Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, June 8, 2018

Soolini Pratyangira Yagam...


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
கண்திருஷ்டி, பில்லி சூன்யம், திருமணம், சந்தானம், தொழில் போன்ற தடைகள்
பணப் பிரச்னை, கடன் பிரச்னை, எதிரிகள் தொல்லை,
மரண பயம், மாங்கல்ய தோஷம் நீங்க.
மாபெரும் யாகங்கள் அமாவசையில் நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வருகிற 13.06.2018 புதன் கிழமை அமாவாசையை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் அமாவாசை சரப சூலினி பிரித்யங்கிரா யாகம் நடைபெறஉள்ளது.

பிரத்யங்கரா தேவி சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். அன்னை சிம்ம முகமும், பெண் உடலும் கொண்டு காணப்படுகிறார். கம்பீரமான விஸ்வரூபம். நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் எட்டு கரங்களுடன் மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காணப்படுகிறாள்.

அடியவருக்கு வாரி வழங்கும் விதமாக சாந்த ரூபிணியாக 4 திருக்கரங்கள் உள்ளன. கரங்களில் சூலம், கபாலம், பாசம், டமருகம் திகழ்கின்றன. அன்னைக்கு அபராஜிதா என்ற பெயரும் உண்டு அபராஜிதா என்றால் 'யாராலும் வெல்ல முடியாதது' என்று பொருள்.

துர்கை தேவி மற்றும் சப்த கன்னியர்களுடன் சேர்ந்து பல அசுரர்களை அழித்தால் பிரத்தியங்கிரா தேவி. பிரத்யங்கிரா பைரவரை வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. பிரத்யங்கிரா தேவி பல வடிவங்கள் உள்ளன.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி மற்றும் ஸ்தாபகர் “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 6000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு நிகும்பல யாகம் செய்து, தனக்கு யாகத்தில் கிடைத்த அம்பாளின் ஆகஞைப்படி 9 அடி உயரத்தில் ஐஸ்வர்ய கலசம் கொண்டு அம்பாளை பிரதிஷ்டை செய்து பிரதி மாதம் அமாவாசை, பௌர்ணமி அஷ்டமி மற்றும் சிறப்பு தினங்களில் நிகும்பலா யாகம் அல்லது பிரத்தியங்கிரா யாகம் செய்து வருகிறார். இந்த யாகத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் சேர்க்கப்படுகிறது. இதில் துளி கூட பக்தர்களுக்கு கண் எரிச்சல் இருக்காது என்பது நிகழும் அதிசயம்.

உலகத்தில் இன்றைக்கு இருக்கிற மோசமான வியாதிகளுள் திருஷ்டிஎனப்படும் வியாதி மிக கொடூரமான ஒன்று. இந்த திருஷ்டியினால் தனிப்பட்ட நபரின் முன்னேற்றம் பாதித்தல், குடும்பத்தில் சச்சரவு ஏற்படுதல், தாம்பத்திய உறவில் விரிசல், நல்ல வேலையை இழத்தல், ஓரடி எடுத்து வைத்தால் இரண்டடி சறுக்குதல் உட்பட ஏராளமான பாதிப்புகள் விளைகின்றன.
தீராத வியாதிக்குக்கூட மருத்துவர்களைச் சந்தித்து மருந்து வாங்கி நிவாரணம் பெற்று விடலாம். ஆனால், திருஷ்டி என்கிற கொடூர நோய்க்கு உள்ளாக நேர்ந்து விட்டால், அவ்வளவுதான்! சொத்து, சுகம், நிம்மதி, அன்பு இப்படி எதுவுமே நம்மிடம் தங்காது. காரணம் இது கலி காலம். ஒருவரது முன்னேற்றம் இன்னொருவரது முன்னேற்றத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கருதுகிற காலம் இது. போட்டியும் பொறாமையும் தலை விரித்து ஆடுகின்றன.

