Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, March 3, 2018

வளம் தரும் வாஸ்து ஹோமம்....


வீடு கட்டுவதற்கும்,
மனைகள் விற்பதற்கும்,
வளமான வாழ்விற்கும்
வாஸ்து பகவான் கோயிலில்
வளம் தரும் வாஸ்து ஹோமம்.

வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்துக்கு வருகிற பக்தர்கள் இங்கு நடைபெற்று வரும் ஹோமங்களில் கலந்து கொண்ட பின் உரிய பலனையும் ஆசியையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்ந்து வருவதற்குக் காரணம் இந்த பீடத்தின் மேல் அவர்கள் கொண்டிருக்கும், அபரிமிதமான நம்பிக்கையும் ஒப்பற்ற பக்தியும்தான் எனலாம் என்கிறார் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
தினம்தோறும் புதிது புதிதாகப் பல பக்தர்கள், பிரபலங்கள் இந்த பீடத்துக்கு வந்து செல்கிறார்கள். குடும்ப க்ஷேமம், ஆரோக்யம், ஐஸ்வர்யம், வேண்டி பலரும் வருகிறார்கள். இந்த பீடத்துக்குள் முதன் முதலாகக் காலடி எடுத்து வைக்கிற எந்த ஒரு பக்தரும் இங்கு நடந்து வருகிற பூஜை முறைகளைப் பார்த்தும், ஹோமங்களைப் பார்த்தும் ‘இதுபோல் வேறு எங்கும் நடைபெறுவதே இல்லை என்று பரவசத்துடன் விழி உயர்த்திச் சொல்லி விட்டுப் போகிறார்கள். காரணம், இங்கு நடைபெறும் அனைத்து ஹோமங்களும் அந்த அளவுக்கு சிரத்தையுடனும் ஆத்மார்த்தத்துடனும் செய்யப்படுகின்றன.

இந்தியாவில் முதல் வாஸ்து பகவான் கோயில்
வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் ஏழைஎளிய மக்கள் பயன்பெறும் விதத்திலும், வாஸ்து பகவானை பற்றி தெரிந்துகொள்ளும் விதத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு வாஸ்துபகவானுக்கென்று ஒரு ஆலயம் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளால் அமைக்கப்பட்டுள்ளது.
வாஸ்து பகவான் அமைப்பு வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்கள், அஷ்டதிக்பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவபெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கிபடுத்த வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருக்காட்சி வேறெங்கும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மனைகள் விற்பதற்கும், வளமான வாழ்விற்கும் : 
இன்றைய காலத்தில் நிறைய மனைகள் விற்பனைக்கு வருகிறது அளவற்ற ஆசையினாலும் நாமும் வீடு கட்டி வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் சிலர் அதை பெற்று வீடு எழுப்புகிறார்கள் சிலர் அதை சில காலம் கழித்து விற்பனை செய்கிறார்கள், சிலர் விற்பனை செய்ய முடியாமலும் சிலர் வீடு எழுப்ப முடியாமலும் அரைகுறையாக விட்டு விடுகின்றனர். மனையை வாங்கும் பொழுது நன்றாக கவனித்து வாங்காமல் நம்முடைய பொருளையும், பணத்தையும் இழந்து நிம்மதி இல்லாமல் நாம் சிரமப்பட கூடாது என்கிறார் ஸ்வாமிகள்.

பல லட்சங்கள் செலவு செய்து பெரிய பெரிய கட்டிடங்களும், அலுவலகங்களும், வீடுகளும், தொழிற்சாலைகளும் கட்டி குடியேறுகின்றனர். அங்கு குடியேறியபின் குடும்பத்தில் குழப்பம், தொழிலில் நஷ்டம் இப்படி எண்ணற்ற பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதன் அடிப்படைக் காரணம் என்னவென்று பார்த்தால் முறையாக வாஸ்து பார்த்துக் கட்டியிருக்க மாட்டார்கள். கட்டிய பின்னர் வாஸ்து பார்த்து திருத்தியமைக்க விரும்பினால், வீண் விரயங்களும் தேவையற்ற பொருளாதாரச் செலவுகள் ஏற்படுகின்றன எனலாம்.

