Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, July 4, 2017

Kodi Deepam Kodi Archana

ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன்

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை

குரு பூர்ணிமா முதல்

கோடி தீபம் கோடி அர்ச்சனை ஆரம்பம்.

“ ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே

அம்ருத கலச ஹஸ்தாய சர்வாமய விநாசநாய

த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ “

Sri Danvantri Aogya Peedam,Kilpudupet, Walajapet, Vellore 

District.

Kodi Deepam Kodi Archana

From Sunday 9th July 2017 Onwards

“ Om Namo Bhagavate Vasudevaya Danvantraye

Amrutha Kalasa Hasthaaya Sarva Amaya Vinasanaya


Thri Lokya Nadhaya Sri Maha Vishnave Namaha “

Monday, July 3, 2017

Thripura Bhairavi Homam

தன்வந்திரி பீடத்தில் வருகிற 06.07.2017  

வியாழக்கிழமை திரிபுர பைரவி ஹோமத்துடன்

ஸ்ரீ குரு பகவான் ஹோமம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், 

யக்ஞபுருஷர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 

ஆக்ஞைபடி வருகிற 06.07.2017 வியாழக் கிழமை காலை 10.00 

மணியளவில் குரு வாரத்தை முன்னிட்டும் நடைபெறவுள்ள 

குருபெயர்ச்சியை முன்னிட்டும் குரு பகவான் அருளால் பொன் 

ஆபரணங்கள் சேரவும், உயர்ந்த மனிதனாக இருக்கவும், திரைப்பட வாய்ப்பு 

கிடைக்கவும், பொருளாதாரத்தில் உயரவும், அரசியலிலும், அரசு, தனியார் 

வேளையில் பதவி உயர்வு கிடைக்கவும், மேலும் பல நற்காரியுங்களில் 

வெட்றி பெறவும் திரிபுர பைரவி ஹோமத்துடன் ஸ்ரீ குரு பகவான் 

ஹோமம் நடைபெறவுள்ளது.

பொன்னவன் என்ற வார்த்தைக்கு ஒப்பு இவ்வித அம்பிதை அனேக பொன் 

ஆபரணங்களுக்கு தலைவி என்பதால் உத்தியோக மேன்மை கோவில் 

கட்டுதல் குளம் வெட்டுதல் பல புண்ணிய காரியங்கள்  செய்தல்   சமூகத்தில் 

ஒரு பெரிய மனிதராக ஆகுதல், தன் முயற்ச்சியின் மூலம் சினிமா பட நாடக 

வாய்ப்பும் நடிப்பதும், கற்பனைக்கு எட்டாத சில நல்ல காரியங்களுக்கு சிறப்பு 

ஏற்படல் தனி மனித ஒழுக்கம் மேன்மை, வாகனம் விற்பனை, வீடு விற்பனை 

கல்லூரி நடுத்துதல் மூலம் நல்ல நெறியான வாழ்க்கையும், 

பொருளாதரத்தில் 

மதிப்பும் மந்திரி பதவிகளும் உண்டாகும், அரசியல், மாத இதழ் நடத்தும் 

யோகங்களும் முற்பிறவி பாவம் போகவும். அறிய கண்டு பிடிப்பும், வான் 

வெளி ஆராய்ச்சிகள் வெற்றியும், வெளிநாடு வெளியூர் பயண சிறப்பும் 

ஏற்படும், குடும்பத்துடன் சேர்ந்து வாழும் தன்மையை ஏற்படுத்தும், புகழ், 

கௌரவும், அந்தஸ்து உயரும் என்கிறார் முரளிதர ஸ்வாமிகள். இந்த 

தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் விபரங்களுக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பிடம்

கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,

வாலாஜாபேட்டை – 632513., வேலூர் மாவட்டம்

அலைபேசி : 9443330203

Website : www.danvantritemple.org

e-Mail : danvantripeedam@gmail.com


Sunday, July 2, 2017

Sudarsana Jayanthi 2017 - Maha Sudarsana Homam

தன்வந்திரி பீடத்தில்
ஸ்ரீ சக்கரத்தாழ்வார் யாகம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று ஜீலை மாதம் 2 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆனி சித்திரை நட்சத்திரம் ஸ்ரீசுதர்சனர் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் மாபெரும் சுதர்சன ஹோமம் வெகு சிறப்பாக நடைபெற்றது