எனவே, ஒவ்வொருவரும் தங்களுக்குள்ள திருஷ்டியை அவ்வப்போது கழித்துக் கட்டுவது நல்லது. வீடுகளில் வசிப்பவர்கள் ஆரத்தி சுற்றுதல், எலுமிச்சம்பழம் உடைத்தல், பூசணிக்காய் உடைத்தல் போன்றவற்றை அடிக்கடி நிகழ்த்துவது திருஷ்டி கழிப்பதற்குத்தான். அதே சமயம் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் திருஷ்டி கழிக்கும் பிரமாண்ட ஹோமங்கள் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க அடிக்கடி நடந்து வருகின்றன. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் திருஷ்டி அகலப் பெற்று வாழ்வில் பல முன்னேற்றங்களை அடைந்து வருகிறார்கள்.

இத்தகைய திருஷ்டி ஹோமங்களில் பக்தர்கள் கலந்து கொள்வதால், இருக்கிற திருஷ்டி அகல்வதோடு ராகு திசை நடப்பவர்களுக்கும் ராகு புக்தியினால் ஏற்படும் தோஷங்கள் நீங்குவதற்கு சனி தசை, சனி புக்தி நடப்பவர்களும் இந்த ஹோமத்தில் பங்கேற்று அருள் பெறலாம்.மேலும் நாக தோஷம், சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும், பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும், மண் வளம், மழை வளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும் வருகிற 13.06.2018 ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மேற்கண்ட யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் செஞ்சி தாலுக்கா நல்லான்பெற்ற பிள்ளை கிராமத்தில் உள்ள தவத்திரு. சிவஜோதி மோன சித்தர் அவர்கள் வருகை புரிந்து சிறப்பிக்க உள்ளார்.

உலக மக்களின் நலன் கருதியும், இயற்கைச் சீற்றங்கள் குறைந்து, சகல வளங்களையும் அனைவரும் பெறும் வண்ணம் இவை நடக்க உள்ளன. மிளகாய் வற்றல், வேப்ப எண்ணெய், கடுகு, வெண் கடுகு, நாயுருவி, சிகப்பு அரளி, 108 மூலிகைகள், கல் உப்பு, எலுமிச்சை சாதம், புளி சாதம், சர்க்கரை பொங்கல், இனிப்பு மற்றும் கார வகைகள், சிகப்பு குங்குமம், மஞ்சள், முறம், வெள்ளை பூசணிக்காய் ஆகியவற்றைக் கொண்டு இந்த மஹா யாகம் பல அருளாளர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

எனவே பக்தகோடிகள் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் வந்திருந்து இந்த யாகத்தில் கலந்து கொண்டு ஸ்ரீதன்வந்திரி பெருமாளையும், மற்றும் இங்குள்ள 73 பரிவார தெய்வங்களையும், வேறெங்கும் தரிசிக்க இயலாத 468 சித்தர்களையும் ஒரு சேர தரிசித்து, கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆசியையும் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இந்த யாகத்திற்கு  புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். 04172 - 230033, செல் - 9443330203

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


Amla Powder Abishekam For Heart Disease..


வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
ஏகாதசி திதியில்
நெஞ்சுவலி தீர்க்கும் நெல்லிபொடி அபிஷேகம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 10.06.2018 ஞாயிற்று கிழமை, காலை 10.00 மணியளவில், உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நெஞ்சுவலி வராமல் தடுத்து இதயத்தை காக்கவும், மூட்டுவலிகள் குறையவும், கண்களை பாதுகாக்கவும், மொத்தத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கவும், நட்சத்திர தோஷங்கள் அகலவும், நாள்ப்பட்ட நோய்கள் நீங்கவும், மன நோயிலிருந்து விடுதலை பெறவும், ஏகாதசி திதியை முன்னிட்டு மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிபொடியினால் மஹா அபிஷேகம் நடைபெற உள்ளது.

ஸ்ரீ தன்வந்திரி பகவான் அவதாரம்:

எந்த ஒரு தீராத நோய்க்கும் உடல் சம்பத்தப்பட்ட கோளாறுகளுக்கும் தன்வந்திரி பகவானை வழிபட்டு அபிஷேகம் செய்து அந்த தீர்த்தப்பிரசாதத்தை பெற்று உட்கொண்டால் நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம் என்பது கண்கூடு.