வாஸ்து விழிக்கும் நாள் :
மக்கள் வாஸ்து விழிக்கும் நாளில் தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் வாஸ்து ஹோமங்களிலும் பூஜைகளிலும் கலந்துகொண்டு வாஸ்து பகவானை வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைப்பது மட்டுமல்லாமல் மனிதர்கள் குடியிருக்கும் இடங்களைச் சுற்றி தோஷங்கள் அண்ட விடாமல் பாதுகாப்பது வாஸ்து பகவானின் வேலையாகும் மேலும் முறையான வாஸ்து அமைந்த கட்டிடத்தில் குடியிருப்பதால் முதலில் மன நிம்மதி, உடல் ஆரோக்கியம், நல்வழி, நல்லவர்கள் தொடர்பு, ஏமாறாமல் இருப்பது, ஏமாற்றாமல் இருப்பது, குடும்ப ஒற்றுமை, உறவினர்கள் உறவு, எதிரிகள் தாக்குதலில் நிவர்த்தி போன்ற சகல நன்மைகள் பெருகும்.

ஸ்ரீ வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமம்
வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்:
ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் உலக நலன் கருதி, மக்கள் பயன்பெற வருகிற மாசி 22, 06.03.2018 செவ்வாய் கிழமை காலை 10.00 மணி முதல் 11.30 மணிக்குள்ளாக வாஸ்து பகவான் கண்விழிக்கும் நாள் என்பதால் ஸ்ரீ வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமம் மற்றும் வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் வாஸ்து தோஷம் நீங்கி வளமான வாழ்வு வாழ மேற்கண்ட ஹோமம் நடைபெறுகிறது. 

வாஸ்து பகவான் ஹோம பிரசாதம் :
வாஸ்து ஹோமத்திலும் வாஸ்து பகவானிடமும் வைத்து பூஜிக்கப்பட்ட செங்கல், மண், வாஸ்து யந்திரம், மச்ச யந்திரம், வாஸ்து தேங்காய், வில்வ காய், மூலிகை சாம்பிராணி போன்றவைகள் பிரசாதமாக புதிய வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் கட்ட இருப்பவர்களுக்கு மக்கள் நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வழங்கி வருகிறோம், அவற்றை பெற்று பூஜித்து வளமுடன் வாழலாம்.

தொடர்புக்கு:
ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்,
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம்.
போன்: 04172 & 230033, மொபைல்: 94433 30203,

ருண - ரோக - சத்ரு தொல்லை நீக்கும் சுவாதி ஹோமம்.....


மன நோய் நீங்கவும், மாந்திரீக தொல்லைகளில் இருந்து விடுபடவும், புத்தி சுவாதீனம் தெளியவும், சித்தப்ரம்மை விலகவும், கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு பெறவும், எதிரிகள் பயம் அகலவும்
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 06.03.2018 செவ்வாய் கிழமை ருண - ரோக - சத்ரு தொல்லை நீக்கும் சுவாதி ஹோமம் எனும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 

ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர 

ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி வருகிற 06.03.2018 செவ்வாய் 

கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை, மாசி சுவாதி 

நக்ஷத்திரம் மற்றும் பஞ்சமி திதியை முன்னிட்டு ஸ்வாதி ஹோமம் 

என்கிற ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் நடைபெறவுள்ளது. இதனை 

தொடர்ந்து, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ கூர்ம 

லட்சுமி நரசிம்மருக்கு நவ கலச திருமஞ்சனமும் நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து மன நோய் நீங்கவும், மாந்திரீக தொல்லைகளில் 

இருந்து விடுபடவும், புத்தி சுவாதீனம் தெளியவும், சித்தப்ரம்மை 

விலகவும், கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு பெறவும், எதிரிகள் பயம் 

அகலவும், போன்ற பல்வேறு தோஷங்களுக்காக, மேற்கண்ட 

யாகங்களிலும் பூஜைகளிலும் பங்கேற்க்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ 

தன்வந்திரி பகவான், ஸ்ரீ சக்கிரத்தாழ்வார் சன்னதிகளில் வைத்து 

பூஜித்த விசேஷ பிரசாதம் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு 

டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வழங்கி ஆசீர்வதிக்க உள்ளார்.