இந்த யாகத்தில் தீர்க்கஆயுசு பெறவும் பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும் அஷ்ட ஐஸ்வர்யம் பெறவும், புத்தியில் தெளிவு கிடைக்கவும், ஆபத்துக்கள் வராமல் தடுக்கவும், பசுவிருத்தி ஏற்படவும் வீட்டில் உள்ள பசு அதிகம் பால்சுரக்கவும், பசுவை எந்த நோயும் அண்டாது இருக்கவும், சுகப்பிரசவம் ஆகவும், சுபிட்சங்கள்பெறவும், பசுவிருத்தியாகவும், எதிரிகள்தொல்லை நீங்கவும், மன நலம் குணமாகவும், புத்தி பேதலித்தவர்கள் நலம் பெறவும், விரைவில் மனோபலம் பெறவும், தீராத நோய்கள் தீரவும், கேன்சர், சர்க்கரை வியாதி போன்ற கண்ணுக்குத் தெரியாத நோய்கள் நீங்கவும் கோபம் தனியவும், குருவை அவமதித்த பாவம், சாதுக்களைத் திட்டிய சாபம், பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் பிரார்த்தனை செய்யபட்டது.

இந்த யாகத்தில் வெண்கடுகு, எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால் பாயசம், அருகம்புல், சர்க்கரை பொங்கல், தயிர், நாயுருவி, ஆலமரசமித்து, நெய், பஞ்சகவியம், கருநொச்சி, இருமுள், நீல ஊமத்தபூ, வெள்ளை புலாச்சு, குக்கிலு, சம்மதபூ, வெண்பட்டு போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டது.


மேலும் சுதர்சன பெருமாளுக்க 16 விதமான  அபிஷேக திரவியங்களை கொண்டு மகா அபிஷேகமும் விஷேச அர்ச்சனையும் நடைபெற்று தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவிதனர்.





Swathi Homam/Lakshmi Narasimha Homam

தன்வந்திரி பீடத்தில் நாளை
ருண-ரோக-சத்ரு விமோசன ஹோமம்,
கடன்-நோய்-சத்ரு தோஷ  நிவர்த்திக்கு நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பீடாதிபதி மற்றும் ஸ்தாபகர் யக்ஞபுருஷர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி உலக நலன்கருதி நாளை 03.07.2017 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு மேல் ஸ்வாதி நட்சத்திரத்தை முன்னிட்டு ருண-ரோக-சத்ரு விமோசன, (கடன்-நோய்-சத்ரு தோஷ  நிவர்த்திக்கு) ஸ்வாதி ஹோமம் என்கிற  ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஹோமமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது.

உலக மக்களின் பொருளாதார தடைகள் நீங்கவும், கடன் பிரச்னை அகலவும், வியாபாரம், தொழில்களில் ஏற்படும் பணப்பிரச்னைகள் விலகவும், வாழ்வில் ஏற்படும் அனைத்துவிதமான தடைகள் விலகி ஆரோக்யம், ஐஸ்வர்யம் பெறவும் மேற்கண்ட ருண-ரோக-சத்ரு விமோசன, (கடன்-நோய்-சத்ரு தோஷ  நிவர்த்திக்கு)  நடைபெற உள்ளது.

ருணம் என்றால் கடன் என்று பொருள். கடன் என்றால் காசு மட்டும் கடன் என்று நினைக்காதீர்கள். அதாவது நாம் பூமியில் பிறக்கின்றபோதே மூன்று கடனுடன்தான்  பிறக்கிறோம்.

1. ரிஷி கடன்  திருமணம் ஆகும் வரை, பிரும்மச்சர்ய விரதத்தை கடை பிடிக்க வேண்டும். அப்போது இவரது கடனை நாம் தீர்த்துவிட்டோம் என்று பொருள்.
இதை கடை பிடிக்கவில்லை என்றால் இவரது கடன் தீராது. ஒழுக்கம் மிகவும் முக்கியம் என்று வலியுறுத்துகிறது.

2. தேவ கடன்  அதாவது பிறந்த அனைத்து மனிதர்களும் தனது வாழ்க்கையில் வாழ்நாளில் ஹோமம், யாகம் வருடா வருடம் செய்யவேண்டும். அப்படி  செய்யவில்லை என்றால் அதுவே தேவ கடன் என்பதாகும்.