பிரம்மன் நான்கு வேதங்களையும் படைத்து அதன் சாரமாகிய ஆயுர்வேதத்தையும் படைத்தான், இந்த ஆயுர்வேதம் நன்றாகத் தழைத்தோங்கி பலரையும் அடைய வேண்டுமென முதலில் சூரிய பகவானுக்கு உபதேசித்தார். சூரிய பகவானிடம் இருந்து ஆயுர்வேதத்தை கற்றுத்தேர்ந்த பதினாறு மாணவர்களில் மிகவும் முக்கியமானவர் தன்வந்திரி என்று பிரம்ம வைவர்த்த புராணம் சொல்கிறது.

தன்வந்திரி என்று சொல்லப்படுபவர் வானத்தில் வசித்து வருபவர். அதாவது சூரிய பகவானே தன்வந்திரி என்றும் புராணங்களில் ஒரு குறிப்பு உள்ளது. தன்வந்திரி பெருமாளை திருவோணம், ஹஸ்தம், சுவாதி புனர்பூசம் நக்ஷத்திரம், ஏகாதசி திதி,. ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் வழிபடுவது நல்லது.

தன்வந்திரிதான் ஆயுர்வேதத்தை சிருஷ்டித்தார் என்கிறது மத்ஸ்ய புராணம். இவரை வைத்திய ராஜா ஆதர்ச மருந்துவர் இன்றும் குறிப்பிடுகிறது. இவர் சுருண்டு காணப்படும் மென்மையான திருமுடி செவ்வரியோடிய கண்கள் வெண்சங்குக் கோடுகளுடன் கூடிய கழுத்து பரந்த மார்பு பட்டுப் பீதாம்பரம் மலர்மாலைகள் தரித்த ஆபரணத் திருமேனி நான்கு திருக்கரங்கள் மேல் இரு திருக்கரங்களில் சங்கு சக்கரம் தரித்து காணப்படுவார். கீழ் இரு திருக்கரங்களில் ஒன்றில் அட்டைப் பூச்சியையும் மற்றொன்றில் அம்ருத கலசத்தையும் தாங்கிக் காணப்படுவார். ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள பகவான் அட்டைப் பூச்சியுடன் சீந்தில்கொடிஎன்ற மூலிகையை ஏந்தியபடி காணப்படுகிறார்.
இவருக்கு துளசி, ஆலிலை, அரசு இலை, வில்வம் விஷ்ணு கிராந்தி, நாயுருவி, மருக்கொழுந்து இலை, தேவ தாரு இலை, போன்ற இலைகளும் செவ்வந்தி, செண்பகம், பிச்சிப்பூ, பாரிஜாதம், தாமரை, அரளி, புன்னைப்பூ, மந்தாரை போன்ற பூக்களைகொண்டு அர்ச்சனை செய்து, பால் பாயசம், கோதுமை அல்வா, சுக்குவெல்லம், பானகம் கொண்டு நைவேதிப்பது சிறந்தது!

மேலும் ஒரு கற்ப மருந்தாகத் திகழும் நெல்லிக்காயில் வைட்டமின் சிசெறிந்து இருப்பதால், டயாபடீஸ் மட்டுமில்லாமல், ஒரு ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி யின் அளவைப்போல் இருபது மடங்கு வைட்டமின் சத்தைக் கொண்டது நெல்லிக்காய். கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது. சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.

நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது. நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புச் சத்துக்களை சுலபமாக கரைத்து விடும், இதனால் மாரடைப்பைத் தவிர்க்கலாம். நுரையீரல் சார்ந்த காசநோய் வைட்டமின்சி சத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைதல். உடல் சூடு மற்றும் கண்நோய் சர்க்கரை நோய், செரிமான இல்லாமை, சிறுநீர் சம்பந்தமான நோய்கள், குடல் வாயுவை, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெளிளை, இருமல், சளி கண்ணில் தண்ணீர் வருவல் போன்ற பல நோய்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தகைய நோய்களிலிருந்து நீங்கி ஆயுள் பலம் பெற தன்வ்ந்திரி மூலவருக்கு பிரதி மாதம் ஏகாதசி திதியில் நெல்லிக்காய் பொடி கொண்டு அபிஷேகம் செய்த தீர்த்த பிரசாதம் ஸ்வாமிகளின் திருக் கரங்களால் ஔஷதமாக வழங்கப்படவுள்ளது.

இதில் பங்கேற்க விரும்பவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


Thursday, June 7, 2018

Mangala Mahachandi Yagam....