ருண ரோக சத்ரு நாசினியான ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரின் சிறப்பு:

வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும்

ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், உக்ரமும் 

கோரமும் உடைய கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் 

அளிப்பவரும், பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் செய்தவரும்

மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை 

சம்ஹரித்தவரும், மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் 

திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும் 

ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம்

தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும் மகாலக்ஷ்மியை 

இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு 

விரும்பிய வரங்களைத் தருபவரும், தேவதைகளின் காரியத்தை 

ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து 

வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹரை வணங்கி 

அருள்பெற மேற்கண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் யாகமும் சிறப்பு வழிபாடும் 

புஷ்பார்ச்சனையும் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி 

குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு:
ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்,
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம்.
போன்: 04172 & 230033, மொபைல்: 94433 30203,



நெல்லிபொடி அபிஷேகத்துடன் தைலாபிஷேகம்......


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மார்ச் 13 மற்றும் 14 தேதிகளில் ஏகாதசி மற்றும் திருவோணத்தை முன்னிட்டு
மூலவர் தன்வந்திரி - விநாயக தன்வந்திரிக்கு
நெல்லிபொடி அபிஷேகத்துடன் தைலாபிஷேகம் நடைபெறுகிறது.
ஆயுள் தோஷம் நீங்கும் ஔஷத பிரசாதம்.


நுரையீரல் சார்ந்த காசநோய் வைட்டமின்சிசத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்கள் உடலில் எதிர்ப்பு சக்தி குறைதல். உடல் சூடு மற்றும் கண்நோய் சர்க்கரை நோய், செரிமான இல்லாமை, சிறுநீர் சம்பந்தமான நோய்கள், குடல் வாயுவை, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெள்ளை, இருமல், சளி கண்ணில் தண்ணீர் வருவல் போன்ற பல நோய்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தகைய நோய்களிலிருந்து நீங்கி ஆயுள் பலம் பெற தன்வ்ந்திரி மூலவருக்கு அபிஷேகம் செய்த நெல்லிக்காய் பொடி தீர்த்த பிரசாதம் நீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி), கை கால் வலி, மூட்டு வலி, தூக்கம் இன்மை, வலிப்பு நோய், போன்ற நோய்கள் நீங்கவும் சகல ஐஸ்வர்யம் பெறவும் ஸ்வாமிகளின் திருக் கரங்களால் ஔஷதமாக வழங்கப்படவுள்ளது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 13.03.2018 செவ்வாய்கிழமை ஏகாதசி திதி மற்றும் 14.03.2018 புதன் கிழமை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை விநாயக தன்வந்திரிக்கும் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கும் உற்சவ மூர்த்திக்கும் தன்வந்திரி ஹோமத்துடன் நெல்லிபொடி அபிஷேகத்துடன் தைலாபிஷேகமும் நடைபெறுகிறது. இன்றைக்கு எத்தனையோ ஹோமங்கள், சிறப்பு வழிபாடுகள், சிறப்பு ஹோமங்கள் என்றெல்லாம் நித்தமும் நடந்து வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் ஒரு தனித்துவத்துடன் வெளியே அடையாளம் காணப்பட்டாலும், இவை அனைத்துக்கும் பின்னால் சுமார் 46 லட்சம் பக்தர்கள் கைப்படை எழுதிய 54 கோடி தன்வந்திரி மஹா மந்திரங்களை கொண்டு மந்திர மலை எனும் ஔஷதகிரியில் பிரமாண்ட நாயகனாக விஸ்வரூபம் எடுத்து நிற்பவர் சாட்சாத் மருத்துவ கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானும் யக்ஞபுருஷரான ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளும் தான்!

இந்த யக்ஞ பூமியின் நாயகர்கள் இவர்கள் தான். இவர்கள் தான் அனைத்துக்கும் ஆதாரம். இன்றைக்கு தன்வந்திரி பீடம் தேடி வரும் பல லட்சக்கணக்கான பக்தர்களின் பிணிகளைத் தீர்த்து, அவர்களின் துயரங்களை வேரோடு களைந்து வரும் தன்வந்திரி பீடத்தில். அன்னபூரணி, காயத்ரி தேவி, சஞ்சீவீ ஆஞ்சநேயர், மஹா அவதார பாப, மஹிஷாசுர மர்த்தினி, குபேர லக்ஷ்மி, அஷ்ட நாக கருடன் என 75 க்கும் மேற்பட்ட பரிவார சந்நிதிகளுடனும், 468 சித்தர்களுடனும் வைத்ய ராஜ்யம் நடத்தி வருகிறார் ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பகவான். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி  உலக நலன் கருதி மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கும் உற்சவர் வைத்தியராஜனுக்கும் மேற்கண்ட தினங்களில் ஹோமமும் நெல்லி பொடி அபிஷேகமும் தைலாபிஷேகமும் நடைபெறுகிறது.