3. பித்ரு கடன் தெவசம் திதி, ஸ்ரார்தம் இவைகளை முறையாக சரியாக வருடாவருடம் செய்து வந்தால் பித்ருக்கள் ஆசிகளுடன் நமது பணக்கஷ்டம் தீரும். இல்லை என்றால் நமது பணக்கஷ்டம் தீராது.

இதுபோன்ற கடன்கள் தீரவும் ரோகம் என்கிற நோய்கள் அகலவும் சத்ரு என்கிற எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விலகவும்  ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஹோமம், வழிபாடு மிகவும் பலன் தரும். இதை மனதில் கொண்டு தன்வந்திரி பீடத்தில் ஸ்வாதி நட்சத்திரத்தில் ருண விமோசன ஹோமமும், ஸ்ரீ கூர்ம லட்சுமி நரசிம்மருக்கு விசேஷ திருமஞ்சனமும் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான கடன்களும் நீங்கி மகிழ்ச்சி பெறலாம் என்கிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

மேலும் விபரங்களுக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பிடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை632513., வேலூர் மாவட்டம்
அலைபேசி : 9443330203
Website : www.danvantritemple.org

e-Mail : danvantripeedam@gmail.com

Saturday, July 1, 2017

Rahu Ketu Peayarchi/Transition 2017 Homam

வாலாஜா ஸ்ரீதன்வந்திரி பீடத்தில்
ராகு-கேது பெயர்ச்சி யாகம் !
ருகிற 27.07.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை  நடைபெற உள்ளது

நம் கையில் சொத்து பத்து இல்லை என்றாலும், வியாதி வெக்கை இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும்என்பதுதான் இன்றைய தேதியில் அனைவரது பிரார்த்தனையாகவும் ஆசையாகவும் இருந்து வருகிறது. பக்தர்களுக்கு இத்தகைய ஒரு வரத்தை அருளும் பீடமாக விளங்கி வருகிறது வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்.

நோயில்லா வாழ்வு அனைவருக்கும் கிடைக்க வேண்டும்என்பதே இந்த ஆரோக்ய பீடத்தின் குறிக்கோள். இதன் ஸ்தாபகரான ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் இதற்காக எண்ணற்ற ஆராய்ச்சிகளையும் கூட்டுப் பிரார்த்தனைகளையும் இங்கே நடத்தி வருகிறார். ஹோமப் புகையில் கனன்று கொண்டிருக்கும் மூலிகைகளின் வாசமும், பிரமாண்டமான மூலிகைப் பண்ணையில் இருந்து வரும் சுகமான காற்றும் பக்தர்களின் மனதை வருடுகின்றன.

வேலூருக்கு அருகே வாலாஜாவில் அமைந்துள்ளது இந்த ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம். இந்த பீடத்தை ஒரு வாழ்வியல் மையம், மனக் குறை தீர்க்கும் மையம் என்றே பக்தர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த அளவுக்கு இங்கு வந்து செல்லும் அனைவரும் ஸ்ரீதன்வந்திரி பகவானின் அருளாலும்,  டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆசியாலும் பலன் அடைகிறார்கள். வைத்தியத் துறையின் தந்தையான ஸ்ரீதன்வந்திரி பகவான் அருளும் இந்த ஆரோக்ய பீடத்தில் 73க்கு மேற்பட்ட திருச்சந்நிதிகள் உள்ளன.

அவற்றுள் ராகு & கேது சந்நிதியும் சிறப்பான ஒன்று. ஏக சரீர ராகு & கேது-வாக தரிசனம் தரும் இந்த ராகு & கேது விக்கிரகத்தின் தலைப் பகுதி ராகுவாகவும், உடல் பகுதி கேதுவாகவும் அமைந்துள்ளது. சிவாலயங்களில் ஐப்பசி பௌர்ணமியில் ஈஸ்வரனுக்கு அன்னாபிஷேகம் செய்வது போல் இந்த ஏக சரீர ராகு & கேதுவுக்கு ஒவ்வொரு பௌர்ணமியின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அதன் பின் பிரசாதமாக விநியோகிக்கப்படும் இந்த அன்னத்தை உண்டால், உடல் செரிமானம் மற்றும் வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும்.

நவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும்,சந்திரனை விட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும் கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர் என்று ஜோதிடம் கூறுகிறது. இதில் இருந்து ராகு மற்றும் கேதுவுக்கு உள்ள முக்கியத்துவம் எளிதில் விளங்கும்.

ராகு கேது எந்த ராசியில் இருக்கிறார்களோ, எந்தக் கோள்களினால் பார்க்கப்படுகின்றரோ, எந்தக் கோள்களின் சேர்க்கை பெற்றுள்ளனரோ, அதற்கு தக்கவாறு பலன்களை முழுமையாகத் தருவார்கள். குறைகளையும் நிறைகளையும் வஞ்சகம் இல்லாமல் அள்ளித் தரும் மா வள்ளல் ராகு பகவான். ஞானகாரகன். ஞானம் அருள்பவர். புகழ், பதவி, அதிகாரம் போன்றவற்றைத் தருபவர்.

பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் இருப்பவரைத் திடீரென கோடீஸ்வரர் ஆக்குபவரும் ராகு. கெட்ட சகவாசங்களுக்கும் காரணம் ராகுவே!ஞானம், மோட்சம் போன்றவற்றை அருள்பவர் கேது பகவான். கல்வி அறிவு, கேள்வி ஞானம் அருள்பவர். தோல் வியாதி, வாயுத் தொல்லை, வயிற்று வலி உட்பட பல வியாதிகளினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கேது பகவானுக்குப் பரிகாரம் செய்து பாதிப்பில் இருந்து மீளலாம்.

குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சியைப் போலவே ராகு & கேது பெயர்ச்சியும் இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதாக இருக்கிறது. ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்லும் காலகட்டத்தைதான் நாம் ராகு & கேது பெயர்ச்சி என்கிறோம். வருகிற 27.07.2017 வியாழன் அன்று சிம்மம் ராசியிலிருந்து இருந்து கடகராசிக்கு ராகு மாறுகிறார். கேதுவானவர் கும்பத்திலிருந்து மகரத்திற்கு  இடப்பெயர்சி செய்கிறார்

அடுத்த ஒண்ணரை வருட காலத்துக்கு இவர்கள் இந்த ராசியிலேயே இருப்பார்கள். இந்தக் காலத்தில் அவரவர் தசாபுக்திக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் தருவார்கள். வாலாஜாவில் அமைந்துள்ள ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு & கேது பெயர்ச்சி போன்ற வைபவங்கள் சிறப்பு ஹோமங்களுடன் நன்றாகவே நடந்து வருகின்றன.

இந்த முறையும். பெயர்ச்சியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ராகுகேது யாகமும் சிறப்பு அபிஷேகமும்.ராகு & கேது பெயர்ச்சிவிமரிசையாக வருகிற 27.07.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை  நடைபெறஉள்ளது. அவசியம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள்.

மேஷம்,மிதுனம்,கடகம்,துலாம்,தனுசு,மகரம்,போன்றராசிக்காரர்கள் மற்றும் ராகுதிசை, ராகுபுத்தி, கேதுதிசை, கேதுபுத்தி, நடப்பவர்களும் ராகு&கேது பெயர்ச்சி அன்று உரிய பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. சங்கல்ப காணிக்கையாக ஒரு ராசிக்கு ரூபாய். 500/-மட்டும் செலுத்தி பங்கேற்று பலன் பெற ப்ரார்த்திக்கின்றோம்.

யாகத்தின் பலன்கள்.

திருமணத் தடை, உத்தியோகம் இன்மை, அயல்நாட்டுப் பயணம் தடைபடுதல், குழந்தைப் பேறின்மை, தம்பதிக்குள் ஒற்றுமை மிகுதல், வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறுதல் போன்ற பல்வேறு பிரார்த்தனைகளுக்குப் பலன் வேண்டுபவர்கள் இந்தப் பெயர்ச்சியில் கலந்து கொண்டு பிரார்த்தித்துப் பலன் பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தனர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு:
ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்,
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை . 632 513.
வேலூர் மாவட்டம்.
போன்: 04172 - 230033,
மொபைல்: 94433 30203