ஸ்ரீ தன்வந்த்ரி ஆரோக்ய பீடத்தில்
64 பைரவி-பைரவர் ஹோமத்துடன்
மஹா சண்டீ யாகம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன், தென்னிந்தியா புரோகிதர் சங்கம் மற்றும் தன்வந்திரி பீடம் இணைந்து உலக நலன் கருதியும், இயற்கை வளம் வேண்டியும்  நிகழ்த்திய மாபெரும் மங்கள சண்டி யாகம் 05.06.2018 செவ்வாய் மற்றும் 06.06.2018 புதன் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் வாழ்வில் அனைத்து நலன்களும் தரும் மங்கள சண்டீ யாகத்துடன் 64 பைரவி – பைரவர் யாகம் நடைபெற்றது.

முதல் நாள் 05.06.2018 செவ்வாய்க் கிழமை  காலை 5.00 மணி முதல் குரு வந்தனம், விக்னேஸ்வர பூஜை, மஹாஸங்கல்பம், புண்யாகவசனம், ஏகபஞ்சாஸத் மஹா கணபதி ஹோமம், நவக்ரஹ ஸூக்த ஹோமம், விசேஷ கோ பூஜை, மஹா பூர்ணாஹுதி.

05.06.2018 மாலை 5.00 மணி முதல் வேத பாராயணம், கலச பூஜைகள், சண்டி நவாக்ஷரி த்ரிசதி அர்ச்சனை, சதுசஷ்டி யோகினி பைரவ பலி பூஜைகள் நடைபெற்று 06.06.2018 புதன்கிழமை காலை 6.00 மணி முதல் வேத பாராயணம், நவாக்க்ஷரி ஜெபம், சண்டி ஹோமம் துவக்கம்,பாலா பூஜை, ஸுவாஸினி பூஜை, தம்பதி பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று, நன்பகல் 2.00 மணிக்கு  சண்டிஹோமமஹா பூர்ணாஹுதி, மஹாதீபாராதனை உபசார பூஜைகள் நடைபெற்றது. மாலை 4.30 மணி முதல் 64 பைரவி-பைரவர் யாகம், அஷ்ட பைரவருடன் சொர்ண கால பைரவர் மூல மந்திர ஹோமம், மஹா பூர்ணாஹுதி, மற்றும்கலசாபிஷேகம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி ஸ்வாமி ஜிதேஷ் சுப்ரமண்யம், வன வராகீ உபாசகர் திரு. பாலமுருகன், போரூர் பிரத்யங்கிரா உபாசகர் டாக்டர் அண்ணாமலை ஸ்வாமிகள், காஞ்சீபுரம் சஞ்சீவி ராஜா ஸ்வாமிகள், தென்னிந்திய புரோகித சங்கம் தலைவர் திரு. வி.சீதாராமன், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெங்களூர் தொழிலதிபர் எம்.ஆர்.சீ. குடும்பத்தினர், திரு.சிரஞ்சீவீ சென்னை, திரு.அருள்மொழி சென்னை மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.










Monday, June 4, 2018

Vasthu Homam - Sathru Samhara Arumuga Homam....


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
வாஸ்து ஹோமம், சத்ரு சம்ஹார ஆறுமுகஹோமம்
நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞனகுருடாக்டர் ஸ்ரீ முரளித ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 04.06.2018 திங்கட்க் கிழமை காலை 10.00 மணியளவில் வாஸ்து நாளை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் பிரத்யோகமாக பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவான் சன்னதியில் வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும் ஷஷ்டி திதியை முன்னிட்டு சத்ரு சம்ஹார ஆறுமுக ஹோமமும்  நடைபெற்றது. மேலும் இதில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பஞ்சபூதங்களுக்கும், அஷ்டதிக்பாலகர்களுக்கும், வாஸ்து பகவானுக்கும், கார்த்திகை குமரனுக்கும்  மஹா அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்து.

இந்த யாகங்களிலும் பூஜைகளிலும் பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருட் பிரசாதம் வழங்கி ஆசிர்வதித்தார். இதனை தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. மேலும் நாளை 05.06.2018, 06.06.2018 நடைபெற உள்ள மங்கள சண்டி யாகத்தின் பூர்வாங்க பூஜைகள் இன்று நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.