார் I.P.S. அவர்கள் மற்றும் ஏராளமானவர் பங்கேற்றனர். மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தக்வலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.




















Friday, November 1, 2019

Bala Tripura Sundari Alaya Maha Kumbhabhishekam - Poorvanga Pooja


வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி ஆலய மஹா கும்பாபிஷேகம்,
1008 சுமங்கலி பூஜையின்பூர்வாங்க பூஜைகள் துவங்கியது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 59 வது ஜெயந்தியை முன்னிட்டு வருகிற ஐப்பசி 17 ஆம் தேதி 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி ஆலய மஹா கும்பாபிஷேகம், 1008 சுமங்கலி பூஜை, 59 தம்பதி பூஜை விழாவிற்கான பூர்வாங்க பூஜைகள் இன்று 01.11.2019 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் துவங்கியது.

இதில் மங்கள இசை, கோ பூஜை, விக்நேஸ்வர பூஜை, அனுக்ஞை, ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ விநாயக தன்வந்திரி அபிஷேகம் நடைபெற்றது. இவ்வைபவங்களில் மும்பை ஸ்ரீகுரு அம்ருத் கருணாமயி அவர்கள் மற்றும் ஏராளமானவர்கள் பங்கேற்ற சிறப்பித்தனர்.

தொடர்ந்து மாலை 5.00 மணி முதல் வாஸ்து ஹோமம், புண்யாஹவாசனம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், ஆசார்யவரணம், கும்பாலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, ஹோமம், சதுர்வேத பாராயணம், பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நாளை காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரை  மங்கள இசை, கோ பூஜை, 2 ஆம் கால பூஜை, சதுர்வேத பாராயணம், பூர்ணாஹுதி, தீபாராதனை, நேத்ரோன் மீலனம், அஷ்ட பந்தன சமர்ப்பணம் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு வேலூர் ஸ்ரீ கிருஷ்ண கலா மந்திர் மாணவிகளின் பரதநாட்ய நிகழ்சியும், மாலை 6.30 மணி முதல் மங்கள இசையுடன் 3 ஆம் கால பூஜை, ஹோமம், சதுர்வேத பாராயணம், பூர்ணாஹுதி நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.