திருமாலை போற்றி வழிபடும் நாட்களில் திருவோணம் நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மகாபலிக்கு அருள் தந்த வாமனராகிய திருமால் அவதரித்த நாளும் திருவோணம்தான். அன்னாளில் விஷ்ணுவாகிய தன்வந்திரி பகவானை வழிபடுவதன் மூலம் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமும், காக்கும் கடவுளுமானவரின் பரிபூரண அருள் கிடைக்கும். இவற்றை கருத்தில்கொண்டு திருவோண ஹோமம், தன்வந்திரி ஹோமம், ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யம், மன அமைதி மற்றும் எட்டு வகையான சந்தோஷங்களை அள்ளித்தரும் மாபெரும் ஹோமங்கள் நடைபெறுகிறது.

திருவோண ஹோமத்தில், பூஸூக்த ஹோமத்திலும், தன்வந்திரி ஹோமத்திலும் மேலும் நீரிழிவு நோய் ( சர்க்கரை வியாதி ), கை கால் வலி, மூட்டு வலி, தூக்கம் இன்மை, வலிப்பு நோய், போன்ற நோய்கள் நீங்க தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு நடைபெறும் தைலாபிஷேகத்தில் கலந்துகொண்டு தைலப்பிரசாதம் பெற்று ஆரோக்யத்தில் முன்னேற்றம் பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203



Friday, March 2, 2018

சங்கடஹர கணபதி ஹோமம்....

தன்வந்திரி பீடத்தில்
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு
சங்கடஹர கணபதி ஹோமம்.
05.03.2018 திங்கட் கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 05.03.2018 திங்கட் கிழமை மாலை 5.00 மணிக்கு சங்கடம் தீர்க்கும் சங்கடஹர கணபதி ஹோமமும், மஹா அபிஷேகமும் நடைபெற உள்ளது.

வினை தீர்க்கும் விநாயகர் பிணி தீர்க்கும் தன்வந்திரி ஆகிய இருவரும் சேர்ந்து ஒரே கல்லின் 4அடி உயரத்தில் சிம்ம பீடத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் விநாயக தன்வந்திரிக்கும், லக்ஷ்மி கணபதிக்கும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மேற்கண்ட ஹோமம் நடைபெறுகிறது.

"ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் – போக்குதல் என்று பொருள்.

சதுர்த்தி விரதம் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தித் திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.

சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் நாம் நம் வாழ்க்கையில் படும் கஷ்டங்களில் இருந்து விடுபடலாம், சோதனைகளை தாண்டி வெற்றி நடை போடலாம், நிறைந்த இறை அருள்  பெறலாம்.

 சங்கடஎன்றால் கஷ்டம் மற்றும்ஹரஎன்றால் போக்குதல். சங்கடங்களை போக்கும் விக்ன விநாயகரின் பாதம் பணிந்து விரதமிருந்தால் நமக்கு நன்மைகள் பெருகும் என்பதே இந்த விரத பலன். நாம் எண்ணிய எண்ணம் நிறைவேறும்.

"சங்கடஹர சதுர்த்தி" விரதம்:

சங்கடங்கள் நீக்கிடும் "சங்கடஹர சதுர்த்தி" விரதம் விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடஹர சதுர்த்தி விரதமாகும்.

அத்தகைய நாளில் விரதமிருந்து சங்கடஹர சதுர்த்தி ஹோமத்திலும், பூஜையிலும் கலந்துகொண்டால் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து அளவு கடந்த ஆனந்தத்தை அடைந்து, சகல சௌபாக்கியங்களை பெறலாம்.
மேலும் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களிலும் வெற்றியை பெறலாம். நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடையவும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளையும் பெறலாம்.

சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்களும் இந்த ஹோமத்தில் கலந்துகொண்டால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறைந்து நன்மை ஏற்படும்.

சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை விநாயகரை மனதில் நினைத்து உபவாசம் இருக்க வேண்டும்.மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

இந்த யாகத்திற்க்கு தேவையான அஷ்ட திரவியங்கள், பழங்கள், புஷ்பங்கள், நல்லெண்ணை, நெய், தேன், நிவேதனத்திற்குரிய பொருட்கள், அருகம்புல், பால், தயிர், மற்றும் அபிஷேக பொருட்கள் அளித்து விநாயகர் பெருமானுடைய அருளைபெற்று சங்கடங்கள் நிவர்த்தி செய்து வாழ்வில் நலம் பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு:
ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்,
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம்.
போன்: 04172 & 230033, மொபைல்: 94433 30203,

சனிசாந்தி ஹோமம்.......


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
சனிகிரகத்தினால் ஏற்ப்படும் தடைகள் நீக்கும்
சனிசாந்தி ஹோமம் நாளை நடைபெறுகிறது.

உலகில் வேறெங்கும் இல்லாதவாறு 27 நட்சத்திரங்களுக்கும், 9 நவகிரகங்களுக்கும், விருட்சங்கள் கொண்டு காலச்சக்ர கோயிலாக அமைத்து, இயற்கை வளத்திற்காகவும், விவசாய நலனுக்காகவும், குடும்ப நலனுக்காகவும், பக்தர்களின் தேவைக்காக, தினசரி விருட்சங்களுக்கு விருட்ச பூஜையுடன் நட்சத்திர நவகிரக சாந்தி பூஜைகள் நடைபெற்றுவரும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக் கிழமை, சனி கிரக ப்ரீதிக்காக சனி சாந்தி ஹோமம் நடந்து வருகிறது. அந்த வகையில் வருகிற  03.03.2018 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் சனி கிரக தோஷம் நீக்கும் சனிசாந்தி ஹோமம் நடைபெறுகிறது.

வாழ்வில் முன்னேற்றமடைய பலவிதமான முயற்சிகளை நாம் மேற்கொண்டாலும் பலவிதமான தடைகள் வந்து அநத முயற்சியை தடுக்கிறது. அந்த தடைகளை வரிசைப்படுத்தி பார்க்கும் பொழுது பித்ருதடை, ஜாதகத்தடை, கிரகத்தடை, வாஸ்துதடை, நவகிரகத்தடை, கர்மவினை, ஊழ்வினைதடை, போன்ற பல்வேறு விதமான தடைகள் நம்முன் வந்து நிற்கின்றன. அதில் பெரிதும் பங்கேற்பது நவகிரகங்களில் ஒன்றான சனிகிரகத்தின் தடைகடள பெரிதும் பாதிக்கிறது.

பெரும்பாலான ஜாதகருக்கு ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி, ஜன்ம சனி, அர்த்தாஷ்டம சனி, மற்றும் சனிதிசை, சனிபுக்தி, சனிஅந்தரம் நடைபெறும் பொழுது பல இன்னல்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். அதனால் காரியத்தடை, திருமணத்தடை, குழந்தை பாக்யதடை, தொழில் அபிவிருத்தி தடை போன்ற பலதடைகளும் ஏற்பட்டு மன உளச்சளுக்கு ஆளாகி வருகின்றனர். இத்தகைய தடைகளுக்கு நிவாரணம் தேடும் வகையில் தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி பிரதி மாதம் முதல் சனிக்கிழமை சனிசாந்தி ஹோமமும் சனி ப்ரீத்தி பூஜையும் நடைபெற்று வருகிறது. இந்த ஹோமம் பித்ரு தோஷ நிவர்த்தி , ஆயுள் அபிவிருத்திக்காகவும் நடைபெறுகிறது.

இதில் கருப்பு நிற வஸ்த்திரம், நீலநிற வஸ்த்திரம், பச்சரிசி, நெல், எள், நெல்பொரி, நல்ல எண்ணை, வெல்லம், வன்னி சமித்து, நாயுருவி, கறுப்பு திரட்சை போன்ற பல பொருட்கள் யாகத்தில் சேர்க்கப்படும். ஹோமத்தின் நிறைவாக காலசக்கர பூஜையும், பைரவருக்கும், ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சனேயருக்கும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்டிதனர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு:
ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்,
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம்.
போன்: 04172 & 230033, மொபைல்: 94433 30203,